Sunday, 22 July 2018

மண் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம்


  • இரசாயன உரங்கள், தேவைக்கேற்ப அதிகமாக உபயோகிப்பதை தடுக்கவும், சுற்றுசூழலை பாதுகாப்பதற்கும் மண் பரிசோதனை அவசியமாகும்
  • பயிர் அறுவடைக்கு பின் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறைந்து விடும். எனவே மண் பரிசோதனை செய்து மண் வளம் அறிய வேண்டியது அவசியமாகும்.
  • மண் அரிப்பு, நீர் கரையோட்டம் மற்றும் சத்துக்கள் ஆவியாதல் போன்ற காரணத்தினால் மண்வளம் குன்றிவிடும். எனவே மண் பரிசோதனை மூலம் மண் வளத்தை அறிந்துக்கொள்வது அவசியமாகும்.
  • மண் வளத்தை நிலைநிறுத்துவதன் மூலம் பயிரின் உற்பத்தி, மற்றும் லாபத்தை மேம்படுத்தலாம்
  • மண்ணின் வளத்தை பேணிக்காப்பதற்கு தேவையான அளவு அங்கக உரங்கள் மற்றும் கனிசமான இரசாயன உரங்கள் இடவேண்டும்
  • பயிரின் தேவை, மண்ணின் தன்மை, உர உபயோகத் திறன் முதலியவற்றை கருத்தில் கொண்டு உர நிர்வாகம் அமைந்திட வேண்டும்
  • தேவையான நேரத்தில் மண் பரிசோதனை செய்வதன் மூலம் சரிவிகித சம அளவு சத்துக்களை பயன்படுத்தி பயிரின் உற்பத்தியை அதிகரிக்கலாம்

மண் பரிசோதனைக்கு மண் மாதிரி சேகரிப்பது எப்படி?

1) ஒரு வயலில் எடுக்கும் மண் மாதிரி அந்த வயலின் சராசரி தன்மையைக் காட்டும் வகையில் இருக்க வேண்டும். மண்ணின் வளமும், தன்மையும், ஒரே வயலில் கூட இடத்திற்கு இடம் மாறுபடும். ஆகையால், ஒரே இடத்தில் மண்மாதிரி எடுக்கக்கூடாது. ஏக்கருக்கு குறைந்தது 10 இடங்களில் எடுத்து கலந்து அதிலிருந்து கால் பங்கிட்டு முறையில் அரைகிலோ மண் மாதிரி எடுக்க வேண்டும்.

2) மண் மாதிரி எடுக்கும் சமயம் எரு குவிந்த இடங்கள், வரப்பு ஓரங்கள், மரநிழல் மற்றும் நீர் கசிவு உள்ள இடங்களை தவிர்க்க வேண்டும்.

3) மண் மாதிரி எடுக்க வேண்டிய இடத்திலுள்ள இலை, சருகு, புல், செடி ஆகியவற்றை மேல் மண்ணை நீக்காமல் கையினால் அப்புறப்படுத்த வேண்டும்.

4) ஆங்கில எழுத்து V வடிவக் குழி குறிப்பிட்ட ஆழத்திற்கு வெட்ட வேண்டும். குழியின் இரு பக்கங்களிலும் மேலிருந்து கீழ்வரை ஒரே – சீராக அரை அங்குல கனத்தில் செதுக்கவேண்டும். வெட்டிய மண்ணை ஒரு சட்டியிலோ (அ) சாக்கிலோ போட வேண்டும். காய்ந்து வெடித்த வயலில் குழி வெட்ட சிரமமாக இருந்தால் மண்கட்டி ஒன்றை பெயர்த்து மேலே வைத்து அதன் பக்கவாட்டில் மண்ணை குறிப்பிட்ட ஆழத்திற்கு செதுக்கி எடுக்கவும்.

5) V வடிவ குழியின் ஆழம் பயிருக்கு பயிர் மாறுபடும்.
பயிர்ஆழம்
நெல், கேழ்வரகு, கம்பு, வேர்க்கடலைமேலிருந்து 15 செ.மீ.
பருத்தி, கரும்பு, மிளகாய், வாழை, மரவள்ளிமேலிருந்து 22.5 செ.மீ.
தென்னை, மா மற்றும் பழத்தோட்ட பயிர்களுக்கு மூன்று மாதிரிகள்30.60.90 செ.மீ.
6) களர், உவர் நிலத்தில் ஒவ்வொரு அடிக்கும் 1 மண் மாதிரி வீதம் 3 மாதிரி எடுக்கவும்.
7) நிலம் சாகுபடியில் இல்லாத சமயத்தில் மண்மாதிரி எடுக்கவேண்டும்.
8) வயலில் சேகரித்த மண் ஈரமாக இருந்தால் நிழலில் உலர்த்த வேண்டும். சுத்தமான தரையில் (அ) காகித விரிப்பில் மண்ணை சீராகப்பரப்பி நான்கு சமபாகங்களாகப் பிரிக்கவும். பின்னர் எதிர் மூலையில் இருபாகங்களில் உள்ள மண்ணை நீக்கி விடவும். மீண்டும் மண்ணை பரப்பி முன்பு செய்தது போல் நான்கு சமபாகங்களாக பிரித்து வேறு எதிர் எதிர் மூலையில் உள்ள மண்ணை நீக்கிவிடவும். ஈரமான மண் மாதிரியை அனுப்பினால் பிளாஸ்டிக் பையில் மண் மாதிரி விவரத்தாள் அல்லது அட்டையை வைக்கவும்.
9) நுண்ணூட்ட ஆய்வு மாதிரிகளை மூங்கில் குச்சியால் மேற்கண்ட முறைப்படி எடுக்கவும். பென்சிலால் எழுதினால் எழுத்து அழியாது இப்படி பகுத்து பிரித்து சுமார் அரை கிலோ மண்ணை துணிப்பையில் இட்டு கட்டி விபரங்களை இணக்கவும்.
வேளாண்துறை மண் பரிசோதனை நிலையம் (அ) இப்கோவின் நடமாடும் மண் ஆய்வகம் (அ) தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அமைந்த ஆய்வு கூடங்களின் மூலம் மண் மாதிரிகளை ஆய்வு செய்து பயன்பெறவும்.
    ஆதாரம்: இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனம்

    மண்ணின் மாறுபட்ட தன்மைகளால் ஏற்படும் விளைவுகள்

    • மண்ணில் களர்த்தன்மை (பி.எச்.8.5க்கு மேல்) அதிகரித்தால், பயிருக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதனால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படும். மகசூல் குறையும்.
    • உவர்த்தன்மை (ஈசி 3.0க்கு மேல்) அதிகரித்தாலும், பயிருக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படும். மகசூல் குறையும்.
    • தழைச்சத்து, பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது. அளவு அதிகமானால், பயிர் அதிகம் வளர்ந்து பூச்சி நோய்த் தாக்குதலுக்கு உட்படுகிறது. மகசூல் பாதிக்கப்படும்.
    • மணிச்சத்து, பயிரில் மணிகள் முதிர்ச்சி அடையும், வேர் வளர்ச்சிக்கும் உதவுகிறது. அளவு அதிகமானால் பயிருக்குக் கிடைக்காமல் மண்ணில் வீணாகிறது.
    • சாம்பல்சத்து பயிரில் பூச்சிநோய்கள் வராமல் காக்கிறது. வறட்சியைத் தாங்க உதவுகிறது. அளவு அதிகமானால் பயிருக்குக் கிடைக்காமல், மண்ணில் வீணாகிறது.
    மண் பரிசோதனை ஏன் செய்ய வேண்டும்?
    • உரச்செலவைக் குறைந்து அதிக மகசூல் பெற்றிட
    • மண்ணில் உள்ள களர், அமிலத்தன்மைகளை அறிந்து தக்க சீர்திருத்தம் செய்திட தழை உரம், தொழு உரம், ஜிப்சம், சுண்ணாம்பு இவற்றின் அளவை அறிந்து இடவும்.
    • மண்ணின் உவர்த்தன்மைகளை அறிந்து வடிகால் வசதியைப் பெருக்குதல். உப்பைத்தாங்கி வளரும் சூர்யகாந்தி, பருத்தி மிளகாய்ப் பயிர்களைச் சாகுபடி செய்தல்.
    • மண்ணில் உள்ள தழை, மணி சாம்பல் சத்துக்களின் அளவை அறிந்திடவும்.
    • பயிர்களுக்குத் தேவையான உரமிடும் அளவை அறிந்து உரமிடவும்.
    • தேவைக்கேற்கு உரமிடுவதால் உரச்செலவை குறைக்கவும்.
    • இடும் உரம் பயிருக்கு முழுமையாக கிடைத்திடவும்.
    • அங்ககச்சத்தின் அளவு அறிந்து நிலத்தின் நிலையான வளத்தை பெருக்கிடவும்.
    • மண்ணின் தன்மைக்கேற்ப பயிரைத் தேர்ந்தெடுக்கவும் மண் பரிசோதனை அவசியம்.

    பாரதிராஜா இயக்கி, நடித்துள்ள ‘ஓம்’ படத்தின் டீஸர்


    தமிழர் அறியவேண்டிய தலைவர் – மனோன்மணீயம் சுந்தரனார்

    • திருவனந்தபுரம் அருகிலுள்ள ஆலப்புழை எனும் ஊரில் 1855,ஏப்ரல் மாதம் 05ஆம் நாள் பெருமாள் பிள்ளை, மாடத்தி அம்மாள் என்னும் வாழ்க்கை இணையருக்கு மகனாக பிறந்தார்.
    • ஆலப்புழையில் தொடக்கக் கல்வியும் பள்ளிக் கல்வியும் பயின்ற பின் நாகப்பட்டினம் நாராயணசாமிப் பிள்ளையிடம் தமிழ் கற்றார். பின் திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியில் தமிழ்ல் இளங்கலை பயின்றார். இவரது அறிவாற்றலைக் கண்ட கல்லூரி முதல்வர் இவரை அழைத்து இக்கல்லுரியில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டே முதுகலைப் பயில அனுமதியளித்தார்.
    • அப்பகுதியில் முதல் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பதினால் அனைவரும் இவரது பெயருடன் எம்.ஏ. என்ற அடைமொழியை சேர்த்தே அழைத்தனர்.
    • பின் நெல்லை கல்லூரில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
    • வரலாற்றுப் பாடத்திட்டங்களை வகுக்க வேண்டி வரலாற்று ஆய்வுகளின் மீது இவருக்கு நாட்டம் ஏற்பட அதன்பின் கல்வெட்டறிஞர் கோபிநாத ராவுடன் இணைந்து கல்வெட்டுகளைத் தேடிச்சென்றார். அதன் விளைவாகத் திருவாங்கூர் வரலாற்றையும் எழுதினார்.
    • தமிழ் வரலாற்றை ஆய்வு செய்த மனோன்மணீயம் சுந்தரனார், இத்தனை பாரம்பரியமிக்க தமிழ் மொழியில் ஆங்கில மொழிக்கு உள்ளது போல நாடகமாக்கங்கள் இல்லையே என வருத்தப்பட்டுள்ளார்.
    • இக்குறையை நீக்க அவரே நாடகம் ஒன்றினை எழுத முற்பட்டு, தனது தமிழ்ப்பற்று, வரலாற்று ஆர்வம், தத்துவ நாட்டம் இவையனைத்தையும் இணைத்து மனோன்மணீயம் என்ற நாடகத்தினை எழுதினர்.
    • தமிழின் மீதான இவரது பற்று இந்நூலின் முதல் பாடலான நீராறும் கடலுடுத்த எனத் துவங்கும் பாடலில் வெளிப்பட்டது.
    • 1970இல் இப்பாடலினை தமிழகத்தின் பொது வாழ்த்துப் பாடலாக தமிழக அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளபட்டது.
    • பழந்தமிழ் இலக்கியங்களை பாதுகாப்பதும், புதிய துறைகளில் நூல்கள் இயற்றப்பட வேண்டியதும் தமிழ் மொழிக்கு தமிழர் ஆர்வலர்கள் செய்ய வேண்டிய கடமைகள் என இவர் குறிப்பிட்டுள்ளார்.
    • சென்னைப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டக் குழுவில் இருந்து தமிழ் வரலாறு, தத்துவம் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான கல்வித் திட்டங்களை வகுத்துள்ளார்.
    • சாத்திரசங்கிரகம், சிவகாமியின் சபதம், ஒரு நற்றாயின் புலம்பல் போன்ற நூல்களையும், திருவிதாங்கூர் மன்னர்களின் காலம், திருஞான சம்பந்தர் கால ஆராய்ச்சி போன்ற ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார்..

    பொலிவு தரும் சீரகம்

    பித்தம் போக்கும் அகத்திக் கீரை
    # நெல்லி வற்றல் பொடியைத் தினமும் மூன்று வேளை  ஒரு டீஸ்பூன் எடுத்து நீருடன் கலந்து சாப்பிட்டால் தோல் நோய்கள் மட்டுப்படும். உடலில் சர்க்கரை அளவு குறையவும்  வாய்ப்புண்டு.
    # வெந்தயக் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துவந்தால் நாள்பட்ட சொறி, சிரங்கு, பார்வைக்கோளாறு போன்றவை குறையும்.
    # மஞ்சள் தூளில் சிறிது உப்பு சேர்த்து வெதுவெதுப்பான நீரில் வாயைக் கொப்பளித்தால் வாய்ப்புண்ணும் தொண்டைப் புண்ணும் குணமாகும்.
    # பப்பாளிப் பழத்தைக் குழைத்து,  கண்ணில் படாமல் முகத்தில் பூசி உலறவைத்துப் பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் கரும்புள்ளிகள் நீங்கும்.
    # மருதாணி இலையை மஞ்சளோடு  சேர்த்து அரைத்து, சொறி, சிரங்கு மீது பற்றுப்போட்டுவர சில நாட்களில் குணமாகும்.
    # சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் கபக்கட்டு, காசம், இருமல் போன்ற சீதள நோய்கள் தீரும்.
    # சித்தரத்தைப் பொடியைச் சிறிது பனங்கற்கண்டு தூளுடன் சேர்த்து காலை, மாலை சாப்பிட்டுவர சளி, இருமல், தொண்டைப்புண், நீர்க்கோவை, வாயு போன்றவை  தீரும்.
    # செம்பருத்தி இலையை அரைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் சூடு தணியும்; கண்கள் குளிர்ச்சி பெறும்.
    # அரிசி கழுவிய நீரில் அகத்திக் கீரையை வேகவைத்துச் சாப்பிட்டுவந்தால் பித்தம் தொடர்பான தலைச்சுற்றல் குணமாகும்.

    பொலிவு தரும் சீரகம்

    # ஆப்பிள் பழத் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமான அளவில் இருக்கிறது. இந்த பெக்டின் நம் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்குவதில் சிறந்தது.
    # தொடர்ந்து பூண்டு சாப்பிட்டுவந்தால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
    #   ரத்தத்தில் சிவப்பணு உற்பத்திக்கு பீட்ரூட், புடலங்காய், பசலைக் கீரை, பேரீச்சம்பழம், அவரை, பச்சைக் காய்கறிகள், துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, முருங்கைக் கீரை போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    # வெங்காயம், நெல்லிக்காய், வெந்தயக் கீரை, பனங்கற்கண்டு, மாதுளம் பழம், நாவற்பழம், கோவக்காய், பச்சைப் பயறு, மோர், இளநீர் போன்றவை உடலின் சூட்டைத் தணிக்கும்.
    # சீரகப் பொடியை வெண்ணெய்யில் குழைத்துச் சாப்பிட வயிற்று எரிச்சல் மட்டுப்படும்.
    # சீரகத் தண்ணீர் குடித்துவர சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் ஜொலிக்கும்; கூந்தல் வலுப்பெறும். முடியின் வேர்க்கால்கள் வளர்வதற்கும் சீரகத் தண்ணீர் உதவும்.
    # மலச்சிக்கலைப் போக்க, சீரகத்தில் உள்ள நார்ச்சத்து உதவும்.
    # சீரகத்தை லேசாக வறுத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டுவர, நரம்புகள் வலுப்பெறும்.

    116 அடியை தொட்டது மேட்டூர் நீர்மட்டம்: 120 அடியை நெருங்குகிறது

    நேற்று முன்தினம் அணைக்கு விநாடிக்கு 59,954 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 64,595 கனஅடியாக அதிகரித்தது. நேற்று முன்தினம் 112.04 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 114.63 அடியானது.

    இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 116 அடியை கடந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    அணை நீர் மட்டம் 100 அடிக்கு குறைவாக இருந்தபோது ஒவ்வொரு அடி உயருவதற்கு சுமார் 1 டிஎம்சி நீர் தேவைப்பட்டது. 100 அடிக்கு மேல் அணையின் நீர்தேங்கும் பரப்பு விரிவடைந்து இருப்பதால், அணை மட்டம் ஒவ்வொரு அடி உயரவும் 2 டிஎம்சி-க்கும் அதிக நீர் தேவைப்படுகிறது. நேற்று முன்தினம் 81.33 டிஎம்சி-யாக இருந்த நீர் இருப்பு, நேற்று காலை 4 டிஎம்சி அதிகரித்து 85.16 டிஎம்சி-யாக உயர்ந்துள்ளது.  நீர்மட்டம் 120 அடி கொள்ளளவை எட்ட தற்போது 8.37 டிஎம்சி நீர் தேவை.

    தற்போதைய நிலையில், நீர்வரத்து நாளொன்றுக்கு 4 டிஎம்சி அதிகரிக்கிறது. இந்த கணக்கீட்டின்படி 2 நாளில் அணை 120 அடியை எட்டிவிடும். ஆனால், கர்நாடகாவில் மீண்டும் மழை தொடங்கி இருப்பதால் அங்கிருந்து வரும் நீரின் அளவு அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே, நாளை மாலைக்குள் அணை 120 அடியை எட்ட வாய்ப்புள்ளது.

    வெள்ள அபாய எச்சரிக்கை
    அணை முழுக்கொள்ளளவு எட்டிவிட்டால், அணைக்கு வரும் நீரில் 90 சதவீதம் காவிரியில் திறக்க வேண்டியிருக்கும். எனவே, இரு நாட்களுக்கு பின்னர் அணையில் இருந்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனால், காவிரி கரையோர மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.நீர்மட்டம் 115 அடியை எட்டிய நிலையில் மேட்டூர் அணை நீர் தேக்க பகுதி முழுவதும் தேங்கியுள்ள தண்ணீர்.

    அமராவதி அணையின் இன்றைய நிலவரம்

    தேதி : 22.07.2018
    இருப்பு : 86.62 அடி
    வரவு  : 1754 கன அடி
    வெளியேற்றம் : 2121 கன அடி
    ஆறு : 1637 கன அடி
    வாய்க்கால் : 440 கன அடி

    அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

     அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...