Saturday, 7 July 2018

இந்தியாவின் முதல் மிதக்கும் சந்தை திறக்கப்பட்டது

கொல்கத்தா பெருநகர மேம்பாட்டு ஆணையம் கட்டமைத்துள்ள இந்தச் சந்தையில் படகுகள் மூலமாகப் பட்டூலியில் உள்ள ஏரியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குக் கடைக்காரர்கள் பழம், காய்கறிகள், மீன் போன்றவை கிடைக்கும்.



முதலீடு படகுகள் மூலமாகக் கடைக்காரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களது கடைகளைத் திறக்க மற்றும் பிற கட்டுமான வசதிகளை ஏற்பாடு செய்ய 10 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளனர்.
அளவு இந்தியாவின் முதல் மிதக்கும் சந்தை 500 மீட்டர் நீலமும், 60 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
சோதனை பட்டூலியின் விஐபி சந்தைக்குத் தொடர்ந்து வரும் வாடிக்கையாளர்கள் மிதக்கும் சந்தையில் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்துள்ளனர் என்று கூறுகின்றனர். ஆனால் முன்பு சந்தையில் தங்களுக்குத் தேவையான காய்கறிகளைக் கைகளால் தொட்டுப்பார்த்து வாங்கியதாகவும் ஆனால் தற்போது அப்படிச் செய்ய வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளனர்.

தாய்லாந்தின் மிதக்கும் திரையரங்கம்

தாய்லாந்தின் குடுனோய் தீவில் இந்த மிதக்கும் திரையரங்கத்தை ஜெர்மனைச் சேர்ந்த ஓலே ஸ்கீரீன் என்ற பொழுதுபோக்கு நிறுவனம் அமைத்து உள்ளது.
இங்கு வெளியிடப்படும் படங்களை காண வருகிறார்களோ இல்லையோ? தீவில் பாறைகளுக்கு மத்தியில், நீரால் சூழப்பட்ட இடத்தில் மிதக்கும் இந்த திரையரங்கை கண்டுகளிக்கும் ஆர்வத்தில்க் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த தீவிற்கு அருகில் வசிக்கும் மீனவர்களிடம் இருந்து படகுகள், ரப்பர் டயர்கள் மற்றும் கொசுவலைகளை வாங்கி பயன்படுத்தி இந்த திரையரங்கம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதிக மக்கள் இங்கு படம் பார்க்க ஆர்வப்படுவதால் தாய்லாந்தில் வெளியாகும் படங்கள் இங்கு சுடச்சுட  ரிலீஸ் செய்யப்படுகின்றன.



இந்த திரையரங்கில் உள்ள ஒரே குறை வசனங்களை கேட்டு நாம் விசிலடித்து உற்சாகம் கொள்ள முடியாது. காரணம், திறந்த வெளியில், அதுவும் நீருக்கு மேலே திரை அமைந்து உள்ளதால் வசனங்களை துல்லியமாக கேட்க முடியாது. 

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...