Saturday, 11 August 2018

இடுக்கி அணையில் நீர் தேக்கி நேரடியாக கடலில் கலப்பதால் கேரளாவிற்கு என்ன லாபம்

கேரளா மாநில இடுக்கி அணையை காப்பாற்ற முல்லைப்பெரியாறு அணையில் 142 அடிக்கு மேல் நீர் தேக்க கூடாது என்ற வழக்கை கேரளா வாபஸ் பெற வேண்டிய நிலைமை 142 அடிக்கு மேல் முல்லைபெரியாரில் நீர்தேக்கினால் மட்டுமே இடுக்கி அணையை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம் கேரளாவுக்கு முல்லை பெரியாறு அணையில் 152 அடிவரை தண்ணீரை தேக்க முடியும். காரணம் இதுதான்.  முல்லை பெரியாறு அணைக்கு கீழே இருப்பது இடுக்கி அணை.  இந்த இடுக்கி அணை ஆசியாவிலிருக்கும் உயரமான வளைவு அணைகளுள் (curve dam) இது இரண்டாவது மிகப்பெரிய அணை.  இந்த அணை விவசாய தேவைக்கோ, குடிநீர் பயன்பாட்டிற்கோ கட்டப்பட்ட (1973) அணை அல்ல . 
167.68 மீட்டர் உயரம் கொண்ட இந்த பிரமாண்ட அணை 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 72 டிஎம்சி தண்ணீரைத் தேக்கி வைக்கும் அளவிற்கு பெரியது. ஏறக்குறைய நம் மேட்டூர் அணையின் கொள்ளளவில் மூன்றில் இரண்டு பங்கை இந்த அணை கொண்டிருக்கிறது. 750 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க கட்டப்பட்ட இந்த அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் அரபிக் கடலில் நேரடியாக கலந்துவிடும். இந்த அணை கட்டப்பட்ட பிறகு இதுவரை இரண்டுமுறை (1992, 2018) மட்டுமே அதன் முழு கொள்ளளவை அடைந்திருக்கிறது. 
இந்த அணை நிரம்பாததற்கு காரணம் மேலேயிருக்கும் முல்லை பெரியாறு அணை. முல்லை பெரியாறு அணையின் தண்ணீர் குடிநீருக்கும், விவசாய பாசனத்திற்கும் தமிழகத்தின் பக்கம் திருப்பிவிடப்படுவதால் இடுக்கி அணை நிரம்ப போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. 
முல்லை பெரியாறு அணை இல்லாவிட்டால் இடுக்கி அணை வருடம் முழுவதும் நிறைந்திருக்கும். அதற்கு தடையாக இருப்பது முல்லை பெரியாறு அணை. அதனால்தான் அந்த அணையை அகற்ற அணை பலவீணமாக இருக்கிறது, அணையில் ஓட்டை விழுந்துவிட்டது என பல கதைகளை சொல்லி 155 அடி தண்ணீர் தேக்கப்பட்டு வந்த முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க செய்துவிட்டது கேரளா. பிறகு தொடர்ச்சியான சட்ட போராட்டத்தால் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கும் உரிமை வழக்கு மூலம் கிடைத்தது 
இடுக்கி அணையில் நீர் நிரம்ப வேண்டும். அதற்கு இடைஞ்சலாக இருக்கும் முல்லை பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்பதற்காக முல்லை பெரியாறு அணை பற்றிய வதந்திகளை கேரள அரசும், கேரள ஊடகங்களும் தொடர்ச்சியாக செய்து வந்தன. 
1973ல் கட்டப்பட்ட இடுக்கி அணை 6 ஆண்டுகளாகியும் நிரம்பாததால் 1979ல் மலையாள மனோரமா பத்திரிக்கை ஒரு வதந்தியை மக்களிடையே பரப்பி பீதியாக்கியது. முல்லை பெரியாறு அணையில் ஒரு யானை நுழைந்துபோகும் அளவிற்கு ஓட்டை விழுந்துவிட்டது. அதனால் எப்போது வேண்டுமானாலும் அந்த அணை உடையலாம். அணை உடைந்தால் முல்லை பெரியாறு ஆற்றை ஒட்டியிருக்கும் மக்கள் அனைவரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு அரபிக் கடலில் பிணமாக மிதப்பார்கள் என்ற வதந்தியை மக்களிடையே பரப்பியது. மக்கள் பீதியடைந்து முல்லை பெரியாறு அணைக்கு எதிராக போராட ஆரம்பித்தார்கள். 
அவர்கள் முல்லை பெரியாறு அணை உடையப் போவதாக சொல்லி 39 ஆண்டுகளாகிறது. தற்போதுவரை முல்லை பெரியாறு அணை பலமாக இருப்பதாக தமிழக, கேரள அரசின் சார்பில் நிபுணர்களை கொண்டு உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு அறிக்கை கொடுத்திருக்கிறது. 
ஆனாலும் கேரள ஊடகங்களும், கேரள அரசும் திருந்தவில்லை. தொடர்ந்து மக்களிடையே பயத்தை கிளப்ப 'டேம் 999' என்ற படத்தை எடுத்து மக்களை அச்சுறுத்தினார்கள். Dam 999 என்ற தலைப்பே விஷமத்தனமானது. Dam 999 என்பது முல்லை பெரியாறு அணையின் ஆயுள். முல்லை பெரியாறு அணையை கட்டி அந்த இடத்தை பயன்படுத்திக்கொள்ள பிரிட்டிஷ் அரசு திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் 999 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்திருந்தது. அதைதான் மலையாளிகள் படத்திற்கு பெயராக வைத்தார்கள். 
விஷமத்தனமான கருத்துக்களோடு இருமாநில மக்களிடையே பகைமையை ஏற்படுத்த எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தடை விதித்தார் அப்போதைய முதல்வர் செல்வி.ஜெயலலிதா.  ஆனால் உண்மையில் அவர்கள் வதந்தி பரப்புவதுபோல முல்லை பெரியாறுஅணை உடைந்தாலும் கேரள மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. காரணம் முல்லை பெரியாறு அணையின் கொள்ளளவைவிட மிகப்பெரியது இடுக்கி அணை. முல்லை பெரியாறு அணையின் அதிகபட்ச நீர் தேக்குத்திறன் 15 டி.எம்.சி ஆனால் இடுக்கி அணையின் கொள்ளளவு 72 டி.எம்.சி. 
முல்லை பெரியாறு போன்ற நான்கு அணைகளின் தண்ணீரை இடுக்கி அணை என்ற ஒரே அணையில் தேக்கிடமுடியும். மேலும் முல்லை பெரியாறு அணை அமைந்திருப்பது மேற்கு தொடர்ச்சி மலையின் மேல் பகுதியில், இடுக்கி அணை இருப்பது அதன் அடிவாரத்தில். முல்லை பெரியாறு அணை உடைந்தாலும் வெள்ளம் பாய்ந்துவரும் வழியில் எந்த ஊர்களும் இல்லை. மலைக்கு நடுவிலும், காடுகளுக்கு இடையேயும் பாய்ந்து வந்து இடுக்கி அணையில் அந்த தண்ணீர் சேர்ந்துவிடும்.

ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூா் அணை

கா்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக சேலம் மாவட்டம் மேட்டூா் அணை ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக நிரம்பியுள்ள நிலையில் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக உயா்த்தப்பட்டுள்ளது.

கா்நாடகாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அளவுக்கு அதிகமாகவே பெய்து வருகிறது. மேலும் கா்நாடகாவின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக கபினி அணை, கிருஷ்ண ராஜ சாகா் அணை, பிலிகுண்டு உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன.

கடந்த சில தினங்களாக மழைப் பொழிவு குறைந்திருந்த நிலையில் தற்போது அது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் காவிாி ஆற்றில் திறந்து விடப்படும் நீாின் அளவு உயா்த்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி காவிரி ஆற்றில் 1 லட்சத்து 24 ஆயிரம் கனஅடி நீா் திறந்து விடப்படுகிறது. இதனால் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூா் அணை தற்போது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.

கடந்த மாத இறுதியில் மேட்டூா் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் தற்போது அது ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக முழு கொள்ளவை எட்டியுள்ளது. முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு 80 ஆயிரம் கனஅடியில் இருந்து 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக உயா்த்தப்பட்டுள்ளது. மேலும் திறந்து விடப்படும் நீரின் அளவு தொடா்ந்து உயா்த்தப்படும் என்று மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாாிகள் தொிவித்துள்ளனா்.

தேநீர் நினைவுகள்

டீக்கடை இல்லாத தெருவோ ஊரோ நம் மாநிலத்தில் கிடையாது. இன்று மட்டுமல்ல; அன்றும் அவ்வாறுதான் டீக்கடை எங்கும் நிரம்பி இருந்தது. தேநீர் போடுவது பெரிய கம்ப சூத்திரம் இல்லை. கொதிக்கும் தண்ணீரில் தேயிலையைப் போட்டு அதனுடன் சிறிது பாலையும் தேவைக்கேற்ப சர்க்கரையையும் போட்டுக் கலக்கினால் சுவையான தேநீர் ரெடி. இருந்தும் எல்லா டீக்கடைகளிலும் ஒரே சுவையுடன் தேநீர் இருப்பதில்லை. இந்தக் கூற்று வீடுகளுக்கும் பொருந்தும். சில கடைகளில் மட்டுமே தேநீர் எப்போதும் ஒரே மாதிரியான சுவையுடன் ருசியாக உள்ளது. அதனால்தான் என்னவோ ஒவ்வோர் ஊருக்கும் அடையாளமாக ஒரு டீக்கடை இன்றும் உள்ளது.
முன்பு எல்லாம் டீக்கடையில்தான் ஊரில் உள்ள பெரியவர்களும் இளைஞர்களும் கூடி கதை பேசுவார்கள். பெரியவர்களும் இளைஞர்களும் எப்படி ஒரே இடத்தில் கூட முடியும் என்று யோசிக்க வேண்டாம். அவர்கள் கூடும் நேரம் மாறுபடும். பெரியவர்கள் கூடும் நேரத்தில் இளைஞர்கள் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்க மாட்டார்கள். அதேபோன்று இளைஞர்கள் கூடும் நேரத்தில் பெரியவர்கள் அந்தப் பக்கம் வராமல் இருந்து, தங்கள் மரியாதையைக் காப்பாற்றிக்கொள்வார்கள்.
ஒவ்வொரு டீக்கடைக்கும் முன்பாக, ஒன்றை ஒன்று பார்த்தபடி இரண்டு பெஞ்சுகள் இருக்கும். அந்த பெஞ்சுகளின் மேல் நாளிதழ்கள் கிடக்கும். அது பறக்காமல் இருக்க அதன் மேல் கல் ஒன்று இருக்கும். பேப்பர் வருவதற்கு முன்பே அதை எதிர்பார்த்து, இரண்டோ மூன்றோ டீயைக் குடித்துவிட்டுப் பெரியவர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த காலம் அது. இப்போதுபோல அன்று பெரும்பாலான வீடுகளிலும் நாளிதழ் வாங்கும் பழக்கம் கிடையாது. அன்றைய காலகட்டத்தில் நாளிதழ்கள் இன்றைக்கு இருப்பதைப் போன்று தவிர்க்க முடியாததாக இல்லாமல், ஆடம்பரமானதாகவே கருதப்பட்டன.
இப்போது தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் விவாதங்களுக்கு முன்னோடி என டீக்கடை பெஞ்சுகளில் நடந்த விவாதங்களைச் சொல்லலாம். அரசியல் கட்சியினுடைய கொள்கையின் சரியும் தவறும் அந்த பெஞ்சில்தான் அலசி ஆராயப்படும். அரசியல் தலைவரின் நம்பகத்தன்மை அங்கேதான் முடிவு செய்யப்படும். சினிமாவின் வெற்றியும் தோல்வியும் அங்கேதான் தீர்மானிக்கப்படும். அரசியல் விவாதங்கள் பெரும்பாலும் பெரியவர்களால் நடத்தப்படும், சினிமா விவாதங்களும் விளையாட்டு விவாதங்களும் இளைஞர்களால் நடத்தப்படும்.
டீக்கடைகள் பெரும்பாலும் பேருந்து நிறுத்தத்தை ஒட்டிய ஜன நடமாட்டம் மிகுந்த இடத்தில்தாம் இருக்கும். ஊருக்கு வருவோர் போவோர் என எவரும் டீக்கடை மாஸ்டரின் கண்களிலிருந்து தப்ப முடியாது. டீக்கடை உரிமையாளர்களும் மாஸ்டர்களும் முற்றிலும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக இருந்தனர். தந்தையும் மகனும் தம் தம் நண்பர்களுடன் கூடும் இடம் அது. இருந்தும், தந்தையைப் பற்றி மகனிடமோ மகனைப் பற்றித் தந்தையிடமோ அவர்கள் ஒருபோதும் கூறியது இல்லை. அதுதான் அவர்களின் வெற்றியின் ரகசியமும்கூட.
1980,1990 களில் வாழ்ந்த இளைஞர்களின் வாழ்வில், டீக்கடையுடன் தொடர்புடைய  மறக்க முடியாத சம்பவம் நிச்சயம் இருக்கும். சிலருக்கு அது தங்கள் மனைவியை அடையாளம் கண்ட இடமாக இருக்கலாம், சிலருக்கு அது முதல் காதல் தோன்றிய இடமாக இருக்கலாம், சிலருக்கு அது திருட்டு தம் அடித்த இடமாக இருக்கலாம், சிலருக்கு அது தர்ம அடி வாங்கிய இடமாகக்கூட இருக்கலாம்.
இன்று அந்த பெஞ்களுக்குப் பதில் மேஜை நாற்காலிகள் உள்ளன. அந்தக் கடைகள் இன்று நவீனமாகி, பளபளப்பான பெயர்ப் பலகையைத் தாங்கி நிற்கின்றன. அதன் பெயர்களும் வாயில் நுழையாதபடி கடினமாக உள்ளன. சிலவற்றின் பெயர்கள் எந்த மொழியைச் சார்ந்தது என்று கண்டுபிடிப்பதுகூடக் கடினமே. உதாரணத்துக்குச் சென்னை ஆதாம் மார்க்கெட்டுக்கு அருகில் இருக்கும் பாபிலோன் எனும் டீக்கடை. சென்னைக்கோ நம் மாநிலத்துக்கோ ஏன் அதன் உரிமையாளருக்கோ கூட பாபிலோன் என்ற பெயருடன் சம்பந்தம் இருக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை பாபி என்பவரிடம் லோன் வாங்கிக் கடை வைத்திருப்பார்களோ என்னவோ.
வடைகளும் பஜ்ஜிகளும் முட்டைகோஸ்களும் தேங்காய் பிஸ்கட்டுகளும் மட்டும் இருந்த நிலை மாறி இன்று டீக்கடைகளில் பானி பூரி, சமோசா, சென்னா மசாலா போன்ற வேற்று மாநில நொறுக்குத் தீனிகள் மலிந்து கிடக்கின்றன. முன்பு நமக்குக் காய்ச்சல் வந்தால் மட்டுமே பன்னையும் பிரெட்டையும் சாப்பிடுவோம். இன்றோ அவற்றுக்கிடையில் பச்சை காய்கறிகளை வைத்து சாண்ட்விச், பர்கர் எனச் சாப்பிடுவது ஃபேஷனாகிவிட்டது. இரண்டு பிரெட் துண்டுகள் மட்டுமே கொண்ட சாண்ட்விச்சின் விலை ஒரு முழு பிரெட் பாக்கெட்டின் விலையைவிட அதிகம். இருந்தாலும் அதைப் பற்றி யோசிப்பதற்குக்கூட இன்றைய ‘ப்ரோ’க்களுக்கு நேரமும் மனமும் இல்லை.
எது எப்படியோ, இன்றைய நவீனக் கடைகள் இளைஞர்கள் மட்டுமே கூடி மகிழும் இடமாக மாறிவிட்டன. கடைகளின் பெயர்களோ அதன் நவீனமயமான தோற்றமோ அதில் நிலவும் அந்நியமயமோ, எதுவென்று சரியாக அறுதியிட்டுக் கூற முடியவில்லை, பெரியவர்கள் இன்று அங்குக் கூடுவதில்லை. அவர்கள் தொலைக்காட்சிகளில் விவாதங்களைப் பார்த்தபடி தங்கள் நினைவுகளை அசை போடுகிறார்கள்.இளைஞர்களின் வாழ்வில், டீக்கடையுடன் தொடர்புடைய  மறக்க முடியாத சம்பவம் நிச்சயம் இருக்கும். சிலருக்கு அது தங்கள் மனைவியை அடையாளம் கண்ட இடமாக இருக்கலாம், சிலருக்கு அது முதல் காதல் தோன்றிய இடமாக இருக்கலாம், சிலருக்கு அது திருட்டு தம் அடித்த இடமாக இருக்கலாம், சிலருக்கு அது தர்ம அடி வாங்கிய இடமாகக்கூட இருக்கலாம்.வாழ்க்கை வண்ணம்

வங்கிக் கடனை மாற்றுகிறீர்களா?

ரிசர்வ் வங்கி கடனுக்கான ரெப்போ ரேட்டை இரு மாதங்களில் இரண்டாவது முறையாக 25 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இதனால் வீட்டுக் கடன் உயர வாய்ப்புள்ளது. சில வங்கிகள் வீட்டுக் கடனை உயர்த்துவதாகவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளன. உங்களது வீட்டுக் கடன் இருக்கும் வங்கிகளும் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் வீட்டுக் கடனை உயர்த்தினால், இருப்பதில் வீட்டுக் கடன் வட்டி குறைவாக உள்ள வங்கிக்கு உங்களது கடனை மாற்றலாம்.
ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு வட்டிக் கடனை மாற்றுவதற்குச் சில நடைமுறைகள் உள்ளன. அதே நேரம் அது சிரமமான விஷயமும் அல்ல.
கடனை மாற்றுவது எப்படி?
முதலில் உங்களது வீட்டுக் கடன் உள்ள வங்கிக்குச் சென்று ‘கடன் பரிமாற்றக் கோரிக்கை’யை விண்ணப்பமாகக் கொடுக்க வேண்டும். அந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து பிறகு, வங்கி, உங்களது நிலுவைத் தொகையைக் குறிப்பிட்டு ஓர் அறிக்கையை அளிக்கும். அத்துடன் ஒப்புதல் கடிதம் அளிக்கும்.
அல்லது தடையில்லாச் சான்றிதழ் அளிக்கும். இந்த ஆவணங்களை, மாற்றப்படவுள்ள வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையை மாற்றப்படவுள்ள அந்த வங்கி பரிசீலித்து, திருப்தியாக இருக்கும்பட்சத்தில் கடன் மாற்றத்துக்கு ஒப்புதல் அளிக்கும். பழைய வங்கியில் நிலுவையிலுள்ள உங்களது கடனை வங்கி முடித்துவைக்கும். இந்த நடைமுறைக்குப் பிறகு சொத்து தொடர்பான சொத்துப் பத்திரங்களைப் புதிய வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும்.
கடனை மாற்றுவது லாபமா?
மாதத் தவணைத் தொகை குறையும் என்பது வீட்டுக் கடனை மாற்றுவதில் உள்ள முதல் லாபம். இப்படிக் கடனை மாற்றும்போது உங்களது கடன் புள்ளிகள் (Credit Score) அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடனை மாற்றுவதன் மூலம் நீங்கள் கடனைச் செலுத்துவதில் காட்டும் அக்கறையின் அடிப்படையில் உங்கள் கடன் புள்ளிகள் உயரும். வாடிக்கையாளர் சேவையில் அக்கறை காட்டும் வங்கிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புள்ளது.
கடனை மாற்றுவதில் உள்ள சிரமங்கள்
கடனை மாற்றுவது என்பது புதிய கடனுக்கு விண்ணப்பிப்பது போன்ற நடைமுறைகளைக் கொண்டதுதான். வங்கிக் கடனுக்கான விண்ணப்பம் நிரப்புவதிலிருந்து, ஆவணங்கள் கொடுப்பது வரை அதே நடைமுறையைக் கொண்டது.
கடனுக்கான செயல் கட்டணத்தைப் (Processing Fee) புதிதாகச் செலுத்த வேண்டியிருக்கும். சில வங்கிகள் சலுகை அளிக்க வாய்ப்புள்ளது. சொத்துப் பத்திரங்களைப் புதிய வங்கிக்கு மாற்றுவதற்கான பத்திரப்பதிவு செலவையும் மீண்டும் செய்ய வேண்டியிருக்கும். அதனால் இந்தக் காரணங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து வங்கிக் கடனை மாற்ற வேண்டும்.
கடன் மாற்றுவதற்குத் தேவையான ஆவணங்கள்
# பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பப்படிவம்
# விண்ணப்பதாரரின் புகைப்படம்
# புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று
# முகவரிச் சான்று
# வயதுச் சான்றிதழ்
# வருமானச் சான்று
# மாதத் தவணைத் தொகை பிடிக்கப்படும் வங்கியின் 12 மாத கால வங்கிப் பரிவர்த்தனை நகல்
# சொத்து ஆவணங்கள்

அமராவதி அணையின் இன்றைய நிலவரம்

தேதி : 11.08.2018
இருப்பு : 87.90 அடி
வரவு  : 965 கன அடி
வெளியேற்றம் : 965 கன அடி
ஆறு : 950 கன அடி
வாய்க்கால் : 0 கன அடி

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...