புதுடில்லி: இந்தியாவில், ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்கு முன்னர் 7.8 லட்சம் கோடியாக இருந்த பணப்புழக்கமானது தற்போது, 18.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்திற்கு முன்னர், 8.9 லட்சம் கோடி ரூபாய் பணம் புழக்கத்தில் விடப்பட்டது. ஆனால், தற்போது, 19.3 லட்சம் கோடி ரூபாய் பணம் புழக்கத்தில் விடப்பட்டது. ரூபாய் நோட்டு வாபசிற்கு முன் மக்களிடம் 7.8 லட்சம் கோடி ரூபாய் பணப்புழக்கம் இருந்தநிலையில், தற்போது அது 18.5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்ட ரூபாய் நோட்டுகளில் 95 சதவீத பணம் மக்களின் புழக்கத்தில் உள்ளது.
சந்தேகம்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சில பகுதிகளில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது, செயற்கையான பணத்தட்டுப்பாடு சிலரால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
From Dinamalar
No comments:
Post a Comment