Thursday, 26 July 2018

விவசாயி கடன் அட்டைத் திட்டம்


யிர் உற்பத்தி மற்றும் இடுபொருள் வாங்குதல் போன்ற சிறு அளவிலான பண தேவைகளை அதிக சிரமமின்றி உடனுக்குடன் வங்கி அமைப்புகளிலிருந்து பெற்றுத்தருவதே கிஸான் கடன் அட்டைத் திட்டத்தின் குறிக்கோளாகும்.
கிஸான் கடன் அட்டைத் திட்டத்தின் பலன் என்ன?
  • பணப் பட்டுவாடாநடைமுறைகளை எளிமைப்படுத்துகிறது
  • பணம் மற்றும்பொருள் வாங்குதல் தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது
  • ஓவ்வொரு பயிருக்கும்தனித்தனியாகக் கடனுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை
  • எந்த நேரத்திலும்உறுதியாகக் கிடைக்கக்கூடியதால் விவசாயிகளுக்கு வட்டிச்சுமையை வெகுவாக குறைக்கக்கூடியது
  • விதைகளையும்உரங்களையும் விவசாயிகள் தங்கள் வசதி மற்றும் தேர்வுக் கேற்றவகையில் வாங்கிக்கொள்ளலாம்
  • வாங்கும்போதேமுகவர்களிடமிருந்து தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம்
  • மூன்றுவருடங்களுக்கான கடன் வசதி உண்டு. பருவகால மதிப்பீடுகள் தேவையில்லை
  • விவசாய வருமானம்அடிப்படையில் அதிகபட்ச கடன் வரம்பு உண்டு
  • கடன் வரம்பைபொறுத்து எந்தத் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம்
  • பணம் திரும்பச்செலுத்துதல் அறுவடைக்குப் பிறகு மட்டுமே
  • விவசாய கடனுக்குவழங்கப்படும் அதே வட்டி விகிதம்
  • விவசாய கடனுக்குவழங்கப்படும் அதே கடன் உத்திரவாதம், பாதுகாப்பு, குறிப்பிட்ட வரம்பு மற்றும் ஆவணநிபந்தனைகள்
கிஸான் கடன் அட்டையைப் பெறுவது எப்படி?
  • உங்கள் அருகாமையிலுள்ள பொதுத்துறை வங்கிகளை அணுகி தகவல்களைப் பெறுங்கள்
  • தகுதியுடைய விவசாயிகள் கிஸான் கடன் அட்டையையும், வங்கி பாஸ் புத்தகத்தையும் பெறுவார்கள். இது உடையவரின் பெயர், முகவரி, வைத்திருக்கும் நிலம் பற்றிய விபரம், பணம்பெறும் வரம்பு, செல்லுபடியாகும் காலம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று ஆகியவற்றைக் கொண்டிருக்கும். மேலும் இது, அடையாள அட்டையாகவும் தொடர் செயல்பாடு அடிப்படையிலான நடவடிக்கைகளின் பதிவை வசதிசெய்யும் வகையிலும் பயன்படும்.
  • பணம் பெறுவர் அட்டையும் பாஸ் புத்தகத்தையும், அந்தக் கணக்கை செயல்படுத்திக்கொள்ளும்போது சமர்ப்பிக்க கோரப்படுகிறார்.

முன்னணி வங்கிகளின் கிஸான் கடன் அட்டைகள்

  • அலகாபாத் வங்கி        - கிஸான் கடன் அட்டை
  • ஆந்திரா வங்கி           - ஏ பி கிஸான் பச்சை அட்டை
  • பரோடா வங்கி           - பி கே சி சி
  • இந்திய வங்கி            - கிஸான் சமாதன் அட்டை
  • கனரா வங்கி             - கிஸான் கடன் அட்டை
  • கார்ப்பரேஷன் வங்கி      - கிஸான் கடன் அட்டை
  • தேனா வங்கி             - கிஸான் தங்க கடன் அட்டை
  • ஓரியண்ட் காமர்ஸ் வங்கி  - ஓரியண்டல் பச்சை அட்டை
  • பஞ்சாப் தேசிய வங்கி      - பிஎன்பி கிருஷி அட்டை
  • ஹைதராபாத் ஸ்டேட் வங்கி- கிஸான் கடன் அட்டை
  • இந்திய ஸ்டேட் வங்கி     - கிஸான் கடன் அட்டை
  • சிண்டிகேட் வங்கி        - எஸ் கே சி சி
  • விஜயா வங்கி             - விஜய கிஸான் அட்டை
விவசாய கடன் அட்டைதாரர்களுக்கான தனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம்
விவசாயக்  கடன் அட்டைதாரர்களுக்கென தனி நபர் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

  • நோக்கம்: விபத்துக்களால் உண்டாகும்  (உள்நாட்டிற்க்குள்) இறப்பு (அல்லது) நிரந்தர ஊனங்களுக்கான இழப்பீடுகளை அனைத்து விவசாய கடன் அட்டைதாரர்களுக்கும் வழங்குவது
  • பயனாளிகள்: 70 வயது வரையிலான அனைத்து விவசாய கடன் அட்டைதாரர்களும்
இத்திட்டத்தின் மூலம் கீழ்கண்ட அளவு இழப்பீட்டு பயன்கள் பெறலாம்
  • விபத்து மற்றும் வன்முறை காரணமான மரணம் எனில் ரூ.50,000/-.
  • நிரந்தரமான ஒட்டுமொத்த ஊனம் எனில்  ரூ.50,000/- .
  • இரண்டு கைகள் அல்லது கால்கள் இழப்பு, இரண்டு கண்கள் இழப்பு, அல்லது ஒரு கண் மற்றும் ஒரு கை அல்லது கால் இழப்பு எனில். ரூ.50,000/-
  • ஏதேனும் ஒரு கை அல்லது கால், அல்லது ஒரு கண் இழப்பு எனில் ரூ.25,000/-.
மாஸ்டர் பாலிஸியின் காலம்:3 ஆண்டு காலத்திற்கு செல்லக் கூடியது.
காப்பீட்டுக் காலம்: ஆண்டு சந்தா செலுத்தும் வங்கிகளில் இருந்து பிரீமியம் பெற்ற நாளில் இருந்து ஓராண்டு வரை காப்பீடு நடப்பில் இருக்கும். மூன்றாண்டுத் திட்டமெனில், பிரீமியம் பெறப்பட்ட நாள் முதல் மூன்றாண்டிற்கு காப்பீடு செல்லும்
பிரீமியம்: விவசாய கடன் அட்டைதாரரின் ஆண்டு சந்தா ரூ. 15/- ல், ரூ. 10/- த்தை  நேரடியாகவும், ரூ. 5/- கடன் அட்டைதாரரிடமிருந்து வசூலித்தும், வங்கி செலுத்த வேண்டும்
செயல்படும் வழிமுறை:  இந்தச் சேவையை செயல்படுத்த நான்கு காப்பீட்டுக் கழகங்கள் சரக வாரியான அடிப்படையில் பொறுப்பேற்று உள்ளன. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, அந்தமான் – நிக்கோபார், பாண்டிச்சேரி, தமிழ்நாடு, லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளுக்கான சேவையை யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி (லி) நிறுவனம் வழங்குகிறது .
விவசாய கடன் அட்டைவழங்கும் வங்கிக்கிளைகள், அட்டைகள் வழங்கப்படுவதேற்ப, மாதா மாதம் விவசாயிகளின் பெயர் பட்டியலுடன், பிரீமியத் தொகையை இணைத்து அனுப்ப வேண்டும்.
இழப்பீட்டு தொகை பெறும் முறை:  இறப்பு, குறைபாடுகள், நீரில் மூழ்கி மரணம் ஆகியவற்றுக்கு, இன்சூரன்ஸ் கம்பெனிகளால் அதற்காக உள்ள அலுவலகங்களில் நிர்வாக முறைகள் செயல்படுத்தப்படும்.
ஆதாரம் : தமிழ் உழவன் நாளிதழ்

மேற்கு வங்கத்தின் பெயர் இனி ‘பங்களா’ - சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ‘பங்களா’ என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு அதிகாரபூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்படும்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வங்காளம் இரண்டாக பிரிக்கப்பட்டது. நாடு சுதந்திரத்திற்கு பின் மேற்குவங்கம் இந்தியாவுடனும், கிழக்கு வங்கம் பாகிஸ்தானுடனும் இணைக்கப்பட்டன. கிழக்கு வங்கம் பின்னர் தனிநாடாக பங்களாதேஷ் என மாறியது.
இந்நிலையில் வங்காளத்தின் பாரம்பரியதை மீட்டெடுக்கும் விதமாக மேற்குவங்கத்தின் பெயரை மாற்ற அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு செய்தார். மேலும் மேற்குவங்கத்தின் ஆங்கில மொழியாக்கம் ‘வெஸ்ட் பெங்கால்’ என்பதால் மாநிலங்களின் பட்டியலில் இது கடைசி இடத்திற்கு வந்து விடுகிறது.
எனவே இதை மாற்றும் விதமாக 2011-ம் ஆண்டே மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தின் பெயரை வங்காள மொழியி
ல் ‘பச்சிம் பங்கா’ என பெயர் மாற்றம் செய்தார். ஆனால் இதை மத்திய அரசு ஏற்கவில்லை.
இதன் பிறகு வங்காளத்தில் ‘பங்களா’ என்றும் ஆங்கிலத்தில் ‘பெங்கால்’ என்றும், இந்தியில் ‘பங்கால்’ என்று அழைக்கும் பரிந்துரையை அம்மாநில அரசு அனுப்பி வைத்தது. ஆனால் இதனையும் மத்திய அஅரசு ஏற்கவில்லை.
இந்நிலையில் மேற்குவங்கத்தின் பெயரை மீண்டும் ‘பங்களா’ என பெயர் மாற்றம் செய்ய அம்மாநில அரசு முடிவு செய்தது. இதன்படி வங்க மொழியில் மட்டுமின்றி, இந்தி, ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் ‘பங்களா’ என்றே அழைக்கும் விதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். மத்திய அரசு ஒப்புதல் அளித்தபின் அது அரசிதழில் வெளியாகும். அதன்பிறகு மேற்கு வங்கத்தின் பெயர் அதிகாரபூர்வமாக ‘பங்களா’ என பெயர் மாற்றம் செய்யப்படும்.

அமராவதி அணையின் இன்றைய நிலவரம்

தேதி : 26.07.2018
இருப்பு : 87.83 அடி
வரவு  : 1310 கன அடி
வெளியேற்றம் : 1310 கன அடி
வாய்க்கால் : 440 கன

ஆட்டுசாணி என்றால் இவ்வளவு சக்திகளா…?

இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாதம்தான் ஆட்டு எரு. ஆட்டு எருவில், மாட்டு எருவில் உள்ளதைப் போல 2 மடங்கு தழைச் சத்தும், சாம்பல் சத்தும் உள்ளன. ஓர் ஆடு, ஓராண்டுக்கு 500 முதல் 750 கிலோ வரை எருவைக் கொடுக்கிறது.
ஓர் ஏக்கர் நிலத்தை எல்லா சத்துகளையும் கொண்டு வளப்படுத்த 100 ஆடுகளை வளர்த்தால் போதுமானது. ஆட்டு எரு மண் வளத்தைப் பெருக்கி, பசுமைப் புரட்சிக்கு வித்திடுகிறது என்றால் மிகையாகாது.
ஆட்டு எருவை மண்ணில் இட்டால் கரிமப் பொருள்களின் அளவு அதிகரித்து ஈரப் பதத்தை சேமிக்கும் திறன் அதிகமாகிறது.
ஆட்டு எருவில் உள்ள சத்துகளின் அளவு, ஆட்டு இனம் மற்றும் அவற்றுக்கு அளிக்கப்படும் தீவனத்தைப் பொருத்தே இருக்கும்.
ஆடுகளுக்கு புரதச்சத்து நிறைந்த தீவனங்களான குதிரை மசால், முயல் மசால், வேலி மசால், சுபா புல், தட்டைப் பயறு போன்ற தீவனங்களை அளித்தால், எருவில் தழைச்சத்தின் அளவு அதிகமாக இருப்பதோடு, நுண்ணூட்டச் சத்துகளும், தாது உப்புகளும் அதிகமாகக் காணப்படும்.
ஆட்டு எருவில் 60 முதல் 70 சதம் தண்ணீரும், 2 சதம் தழைச் சத்தும், 0.4 சதம் மணிச் சத்தும் 1.7 சதம் சாம்பல் சத்தும் உள்ளன. மேலும், பயிர் வளர்ச்சிக்குத் தேவையான போரான், மெக்னீசியம், கோபால்ட், தாமிரம், துத்தநாகம், மாலிப்டினம் சத்துகளும் அதிகளவில் காணப்படுகின்றன.
நம்முடைய அன்றாட விவசாயத்திற்கு அதிகளவில் ஆட்டு எரு தேவைப்படுமாயின் அவற்றை ஆழ்கூள முறையில் தயார் செய்யலாம்.
அதற்கு முதலில் ஆட்டுக் கொட்டகையின் தரைப் பகுதியில் நிலக்கடலைத் தோல், சிறிய துண்டுகளாக வெட்டிய வைக்கோல், இலைச் சருகுகள், மரத்தூள், தேங்காய் நார்க் கழிவு போன்றவற்றை அரை அடி உயரத்தில் ஓர் ஆட்டிற்கு 7 கிலோ என்ற அளவில் பரப்ப வேண்டும்.
இவ்வாறு பரப்பினால் ஆட்டுப் புழுக்கையானது இந்த ஆழ் கூளத்தில் படிந்துவிடும். சிறுநீர் ஆழ் கூளத்தால் உறிஞ்சப்பட்டு தழைச் சத்து வீணாகாமல் பாதுகாக்கப்படும். ஆழ் கூளத்தில் உள்ள ஈரத் தன்மையைப் பொருத்து 3-லிருந்து 4 மாதங்களுக்கு ஒரு முறை ஆழ் கூள் ஆட்டு எருவை விவசாயத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.
ஆழ் கூள முறையைப் பொருத்தமட்டில் 10 ஆடுகளிலிருந்து ஓராண்டில் இரண்டரை டன் தரமான எரு கிடைக்கும். இதில் 50 கிலோ யூரியாவில் உள்ளதைப்போல, தழைச் சத்தும், 37 கிலோ சூப்பர் பாஸ்பேட்டில் உள்ள மணிச் சத்தும், 40 கிலோ பொட்டாஷில் உள்ள சாம்பல் சத்தும் கிடைக்கும்.
இவ்வாறு ஆழ் கூள முறையில் பெறப்படும் ஆட்டு எருவை வேளாண் பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தினால் களை எடுக்கும் செலவு குறையும். மேலும், நெல், தக்காளி, மிளகாய், கத்தரி மற்றும் அனைத்து விதமான வேளாண்மைப் பயிர்களுக்கும் இந்த எருவைப் பயன்படுத்தினால் அதிக லாபம் அடையலாம்.
எனவே, ஆட்டு எருவை முறையாகப் பயன்படுத்தி இயற்கை வழி வேளாண்மைக்கு வித்திட்டால் ரசாயன உரங்களால் ஏற்படும் தீமைகளைக் குறைக்க முடியும்.
ஆடுகளின் மூலம்
இயற்கை உரம்.
வேளாண்மை செய்திகள்

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்..! எச்சரிக்கை

1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.
2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.

3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.
4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.
5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது,
• அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம்.
• அவருடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரிடம், இருந்து செட்டில்மெண்ட், பாகபிரிவினை, விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.
• உயில் , தானம் மூலம் கிடைத்து இருக்கலாம்.
• பொது ஏலம், நீதிமன்ற தீர்வுகள் மூலம் கிடைத்து இருக்கலாம்.
• பூர்வீகமாக பட்டா படி பாத்தியப்பட்டு வந்து இருக்கலாம். அதனை கிரயம் எழுதி கொடுப்பவர் தெளிவாக ஆவண எண் விவரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும்.
7. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம், பார்த்து அணைத்து லிங்க் டாகுமென்ட்யையும் வாரலாறாக தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பானது ஆகும்.
8. கிரயம் நிச்சயித்த உண்மை தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள் (அல்லது) வழிகாட்டி மதிப்பு தொகை எழுதினாலும் எழுதுங்கள். எவ்வளவு பணம் அக்ரிமெண்ட் போடும்போது கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது, எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது, என தெளிவாக குறிப்பிட வேண்டும்.
9. கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு கீழ்க்கண்ட உறுதி மொழிகளை கட்டாயம் கொடுத்து இருக்க வேண்டும்.
1.தானம்
2. அடமானம்
3. முன் கிரயம்
4. முன் அக்ரிமெண்ட்,
5. உயில்
6. செட்டில்மெண்ட்,
7. கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி,
8. ரெவின்யூ அட்டாச்மெண்ட்
9. வாரிசு பின் தொடர்ச்சி,
1௦. மைனர் வியாஜ்ஜியங்கள்.
11. பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள்,
12.சொத்து ஜப்தி,
13.சொத்து ஜாமீன்,
14.பைசலுக்காக சர்க்கார் கடன்கள்,
15.வங்கி கடன்கள்,
16.தனியார் கடன்கள்,
17.சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை ,
18.சிவில், கிரிமினல் வழக்குகள்,
19.சர்க்கார் நில ஆர்ஜிதம்,
20.நிலகட்டுப்பாடு ,
21.அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ்,
22.நில உச்ச வரம்பு கட்டுப்பாடு,
23.பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை
24. இதில் சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை
போன்ற உறுதி மொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும்.
1௦. சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று, சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன். எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதி கொடுக்க சொன்னால் கைமாறு எதிர்பார்க்காமல் எழுதி கொடுக்கின்றேன் என்று கிரைய பத்திரத்தில் உறுதி அளித்து இருக்க வேண்டும்.
11. சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம் புல எண், உட்பட அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டா படி சர்வே எண். தெளிவாக எழுதிருக்க வேண்டும்.
12. இடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும் , பிரிட்டிஸ் அளவு முறையிலும், மெட்ரிக் அளவு முறையிலும் தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும். மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் .
13. கிரைய சொத்தை சுற்றி இருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை சிறு அளவு பிழை இல்லாமல் அடையாள படுத்த வேண்டும். நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
14. பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சோதனையிட வேண்டும். எழுதி கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள், பெயர் & முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.
15. தேவையான பட்டா, வரைபடம், அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா , அதில் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.
16. முத்திரைத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமோ, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுத்துள்ளதா, ஆவண எழுத்தர் அல்லது வக்கீல் , ஆவணம் தயாரித்தவர் என்று கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...