Monday, 20 August 2018

அலுவலகம், வீடுகளில் அழகு தாவரமாக மூங்கில்

தமிழகத்தின் வறட்சி மாவட்டங்களிலும் தண்ணீர் பற்றாக்குறையாக இருந்தாலும் நன்கு வளரும் மர வகைகள் இவை இரண்டுமாகும்…

ஒரு மூங்கில் தனது வாழ்நாளில் 450 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, ஆக்சிஜனை வெளியிடுகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். எனவே, மூங்கில் சுற்றுச்சூழலை பாதுகாக்க சிறந்த மரம் என்று கருதப்படுகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் இரண்டு மூங்கில் மரங்களை வளர்த்தால் காற்று மண்டலம் தூய்மைப்படும் என்கின்றனர் உலக சுற்றுச்சூழல் வல்லுனர்கள்.
ஒரு மனிதனுக்கு ஓர் ஆண்டில் தேவைப்படும் பிராணவாயு அதாவது ஆக்சிஜன் 292 கிலோ. ஒரு நாளைக்கு தேவைப்படுவது 800 கிராம் எனக் கணக்கிட்டுள்ளது. இது உலக சுகாதார நிறுவனத்தின் (W.H.O.) ஆராய்ச்சி முடிவு. ஒரு மூங்கில் குத்து ஓர் ஆண்டில் 309 கிலோ உயிர்க் காற்றைத் தருகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு 850 கிராம். ஒரு மனிதனுக்கு நாள் ஒன்றுக்குத் தேவை 800 கிராம். ஆனால், ஒரு குத்து தருவதோ 850 கிராம். ஒரு மூங்கில் குத்தில் வெளியிடக்கூடிய பிராண வாயு
மூங்கில்
மூங்கில் (Bamboo) புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். புல் வகையிலேயே மிகவும் பெரிதாக வளரக்கூடியது மூங்கிலேயாகும். சில மரங்கள் ஒரு நாளில் ஒரு மீட்டர் உயரம் வரை வளர்கின்றன. இவற்றில் ஏறத்தாழ 1000 சிற்றினங்கள் உள்ளன. உலகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட இனவகை மூங்கில்கள் வளர்க்கப்படுகின்றன.[3] மூங்கில் புல் வகையைச் சேர்ந்த ஒரு மரம் ஆகும். மூங்கில் மரம் 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் அதிக அளவு பருமன் 1 சென்ட்டிமீட்டரிலிருந்து 30 சென்ட்டிமீட்டர் வரை இருக்கும். மூங்கில் மிகவும் வேகமாக வளரக்கூடிய ஒரு மரம். ஒரே நாளில் 250 cm (98 in) கூட தக்க சூழ்நிலையில் வளருவதாகத் தாவரவியலாளர் கண்டறிந்துள்ளனர்.
ஒரு மூங்கில் மரத்தின் வயது 60 ஆண்டுகள். ஆனால், அது 60 அடி உயரம் வரை வளரும் காலமே 59 நாட்கள்தான். கடல் மட்டத்திற்கு மேல் 4000 மீட்டர் உயரம் உள்ள பிரதேசங்களில்தான் மூங்கில் நன்றாக வளரும். எனவே மலைச்சரிவுகளும், மிக வறண்ட பகுதிகளும் மூங்கில் வளர்வதற்கு ஏற்ற இடங்கள்.சீனா, இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா,நேபாளம்,பங்களாதேசு, கோஸ்டிரிக்கா, கென்யா ஆகிய நாடுகள் மூங்கில் உற்பத்தியில் முன்னணி நாடுகளாக இருக்கின்றன.
இந்தியாவில் 156 வகை மூங்கில் இனங்கள் பயிரிடப்படுகின்றன. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்காளம், ஒரிசா, ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிராமாநிலங்கள் முதலிடம் பெற்று நிற்பவை. மூங்கிலின் வேர் நிலத்தை ஒரு அடிக்கு மேல் பற்றிக் கொண்டிருக்கும். மூங்கில் ஒன்றோடொன்று இணைந்து வளரும் தொகுப்பு 6 கியூபிக் மீட்டர் வரை இருக்கும்.
மூங்கில் வளர்ப்பு…
மூங்கில் புல் வகையை சேர்ந்த தாவரம். வெப்ப மண்டலத்தில் நன்கு வறட்சியை தாங்கி வளரும் இயல்பு உடையது.
மூங்கிலில் பல வகைகள் உள்ளன. அதிகமாய் வளர்ப்பது முள் இல்லாத மூங்கில் மற்றும் போல் மூங்கில்.
ஆடி பட்டத்தில் நடவு செய்வது சிறப்பு. ஏனெனில் ஆடியில் அவ்வப்போது பெய்யும் மழையால் நன்கு வேர் பிடித்து கோடை காலம் வருவதற்குள் வறட்சி தாங்கும் அளவிற்க்கு வளர்ந்து விடும்.
மூங்கில் நடவு செய்யும் பொழுது செடிக்கு செடி மற்றும் வரிசைக்கு வரிசை இடைவெளி 25 அடி இருக்குமாறு நட வேண்டும்.
கண்டிப்பாக ஒவ்வொரு விவசாயியும் தன் வயல் ஓரங்களில் வளர்க்க வேண்டிய மரம். மூங்கில் மற்ற பயிர்களின் வளர்ச்சியை பாதிக்கும், அதனால் விளைபயிர்களுக்கு தொந்தரவு இல்லாத இடத்தில் மூங்கிலை வளர்க்க வேண்டும்.
முள் இல்லாத மூங்கில்:
முள் இல்லாத மூங்கில் அதிக உயரம் வளர்வது இல்லை. ஆனால் இதன் பயன்பாடு அதிகம். இந்த வகை மூங்கில் குச்சியின் நடுவில் இடைவெளிெ இருக்காது. இதனால் விவசாய கருவிகளான கத்தி மற்றும் மண்வெட்டி போன்றவற்றின் கைப்பிடிகள் செய்வதற்கு உகந்தது. கூரை வீடுகள் கட்டுவதற்கும் பயன்படுகிறது. பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்ய பந்தல் அமைக்க இந்த முள் இல்லாத கெட்டி மூங்கில் அதிகம் பயன்படுத்த படுகிறது. குறைந்தது மூன்று வருடம் நிலைத்து நிற்க கூடியது. இதனால் விவசாயிகளுக்கு செலவில்லாத ஒரு பந்தல் அமைகிறது.
நடுப்பகுதியில் போல் உள்ள மூங்கில்கள்:
அடுத்து நடுப்பகுதியில் போல் உள்ள மூங்கில்கள் அதாவது நடுப்பகுதியில் இடைவெளி உள்ள முங்கில்கள் வீடு கட்டவும் கூடைகள் பின்னுவதற்கும் பயன் படுத்த படுகின்றன.
நட்ட ஐந்தாம் வருடத்தில் இருந்து வெட்டி விற்பனை செய்யலாம். மூங்கில் தொடர்ந்து அறுபது வருடங்கள் வரை உயிர் வாழும். மானாவரி நிலத்தில் மூங்கில் பயிரிட்டால், பயிரிட்ட ஐந்தாம் ஆண்டு முதல் தொடர்ந்து அறுபது வருடங்கள் வருமானம் பெறலாம்.
நன்கு முற்றிய மூங்கில்களில் இருந்து மூங்கில் அரிசி எடுக்கப்படுகிறது. இந்த அரிசியானது மிகவும் சத்து உடையது. அதிக சுவையாக இருக்கும். சாதாரண அரிசி போன்று சமைத்து உண்ணலாம். அடுத்து மூங்கில்களில் இருந்து உதிரும் இலைகள் மண்புழு உரம் தயாரிக்க பயன் படுகின்றது . உரத்தின் தரமானது மற்ற தழைகள் மூலம் தயாரிப்பததை விட தரமானதாக இருக்கும். உயர் தர காகிதம் தயாரிக்க மற்றும் ரூபாய் நோட்டு தயாரிப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது.
ஆளுக்கொரு மூங்கில் மரம் அல்லது குறைந்தபட்சம் வீட்டிற்கு ஒரு மூங்கில் மரம் இருந்தால் சுற்றுச்சுழல் பாதிப்பு என்ற சொல்லுக்கே இடமில்லாமல் போய்விடும்!எனவே, மூங்கில் வளர்த்து சுற்றுச் சூழலை பாதுகாப்போம்

‘பணத்தைக் கொடுத்து வேதனைப்படுத்தாதீர்கள்’: கேரள முதல்வரை நெகிழச் செய்த மீனவர்கள்

கேரள மாநிலத்தில் வெள்ள மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் ஊதியம் தரப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்த நிலையில், அதை மீனவர்கள் நிராகரித்துள்ளனர்.
எங்களுக்கு பணத்தை கொடுத்து வேதனைப்படுத்தாதீர்கள், என்னுடைய சகோதர, சகோதரியைக் காப்பாற்றுவது எனது கடமையாகும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
   
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரள மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக மழை கொட்டித்தீர்த்தது. 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மழை வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கி 350-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள நீரில் சிக்கி இருக்கும் மக்களை மீட்கும் பணியில் முப்படை வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புப்படையினரும், தீயணைப்பு படையினரும், போலீஸாரும் ஈடுபட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்ட நிலையில், அவர்களுடன் சேர்ந்து பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்ட கடலோரப்பகுதி மீனவர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
எந்தவிதமான சுயநலமும் பாராமல் தங்களிடம் இருக்கும் படகுகளைக் கொண்டு வந்து வெள்ள நீரில் சிக்கி இருக்கும் மக்களை மீட்டு வருகின்றனர்.
மீனவர்களின் சேவை குறித்து நேற்று ஊடகங்கள் மத்தியில் முதல்வர் பினராயி விஜயன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், மீட்புப்பணியில் ஈடுபட்டுவரும் மீனவர்கள் ஒவ்வொருவரின் பணியும் மகக்தானது. ராணுவத்துக்கு இணையாகப் பணியை மேற்கொள்கிறார்கள். நம்மாநிலத்தின் ராணுவத்தினர்களாக இருக்கிறார்கள்.
இவர்களுக்கு நாள்தோறும் ரூ.3 ஆயிரம் ஊதியம் தரப்படும். படகுகளுக்கு எந்தவிதமான சேதம் ஏற்பட்டாலும் அதை அரசே சரிசெய்து தரும். தேவையான எரிபொருட்களை அரசே வழங்கும். படகுகளை மீண்டும் அவர்கள் இடத்தில் கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பு அரசுடையது. மீட்புப்பணியில் ஈடுபடும் மீனவர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு அளித்து அவர்களை வரவேற்க வேண்டும் என்று பேசி இருந்தார்.
இந்நிலையில், முதல்வர் பினராயி விஜயனின் பேச்சைக் கேட்டு நெகிழ்ந்த மீனவர்கள் அதை வரவேற்றுள்ளனர். ஆனால், கேரள அரசு அளிக்கும் பணத்தை ஏற்க மறுத்துவிட்டனர்.
கொச்சி போர்ட் பகுதியில் இருந்து கியாஸ் முகம்மது என்ற மீனவர் முதல்வர் பினராயி விஜயனுக்கு வேண்டுகோள் அளித்துப் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:
கேரள முதல்வர் எங்களின் பணியையும், சேவையையும் பாராட்டிப் பேசியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு இடங்களில் தேங்கி இருக்கும் நீரில் மக்களை மீட்பது சவாலானதுதான் அதைச் செய்து வருகிறோம்.
நாங்கள் அனைவரும் செய்யும் மீட்புப்பணியை மிகவும் மகிழ்ச்சியுடன் செய்து வருகிறோம். எங்களை உங்களின் ராணுவம் என்று நீங்கள் புகழ்ந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆனால், அதன்பின், எங்கள் சேவைக்கு ரூ.3 ஆயிரம் ஊதியம் தருவதாக நீங்கள் கூறியதுதான் வேதனையளிக்கிறது. எங்களுக்கு பணத்தைக் கொடுத்து வேதனைப்படுத்தாதீர்கள். எங்களின் சகோதர, சகோதரிகளைக் காப்பாற்றுவதும், சக மனிதர்களை காப்பதும் எங்களின் கடமை.
இலவசமாக எங்களின் படகுகளை அரசு சரிசெய்து கொடுப்பதாகக் கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களின் உயிரைக் காக்கும் பணிக்கு எங்களுக்கு பணம் வேண்டாம்.
இவ்வாறு பேசி முதல்வர் பினராயி விஜயனை நெகிழச் செய்துள்ளார்.

 the Hindu

(ஆப்பிள்) ஸ்டீவ் ஜாப்ஸ் 56 வயதில் இறப்பதற்கு முன்பாக சொன்ன செய்தி: விசித்திரனமது..!

உலகமே வியந்து பொறாமைப் பட்ட உச்ச நிலையைத் தொட்ட ஆப்பிள் நிறுவனத்தின் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் உடல்நலம் குன்றி 56 வயதில் இந்த உலகை விட்டு பிரிவதற்கு முன்பாக சொன்ன செய்தி. வர்த்தக உலகில் வெற்றியின் உச்சம் தொட்டேன். மற்றவர் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது.



நோயுற்று படுக்கையில் இருக்கும் இப்போது என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன். பெற்ற புகழும், செல்வமும் அதனால் அடைந்த பெருமையும் இப்போது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது. உங்கள் காரை ஓட்ட யாரையாவது நியமிக்கலாம். 

உங்களுக்காக சம்பாதிக்க எத்தனை பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் வலிகளையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது.
எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடிவிட முடியும். ஆனால் வாழ்க்கை தொலைந்து விட்டால் திரும்ப கிடைக்கவே கிடைக்காது. வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாலும் நாடகம் முழுமையாக முடியும் என்று சொல்ல முடியாது.நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் திரை விழலாம். நாம் பக்குவமடையும் போதுதான் சில விஷயங்கள் புரியும். முப்பது ரூபாய் கடிகாரமும் சரி, மூன்று லட்சம் ரூபாய் கடிகாரமும் சரி ஒரே நேரம்தான் காட்டும்.

செலவழிக்க வாய்ப்பு இல்லாதபோது உங்கள் மணிபர்சில் நூறு ரூபாய் இருந்தாலும் ஒன்றுதான். ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான். நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும், 30,000 சதுர அடி பங்களாவில் வசிப்பதும் ஒன்றுதான். ஆகவே உங்களைச் சுற்றிலும் இருக்கும் அனைவரிடமும் அன்புடன் பேசிப் பழகுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி !

வாரிசையே அழிக்க துவங்கும் செயற்கை கரு ஊசி..! ஆபத்தின் பிடியில் தூய இனத்தை இழக்கிறோம்..!

பொங்கல் பண்டிகையின் நோக்கமே விவசாயிகளுக்கு உதவும் சூரியனையும், மாடுகளையும் நினைவில் கொண்டு பூஜிப்பதுதான். ஆண்டு முழுவதும் தாவரங்களின் ஒளிச்சேர்கைக்கு உதவும் சூரியனுக்கு, சூரியப்பொங்கல் வைத்துப் படைப்பது முதல் நாள். அடுத்த நாள், மண்ணுக்காகவும், மனிதர்களுக்காகவும் உழைக்கும் மாடுகளை கௌரவிக்கும் விதமாக, அலங்கரித்து, படையலிட்டு கொண்டாடுவார்கள். இதெல்லாம் ஆண்டாண்டு காலமாக தமிழர்கள் கடைபிடித்து வரும்… பண்பாட்டு வழக்கம்.
ஒரு காலத்தில் வீடுகளில் மாடுகள் இருப்பது கௌரவம் என்ற நிலை, எந்திரங்களின் வரவுக்குப் பிறகு மாறிவிட்டது. பெரும்பாலான தொழுவங்களில் டிராக்டர்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும், மண் மீதும், மாடுகள் மீதும் உள்ள பாரம்பர்யப் பிணைப்பை அறுத்தெரிய விரும்பாத பலர், இன்றைக்கும் மாடுகளை…நாட்டு மாடுகளைப் பராமரித்து வருகிறார்கள்.
நாம் மறந்துபோன, பாரம்பர்ய விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் நாட்டு மாடுகளின் பங்களிப்பு அபாரமானது. இவற்றின் சிறப்பே, குறைந்த தீவனத்தை எடுத்துக் கொண்டு உழவுக்கு உதவி செய்வதோடு, கணிசமான அளவில் பாலும் கொடுப்பதுதான். கலப்பின மாடுகளின் பாலைவிட நாட்டு மாடுகளின் பாலுக்கு தனிச்சுவை உண்டு. அதிலிருந்து கிடைக்கும் தயிர், மோர், நெய்க்குக்கூட தனிச்சுவை இருப்பதை மறுக்க முடியாது!
காங்கேயம், உம்பளாச்சேரி, புலிகுளம், மணப்பாறை, பர்கூர்… என தமிழ்நாட்டுக்கென பாரம்பர்ய ரகங்கள் இருப்பதுபோல… ஆந்திராவுக்கான சிறப்பு, புங்கனூர், ஓங்கோல் இன மாடுகள். அதிலும் ‘புங்கனூர் குட்டை’ என்ற ரகம் இந்திய மாட்டினங்களில் அருகி வரும் இனமாகக் கண்டறியப்பட்டுள்ளது. தமிழக-ஆந்திர மாநிலங்களின் எல்லையோரத்தில் இருக்கும் சித்தூர் மாவட்டம், புங்கனூர் மாடுகளுக்குப் புகழ்பெற்ற பகுதி.

‌இந்திய இனங்கள்ல 32 வகைகள் இருக்கு. அதுல நாலு ரகங்கள், குட்டை ரகத்தைச் சேர்ந்தவை. கேரளாவுல இருக்கிற வெச்சூர், மலநாடு கிட்டா, காசர்கோட் குள்ளன் கிட்டா மாடுகள் மாதிரியே… இந்த புங்கனூர் இன மாடுகளும் குள்ளமானவை. மூணு, நாலடி அடி உயரம்தான் இருக்கும். இந்த ரகத்தை, சித்தூர் மாவட்டத்துல இருக்கிற புங்கனூர் ஜமீன்தார், அவரோட பண்ணையில வெச்சு பராமரிச்சு பிரபலபடுத்தினதா சொல்றாங்க. அதனால இதுக்கு ‘புங்கனூர் குட்டை’னு பேர் வந்துச்சு” என்று பெயர் காரணம்
‌முப்பதுக்கும் மேற்பட்ட நாட்டு மாடு இனங்களும், நாப்பதுக்கும் மேற்பட்ட ஆட்டு இனங்களும் இருக்கு.

அந்தந்தப் பகுதி கால நிலைக்கு ஏற்பத்தான் கால்நடைகளும், அதன் குணாதிசயங்களும் இருக்கும். ஆந்திராவுல இருக்கிற புங்கனூர் குட்டை என்ற ரகமும் நாட்டு இனம்தான். அதேமாதிரி, தமிழ்நாட்டோட நாட்டு இனங்களான காங்கேயம், புலிகுளம், உம்பளாச்சேரி, பர்கூர் இன மாடுகளும் நம்முடைய சீதோஷ்ண நிலையில் இருப்பவை. தற்போது, நாட்டு இனங்களுக்கான கருவூட்டல் ஊசியும் அந்தந்தப் பகுதி அரசு கால்நடைப் பண்ணைகளில் கிடைக்கிறது.
உதாரணமாக, காங்கேயம் இனத்தின் கருவை அதே இனப் பசுவுக்கு செலுத்தினால்தான், ஒரிஜனல் இனமாகக் கிடைக்கும். இல்லாவிட்டால், குணாதிசயம் மாறி, கலப்பினமாகிவிடும். அந்தந்தப் பகுதி கால நிலைக்குப் பொருந்திப் போகிற இனங்களை வளர்த்து… நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குகிறார் பாரதிராஜா

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்குகிறார் பாரதிராஜா.
முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கக் கடும் போட்டி நிலவி வருகிறது. விப்ரி மீடியா நிறுவனம் தயாரிக்க, விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகும் இதன் படப்பிடிப்பு, ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி தொடங்க இருக்கிறது.
மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றிய பிரியதர்ஷினியும், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் தற்போது ‘சக்தி’ படத்தை இயக்கி முடித்துள்ள இவர், படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து அடுத்த மாதம் 20-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். இதன் படப்பிடிப்பும் அடுத்த வருடம் ஜெயலலிதா பிறந்த நாளில் தொடங்க இருக்கிறது.

ஜெயலலிதாவின் வாழ்க்கையை வைத்து ஏற்கெனவே இரண்டு படங்கள் உருவாகும் நிலையில், மூன்றாவதாகவும் ஒரு படம் உருவாக இருக்கிறது. பாரதிராஜா இந்தப் படத்தை இயக்கப் போகிறார். ‘அம்மா: புரட்சித் தலைவி’ என இந்தப் படத்துக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆதித்யா பரத்வாஜ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
கடந்த ஒரு வருடத்துக்கு முன்பே இந்தத் தலைப்பை அறிவித்து, படத்தைத் தயாரிக்கப் போவதாகச் சொன்னார் ஆதித்யா பரத்வாஜ். ஆனால், அறிவிப்புடன் நின்றுபோன இந்தப் படம், தற்போது தொடங்க இருக்கிறது. மற்ற இரண்டு படங்களும் பிப்ரவரிக்காகக் காத்திருக்க, இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதமே தொடங்க இருக்கிறது.
கதைக்கான ஆராய்ச்சி முடிந்து, முன்தயாரிப்பு வேலைகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கின்றன. இசையமைக்க இளையராஜாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க அனுஷ்கா மற்றும் ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர்.
ஜெயலலிதா என்றால் எம்.ஜி.ஆர். இல்லாமலா? எம்.ஜி.ஆர். கேரக்டரில் நடிக்க கமல்ஹாசன் மற்றும் மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
From Hindu

கனமழை அபாயம் நீங்கியது: 5 நாட்களில் படிப்படியாக மழை குறையும் என வானிலை மையம் தகவல்

கேரளாவில் வரலாறு காணாத கன மழையால் இன்னமும் ஆயிரக்கணக் கானோர் உணவு, குடிநீரின்றி பரிதவித்து வருகின்றனர்.'ரெட் அலர்ட்' எனப்படும் தீவிர கனமழை எச்சரிக்கையை திரும்ப பெற்றுள்ள வானிலை மையம், அடுத்த 5 நாட்களில் படிப்படியாக மழை குறையும் என்று அறிவித்துள்ளது.
கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதன் காரணமாக மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப் பட்டன. தொடர் மழையால் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது.
கேரளாவின் மொத்த மக்கள் தொகை 3.48 கோடி. இதில் 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை, துணை ராணுவப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்
கேரளாவின் அனைத்து மாவட்டங் களுக்கும் விடுக்கப்பட்டிருந்த 'ரெட் அலர்ட்' எனப்படும் தீவிர கனமழை எச்சரிக்கையை வானிலை மையம் திரும்ப பெற்றுள்ளது. எனினும் 10 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலர்ட்' எனப்படும் மிதமான மழை வாய்ப்பு எச்சரிக்கையும் 2 மாவட்டங்களுக்கு ‘எல்லோ அலர்ட்' எனப்படும் லேசான மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. கேரளாவில் அடுத்த 5 நாட்களில் படிப்படியாக மழை குறையும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து திரும்பிய விஜயகாந்த் நேரடியாக கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி

 தேமுதிக தலைவர் விஜயகாந்த்மற்றும் அவரது மனைவி பிரேமலதா இன்று அதிகாலை கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 

திமுக தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி, ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் காலமானார். இதையடுத்து, அவரின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா நினைவிடத்திற்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது. 

விஜயகாந்த் அஞ்சலி ;கருணாநிதி மறைந்த போது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். அங்கிருந்து கண்ணீர் மல்க கருணாநிதியின் மறைவுக்கு வீடியோ வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் முதல் வேலையாக, கருணாநிதியின் நினைவிடத்தில் மனைவி பிரேமலதாவுடன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது கண்ணீர் விட்டு அழுதபடி அஞ்சலி செலுத்தினார்.

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...