Sunday, 8 July 2018

நல்லெண்ணெயின் சில அழகு நன்மைகள்!




முகப்பரு
நல்லெண்ணெய் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவி, முகப்பரு மற்றும் பருக்களால் வரும் தழும்புகளைத் தடுக்கும். அதற்கு தினமும் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, பருக்கள் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் குறைவதோடு, தழும்புகளும் குறையும்.

சரும வறட்சி
பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு சரும பிரச்சனை தான் சரும வறட்சி. இந்த சரும வறட்சியைத் தடுக்க பல்வேறு வழிகள் உள்ளன. அதில் ஒன்று நல்லெண்ணெய். இந்த நல்லெண்ணெயை டோனர் வடிவில் பயன்படுத்தி வந்தால், சருமத்தின் இளமைத்தன்மை தக்க வைக்கப்பட்டு, சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும். அதற்கு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதை முகம், கை, கால்களில் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள்.இப்படி தினமும் பயன்படுத்தி வருவதால், சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.

மென்மையான உதடுகள்
நல்லெண்ணெய் உதடுகளுக்கு ஒரு நல்ல நிறத்தை வழங்கும். ஒருவர் தினமும் நல்லெண்ணெயை உதடுகளுக்கு பயன்படுத்தி வந்தால், உதடுகள் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும். அதற்கு நல்லெண்ணெயை தினமும் இரவில் படுக்கும் முன் உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். ஆனால் நல்லெண்ணெயைப் பயன்படுத்திய உடனேயே பலன் கிடைக்காது. தினமும் பயன்படுத்தி வந்தால் தான் பலனைக் காண முடியும். உங்கள் உதடுகள் ஒரே பயன்பாட்டில் பிங்க் நிறத்தில் காட்சியளிக்க வேண்டுமானால், சில துண்டுகள் பீட்ரூட்டை வெயிலில் உலர்த்தி பொடி செய்து கொள்ளுங்கள். பின் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயில் 1 சிட்டிகை பீட்ரூட் பவுடர் சேர்த்து கலந்து, உதட்டின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இப்படி தினமும் ஒருமுறை செய்து வாருங்கள்.

வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க

வாழைக்காயில் மிக அதிக அளவில் இரும்புச் சத்து நிறைந்திருக்கிறது. நோஞ்சானாக இருப்பவர்கள் அடிக்கடி உணவில் வாழைக்காயை சேர்த்துக் கொண்டால் உடல் தேற ஆரம்பிக்கும். 

நீரிழிவு வாழைக்காய் உணவில் சேர்த்துக் கொண்டால், பசி மிக விரைவாக அடங்கி விடும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் வாழைக்காயை சாப்பிடலாமா என்ற சந்தேகம் இயல்பாக எழுவது வழக்கம் தான். ஆனால் நீரிழிவு நோயுள்ளவர்கள் வாழைக்காய் கச்சல் செய்து சாப்பிடுங்கள். அதாவது வாழைக்காயில் சீரகமும் மிளகும் சேர்த்து சாப்பிட வேண்டும். அப்படி அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

ரத்த விருத்திக்கு ரத்த விருத்திக்கு வாழைக்காயை சமைத்து சாப்பிட்டு வருவது நல்லது. வாழைக்காயின் மேல் தோலை மட்டும் சீவி விட்டு, சமைப்பது தான் சிறந்த முறை. அப்போது தான் நார்ச்சத்து முழுமையும் நம்முடைய உடலுக்கு வந்து சேரும். வாழைக்காயின் மேல் தோலை மெலிதாக சீவி எடுத்து அதை சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வதக்கி வைத்துக் கொண்டு, அதனுடன் ஒரு ஸ்பூன் உளுந்து, சிறிது சீரகம், மிளகாய் வற்றல், பூண்டு 4 பல், உப்பு, ஒரு நெல்லிக்காய் அளவு புளி ஆகியவற்றைச் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டு வந்தால், ரத்தம் சுத்தமாகும். அது மட்டுமல்லாது, வயிறு இரைச்சல், வாயில் எச்சில் ஊறுதல், வயிற்றுப்போக்கு ஆகியவை குணமாகும்.

வயிற்றுப் போக்குக்கு பத்திய சாப்பாடு சாப்பிடுகிறவர்கள் வாழைப் பிஞ்சினை நெய்யில் வதக்கி, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வாருங்கள். வயிற்றுப் போக்கு உடனடியாக நிற்கும்.

ஏப்பம் சிலருக்கு அடிக்கடி தொடர்ந்து ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். அதற்கு மிக முக்கியமான காரணமே அஜீரணக் கோளாறு தான். அப்படி அஜீரணக் கோளாறுகள் ஏதேனும் இருந்தால், வாழைக்காயினை சின்ன சின்ன வில்லைகளாக வெட்டி, வெயிலில் நன்கு உலர்த்தி, பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியை பாலில் கலந்து குடித்து வர அஜீரணக் கோளாறு நீங்கும். அதேபோல், உலர்த்திய வாழைக்காயுடன் சிறிது உளுந்து, மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து அரைத்து இட்லி பொடி, சாதப்பொடி போலவும் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வரலாம். வயிற்றுக் கடுப்பு தீரும்.

அமராவதி அணையின் இன்றைய நிலவரம்

தேதி : 08.07.2018
இருப்பு : 54.30 அடி
வரவு  : 219 கன அடி
வெளியேற்றம் : 12 கன அடி

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...