Monday, 9 July 2018
போக்குவரத்து விதிகளை மீறினால் இனி போலீசாரிடம் பணம் கொடுக்க தேவையில்லை.. வசூல் ராஜாக்கள் திண்டாட்டம்!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசார், விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம், பேடிஎம் மூலமாக அபராதம் வசூலிக்கும் முறை கடந்த சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது
அபராதம் வசூலிக்கும் முறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இ-சலான் சிஸ்டம் விரைவில் நடைமுறைக்கு வருகிறது. இந்த திட்டத்தின்படி வட்டார போக்குவரத்து அலுவலக (ஆர்டிஓ) அதிகாரிகளுக்கு, பாயிண்ட் ஆப் சேல் (POS) இயந்திரம் வழங்கப்பட்டு விடும்.
வாகன தணிக்கையில் ஈடுபடும் அவர்கள், விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை பிடித்து, பிஓஎஸ் இயந்திரம் மூலமாக அபராத தொகையை வசூலித்து விடுவார்கள். அதிகாரிகளிடம் சிக்கும் வாகன ஓட்டிகள், கிரெடிட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி, பிஓஎஸ் இயந்திரம் மூலமாக அபராத தொகையை கட்டலாம்.
அதுமட்டுமல்லாமல் இந்த இயந்திரம், சலானையும் வழங்கிவிடும். கேஸ்லெஸ் மற்றும் பண பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காகவே இ-சலான் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது.
அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ள இயந்திரத்தில், குற்றங்களின் வகைகள் பட்டியலிடப்பட்டு விடும். அதற்கு ஏற்ப அவை சலான்களை வழங்கும். விதிமுறைகளை மீறி, அதிகாரிகளிடம் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு 2 வாய்ப்புகள் வழங்கப்படும்.
முதலாவது, சம்பவ இடத்திலேயே கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி, பிஓஎஸ் இயந்திரம் மூலமாக அபராத தொகையை செலுத்தலாம். அல்லது வங்கிக்கு சென்று சலான் நம்பரை தெரிவித்து, அபராத தொகையை கட்டலாம்.
மிழக காவல்துறை, சென்னை, கோவை உள்ளிட்ட ஒரு சில இடங்களில், கிரெடிட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி பிஓஎஸ் இயந்திரம் மூலமாக அபராதம் வசூலிக்கும் முறையை ஏற்கனவே அறிமுகம் செய்து விட்டது.
இந்த திட்டம் படிப்படியாக தமிழகம் முழுவதும் அமலுக்கு கொண்டு வரப்படும் என போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற திட்டங்களின் மூலமாக, அபராத தொகையை போலீசாரின் கையில் கொடுக்க வேண்டியதில்லை. எனவே ஒரு சில வசூல் ராஜாக்களின் பாடு இனி திண்டாட்டம்தான்!!

Subscribe to:
Posts (Atom)
அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்
அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...

-
நாவல் மரம் எல்லா வகையிலும் ஒரு சிறப்பான மரம். நாவல் மரம் என்று எடுத்துக்கொண்டால், திருநாவலூர் என்று ஒரு ஊர் இருக்கிறது, திருச்சி பக்கத்தில...
-
கண்ணுக்கு தெரியாத காற்றைக்கூட நம் தமிழர்கள் விட்டுவைக்காமல் அந்த காற்று ( #Air / #Wind ) வீசும் திசை பொருத்து நான்காகவும், அது வீசும் வேகத்...
-
சுதந்திரத்துக்கு முன் கட்டப்பட்டவை – 25 காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்டவை – 25 திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் – 36 அதிமுக ஆட்சியில் கட்டப...