Sunday, 12 August 2018

ஆசியாவிலேயே மிகப்பெரியது தமிழகத்தில் தான் உள்ளது

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்.
இன்று ப்ளூடோ என்ற ஓன்பதாவது கோள் நமது பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கபடுவதற்கு முக்கியமான காரணம் இந்த இடம். வரலாற்று சிறப்புமிக்க இடம்.
நிறைய எரிக்கல் , துணை கோள்கள் , நம்மை போல் உயிரினங்கள் வாழ்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படும் சூரிய குடும்பங்கள் , இன்னும் இங்கு நம்மவர்கள் ஆற்றி உள்ள சாதனைகள் கணக்கில் அடங்காது , அப்படி பட்ட சிறப்புமிக்க இடத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா ..?
இது வேலூர்-திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் ஜவ்வாது மலைகளில் காவலூர் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது.

இதனை நமது முன்னால் பிரதமர்.திரு. இராஜீவ் காந்தி யால் திறந்து வைக்கப்பட்டது. இந்த இடம் பூமத்திய ரேகை ( Equator ) மையப்பகுதியில் அமைந்துள்ளது. அமேரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் கூட Northern Hemisphereஐ மட்டும் தான் ஆராய்ச்சி செய்ய முடியுமாம். ஆனால் இந்த பகுதிகளில் இருந்து Northern and Southern Hemispheres களை ஆராய்ச்சி செய்ய முடியும் என்பதுதான் இந்த இடத்தின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.
Southern Hemisphere ல துள்ளியமாக ஆராய்ச்சி செய்ய அமெரிக்கர்கள் கூட இங்கு தான் வர வேண்டும்.
மற்றுமொரு முக்கியமான அம்சம் இங்கு இருந்து மட்டுமே 300 நாட்களுக்கு மேலாக திறந்த வான் வெளி (

Clear Sky ) கிடைக்கின்றன.
இந்த தொலை நோக்கி யின் கண்ணாடி( Lens ) 9.3 ( 90 இன்ச் ) மீட்டர் Diameter , உங்களால் நம்ப முடிகிறதா.??? இன்னும் ஆச்சரியமான விஷயம் இது முழுக்க முழுக்க இந்தியர்களால் குறிப்பாக தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது.

இங்கு 6 இன்ச், 10 இன்ச் , 13 இன்ச் , 18 இன்ச் , 24 இன்ச் , 30 இன்ச் , 40 இன்ச் , 48 இன்ச் மற்றும் 90 இன்ச் Telescope பயன்பாட்டில் உள்ளது. இந்த 48 இன்ச் Telescope ஜெர்மன்-ரஷ்யா-இந்தியா கூட்டு தொழில் நுட்பத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்கு நடைபெற்ற கண்டுபிடிப்புகள் மூலம் நமது நாடு உலக அரங்கில் தடம் பதித்தது வார்த்தைகளாளும் மற்றும் எழுத்துக்களாலும் கூற இயலாது.
எனது கல்லூரி படிக்கும் சமயத்தில் நான் மாணவனாக இந்த ஆராய்ச்சி மையத்தில் தங்கி இங்கு ஆராய்ச்சியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.

இங்கு ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு மேல் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் இங்கு அனுமதிக்கபடுவார்கள்.அவர்களுக்கு உங்கள் கண்களுக்கு பூமியை தவிர்த்து அனைத்து கிரகங்கள், புகழ்பெற்ற நட்சத்திரங்கள், கோள்கள், துனை கோள்கள் காண்பிக்கப்படும். உங்கள் பிள்ளைகள் பள்ளி புத்தகங்களில் மட்டும் படிக்கும் அவையை அவர்கள் புற கண்களுக்கு காண்பிக்க ஒரு அரிய வாய்ப்பு.
இங்கு அருகில் பீமா நீர்வீழ்ச்சி, குழந்தைகளுக்கான பூங்கா , படகு சவாரி, கற்கால மனிதர்கள் வாழ்ந்த வீடு, ஆங்கிலேயர்கள் கட்டிய கண்ணாடி மாளிகை, இயற்கை மருத்துவ பூங்கா, இயற்கை மலைத்தேன், பலாப்பழம், கொய்யா, ராம் சீதா பழம் அதிகமாக கிடைக்கும்.
உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் , உங்கள் கண்களுக்கு மிருகங்கள் கண்களில் படலாம்.
இங்கு தங்கும் விடுதிகள் இல்லை , வனத்துறை மற்றும் டிராவல்ஸ் பங்களா மட்டுமே உள்ளது.

உணவிற்கு ஜமூனாமத்தூர் மற்றும் ஆலங்காயத்திற்கு தான் செல்ல வேண்டும். இது மிகவும் அடர்தியான காட்டு பகுதி ஆதலால் டார்ச் லைட் போன்ற உபகரணங்கள் மிகவும் முக்கியமானது.
இந்த இடத்திற்கு செல்ல
1. பெங்களூர்- திருப்பத்தூர்-ஆலங்காயம்-காவலூர்.
2.சென்னை-வேலூர்-வாணியம்பாடி – ஆலங்காயம்-காவலூர் ,
3. சேலம்- அரூர் – ஊத்தங்கரை – திருப்பத்தூர் – ஆலங்காயம்-காவலூர்
4.பாண்டிச்சேரி – திருவண்ணாமலை – போளூர் – ஜமூனாமத்தூர் – காவலூர்.

Contact
Indian Institute of Astrophysics,
Kavalur Tamilnadu

முகநுல் பகிர்வு

வரலாறு பேசுகிறது - திமுக அடிப்படை உறுப்பினர் முதல் முதலமைச்சர் வரை

https://www.facebook.com/SathiyamNEWS/videos/1956116657817445/

இடுக்கி அணையின் 10 சிறப்புகள்

1992ம் ஆண்டுக்கு பின்னர் முழு கொள்ளளவையும் இடுக்கி அணை எட்டியிருப்பதால், 26 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணை திறப்பதற்கும், தண்ணீர் வெளியேறும்போது மக்களின் பாதுகாப்புக்கு போதிய ஏற்பாடுகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு முப்படைகளின் உதவியையும் கேரள அரசு நாடியுள்ளது.
இடுக்கி அணையின் 10 சிறப்பு அம்சங்கள்
01. கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் செறுதோனி அருகே பெரியார் ஆற்றின் குறுக்கே குறவன் மலை (839 அடி உயரம்), குறத்தி மலை (925 அடி உயரம்) ஆகியவற்றின் குறுக்கே இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது.
02. ஆசியாவில் அரைவட்ட (ஆர்ச்) வடிவில் கட்டப்பட்ட மிக உயர்வான அணைகளில் இடுக்கி அணையும் ஒன்றாகும்.
03. கடல் மட்டத்திலிருந்து இந்த அணையின் நீர்மட்டம் 2,400 அடி என கணக்கிடப்பட்டாலும், இடுக்கி அணையின் மொத்த உயரம் 555 அடியாகும்.
04. 1969ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி இதன் கட்டுமானப்பணி தொடங்கியது. 1973ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அணையில் தண்ணீர் சேமிப்பது ஆரம்பித்தது. இந்த அணையின் உபரி நீர் வெளியேறும் மதகுகளை கொண்ட அணையாக செறுதோனி அணை உள்ளது.
05. 1981ம் ஆண்டு முதல் முறையாக இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் திறக்கப்பட்டது. 2ம் முறையாக 1992ம் ஆண்டு முழு கொள்ளளவை எட்டியதோடு, தற்போது 3ம் முறையாக அணை நிரம்பியுள்ளதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
06. இந்த அணையின் தண்ணீரை கொண்டு மின் உற்பத்தி செய்யும் முதல் எந்திரம் 1975ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி சோதனை ஓட்டத்தை தொடங்கியது.
07. இடுக்கி அணையின் மின் உற்பத்தி நிலையத்தின் வணிக ரீதியான செயல்பாட்டை 1976 பிப்ரவரி 12ம் தேதி அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி தொடங்கி வைத்தார். இந்த பணித்திட்டத்திற்கு கனடா நிதி ஆதரவு வழங்கியது.
08. இடுக்கி அணை, மேல்மட்டத்தில் 365.85 மீட்டர் நீளமுடையது. கீழ்மட்டத்தில் 19.81 மீட்டரும், மேல்மட்டத்தில் 7.64 மீட்டர் அகலமும் கொண்டது. இதனை கட்டுவதற்கு 4லட்சத்து 64 ஆயிரம் கனமீட்டர் காங்கிரீட் பயன்படுத்தப்பட்டது.
09. 43 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மூலமட்டம் என்ற இடத்தில் இருக்கும் இடுக்கி அணையின் மின் உற்பத்தி நிலையம் 780 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. கேரள அரசின் மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் இந்த அணை உள்ளது.
10. கேரளா மாநிலத்தின் ஓணம் பண்டிகை மற்றும் கிறிஸ்து பிறப்பு விழா காலங்களில் மட்டும் இடுக்கி அணை சுற்றுலா பயணிகளுக்கு திறக்கப்படுகிறது

தவிக்கும் கேரளா: அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தாலும் தொடரும் கனமழை

கேரளாவில் அணைகளுக்கு நீர் வரத்து குறைந்துள்ளபோதிலும் தொடர்ந்து அங்கு மழை பெய்து வருகிறது. நிவாரண முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதகிளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பார்வையிடுகிறார்.
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரள மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி 35 பேர் பலியாகியுள்ளனர். 50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் இடுக்கி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கூடுதல் ஷெட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிடுகிறது.
இந்தநிலையில் இடுக்கி மற்றும் வயநாடு மாவட்டங்களில் உள்ள அணைகளில் நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி குறைந்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டு வருகிறது.
எனினும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் தவித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
தொடர்ந்து சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பார்வையிடுகிறார்.

கருணாநிதி உறங்கும் முன்னும்...எழுந்த பின்னும்... பார்ப்பது யார் முகம் தெரியுமா....!

உலக தலைவர்களிலிருந்து அடிநிலை தொண்டன் வரை பல கோடி முகங்கள்.... ஆனால் அவர்களுக்கு யாருக்கும், ஏன் அவரின் குடும்ப உறுப்பினர்களிடம் கூட காட்டாத நெருக்கத்தை கருணாநிதி ஒருவரிடம் காட்டினார்... அந்த நபரின் பெயர் தான் நித்யா.

ஆகஸ்ட் 8ம் தேதி மெரினா கடற்கரையில் மணலின் எண்ணிக்கைக்கு ஈடான மக்களின் கண்ணீர் துளிகளுக்கு நடுவே சகாப்த நாயகன் கருணாநிதியின் இறுதி மரியாதை நடைபெற்று கொண்டிருந்தது. நெருங்கிய உறவினர்கள், பிற மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், கட்சி தலைவர்களுக்கு மட்டும் கருணாநிதியின் உடலுக்கு இறுதியாக மரியாதை செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.
அந்த வரிசையில் வெள்ளை நிற சட்டை அணிந்து வந்த நபர் மரியாதை செலுத்தினார். பார்ப்பதற்கு சாமானியனை போல இருக்கும் இந்த அடையாளம் தெரியாத நபர் யார் என்று தெரியாமல் தொலைக்காட்சியை பார்த்து கொண்டிருந்த பலரும் அந்த துயரமான கட்டத்திலும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். சோகமான இறுகிய முகத்துடன் வந்த அந்த நபர் கருணாநிதியின் உடலை தொட்டு கும்பிட்டு விட்டு சில நொடிகள் சலனமில்லாத பார்வையோடு உடலை பார்த்தார். பின்னர் ஆத்மார்த்தமான ஒரு வணக்கத்தோடு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். அவர் தான் நித்யா.... நித்யானந்த்

கருணாநிதியின் கடைசி காலத்தில் அவருக்கு ஆல் இன் ஆல்-ஆக இருந்தவர் தான் நித்யா. இனத்தால் நிறத்தால் பணத்தால் வேறுபாடுகள் தலைவிரித்தாடிக் கொண்டிருந்த காலத்தில், அனைவரும் சமம் என்ற கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்த கருணாநிதியின் சித்தாந்தத்தின் சாட்சி தான் இந்த நித்யா. அருந்ததியினர் இனத்தை சேர்ந்த நித்யாதான் கடைசி காலத்தில் கருணாநிதிக்கு தாயாக மாறி அனைத்து பணிவிடைகளையும் செய்தார்.

ஆரம்ப காலக்கட்டத்தில் சிறு சிறு வேலைகள் செய்வதற்காக பணியமர்த்தப்பட்ட நித்யானந்த் ஒரு கட்டத்தில் கருணாநிதியின் தவிர்க்க முடியாத துணையாக மாறினார். குறிப்பாக கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளும், கருணாநிதியும் உடல்நலம் நலவடைந்து போன நிலையில் உலக சித்தாந்தத்தை அறிந்திருந்த  கருணாநிதியின் உலகமாகவே மாறிப்போனார் நித்யா.

குடும்ப உறவுகளிலிருந்து அமைச்சர்கள் வரை அனைவரும் நித்யாவை தாண்டி தான் கருணாநிதியை அணுக முடியும் என்ற சூழ்நிலை உருவானதாகவும் கூறப்படுவதுண்டு. இந்த  நம்பிக்கையை பெற நித்யாவுக்கு பல ஆண்டுகள் ஆனது. ஒருகட்டத்தில் நித்யா சுட்டிக்காட்டும் நபர்கள் தான் உயர்பதவியில் அமர்த்தப்பட்டதாகவும், இதனால் சில மூத்த அமைச்சர்களுக்கு கூட அதிருப்தி ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகின. இந்த சூழ்நிலைகளில் கூட எதற்காகவும், யாருக்காகவும் நித்யாவை கருணாநிதி என்றும் விட்டு கொடுத்ததே இல்லை. "நித்யா என் சிநேகிதன்" என்று பலமுறை கூறியிருக்கிறார் கருணாநிதி.

மருத்துவமனையில் கருணாநிதி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த போது, "எப்படியாவது ஐயாவை என்னிடம் மீட்டு கொடுத்து விடுங்கள், அவரை இன்னும் 10 வருடங்களுக்கு மேல் நான் பத்திரமாக பார்த்து கொள்கிறேன்" என்று கண்ணீர் விட்டு அழுதாராம் நித்யா.

கருணாநிதியின் மறைவு திமுக தொண்டர்களுக்கு வேண்டுமானால் ஒரு தலைவனை இழந்த உணர்வு கொடுக்கலாம்.... ஆனால் பல ஆண்டுகளாக கண்ணும் கருத்துமாக கருணாநிதியை பராமரித்து வந்த நித்யாவிற்கு கருணாநிதியின் இழப்பு ஒரு குழந்தையை இழந்த தாயின் இழப்புடன்தான் ஒப்பிட முடியும்.


From News 18

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...