Monday, 27 August 2018

நவீன விவசாயத் தொழில்நுட்பத்தை அறிந்துவர ஜார்க்கண்ட் விவசாயிகள் இஸ்ரேல் பயணம்

இஸ்ரேலுக்குச்  சென்று நவீன விவசாய தொழில்நுட்ப பயிற்சி பெறுவதற்காக ஜார்கண்ட் விவசாயப் பிரதிநிதிகள் 26 பேரை அம்மாநில முதல்வர் ரகுவர் தாஸ், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழியனுப்பி வைத்தார்.
ஜார்க்கண்டில் பாசன வசதி இல்லாத பகுதிகள் அதிகம் என்பதால் அங்குள்ள விவசாயிகள், சவால்களை எதிர்கொள்ள நேரிடுகிறது, மேலும் இஸ்ரேலிலும் இப்பிரச்சினை மிகப்பெரிய அளவில் உள்ளது. ஆனால் உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நீர்ப்பாசன பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்துள்ளார். இதனால் அங்கு விவசாயத்தை, வெற்றியடைந்த தொழிலாக மாற்றிக்காட்டியிருக்கிறார்கள்.
இதுகுறித்து முதல்வர் தாஸ் தெரிவித்ததாவது:
தற்போது விவசாயிகள், நீர்ப்பாசன வசதியின்றி பெரிய சவாலை சந்தித்து வருகிறார்கள். மேலும், விவசாயத்திற்கான நிலமும் பற்றாக்குறையாக உள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை ஒரு வருடத்தில் ஒரு பயிர் மட்டுமே பயிரிடும் நிலையே உள்ளது.
இஸ்ரேல் நாட்டில் இதேபோன்ற பிரச்சினைகள் உள்ளன. ஆனால் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி இப் பிரச்சினைகளை அந்நாட்டு மக்கள் சமாளித்துள்ளனர்.
இஸ்ரேல் நாட்டிலிலிருந்து பயிற்சி பெற்று திரும்பும் விவசாயிகள், மற்ற விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான மாஸ்டர் பயிற்சியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.
மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு ஹைடெக் பண்ணைய தொழில்நுட்பங்களைப் பற்றிய அறிவை வழங்கும் பொறுப்புகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
உலகம் முழுவதிலுமிருந்து விவசாய ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள், விவசாயிகள், விஞ்ஞானிகள் ஆகியோர் கலந்துகொள்ளும் 'மொமெண்ட்டும் ஜார்க்கண்ட்' என்ற ஒரு மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் மாநிலத்தில் உள்ள விவசாயிகளும் கலந்துகொள்வார்கள்.
கருத்துப் பரிமாற்றங்களுக்கு இது ஒரு வழி. சிறந்த உற்பத்திக்கு புதுமையான விவசாய நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி இதில் பேசப்படும்.
இதனால் வரும் 2022ம் ஆண்டுக்குள் நவீன விவசாயத்தில் நமது விவசாயிகளும் மேம்பட்ட நிலையில் இருப்பார்கள். பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக அளித்த வாக்குறுதியும் நிறைவேறும்.
இன்றுவரை, உணவு வழங்குதலில் மற்ற மாநிலத்தையே சார்ந்திருக்க வேண்டிய நிலையே ஜார்க்கண்ட்டுக்கு உள்ளது. இதில் ஜார்க்கண்ட் தன்னிறைவு பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
இவ்வாறு ஜார்க்கண்ட் முதல்வர் ரகுவர் தாஸ் தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கு பயிற்சி மேற்கொள்ள செல்லும் விவசாயிகளில் ஒருவர் கூறுகையில்,‘‘நமது இந்திய நாட்டிற்காகவும் சேர்த்துதான் விவசாய பயிற்சி பெற்றுவர ஜார்க்கண்ட் முன்னே செல்கிறது. அந்நாட்டவர் அனுபவங்களை பெற்று திரும்புவோம்'' என்றார்.

A \ C கார் பயன்படுத்துவோருக்கு ஓர் எச்சரிக்கை

A \C  காரை பயன்படுத்தும்போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \C  ஐ இயக்கி  ஜன்னலை மூடக்கூடாது .காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A \C  ஐ இயக்கவேண்டும். இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் பல அதிர்ச்சி உண்மைகள் 



கண்டறியப்பட்டுள்ளன .பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள DASHBOARD  ,இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன .சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50  மில்லி கிராம் .

வீடுகளில் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400  முதல் 800  மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும். அதே வேளையில் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000  மில்லி கிராம் வரையில் இருக்கும் .இது மனித உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட 40  மடங்கு அதிகம் .

இதன் காரணமாக கேன்சர் ,லுக்கூமியா ,சிறு நீராக பாதிப்பு கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கார்களிலுள்ள ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைப்பதனால் அதிகப்படியான பென்சீன் வெளியேறிவிடும் .

இதன் மூலமா நான் சொல்லிக்கிறது என்னண்ணா A \C  காருல உக்காந்து போயி என்ஜாய் பண்ண விரும்புறவுங்க கொஞ்ச நேரம் ஜன்னல திறந்து காத்து வாங்கிட்டு  அப்புறமா A \C  ஐ  ஆண் பண்ணி என்ஜாய் பண்ணுங்க .

தமிழகத்தில் கடந்த 5 மாதங்களில் காற்றாலைகள் மூலம் 798 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி

தமிழகத்தில் கடந்த 5 மாதங்களில் 798.30 கோடி யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் சுமார் 25 ஆயிரம் காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் 12 ஆயிரத்துக்கும் மேற் பட்டவை தமிழகத்தில் உள்ளன. இவற்றின் மூலம் அதிகபட்சமாக 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். காற் றின் வேகத்தைப் பொறுத்து ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்.
.
தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திண் டுக்கல், கோவை, திருப்பூர் மாவட் டங்களில்தான் காற்றாலைகள் உள்ளன. வழக்கமாக மே மாதம் முதல் செப்டம்பர் வரை காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அப்போது அதிக அளவு காற்றாலை மின்சாரம் உற்பத்தியாகும். கடந்த ஆண்டு காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அதிகபட்ச மாக சுமார் 5,100 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தியானது. இந்த ஆண்டிலும் காற்று, மழை காரணமாக சராசரியாக 4 ஆயிரம் மெகாவாட்டுக்கு மேல் மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது. இதுகுறித்து இந்திய காற்றாலை கள் சங்கத் தலைவர் கே.கஸ்தூரி ரங்கையன் ‘இந்து தமிழ்’ செய்தி யாளரிடம் கூறியது:

நாடு முழுவதும் 34,135 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன்கொண்ட காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் மூலம் 8,236 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். தமிழகத்தின் மொத்த மின் தேவையில் சீசன் காலங்களில் 30 முதல் 35 சதவீதத்தை காற்றா லைகள் பூர்த்தி செய்கின்றன. இங்கு சுமார் 130 துணை மின் நிலையங்களுடன் 12 ஆயிரம் காற்றாலைகள் இணைக்கப்பட் டுள்ளன. அனைத்து மின் நிலையங் களிலும் உள்ள மீட்டர்களில் ‘சிம் கார்டு’ பொருத்தியுள்ளதால் காற்றாலைகள் மூலம் உற்பத்தி யாகும் மின்சாரத்தின் அளவை துல்லியமாக அளவிட முடியும்.
இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் இதுவரை 798.30 கோடி யூனிட் மின்சாரம் காற்றா லைகள் மூலம் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது. வரும் அக்டோபர் 15-ம் தேதி வரை காற்றாலைகள் மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். காற்றாலைகள் உற்பத்தி செய் யும் மின்சாரத்தில் 80 சதவீதம் வரை தமிழக மின் வாரியத்தால் பயன்படுத்தப்படுகிறது. இதை 100 சதவீதமாக உயர்த்த வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம். தேவைக்கு அதிகமாக மின் சாரத்தை உற்பத்தி செய்யும் போது, பற்றாக்குறை நிலவும் வெளி மாநிலங்களுக்கு மின் சாரத்தை விற்கலாம் எனவும் அரசுக்கு யோசனை தெரிவித் துள்ளோம். காற்றாலை மின் சாரத்தை முழுமையாகப் பயன் படுத்தும்போது, அனல் மின்சாரத் தின் பயன்பாட்டைக் குறைக்க முடியும். இது நிலக்கரி பற்றாக் குறை பிரச்சினைக்குத் தீர்வு கொடுப்பதுடன், சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்கும்.

நிலுவைத்தொகை வழங்கப்படுமா?
காற்றாலைகளின் மேம்பாட் டுக்கு அரசு உதவ வேண்டும். காற்றாலைகள் வழங்கும் மின் சாரத்துக்கு உரிய தொகையை, மின்சாரத் துறை உடனுக்குடன் வழங்க வேண்டும். ஓராண்டுவரை நிலுவை வைப்பதால் காற்றாலை உற்பத்தியாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். புதிதாக காற்றாலைகள் நிறுவ முன்வருவோரை ஊக்குவிக்க வேண்டும். இன்னும் அதிக அள வில் காற்றாலைகளை நிறுவினால், தமிழ்நாட்டின் மின் தேவையில் பெருமளவை பூர்த்தி செய்து, தொழிற் துறையினருக்கும் தடை யின்றி மின்சாரம் வழங்கலாம். உபரி மின்சாரத்தை ஹரியானா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங் களுக்கு வழங்கி, தமிழகத்துக்கு அதிக தேவையுள்ள மார்ச், ஏப்ரல் மாதங்களில் அங்கிருந்து மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ள லாம். இதன் மூலம் ஆண்டு முழு வதும் சீரான மின் விநியோகத்தை உறுதிப்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த 10 நாட்களுக்குத் தமிழகம், சென்னையில் இடியுடன் கூடிய மழை- தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் அடுத்த 10 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் இன்று அவரின் முகநூலில் பதிவிட்டு இருப்பதாவது:
தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. பருவமழை இல்லாத பகுதிகளிலும், அடுத்த10 நாட்களில் இந்த மழை இருக்கும். கடந்த வாரத்தில் அதிகமான மழை மேற்கு தமிழகத்திலேயே பெய்துவிட்டது.இப்போது சிறிய இடைவெளிக்குப்பின், கிழக்குப்பகுதியில் மழை தனது பணியைச் செய்ய இருக்கிறது. அடுத்த சில நாட்களுக்கு, அதாவது நாள்தோறும் கூட தமிழகத்திலும், சென்னையிலும் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்.
வடசென்னையில் இன்று இரவுகூட மழை இருக்கும். இன்று இரவு தென்சென்னை புறகர் பகுதிகளில் காஞ்சிபுரத்தில் இருந்து நகர்ந்து வரும் மேகக்கூட்டங்களால் மழைபெய்ய வாய்ப்புண்டு. ஒருவேளை இன்று இரவு மழை பெய்யாவிட்டாலும் கூட, அடுத்த 10 நாட்களுக்கு நல்ல மழையை எதிர்பார்க்கலாம். ஆனால், வெள்ளம் வருவதுபோல் மழை பெய்யாது. சென்னையில் இதுபோன்ற மழையால் வெள்ளமும் வராது. செங்கல்பட்டில் நேற்று 50மிமி மழை பெய்தது, இன்றும் மழை பெய்யக்கூடும்
பெங்களூரிலும் அடுத்து வரும் நாட்களில் நாள்தோறும் நகரில் பல்வேறு இடங்களில் மழை பெய்யக்கூடும். ஆனால், வெள்ளம் வரும் அளவுக்குக் கனமழை இருக்காது. கேரளாவைப் பொறுத்தவரை மழை தற்போது அங்கு இடைவெளி கொடுத்துள்ளது. ஆனால், சில நேரங்களில், ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும். ஆனால், அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அளவுக்கு மிககனமழை இருக்காது. இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

From Hindu

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...