Sunday, 10 June 2018

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குபவர்களா நீங்க உஷார்., தொடரும் முறைகேடுகள்.,அரசு வைத்த அதிரடி ஆப்பு .,இனி ஒன்னும் முடியாது ..!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் சரியாக வழங்கப்படவில்லை,போலி ரேஷன் ஸ்மார்ட் கார்டு என தொடர்ந்து முறைகேடு நடப்பதாக குற்றங்கள் எழுந்துவருகிறது.



மேலும் ரேஷன் கடைகளில் உள்ள பயனாளியின் பெயர்களை போலியாக பயன்படுத்தி பொருட்களை வாங்கி முறைகேடு நடைபெறுகிறது

இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான உணவுபொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டுவருகின்றனர் .



இந்த முறைகேடுகளை முற்றிலும் தடுக்க பயோமெட்ரிக் முறையை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி ரேஷன் கடைகளில் எந்த பொருட்களை வாங்க வேண்டும் என்றாலும் பயனாளிகள் மட்டுமே வாங்கமுடியும் .
அதற்கு அவர்களது கைரேகையை பதிவு செய்ய வேண்டும்.கைரேகை ஒத்து போகவில்லையெனில் பொருட்கள் வழங்கப்படாது.
மேலும் அவர்கள் வாங்கும் பொருட்களை பற்றிய தகவலும் நேரடியாக அரசின் பார்வைக்கு சென்று விடும் .



இவ்வாறு பயனாளிகளின் பெயரை பயன்படுத்தி நடக்கும் முறைகேடுகளை தடுக்க இந்த திட்டம் ஒரு சில மாதங்களில் நடைமுறை படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி மாநிலம் முழுவதும் 34,772 ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் இயந்திரங்கள் பொருத்தப்படுகிறது.
இதன் மூலம் ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க முடியும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர் .

From one India

அதிமுக பொதுச் செயலாளர் பதவி நீக்கம்... ஓகே சொன்ன தேர்தல் ஆணையம்


முன்னாள் முதல்வரும் அதிமுகபொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து மாற்றப்பட்ட அதிமுகவின் புதிய விதிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. 




கடந்த ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

கட்சி பொதுச் செயலாளருக்கான அதிகாரங்களை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதற்காக கட்சி விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு கட்சியின் புதிய விதிமுறைகள் கடந்த ஏப்ரல் மாதம் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த புதிய விதிகளை ஏற்றுக்கொண்டுள்ள தேர்தல் ஆணையம் அதற்கான ஒப்புதலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.


தேர்தல் வந்தால் எத்தனை பேர் பிச்சிகிட்டு வெளியே வருவர் என்பது தெரியம்- அழகிரி


சென்னை: தேர்தல் வந்தால் எத்தனை பேர் வெளியே வருவர் என்பது தெரியும் என்று கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் அமைச்சருமான அழகிரி தெரிவித்தார்.




திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனான அழகிரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அவர் இத்தனை ஆண்டுகளில் இரண்டு மூன்று முறை மட்டுமே கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று தயாளு அம்மாவை சந்தித்தார்.

அழகிரியை சமாதானப்படுத்தும் முயற்சிகள் அனைத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் மு.க.அழகிரி சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில், திமுகவில் தற்போது இருப்பவர்கள் எல்லாம் பதவிக்காக மட்டுமே உள்ளனர் என்றும், தேர்தல் வந்தால் எத்தனை பேர் இருப்பார்கள், எத்தனை பேர் போவார்கள் என்பது தெரியும்.

உண்மையான தொண்டர்கள் இன்னும் என்னுடன் தான் இருக்கிறார்கள் என்றார். அண்மையில் திமுகவில் நநடைபெற்ற போராட்டங்களின் மூலம் அரசியலில் அடியெடுத்து வைத்த உதயநிதி ஸ்டாலினை அழகிரி கடுமையாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

கட்சியின் பெயரை அறிவித்தார் திவாகரன்

அண்ணா திராவிடர் கழகம் என்ற தன் கட்சியின் பெயரையும் அறிவித்து கொடியையும் அறிமுகம் செய்தார் திவாகரன்.
மன்னார்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் தன் கட்சியின் பெயரை அண்ணா திராவிடர் கழகம் என்று அறிவித்த திவாகரன் கொடியையும் அறிமுகம் செய்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
இக்கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பினை நானே ஏற்கிறேன். கட்சிக்கான கொடி கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். அதன் நடுவில் பச்சை நிற நட்சத்திரம் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவித்துள்ளார் திவாகரன்.

மாணவருக்கு முதல்வர் கொடுத்த செக் பவுன்ஸ் ஆனது



உத்தரப் பிரதேசத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்கிய செக் (காசோலை) பவுன்ஸ் ஆனது.

உத்தரப்பிரதேச மாநிலம், பாரபங்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அலோக் மிஸ்ரா. இவர், சமீபத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 93.5 சதவீத மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 7-ஆவது இடம்பிடித்தார்.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் கடந்த மாத இறுதியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், அலோக் மிஸ்ராவை பாராட்டி ரூ.1 லட்சத்திற்கான காசோலையை யோகி ஆதித்யநாத் வழங்கினார்.

தொடர்ந்து, அந்த காசோலையை ஹஸ்ரத்கஞ்ச் பகுதியிலுள்ள தனியார் வங்கியில் அலோக் மிஸ்ரா சமர்ப்பித்துள்ளார். எனினும், அடுத்த 2 நாள்களில் அந்த காசோலை பவுன்ஸ் ஆகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அலோக் மிஸ்ரா, இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் விசாரித்தார்.

அப்போது அந்த காசோலையில் காணப்பட்ட பாரபங்கி மாவட்ட பள்ளிகள் கண்காணிப்பாளர் ராஜ்குமார் யாதவின் கையெழுத்து ஒத்துப்போகாதது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, அலோக் மிஸ்ராவுக்கு புதிய காசோலை வழங்கப்பட்டது. முன்னதாக செக் பவுன்ஸ் ஆனதற்காக, அந்த வங்கி சார்பில் அலோக் மிஸ்ராவிடம்  அபராதம் வசூலிக்கப்பட்டது.

மக்களிடம் பணப்புழக்கம் இரு மடங்காக அதிகரிப்பு

      புதுடில்லி: இந்தியாவில், ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்கு முன்னர் 7.8 லட்சம் கோடியாக இருந்த பணப்புழக்கமானது தற்போது, 18.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.



      இது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்திற்கு முன்னர், 8.9 லட்சம் கோடி ரூபாய் பணம் புழக்கத்தில் விடப்பட்டது. ஆனால், தற்போது, 19.3 லட்சம் கோடி ரூபாய் பணம் புழக்கத்தில் விடப்பட்டது. ரூபாய் நோட்டு வாபசிற்கு முன் மக்களிடம் 7.8 லட்சம் கோடி ரூபாய் பணப்புழக்கம் இருந்தநிலையில், தற்போது அது 18.5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்ட ரூபாய் நோட்டுகளில் 95 சதவீத பணம் மக்களின் புழக்கத்தில் உள்ளது.



சந்தேகம்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சில பகுதிகளில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது, செயற்கையான பணத்தட்டுப்பாடு சிலரால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


From Dinamalar

நிலத்தடி நீரில் யுரேனியம் அதிகரிப்பு: 16 மாநிலங்கள் பாதிப்பு


                  புதுடில்லி: இந்தியாவின் 16 மாநிலங்களில் நிலத்தடிநீரில்சிறுநீரகத்தை பாதிக்க செய்யும் யுரேனியம் அளவு அதிகரித்து காணப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

       அமெரிக்காவை சேர்ந்த டியூக் பல்கலைகழகத்தின் புவியியல் பேராசிரியர் வெங்கோஷ் தலைமையில் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ராஜஸ்தான் , குஜராத் மாநிலம் உட்பட இந்தியாவின் 16 மாநிலங்களில் கிணற்று நீரில் யுரேனியம் அளவு குறித் சோதனை நடத்தி உள்ளனர். இதில் உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பான குடிநீர் தரத்தை விட இந்தியா முழுவதும் நிலத்தடி நீரில் அதிக செறிவு கொண்ட யுரேனியம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 




             இந்தியாவில் ஒரு லிட்டர் நீரில் சுமார் 30 மைக்ரோகிராம் வரையில் யுரேனியம் இருக்கலாம் என உலக சுகாதார மையம் அறிவுறுத்தி உள்ளது.இந்நிலையில் அதிக யுரேனியம் கொண்ட நீரினை தொடர்ந்து பயன்படுத்தி வரும் பட்சத்தில் சிறுநீரக கோளாறு ஏற்பட் வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் "இந்த ஆய்வுகளின் முடிவுகள் இந்தியாவின் தற்போதைய நீர் தர கண்காணிப்பு திட்டங்களை மீளாய்வு செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன என வெங்கோஷ் கூறினார்.

ஒற்றைக் கலப்பையால் உழவு ஓட்டும் மாட்டு வண்டி... சந்தையில் இது புதுசு!


            சு
மார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் வரைக்கும் மாட்டுக் கலப்பையால் மட்டுமே விவசாயிகள் உழவு ஓட்டிக் கொண்டிருந்தனர். அவற்றில் மரத்தினாலான கலப்பை (நாட்டுக் கலப்பை), இரும்பு அல்லது மண் புரட்டும் கலப்பை 
(வளைப்பலகைக் கலப்பை, சட்டிக் கலப்பை, ஒரு வழிக் கலப்பை) மற்றும் சிறப்புக் கலப்பைகள் (ஆழக்கலப்பை, உளிக்கலப்பை, சால் கலப்பை, சுழல் கலப்பை, குழிப்படுக்கை அமைக்கும் கருவி) என மூன்று வகைகளைப் பயன்படுத்தி வந்தனர். அதன் பின்னர் வந்த டிராக்டர் கலப்பையானது மாட்டுக் கலப்பைகளையும், மாட்டு வண்டிகளையும் ஓரம் கட்ட வைத்தது. இதற்குத் தொழிற்புரட்சியும் முக்கியமான காரணம். ஆனால் தமிழ்நாட்டில் எங்கோ ஒரு மூலையில் மாட்டுக் கலப்பைகள் உழவு ஓட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. இன்று பெரும்பாலும் விவசாயத்துக்குத் திரும்பும் இளைஞர்களின் சாய்ஸ் டிராக்டரில் உழவு ஓட்டுவதாகத்தான் இருக்கும். அதற்கு நேரம் மிச்சம், வேலையாட்கள் செலவு குறைவு எனப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

விவசாயம் செய்யும் அனைவரும் மாட்டுக் கலப்பைகளை தவிர்க்க முக்கியமான காரணம் ஒன்று உண்டு. பெரும்பாலான விவசாயிகளுக்கு மாட்டுக் கலப்பைகளை அளவு பார்த்துப் பொருத்தி உழத் தெரியாததுதான். மாட்டுக் கலப்பைமீது ஆர்வம் இருந்தும், அவற்றை இயக்கத் தெரியாதவர்களுக்காகத்தான் சந்தையில் அறிமுகமாகியுள்ளது `அக்னிகார்ட் ஒற்றைக் கலப்பை'. அக்னிகார்ட் ஒற்றைக் கலப்பையைப் புதிதாகச் சந்தையில் அறிமுகப்படுத்தியிருக்கும் கோவை, கணபதி பகுதியைச் சேர்ந்த சசிகுமாரிடம் பேசினோம்.
``மாட்டுக் கலப்பையில் பொதுவாக நடந்து உழவு ஓட்ட வேண்டும். எங்களுடைய அக்னிகார்ட் கலப்பையில் மாடுகளைப் பூட்டிவிட்டு அதன்மீது அமர்ந்து உழவு ஓட்டலாம். சாதாரண கலப்பையில் உழவு ஓட்டும்போது வளைவுகளில் கலப்பை ஓட்டுபவரின் கால்களில் இடிப்பதுபோல வரும். இதில் அப்படி எந்த விதமான தொல்லையும் வராது. பார்ப்பதற்கு மாட்டு வண்டி போன்ற தோற்றத்தில் இரண்டு வீல்களுடன் எங்களுடைய ஒற்றைக் கலப்பை இருக்கும். ஆட்கள் அமரும் பகுதிக்குக் கீழ்ப்பகுதியில் கலப்பை இருக்கிறது.
வீட்டுக்கும் நிலத்துக்கும் தொலைவு அதிகமாக உள்ள விவசாயிகளுக்கு இக்கலப்பை மிகவும் உபயோகமாக இருக்கும். கலப்பை ஓட்டத் தெரியாமல் விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு ஒற்றைக் கலப்பை மிகவும் உபயோகமாக இருக்கும். இரண்டு நாள்கள் ஓட்டிப் பழகிவிட்டால் இந்தக் கலப்பை வண்டியானது எளிதாகவே இருக்கும். ஒருமுறை வாங்கிவிட்டால் அதன் பின்னர் எந்தச் செலவும் இருக்காது. அக்னிகார்ட் ஒற்றைக் கலப்பையில், கலப்பைப் பொருத்தும் இடத்தில் மூன்று அளவுகளில் பொருத்தும்படி கொடுக்கப்பட்டுள்ளன. மேற்புரம், அதிக ஆழம், குறைந்த ஆழம் என நமக்குத் தேவையான அளவுகளில் வைத்துக் கொண்டு உழவு ஓட்டலாம். சிறு குறு விவசாயிகளுக்கு இது மிகவும் உபயோகமானதாக இருக்கும். இதன் விலை 20 ஆயிரம் ரூபாய். முதலில் இரண்டு கலப்பைகள் பூட்டி உழவு ஓட்டும்படி வடிவமைத்துக் கொடுத்தோம். அதில் பெரிய மாடுகளை மட்டும்தான் பூட்டி ஓட்டும்படி இருந்தது.


                அதிகமான விவசாயிகள் கேட்டுக் கொண்டதால் ஒற்றைக் கலப்பையை மட்டுமே பொருத்திக்கொடுக்கிறோம். இந்த ஒற்றைக் கலப்பையில் சிறிய மற்றும் பெரிய மாடுகளை வைத்து உழவு ஓட்டிக்கொள்ளலாம். சாதாரண கலப்பையும், அக்னிகார்ட் ஒற்றைக் கலப்பையும் ஒரே நேரத்தைத்தான் எடுத்துக் கொள்ளும். இதனைப் பராமரிக்க வருடம் ஒருமுறை வீல் பேரிங்குகளை மாற்றிக் கொள்ளலாம். அவ்வப்போது வீல்களுக்கு கிரீஸ் வைக்க வேண்டும். இதனால் வீல்கள் வேகமாகச் சுழலும், மாடுகளுக்கும் அவ்வளவு சுமையாக இருக்காது. ஒவ்வொரு சந்தைகளிலும், கண்காட்சிகளிலும் அக்னிகார்ட் ஒற்றைக் கலப்பையை அறிமுகப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். அப்போது விவசாயிகளிடம் டெமோவும் காட்டுகிறோம். அதிகமான விவசாயிகள் ஆர்வமுடன் விசாரித்துச் செல்கின்றனர்" என்றார்.

எகிறப்போகிறது தங்கம் விலை: தீபாவளிக்குள் ஒரு பவுன் ரூ.34 ஆயிரமாக உயரலாம்

        சர்வதேச அரசியல் சூழல்கள், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது உள்ளிட்ட பல காரணங்களால், தீபாவளிக்குள் தங்கம் ஒரு பவுன் ரூ.34 ஆயிரத்தை எட்டும் வாய்ப்புள்ளது எனத் தெரியவந்துள்ளது.
        சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வால்,அதை அதிகமான விலை கொடுத்து வாங்கும் பொருட்டு டாலரின் தேவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக தேவை அதிகரித்து, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு ரூ.67.53 காசுகளாக இருக்கிறது. அதற்கு ஏற்றார்போல், சர்வதேச அரசியல் சூழல் காரணமாகவும், ரூபாயின் மதிப்பில் நிலையற்ற தன்மை இல்லை. இதனால், தங்கத்தின் விலையிலும் அதிகமான ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.
        ஜூன் 1-ம் தேதி முதல் இன்று வரை ஆபரணத் தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.260 அதிகரித்துள்ளது. இதனால், 8 கிராம் கொண்ட ஆபரணத் தங்கத்தின் மதிப்பு ரூ.23,760 ஆக உள்ளது. இந்த மாதத்தில் குறைந்தபட்சமாக பவுனுக்கு ரூ.23,496 இருந்தநிலையில், இந்த விலை உயர்வு வந்துள்ளது.
       இந்நிலையில், தீபாவளிக்கு முன்பாக தங்கத்தின் தேவை காரணமாகவும், டாலரின் மதிப்பு உயர்வாலும், தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.34 ஆயிரமாக அதிகரிக்கும்வாய்ப்பு இருக்கிறது என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
       இது குறித்து கமாடிட்டி டிரேட் ரிஸ்க் மேனேஜ்மென்ட் ஞானசேகர் தியாகராஜன் பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
       தீபாவளி பண்டிகைக்கு முன்பாக சந்தையில் தங்கம் பவுனுக்கு ரூ.34 ஆயிரத்தை எட்டிவிடும் என்று கருதுகிறோம். சர்வதேச அளவில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 1260 முதல் 1400 டாலர் வரை உயரக்கூடும்.
       அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி வீத உயர்வு, சர்வதேச அரசியல் சூழல்கள், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்புக் குறைவு ஆகியவற்றால், தங்கத்தின் விலை உயரக் காரணமாக இருக்கும்.
      கடந்த 8-ம் தேதி நிலவரப்படி 10 கிராம தங்கத்தின் விலை ரூ.31,10 ஆகவும், அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,302.70 டாலராகவும் இருக்கிறது.
      அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை நிலைப்படுத்தி, வலுப்படுத்தும் பட்சத்தில் தங்கத்தின் விலையை உள்நாட்டுச் சந்தையில் உயராமல் தடுக்கலாம். ஆனால், சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்புச் சரிவை தடுப்பது என்பது கடினமானதாகும். அதுமட்டுமல்லாமல், அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தும்பட்சத்தில் மக்களின் முதலீடு தங்கத்தை நோக்கித் திரும்பு அப்போது தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை உயரும். மேலும், பருவமழை சாதகமாக இருப்பது, பண்டிகை காலம், வேளாண்மை சிறப்பாக இருத்தல் போன்றவற்றால், மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுவார்கள்.இதனால், தீபாவளி நேரத்தில் தங்கத்துக்கான தேவை உயர்ந்துவிலை அதிகரிக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு தியாகராஜன் தெரிவித்தார்.
          கமாடிட்டி அன்ட் கரன்சி மேனேஜ்மென்ட் இயக்குநர் பிரித்தி ரதி கூறுகையில், சர்வதேச சந்தை சூழல்கள், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவு, பணவீக்கம் ஆகியவற்றைப் பார்க்கும் போது, தீபாவளிக்குள் தங்கம் ஒரு பவுன் ரூ.34 ஆயிரத்தை எட்டும் என நினைக்கிறேன். 2018-ம் ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை ரூ.31,800 வரை உயர்ந்து நிலை பெறக்கூடும், அல்லது குறைந்த சராசரியாக ரூ.30,400 ஆக இருக்கும் எனத் தெரிவித்தார்.


          ஏஞ்செல் புரோக்கிங் நிறுவனத்தின் தலைமை பொருளாதார ஆய்வாளர் பிரதமேஷ் மலையா கூறுகையில், அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்துவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதைப் பார்க்கிறேன். இதனால், தங்கத்தின் விலையில் மிகப்பெரிய மாற்றம் வரலாம். தீபாவளிப்பண்டிகைக்குள் தங்கம் ஒரு பவுன் ரூ.31,500 முதல் ரூ.34 ஆயிரம் வரை உயரலாம். சராசரியாக ரூ.30 ஆயிரத்தில் இருக்கும். அதுமட்டுமல்லாமல், சர்வதேச அரசியல்சூழலில் ஏற்படும் மாற்றங்கள், கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றில் சாதகமான போக்கு தென்பட்டால், இதில் மாற்றங்கள் நிகழலாம் எனத் தெரிவித்தார்.

From TheHindu

பயனாளிகள் தகவல்களை அளித்த விவகாரம்: ஃபேஸ்புக்கிடம் விளக்கம் கேட்கிறது அரசு

       பயனாளிகள் தகவலை செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அளித்து தொடர்பாக இம்மாதம் 20-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு ஃபேஸ் புக் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
      சமீபத்தில் செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பிற உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஃபேஸ்புக் பயனாளிகள் குறித்த விவரத்தை அளித்துள்ளதாக தகவல் வெளியானது. பயனர்கள் பற்றிய தனித் தகவல்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் பற்றிய தகவலையும் அளித்ததாக வெளியானது மிகவும் கவலையளிக்கிறது. இது விதிகளை மீறிய செயலாகும். இந்த விஷயத்தை மத்திய அரசு மிகவும் தீவிரமானதாகக் கருதுகிறது. தகவல் பகிர்வில் மிகப் பெரிய தவறு நிகழ்ந்துவிட்டதோடு விதிகள் மீறப்பட்டுள்ளதும் தெரியவருவதாக அரசு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அனுப்பிய கடிதத்தில் இம்மாதம் 20-ம் தேதிக்குள் இது தொடர்பாக விரிவான விளக்கத்தை அளிக்குமாறு கூறியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சமீபத்தில் சீனாவைச் சேர்ந்த நான்கு நிறுவனங்களுக்கும் ஃபேஸ்புக் நிறுவனம் தகவல்களை பகிர்ந்துள்ளதாக குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

2 வீடு வைத்திருப்பவர்களுக்கு வரி சலுகை: வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு

        ஒன்றுக்கு மேற்பட்ட வீடு வைத்திருக்கும் வரிதாரர்களுக்கு தனக்கு சொந்தமான வீடுகளில் எந்த வீட்டில் தான் வசிக்கிறேன், எந்த வீட்டுக்கு ஆண்டு மதிப்பு எதுவும் கிடையாது என்பதை எந்த நேரத்திலும் மாற்றும் உரிமை இருப்பதாக வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (ஐடிஏடி) மும்பை அமர்வு தெரிவித்துள்ளது. இந்த வீட்டிற்கு அசல் வாடகை (notional rent) அடிப்படையில் எந்த வரியும் செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
      வருமான வரி தாக்கலின்போது ஒன்றுக்கு மேற்பட்ட வீடு வைத்திருப்பவர்கள் தனக்கு சொந்தமான வீடுகளில் ஏதேனும் ஒன்றை, தற்போது வசித்து வரும் வீடாக குறிப்பிடவேண்டும். இந்த வீட்டுக்கு ஆண்டு மதிப்பு எதுவும் கிடையாது. வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. மும்பை அமர்வின் இந்த உத்தரவின் மூலம் எந்த வீட்டை தான் வசித்துவரும் வீடாக வரிதாரர் வருமான வரித் தாக்கலின்போது குறிப்பிட்டிருந்தாரோ அதை வருமான வரி ஆய்வின்போது வேறு வீடாக மாற்றிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் அதிக மதிப்புள்ள வீடுகளுக்கு வரி செலுத்துவதை தவிர்க்க முடியும்.
       தனக்கு சொந்தமான பிற வீடுகளை வீட்டு உரிமையாளர் வாடகைக்கு விடவில்லை என்றாலும்கூட அவை வாடகைக்கு விடப்பட்டதாக கருதப்பட்டு அசல் வாடகையின் (notional rent) அடிப்படையில் அந்த வீடுகளுக்கான வரி வசூலிக்கப்படும். நகராட்சிகளுக்கு செலுத்தும் வீட்டு வரிக்கு வருமான வரியில் விலக்கு அளிக்கப்படுகிறது. இதுதவிர மேலும் 30 சதவீத வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.
    மும்பையின் ஜுஹூ, சாண்டாகுரூஸ் கிழக்கு மற்றும் வசாய் பகுதிகளில் தலா ஒவ்வொன்றாக 3 வீடுகளை வைத்திருக்கும் வெங்கடவர்த்தன் என் ஐயங்கார், தனது வருமான வரி தாக்கல் படிவத்தில் வசாயிலுள்ள வீட்டை தான் வசிக்கும் வீடாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் வருமான வரி ஆய்வின்போது ஜுஹூ பகுதியில் தான் வசிப்பதாக மாற்றிக் குறிப்பிட்டார். இதனை ஏற்றுக்கொள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் மறுத்த நிலையில், இந்தப் பிரச்சினை ஐடிஏடி விசாரணைக்கு வந்தது. வருமான வரி தாக்கலின்போது தான் வசித்துவருவதாக குறிப்பிட்ட வீட்டிற்கு பதிலாக, வருமான வரி ஆய்வின்போது வேறொரு வீட்டைக் குறிப்பிடுவதை வருமான வரி சட்டம் தடுக்கவில்லை என்பதற்கான விவரங்களை ஐடிஏடியில் வெங்கடவர்த்தன் சமர்ப்பித்தார்.
     இதனை ஏற்றுக்கொண்ட ஐடிஏடி, வருமான வரித் தாக்கலில் வசிக்கும் வீடாக குறிப்பிட்டதை பிறகு மாற்ற முடியாது என வரிச் சட்டத்தின் எந்தப் பகுதியிலும் கூறப்படவில்லை என தனது உத்தரவில் தெரிவித்து ள்ளது.

வீட்டு விச பூச்சிகளின் கடியும் அதற்கான மருந்தும்..! பல்லி தேனீ குளவி தேள் கம்பளிபூச்சி பூரான் அரனை

பல்லி!
பல்லி கடிப்பது அரிதான ஒன்று. அப்படி கடித்தால், அவுரி இலை மற்றும் அதன் வேர் ஆகியவற்றை 50 கிராம் எடுத்து, 500 மில்லி தண்ணீரில் போட்டு 100 மில்லி அளவுக்கு சுண்டும் வரை காய்ச்சி, தினமும் 25 மில்லி வீதம் நான்கு நாட்கள் குடித்து வந்தால் விஷம் குறையும்.


பூச்சிக் கடி!
சில நேரங்களில் பெயர் தெரியாத பூச்சிகள் கடித்துவிடும். எந்த பூச்சி கடித்தாலும், வெதுவெதுப்பான நீரில், மக்காச்சோளமாவு, சமையல் சோடா இரண்டையும் சேர்த்துக் கலந்து, பூச்சிக் கடித்த இடத்தில் தடவினால்… விஷம் இறங்கும்.

அரணைக் கடி!
அரணை கடிப்பதைவிட நக்கிச் சென்றுவிடும். இதுவே விஷம் என்பார்கள். இதற்கு சீமை அகத்தி இலையை விழுதாக அரைத்து, தேங்காய் எண்ணெயில் குழைத்து கடிவாயில் பூசி வந்தால் விஷம் குறையும்.
தேனீ, குளவி!
தேனீ, குளவி கொட்டினால் மாங்காய் காம்பில் இருந்து வழியும் பாலை கடிவாயில் தடவினால் விஷம் இறங்கும். அல்லது கடிவாயில் சுண்ணாம்பு தடவினால் வீக்கம் குறைந்து விஷமும் இறங்கும்.

தேள் கடி!
20 மிளகுடன், தேங்காய் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக மென்று தின்றுவந்தால் தேள்கடி விஷம் குறையும். அல்லது வெள்ளைப் பூண்டை அரைத்து கடிவாயில் தடவினால் விஷம் குறையும். புளியைக் கரைத்து சிறிது குடித்துவிட்டு, தேள் கொட்டிய இடத்தில் தடவினால் விஷம் இறங்கும். தேன், எலுமிச்சைச் சாறு இரண்டையும் குழைத்து கடிவாயில் தடவினாலும் விஷம் இறங்கும்.

கம்பளிப்பூச்சி!
கம்பளிப்பூச்சியின் ரோமம் உடலில் பட்ட இடத்தில் நல்லெண்ணெய் தடவினால் வீக்கம், அரிப்பு நீங்கும். அல்லது முருங்கை இலையை அரைத்து பற்று போட்டாலும் அரிப்பு குறையும். வெற்றிலையை சாறு வரும் அளவுக்கு அழுத்தி தேய்த்தாலும் அரிப்பு குறையும்.

பூரான்!
வெற்றிலைச் சாற்றில் மிளகை நான்கு மணி நேரம் ஊறவைத்து, அதை எடுத்து காயவைத்து சாப்பிட்டு வந்தால், பூரான் கடி விஷம் குறையும். துளசி இலைகளைக் காயவைத்து பொடி செய்து, 5 மிளகு சேர்த்து மென்று தின்றால் பூரான் விஷம் குறையும்.

விஷக்கடி வலி நீங்க!
கரிசலாங்கண்ணி இலையை ஆட்டுப்பாலில் அரைத்து கொடுத்தால், விஷக்கடியால் ஏற்படும் வலி குறையும்.
மேற்சொன்ன எந்த ஜந்து கடித்தாலும் நாட்டுத் தக்காளி, மணத்தக்காளி செடிகளின் இலைகளையும் இடித்து சாறு பிழிந்து, அதில் 200 மில்லி தினமும் குடித்து வந்தால் விஷம் குறையும். விஷ ஜந்துக்கள் எது கடித்தாலும், உடனடியாக கடிவாயில் சுண்ணாம்பைத் தடவி, எட்டு மிளகை வாயில் போட்டு மென்று விழுங்குவது முதல் உதவியாக இருக்கும்.

நாய், பூனை, பாம்பு!
நாய், பூனை ஆகிய செல்லப் பிராணிகள் கடித்தால், உடனடியாக வெங்காயம், உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து கடிபட்ட இடத்தில் தடவினால் விஷம் குறையும். எலி கடிக்கும் இதே வைத்தியம் பலன் கொடுக்கும். இந்த முதல் உதவியைச் செய்தபிறகு மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சை எடுப்பது நல்லது. சாதாரண பாம்புகள் கடித்தால், சுண்ணாம்பை தடவி, எட்டு மிளகை வாயில் போட்டு மென்று விழுங்குவதே போதுமானதாக இருக்கும். விஷப்பாம்புகள் என்றால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது.

Nandri Vivasayamkapom

வானிலை முன்னறிவிப்பு: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற வாய்ப்பு

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ''வட கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாற வாய்ப்புள்ளது. இது தற்போது பங்களாதேஷ் கடலோரப் பகுதி அருகே மையம் கொண்டுள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை.
அதே நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தரைக்காற்று சற்று பலமாக வீசக்கூடும்.
சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லார், வால்பாறை ஆகிய இடங்களில் தலா 7 செமீ, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது'' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘100க்கு 120 மதிப்பெண்கள்’ - இன்ப அதிர்ச்சியில் பீகார் மாணவர்கள்: பிளஸ் 2 தேர்வில் அடுத்த முறைகேடு அம்பலம்

நீட் தேர்வில் நாடுதழுவிய அளவில் முதலிடம் பிடித்த மாணவி கல்பனா குமாரி, பீகாரில் நடந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வருகைபதிவு இல்லாத அனுமதிக்கப்பட்ட நிலையில், இதே தேர்தவில், மொத்த மதிபெண்களை விடவும் கூடுதலான மதிப்பெண் வழங்கப்பட்ட அதிர்ச்சி தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.

நாடுமுழுவதும் நீட் தேர்வு சமீபத்தில் நடந்தது. தமிழகத்தில் 1 லட்சத்து 7,288 மாணவர்களில், 1 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. தமிழக அரசு மற்றும் பல் வேறு தனியார் அமைப்புகளின் உதவியால் மிகுந்த சிரமத்துக்கிடையே ரயில்கள், பேருந்துகளில் சென்று மாணவர்கள் தேர்வு எழுதினர். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மற்ற பல மாநிலங்களை விட தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்தது. வெறும் 39.9 சதவீதம் பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வட இந்திய மாநில மாணவர்கள், தமிழகத்தை விடவும் அதிகஅளவில் வெற்றி பெற்றனர். தமிழகத்தை சேர்ந்த ஒரே மாணவி மட்டும் 12வது இடம் பிடித்தார்.
இந்த தேர்தவில் பீகாரைச் சேர்ந்த மாணவி கல்பனா குமாரி என்ற மாணவி 720க்கு 691 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தார். கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் பின்தங்கி இருந்த மாநிலமான பீகாரில் இருந்து மாணவி ஒருவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
ஆனால், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத 75 சதவீத வருகைப்பதிவு தேவை என்ற நிலையில், அது இல்லாமலேயே அவருக்கு தேர்வு எழுத அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கல்பனா குமாரி நீட் தேர்வில் மட்டுமின்றி பீகார் மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட 12-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாநிலத்தில் முதலிடம் பிடித்தார்.
ஆனால் பீகார் கல்வி அமைச்சரோ இதுபோன்ற சர்ச்சையை யாரும் எழுப்ப வேண்டாம், பீகார் மாணவி அதிக மதிப்பெண் பெற்றுள்ளதை மட்டும் கொண்டாடுவோம் எனக் கூறினார்.
இந்நிலையில் பீகார் மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 12-ம் வகுப்பு தேர்வில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. இந்த தேர்வில் மொத்த மதிப்பெண்களை விடவும் மாணவர்கள் கூடுதலாக மதிப்பெண் பெற்றுள்ளனர். 100 சதவீதத்திற்கு 130 சதவீத மதிப்பெண்கள் சில மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இயற்பியலில் 65 மதிப்பெண்கள் தேர்வக்கும், 35 மதிப்பெண்கள் செய்முறை தேர்வுக்கும் வழங்கப்படுகிறது. ஆனால் ஆர்வால் மாவட்டத்தைச் சேர்ந்த பீம் குமார் என்ற மாணவருக்கு செய்முறை தேர்வில் மொத்த மதிப்பெண்ணான 35க்கும் அதிகமாக 38 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதுபோலவே வேதியியலில் சந்தீப் ராஜ் என்ற மாணவருக்கு செய்முறை தேர்வில் மொத்த மதிப்பெண்ணான 35 விடவும் அதிகமாக 39 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோலவே எழுத்து தேர்விலும் தனித்தனியாக போடப்பட்ட மதிப்பெண்களை கூட்டி பார்த்தால் வரும் மதிப்பெண்களை விடவும் கூடுதலாக ‘இலவச’ மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளளன.
வேறு சில மாணவர்களுக்கு எந்த கேள்விக்கும் பதில் அளிக்காத நிலையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. கணிதத்தில் மூன்று விடையில் ஒன்றை தேர்வு செய்யும் அப்ஜெக்டிவ் தேர்வு மொத்தம் 35 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஆனால் அதில் கிழக்கு சாம்ரான் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தீப் ராஜ் என்ற மாணவர் 40 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதைவிட கொடுமையாக, வைஷாலி என்ற மாணவி உடல் நிலை சரியில்லாததால் உயிரியல் தேர்வை எழுதவில்லை. அந்த தேர்வில் வைஷாலிக்கு 20 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வில் பெற்ற 18 மதிப்பெண்ணையும் சேர்த்து, உயிரியில் தேர்வில் அவர் 38 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுபோலவே ஆங்கிலம் உள்ளிட்ட மொழி பாடங்களிலும் மதிப்பெண் ‘மழை’ பொழிந்துள்ளது. இதனால் பீகார் மாணவர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

From The Hindu

தமிழகத்திற்கு ஜல்லிக்கட்டு மாடு விற்று பல லட்சம் ஈட்டும் கர்நாடகா

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு மவுசு அதிகரித்து வரும்நிலையில் கர்நாடகாவில் அதிகஅளவு ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்க்கப்பட்டு தமிழகத்தில் பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறன.
கடந்த 2015, 2016-ம் ஆண்டுகளில் உச்ச நீதிமன்றத் தடையால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடக்கவில்லை. கடந்த ஆண்டும் வழக்கம்போல உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. அதிருப்தியடைந்த அலங்காநல்லூர் ஊர் மக்கள் வாடிவாசல் முன் அமர்ந்து,
வாடிவாசலில் காளைகளை அவிழ்த்துவிடும் வரை வீட்டு வாசலை மிதிக்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பெரிய அளவில் மாணவர்கள் பொதுமக்கள் களமிறங்கி போராட்டம் நடத்தினர். அதை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்ட திருத்தம் கொண்டு வந்து, ஜல்லிக்கட்டு விளையாட்டுகளை நடத்தின.
மாணவர்கள் போராட்டத்துக்குப் பிறகு, மலேசியாவிலும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தும் அளவுக்கு ஜல்லிக்கட்டு விழாவுக்கு உலக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. வழக்கமாக ஜல்லிக்கட்டு நடைபெறாத திருப்பூர் போன்ற பகுதிகளிலும் கூட தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதனை பார்ப்பதற்காக வருபவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு மவுசு அதிகரித்துள்ளதால், ஜல்லிக்கட்டு காளைகளுக்கான தேவையும் ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே வறட்சி நிலவி வருவதாலும், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டதாலும் பலரும் காளை மாடுகள் அடிமாடுகளாக விற்கப்பட்டு விட்டன. தமிழகத்தில் காளை மாடுகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டது. குறிப்பாக ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் திறன் கொண்ட நாட்டு வகை மாடுகள் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது.
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த தேவையை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கிராமங்கள் நிறைவு செய்கின்றன. ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ஷிகாரிபூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் தற்போது அதிகஅளவு ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்படுகின்றன.
இங்குள்ள காளைகளை, ஜல்லிக்கட்டு போட்டியில் பயன்படுத்த 12 லட்சம் ரூபாய் வரை கொடுத்து தமிழகத்தை சேர்ந்தவர்கள் வாங்கிச் செல்கின்றனர். சிலர் போட்டியில் பயன்படுத்துவதற்காக வாடகை அடிப்படையிலும் காளைளை பெற்று செல்கின்றனர். ஷிகாரிபூர் பகுதி காளைகள் விளையாட்டு போட்டிகளுக்காகவே நீண்டகாலமாக பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக ஹலிக்கர் என்ற உள்ளூர் காளை மாடு இனம் விளையாட்டு போட்டிகளுக்கு பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்த மாடுகள் தற்போது ஜல்லிக்கட்டு மாடுகளாக வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போலவே இங்கும் காளை மாடுகளுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதற்கு தயார் படுத்தும் விதமாக இங்குள்ள காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. நல்ல பயிற்சி எடுத்த மாடுகள் தற்போது கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன.
இதுகுறித்து இங்குள்ள விவசாயிகள் கூறுகையில் ‘‘எங்கள் பகுதியில் நீண்ட காலமாகவே உழவுக்கு அல்லாமல், போட்டிகளுக்கு பயன்படுத்துவதற்காகவே சிறப்பு தன்மை கொண்ட காளைகள் வளர்க்கப்படுகின்றன. இவை சில ஆயிரம் ரூபாய் விலையில் தான் விற்கப்பட்டு வந்தன.
ஆனால் தற்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் அதிகஅளவில் நடப்பதால் அவர்கள் எங்கள் காளைகளை வாங்கிச் செல்கின்றனர். இதனால் எங்கள் காளைகளுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. 12 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலையில் தற்போது காளைகளை விற்பனை செய்கிறோம்.
இதனால் உள்ளூரிலேயே காளை கன்றுகளின் விலை உயர்ந்துள்ளது. தரமான காளை கன்றுகளை வளர்த்து விற்பனை செய்ய ஷிகாரிபூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் திட்டமிடுகின்றனர். எனவே எங்கள் பகுதியில் தற்போது காளை கன்று குட்டிகள் கூட பல ஆயிரம் ரூபாய் விலையில் விற்பனையாகின்றன’’ என தெரிவித்தனர்.
இதுகுறித்து விவசாயி குமராண்ணா கூறுகையில் ‘‘தற்போது காளை கன்று ஒன்றை 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளேன். அதனை நன்கு வளர்த்து ஜல்லிக்கட்டு போட்டிக்காக விற்கபோகிறேன். எனது நண்பர் ஜாகிர் சமீபத்தில் அவரது காளை, அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு 11 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்’’ எனக் கூறினார்.
இதுமட்டுமின்றி இந்த கன்னட திரைப்படங்கள், திரை நட்சத்திரங்களின் பெயர்களை இந்த மாடுகளுக்கு வைத்து கர்நாடக விவசாயிகள பிரபலப்படுத்துகின்றனர்.

அமராவதி அணையின் இன்றைய நிலவரம்



அமராவதி அணை  :::  10.06.2018  09.05 AM நிலவரப்படி 

அணையின் இருப்பு
 [ அடி ]
53.64 Cusecsஅதிகரித்துள்ளது
அணைக்கு நீர் வரத்து
 [ கன அடி ]
2655 Cusecsஅதிகரித்துள்ளது
அணையின் வெளியேற்றம்
 [ கன அடி ]
12 Cusecsஅதிகரித்துள்ளது



அமராவதி அணை  :::  09.06.2018 9.19 AM நிலவரப்படி

அணையின் இருப்பு [ அடி ]47.97 Cusecsஅதிகரித்துள்ளது
அணைக்கு நீர் வரத்து [ கன அடி ]250 Cusecsஅதிகரித்துள்ளது
அணையின் வெளியேற்றம் [ கன அடி ]11 Cusecsமாற்றமில்லை



அமராவதி அணை  :::  08.06.2018 8.17 AM

  
அணையின் இருப்பு [ அடி ]47.41 Cusecsஅதிகரித்துள்ளது
நீர் வரத்து [கனஅடி]95 Cusecsகுறைந்துள்ளது
வெளியேற்றம் [கன அடி ]11 Cusecsமாற்றமில்லை



பெட்ரோல், டீசல் விலையில் மேலும் விலை குறைப்பு!!

நேற்றைய தினத்தைக் காட்டிலும், இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல்விலை சற்றே குறைந்துள்ளது. 

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் மீது பல்வேறு வரிகள் போடப்படுவதால் அதன் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. நம்மை சுற்றியுள்ள அண்டை நாடுகளில் கூட குறைவான விலையில் எரிபொருள் விற்கப்படுகின்றது. 

இந்நிலையில் இன்றைய பெட்ரோல் விலை 26 பைசா குறைந்து ரூ. 79.69 ஆகவும், டீசல் விலை 19 பைசா குறைந்து லிட்டருக்கு ரூ.71.89ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...