Tuesday, 22 May 2018

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன.

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன.



தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வுகளை 10 லட்சத்து ஆயிரத்து 140 மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு விடைத்தாள்களை திருத்தும் பணியும் நிறைவடைந்திருந்தது. இந்நிலையில் நாளை காலை 9.30 மணி அளவில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்படவுள்ளன.

இதனை www.tnresults.ac.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இதுதவிர பள்ளிகளிலும் தேர்வு முடிவுகள் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். நாளை வெளியாகவுள்ள தேர்வு முடிவை அவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி மாணவர்கள் மற்றும் பெற்றோர் காத்திருக்கின்றனர்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை: துப்பாக்கிச்சூட்டுக்கு பலி 6

தூத்துக்குடி; தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்து வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பல இடங்களில் வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. கூட்டம் கூட்டமாக பலர் கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்த போராட்ட கும்பல், வன்முறையில் ஈடுபட்டது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உள்பட 6 பேர் பலியானார்கள்



கலெக்டர் அலுவலகத்தின் வாயில் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களை தீ வைத்து கொளுத்தினர். தீயை அணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். கலவரத்தை தொடர்ந்து, ஊழியர்கள் தப்பியோடினர். இதனையடுத்து போலீசார், தடியடி நடத்தி கலவர கும்பலை வெளியேற்றியது. தொடர்ந்து கலவரம் நடந்ததால், போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உள்பட 6 பேர் பலியானார்கள். கிங்ஸ்டன், வினிதா, தமிழரசன், மாரிச்சாமி ஆகியோர் உயிரிழந்தது, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் காரணமாக கலெக்டர் அலுவலகம் போர்க்களமாக காட்சியளித்தது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர், திண்டுக்கல், மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு 10 கம்பெனி போலீசார் விரைந்துள்ளனர்.
100 வது நாள்

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் சில மாதங்களாக பல்வேறு போராட்டம் நடந்து வருகிறது. இன்று 100 வது நாள் போரட்டம். மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி ஒன்றிலிருந்து ஆயிரக்கணக்கானோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். வி.வி.டி. சிக்னல் அருகே போலீசார், போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்கள், போலீஸ் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் மீது கல் வீசப்பட்டது. இதனையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். போலீஸ் வாகனம் சேதப்படுத்தப்பட்டது. வஜ்ரா வாகனத்தை போராட்டக்காரர்கள் தாக்கினர்.

துப்பாக்கிச்சூடு:

வன்முறை கும்பலை சமாளிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியானதாக கூறப்படுகிறது. இன்று நாட்டுப்படகு மீனவர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள். கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மாவட்டம் முழுதும் 40 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.



ஆதாரம்  தினமலர் 

பெட்ரோல் ரூ.79.79, டீசல் ரூ.71.87

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.79 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.87 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மே-22) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 32 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.79.79 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 28 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.71.87 காசுகளாகவும் உள்ளன
.

பாடலாசிரியர் தினகரன்பொன்கதிர்

கடல் போலே தாகம்
நான் கொண்ட போது
மங்கையில் கங்கை நீ
எனை தாண்டி போகலாமோ
இதழாலே நீயும் தாகம் தீரடி!


#பாடலாசிரியர் தினகரன்பொன்கதிர்

நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி?

நிபா வைரஸ் கேரளாவை அச்சுறுத்தி வரும் நிலையில், அது எவ்வாறு மனிதர்களுக்கு பரவுகிறது நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பதைப் பற்றி தற்போது பார்க்கலாம்...

1998-1999ம் ஆண்டுகளில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் நிபா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டது. மலேசியாவில் உள்ள நிபா என்ற கிராமத்தில் இவ்வகை வைரஸ் கிருமித் தொற்றுடன் ஒருவர் கண்டறியப்பட்டதால், இந்த வைரஸுக்கு நிபா என்று பெயரிடப்பட்டது.

பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவிய நிபா வைரஸ், பன்றிகளுக்கும், பன்றிகளின் இருப்பிடத்தை சுத்தம் செய்தபோது மனிதர்களுக்கு பரவியதும் கண்டுபிடிக்கப்பட்டது. வவ்வால்களின் உடலை இருப்பிடமாக கொண்டுள்ள நிபா வைரஸ், அதன் சிறுநீர், மலம், உமிழ் நீர் மூலமாக, நாய், பூனை, ஆடு, பன்றி, குதிரை போன்றவற்றிற்கு பரவுகிறது. பின்னர் அந்த வைரஸ், வளர்ப்புப் பிராணிகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது.

நிபா வைரஸ் தாக்கிய நபருக்கு, காய்ச்சல், தலைவலி, மயக்கம், குழப்பமான மனநிலை, கோமா நிலை ஏற்படும். பின்னர் என்செஃபாலிட்டிஸ் எனும் மூளைக்காய்ச்சல் நோயை உருவாக்கி மனிதருக்கு மரணத்தை ஏற்படுத்துகிறது. நிபா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டோரில் 74.5 சதவிகிதம் பேர் மரணத்தை தழுவியுள்ளனர்.

நிபா வைரஸ் தாக்குதலை குணப்படுத்த மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்காத நிலையில், ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் மட்டுமே நோயாளியை குணப்படுத்த முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. கடந்த 2004-ம்  ஆண்டு வங்கதேசத்தில் ஃபரித்புர் மாவட்டத்தில் வௌவால்கள் தங்கிய பனை மரத்திலிருந்து எடுக்கப்பட்ட பதநீர் மற்றும் கள்ளை பருகிய மனிதர்களுக்கு நிபா வைரஸ் பரவியது. இதில் 18 பேர் உயிரிழந்தனர்.


800 அரசு பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு



* 10க்கும் குறைவான மாணவர்கள் இருக்கும் பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித்துறை திட்டம்.

* மூடப்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க பரிந்துரை.

* விரைவில் அரசாணை வெளியாகும் என தகவல்.


From thanthi

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...