Friday, 25 May 2018

அரசமர இலையின் பயன்கள்

மரங்களுக்கு எல்லாம் அரசனாக இருக்கும் அரச மரம், அது கொடுக்கும் காற்று, இலை, அதன் குச்சிகளால் செய்யப்படும் யாகம், ஹோமம் கூட பல பலன்களை கொடுக்கிறது.


  1. அரசமரத்தின் இலைக் கொழுந்தை அரைத்து மோருடன் கலந்து குடித்தால் வயிற்றுக்கடுப்பு குணமாகும்.
  2. அரச இலைச் கொழுந்தைப் பசும் பாலில் இட்டுக் காய்ச்சி சர்க்கரை சேர்த்துக் குடிக்க ஜூரம் குணமாகும்.
  3. அரச இலை, மாவிலை, நாவல் இலை, அத்தி இலை இவற்றைச் சம பங்கு எடுத்து நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்துவர பெண்களுக்க மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்.
  4. அரச மரத்தின் பழுப்பு இலைகளை எரித்துத் தூளாக்கி,தேங்காய் எண்ணெயில் கலந்து தடவ வலி, தீப்புண்,அதனால் ஏற்பட்ட தழும்புகள் குணமாகும்.

வலி நிவாரணியை விட விரைவாக வலியை போக்கும்‘பீர்’: ஆய்வில் தகவல்!

குறிப்பிட்ட அளவு பீர் எடுத்துக்கொண்டவர்களுக்கு இதில் நல்ல பலன் கிடைத்துள்ளது. ஆனால் அதிகளவில் எடுத்துக்கொள்வது உகந்ததல்ல என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.



வலி நிவாரண மாத்திரைகளை விட விரைவாக வலியை போக்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

கடந்த ஆண்டில் தனியார் நிறுவனம் மருத்துவர்களின் துணையுடன் ஆய்வு ஒன்றை நடத்தியது. வலி நிவாரண மாத்திரை ஒப்பிடும் போது பீர் வலியை எப்படி போக்குகிறது என மருத்துவர்கள் ஆய்வு நடத்தியது. 

இதில் மது அருந்துபவர்கள் மற்றும் மது அருந்தாத 404 பேர் பங்கேற்றனர். இவர்கள்க்கு 13 விதமான வலியை போக்கும் சோதனைகள் நடத்தப்பட்டது. அதில் வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொண்டவர்களை விட, பீர் அருந்தியவர்களுக்கு வலி விரைவாக குணமடைந்ததாக தெரியவந்துள்ளது.


வலி நிவாரண மாத்திரைகளை விட விரைவாக வலியை போக்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

கடந்த ஆண்டில் தனியார் நிறுவனம் மருத்துவர்களின் துணையுடன் ஆய்வு ஒன்றை நடத்தியது. வலி நிவாரண மாத்திரை ஒப்பிடும் போது பீர் வலியை எப்படி போக்குகிறது என மருத்துவர்கள் ஆய்வு நடத்தியது. 

இதில் மது அருந்துபவர்கள் மற்றும் மது அருந்தாத 404 பேர் பங்கேற்றனர். இவர்கள்க்கு 13 விதமான வலியை போக்கும் சோதனைகள் நடத்தப்பட்டது. அதில் வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொண்டவர்களை விட, பீர் அருந்தியவர்களுக்கு வலி விரைவாக குணமடைந்ததாக தெரியவந்துள்ளது.

மனிதர்களை மரணிக்கமால் வாழவைக்க முடியுமாம் : புதிய தகவல்!


மனிதர்களை மரணிக்கமால் வாழவைக்க முடியும் : புதிய தகவல்! இறக்காமல் தொடர்ந்து வாழ பலருக்கு பிடித்திருக்கும், பிறந்தவர்கள் அனைவரும் ஒருநாள் இறந்தே ஆகவேண்டும் என்ற நியதியில் இருந்து இதுவரை யாராலும் தப்ப முடியவில்லலை. ஆனால் முடியும் என்று சொல்கிறார் 31 வயதாகும் இட்ஸ்கொஃப் என்ற இளைஞன்.

இதற்காக அவதார் ஸ்டைலில் ஓர் திட்டத்தை தீட்டியிருக்கிறார். என்னவென்றால், செயற்கையாக தயாரிக்கப்பட்ட உடலினுள் குறித்த மனிதனின் எண்ணங்களை மாற்றிவிடுவதுதான். இதற்கான ஆராட்சியில் சுமார் 100 விஞ்ஞானிகளை ஈடுபடுத்தப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ் ஆராட்சிக்காக அமெரிக்க ராணுவத்தின் Defense Advance Research Projects Agency உடன் சேர்ந்து பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். தனது கணிப்பின்படி இத்திட்டத்துக்கு 10 ஆண்டுகள் போதுமெனவும் தெரிவிக்கிறார். இது நடைமுறைக்கு சாத்தியப்படுமா, இல்லை கதைக்கு மட்டும் தானா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

புதிய தகவல்கள் – தெரிந்துகொள்வோம்

*ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.

* உலகப் புகழ் பெற்ற ‘மோனோலிசா’ ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

* வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.

* எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.

* உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 உள்ளன.

* தேசியக் கொடியை முதன் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க். 1291ல் உருவாக்கப்பட்டது.

* அமெரிக்காவைவிட சகாரா பாலைவனம் பெரிது.

* எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் உயிர் வாழும்.

* ஒரு பென்சிலைக் கொண்டு, 58 கி.மீ. நீளமான கோடு போடலாம்.

* பாம்புகளுக்கு கேட்கும் சக்தி இடையாது.

* நண்டிற்கு தலை கிடையாது. அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.

* வெள்ளை என்பது ஒரு நிறம் கிடையாது. அது 7 வண்ணங்களின் கலவை ஆகும்.

* முற்றிப் பழுத்துக் காய்ந்த தேங்காய், மரத்தில்ருந்து பகலில் விழாது. இரவில்தான் விழும்.

* நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும். நாய்க்கு நாக்கில் மட்டும்தான் வியர்க்கும்.

* சிலந்திப் பூச்சிக்கு 8 கண்கள் உண்டு.

* இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது.

*ஆஃப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

*இந்தியாவில் தமிழில்தான் பைபிள் முதன் முதலில் மொழி பெயர்க்கப்பட்டது

வலி நிவாரணி மாத்திரைகளுக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு? ஆய்வில் புதிய தகவல்

அம்மாத்திரைகளை எடுத்துக் கொண்ட முதல் 30 நாட்களில் இதற்கான ஆபத்து அதிகமாக இருக்கும் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த கண்டுப்பிடிப்புகள் தெளிவானதாக இல்லை என்றும் மாத்திரைகளை தவிர பிற காரணங்களும் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச விஞ்ஞானிகள், நான்கு லட்சத்து நாற்பத்தி ஆறாயிரத்து எழனூற்று அறுபத்தி மூன்று பேரிடமிருந்து தகவல்களை சேகரித்து மாரடைப்பு எதனால் வருகிறது என ஆராய்ந்தனர்.
இந்த ஆய்வில் வீக்கத்திற்கு எதிரான ஸ்டீராய்ட் கலப்பில்தா மருந்துகளை பயன்படுத்தியவர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டது.

விழிப்புணர்வின் அவசியம்
இந்த தகவல்களை ஆராய்ந்த கனடா, ஃபினலாந்து மற்றும் பிரிட்டனைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், இம்மாதிரியான ஸ்டீராய்ட் இல்லாத வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வதால் மாரடைப்பிற்கான ஆபத்துக்கள் அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக, அதை உபயோகிக்கும் முதல் வாரத்திலே கூட அதிக ஆபத்துக்கள் வரக்கூடும் என்றும் குறிப்பாக அதிக டோஸ் மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு முதல் மாதத்திலேயே ஆபத்துக்கள் வர வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மாத்திரைகளுக்கும் மாரடைப்பிற்கும் உள்ள தொடர்பை புரிந்து கொள்ள பல விஷயங்கள் தடையாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
வலி நிவாரணிகள்தான் காரணமா?
லண்டன் திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர், இந்த ஆய்வு, ஸ்டீராய்ட் அற்ற வலி நிவாரணிகளுக்கும் மாரடைப்பிற்கும் உள்ள தொடர்பை சிறிது எடுத்துக் காட்டுவதாக தெரிவித்தார்.
அதிகபட்சமான நோயாளிகள் மீது இந்த ஆய்வை நடத்திய போதும், இதனை பற்றிய சில அம்சங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை என தெரிவிக்கிறார் அவர்.
மாரடைப்பு வராமல் இருப்பதற்கு வலி நிவாரணிகள் காரணமாக இல்லாமலும் இருக்கலாம் எனவும் அவர் தெரிவிக்கிறார்.
"எடுத்துக்காட்டாக, அதிக வலியுடைய ஒருவருக்கு அதிக டோஸ் மாத்திரை பரிந்துரைக்கப்பட்டு அவருக்கு மாரடைப்பு வந்தால், அதற்கு காரணம் வலி நிவாரணியா அல்லது வேறு காரணமா என்று கண்டுப்பிடிப்பது "சற்று கடினம்" என அவர் தெரிவித்தார்.
"அதற்கான காரணம் முழுவதுமாக வேறாக கூட இருக்கலாம்".
"மேலும் இருதய ஆரோக்கியத்துடன் தொடர்புடைய பிற நோய்களான புகைப்பிடித்தல் மற்றும் அதிக உடல் எடை ஆகியவையும் காரணமாகவும் இருக்கலாம்" என்றும் அவர் தெரிவிக்கிறார்.
நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்?
ஸ்டீராய்ட் அற்ற வீக்கத்திற்கு எதிரான மருந்துகளால் இதய பிரச்சனைகளும் வலிப்பும் ஏற்படும் ஆபத்து அதிகமாக இருப்பது குறித்து மருத்துவர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனின் மருத்துவ வழிகாட்டுதலின்படி, இருதய நோயுள்ளவர்கள் ஸ்டீராய்ட் அற்ற வலி நிவாரணிகளை மிகவும் கவனத்துடன் உபயோகிக்க வேண்டும்; தீவிரமான இருதய கோளாறு உள்ளவர்கள் அம்மாத்திரைகளை பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது.
நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் இம்மாதியான அதிக டோஸ் கொண்ட வலிநிவாரணிகளை பயன்படுத்துவதற்கு முன்னதாக அவற்றில் உள்ள ஆபத்துக்களையும் அதன் பயன்களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதுவும் குறிப்பாக மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்துக்கள் அதிகம் என்பதை உணர வேண்டும் என பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷனைச் சார்ந்த மருத்துவர் ஒருவர் தெரிவிக்கிறார்.
மேலும் இம்மாதிரியான மாத்திரைகளை பரிந்துரைக்கும் முன், நோயாளிகளின் தனிப்பட்ட மருத்துவ நிலையையும், அவர்கள் முன்னதாக பயன்படுத்தி வந்த மருந்துகள் குறித்தும், கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கிப்படுகிறது.
மாற்றுப் பயன்பாடு என்ன?
இந்த ஆய்வில், மருந்து கடைகளில் தானாக மாத்திரைகளை பெறுபவர்கள், தானாக மருந்துகளை வாங்கி உட்கொள்பவர்களை தவிர்த்து, வலி நிவாரணிகள் பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகள் கவனிக்கப்பட்டனர்.
ஆகையால் வலிகளை குறைப்பதற்கு மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் ஸ்டீராய்ட் அற்ற வீக்கத்திற்கு எதிரான வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்பவர்கள் மத்தியில் இந்த ஆய்வு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே, வீரியம் குறைந்த, ஸ்டீராய்ட் கலப்பற்ற வலி நிவாரணிகளை குறைந்த காலத்திற்கு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இம்மாத்திரைகள் அதிகப்படியாக எடுத்துக் கொண்டால் உடனடியாக மருத்துவர்களை நாட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.
இதன் ஆபத்து எத்தகையது?
எம்மாதிரியான ஆபத்து வரும் என்றும் அல்லது மாரடைப்பு வருவதற்கான அடிப்படை காரணம் எந்தளவு என்பதும் இந்த ஆய்வில் தெளிவாக குறிப்பிடவில்லை.
வலி நிவாரணிகளை சிறிது காலம் பயன்படுத்திய போதும் அதிக ஆபத்திற்கு உள்ளாக கூடும் என்று தெரிவிக்கப்பட்டாலும், அதைப் பற்றிய தெளிவான தகவல் இந்த ஆய்வில் இல்லை என லண்டன் ஹஜுன் மற்றும் டிராபிக்கல் மருத்துவத்திற்கான கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் தெரிவிக்கிறார்.

கீழாநெல்லி பற்றி நீங்கள் அறியாத மருத்துவ ரகசியங்கள்!

       கீழாநெல்லி என்றாலே மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும் மூலிகை என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால், மஞ்சள் காமாலையுடன் நின்று விடவில்லை இதன் சேவை. கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்பட்டு வரும் கீழாநெல்லியை இன்னமும் ஆய்வு செய்துகொண்டே இருக்கிறார்கள் விஞ்ஞானிகள். பைல் நிரூலின், நார் செக்குரினின், நிர் பைலின், தேலிக் அமிலம், எல்லாஜிக் அமிலம், ஹேலிக் அமிலம் போன்ற 50-க்கும் மேற்பட்ட மூலக்கூறுகள் இதில் இருப்பதைப் பார்த்து ஆச்சர்யத்தில் வாயடைத்துக் கிடக்கிறார்கள். சாதாரண களைச்செடியாக குப்பையில் வளரும் ஒரு சின்னஞ்சிறிய செடிக்குள், இத்தனை மருத்துவ குணங்களா எனக் கொண்டாடுகிறது உலகம். ஆனால், ‘உள்ளூர் மாடு விலை போகாது’ என்பதுபோல அருகிலிருக்கும் அற்புதத்தை நாம் அவ்வளவாகக் கண்டுகொள்வதே இல்லை.

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் வளரும் இதன் இலைகளின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால், கீழ்க்காய்நெல்லி என அழைக்கப்பட்டது. பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்கா நெல்லி என அழைக்கப்படும் கீழாநெல்லியின் மருத்துவக் குணங்களைக் கேட்டால் மலைத்துப் போவீர்கள்.
கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சளைச் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு, குளித்தால்… தோல் நோய்கள் குணமாகும். கீழாநெல்லிச் செடியை நன்றாக அரைத்து சொறி, சிரங்கு, படைகளில் பற்றுப்போட்டால் உடனே குணமாகும். கீழாநெல்லிச் செடியை நன்றாக மென்று பல்துலக்கி வந்தால் பல்வலி குணமாகும். மேலும் செடியை நன்றாக மென்று ஈறுகளில் சாறு நன்றாகப் படிய வைத்திருந்தால்… ஈறு நோய்கள் குணமாகும்.
கீழாநெல்லி செடியுடன் கரிசலாங்கண்ணி இலையை சமஅளவு எடுத்து பால்விட்டு அரைத்து, நெல்லிக்காய் அளவு பாலுடன் காலை, மாலை இருவேளை உட்கொண்டு வந்தால், ரத்தசோகை, ரத்தக்குறைவு நோய் நீங்கும்.
கல்லீரல் தொடர்பான நோய்களும் குணமாகும். கல்லீரல் பிரச்னைக்கு லட்சங்களில் பணத்தைச் செலவழித்து பெறும் வைத்தியத்தை, இலவசமாகவேத் தருகிறது கீழாநெல்லி. இன்றைக்கு மனிதர்களுக்குள்ள மற்றொரு பெரிய நோயான நீரிழிவு நோய்க்கும் தீர்வைச் சொல்கிறது இந்த சிறியச் செடி. இதை அரைத்து, பாலுடன் கலந்து தொடர்ந்து உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.
இதுமட்டுமா குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுப் பிரச்னைகள், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்ப் பிரச்னைகள், பசியின்மை, தீராத அழுகிய புண்கள், வீக்கம் என எத்தனையோ பிரச்னைகளைத் தீர்த்து வைக்கிறது கீழாநெல்லி.
கீழாநெல்லி பொடி, நெல்லிக்காய் பொடி, கரிசலாங்கண்ணி பொடி ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து. தேனில் குழைத்து உண்டு வந்தால்… அடிக்கடி வரும் சளித்தொல்லை குறையும், ரத்த சோகை மாறும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கீழாநெல்லி புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படுவதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மஞ்சள் காமாலை நோய்க்கு கீழாநெல்லியைவிட கைகண்ட மருந்து இல்லை என்றே சொல்லலாம். இதை ஆங்கில மருத்துவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.
நவீன மருத்துவ வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே கண்களில் உள்ள வெண்கரு, மஞ்சளாக மாறுவதை வைத்து மஞ்சள் காமாலையைக் கண்டுபிடித்த முன்னோர்கள், கீழாநெல்லியையும் ஆட்டுப்பாலையும் மட்டுமே கொண்டு, அந்தக் காலத்தில் உயிர்க்கொல்லி நோயான மஞ்சள் காமாலையில் இருந்து காத்துக்கொண்டார்கள்.
மனிதகுலம் நோயின்றி வாழ்வதற்காகவே நம் காலடியில் கிடக்கும் கீழாநெல்லிக்கு இனியாவது மரியாதை செய்வோம். அனைத்து வீடுகளிலும் வளர்ப்போம்.
பித்தப்பைக் கல்லைத் தடுக்கும்!
கீழாநெல்லியின் மருத்துவக் குணங்கள் பற்றிப் பேசும் தேனி மாவட்டம் உத்தமப்பாளையம், சித்தமருத்துவர் அமுதா, ”இதன் தாவரவியல் பெயர் ‘ஃபிலாந்தஸ் அம்ரஸ்’ அல்லது ‘நிரூரி’ (Phyllanthus amrus or Niruri). கீழா நெல்லியைப் பொறுத்தவரை மஞ்சள் காமாலைக்கான மருந்துனுதான் பொதுவா நினைக்கிறாங்க. ஆனா, இது அருமையான கிருமிநாசினி. இந்த இலைகளைக் காய வெச்சு தயாரிச்ச கஷாயத்தை புண்களை கழுவப் பயன்படுத்தலாம். இது துவர்ப்பு சுவைகொண்ட மூலிகைங்கிறதால, பித்தப்பையில கல் உற்பத்தி ஆகிறதைத் தடுக்கும். கல்லீரல் தொடர்பான பிரச்னைகளுக்கும் கீழாநெல்லி நல்ல மருந்து” என்கிறார்.

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...