Monday, 11 June 2018

மேட்டூர் அணைப்பற்றி எவ்வளவு பேருக்கு தெரியும்னு சரியாக தெரியலைங்க..!

மேட்டூர் அணை காமராஜரால் கட்டப்பட்டது என்றும் விவாதம் செய்கிற நட்புகளும் இருக்காங்க.


அவர்களுக்கும் , மேட்டூரை ப்போல பிறிதொரு அணை கட்டவில்லை என்று புலம்பும் நட்புகளுக்கும்..

மேட்டூரை பற்றி விளக்கம் இது.
பதிவிற்குள் போவதற்கு முன் ஒரே ஒரு விளக்கம்…

ஒரு பவுன் நகையின் இன்றைய விலை சுமார் 26000 ₹.ஒரு ஏக்கர் நிலம் குறைந்தது பத்து இருபது லட்சம் முதல் கோடிகள் வரை..

இன்றைய ஜனத்தொகை தமிழகத்தில் ஏறத்தாழ ஏழரை கோடி
இந்தியாவில் நூற்றி இருபது கோடி..

என  இன்றைய நிலவரங்களை கருத்தில் கொண்டு மேட்டூருக்குள் செல்வோம் வாருங்கள்….

.மேட்டூரில் முதல்முதலாக அணை கட்ட திட்டமிடப்பட்டது கி.பி 1834.
அந்த முதல் திட்டத்தில் பல விபரங்கள் முழுமையாக இல்லாததால் இருபது ஆண்டுகள் கழித்து 1856 ல் இரண்டாவது திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த திட்டம் இப்போதுள்ள அணைக்கு கீழே 11 மைல் தொலைவில் நெரிஞ்சிப்பேட்டை என்ற இடத்தில் கட்ட திட்டமிடப்பட்டது.
அதுவும் நிறைவேறவில்லை. பின் 1869 ஆண்டிலும் , 1892 ம் ஆண்டிலும் மேலும் விபரங்களுடன் திட்டம் மெருகேறி இறுதியாக 1901 ல் முழுமையான திட்ட அறிக்கை தயாரானது. இந்த திட்டத்திற்கு சென்னை ராஜ்தானி அரசு..

அரசாணை என் 971 / 1 நாள் 02 / 09 / 1904 ல் அனுமதி வழங்கியது. இதற்கான திட்ட செலவாக 292.75 லட்சம் என நிதி செலவு ஒப்புக்கொள்ளப்பட்டது. அன்றைய நாள்களில் ஒரு பவுன் விலை ரூ 18 முதல் 20 என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பின் மழைக்காலத்தில் மேலும் வரும் நீரையும் அணைக்கு பாதிப்பில்லாத வகையில் வெளியேற்ற கட்டளை கால்வாய் திட்டங்களும் இணைக்கப்பட்டு 1910 ல் திட்ட செலவு 385. 24 லட்சம் என இறுதியாகி சேலம் மாவட்டம் கீதாமலை — பாலமலை இடையே அணைகட்ட இறுதி ஆணை வெளியிடப்பட்டது.

அதன்பின் நில ஆர்ஜிதங்கள் துவங்கியது.

நில ஆர்ஜித விபரங்கள்…
1) அரசின் நேரடி நிலம் 95983 ஏக்கர் // ஒரு ஏக்கர் விலை 8.00 ரூ. ஆம் வெறும் எட்டு ரூபாய் என நிர்ணயம் செய்து நிதி ஒதுக்கப்பட்டது.
2) ஜமீன்தாரி / இனாம் வாரி நிலங்கள் 98423 ஏக்கர். விலை 8/ ஏக்கர்.
3) தனியார் விவசாய நிலங்கள் 62,632 ஏக்கர்கள் . விலை 5/ ஏக்கர்.
4) அரசு சுவாதனத்திலிருந்த பல்வகை நிலங்கள் 16,230 ஏக்கர்.
5) விவசாயமற்ற தனியார் நிலங்கள் 1,768 ஏக்கர்.


           அடுத்து நீர்வடியும் பகுதியாக சேலம் மாவட்ட எல்லையில் 7,409 ஏக்கர் நிலங்களும்
கோவை மாவட்ட எல்லையில் 11,462 ஏக்கர் நிலங்கள் என அரசாணை எண் 196/ 1 நாள் 02 /05/ 1925 ல் ஆர்ஜிதம் செய்யப்பட்டது.
            இது தவிர 14,146 வீடுகள் ஆர்ஜிதம் செய்யப்பட்டு அந்த கிராம மக்கள் புலம் பெயர வைக்கப்பட்டார்கள். அணையில் நீர் தேங்கும் பகுதி மட்டும் 59.47 சதுர மைல்கள் ஆகும். பின் இறுதியாக 20 / 07 / 1925 ல் மேட்டூர் அணை கட்டும்பணி முறைப்படி துவங்கப்பட்டது. பின் நாம் கனவிலும் நினைக்க இயலாத உழைப்பால் ஒன்பது ஆண்டுகள் பணி நடந்தது. இதற்காக இரண்டு கற்பாறை மலைகள் முழுவதுமாக உடைக்கப்பட்டு தேவையான கற்கள் பெறப்பட்டது. இதற்காக தனி ரயில்வே பாதை, சாலைகள் , எல்லாம் உருவாக்கப்பட்டது. பின் கடினமான ஒன்பது ஆண்டுகால உழைப்பாலும். அப்போதய சென்னை மாகாண கவர்னர் திரு. ஜார்ஜ் ஸ்டான்லி அவர்களின் ஒத்துழைப்பாலும் வெற்றிகரமாக கட்டப்பட்டு 21 / 08 / 1934 ல் சென்னை மாகான கவர்னர் ஜார்ஜ் ஸ்டான்லி அவர்களால் திறக்கப்பட்டது. அந்த கவர்னரின் பெயரால் அந்த நீர்தேக்கம் ஸ்டான்லி நீர்தேக்கம் என்று பெயரிடப்பட்டது. சென்னை மருத்துவமனைக்கும் ஸ்டான்லி ஹாஸ்பிட்டல் என பிற்காலத்தில் பெயரிடப்பட்டது.
          இது இந்த பதிவு ஒரு பெரிய அணை கட்ட ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் மக்களை புலம்பெயர வைக்கும் பணிகள் உள்பட உள்ள எதார்த்த சிக்கல்களை விளக்கவே என்பதால் இதர பல்வேறு விபரங்கள் இணைக்கப்படவில்லை. தற்போதய நாட்களில் இது போல அணை கட்ட இடமும் இல்லை என்பதைவிட ஆட்சியாளர்கள் இல்லை என்பதே உண்மை, நிர்வாக சாத்தியமும் இல்லை என்பதை இதன் மூலம் உணரலாம்….

தமிழக கல்வித்துறையில் அமைச்சர் செங்கோட்டையனின் இன்றைய அதிரடி உத்தரவு என்ன தெரியுமா?!

11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கான தேர்வுகள், முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டு தேர்வுகளாக நடைபெற்று வருகின்றன. இனிமேல் இரண்டு தாள்களாக இல்லாமல் ஒரே தேர்வாக நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு தாள் தேர்விற்கும் 100 மதிப்பெண் வீதம் 200 மதிப்பெண்களுக்கு நடைபெற்று வந்தது. இனிமேல் ஒரே தாளாக 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பழைய முறை மாற்றப்பட்டு தமிழ் பாடத்திற்கும் ஆங்கிலப் பாடத்திற்கும் தமிழ், ஆங்கிலம் என ஒரே தேர்வாக நடத்தப்படும்.

அண்மையில், சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.


``தண்ணீர் ₹10... பிளாஸ்டிக் பாட்டிலைத் திருப்பித் தந்தால் ₹5!"- அசத்தும் இந்தியன் ரயில்வே


இன்றைய காலகட்டத்தில் உலக நாடுகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது சுற்றுச்சூழல் மாசுபாடுதான். அதில் மிகத் தீவிரமான, மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காகப் பல வழிகளில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவிலும் பிளாஸ்டிக்கை ஒழிப்பது பற்றி தீவிரமான ஆலோசனைகளும், புதுப்புது திட்டங்களும் முன் வைக்கப்பட்டு வருகின்றன. அதில் கடந்த ஆண்டு கேரளாவில் மேற்கொள்ளப்பட்ட 'சூசித்வா சாகாரம்' என்ற பிரசாரம் பிளாஸ்டிக்குகளை அகற்ற முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் பிளாஸ்டிக்குகளையும் சேர்த்து எடுத்து வர வேண்டும் என்பதுதான் அத்திட்டத்தின் நோக்கம்.

அமராவதி அணையின் இன்றைய நிலவரம்





அமராவதி அணை  :::  11.06.2018  08.12 AM நிலவரப்படி 

அணையின் இருப்பு
 [ அடி ]
59.06 Cusecs
அதிகரித்துள்ளது
அணைக்கு நீர் வரத்து
 [ கன அடி ]
2847 Cusecs
அதிகரித்துள்ளது
அணையின் வெளியேற்றம்
 [ கன அடி ]
13 Cusecs
அதிகரித்துள்ளது




அமராவதி அணை  :::  10.06.2018  09.05 AM நிலவரப்படி 

அணையின் இருப்பு
 [ அடி ]
53.64 Cusecsஅதிகரித்துள்ளது
அணைக்கு நீர் வரத்து
 [ கன அடி ]
2655 Cusecsஅதிகரித்துள்ளது
அணையின் வெளியேற்றம்
 [ கன அடி ]
12 Cusecsஅதிகரித்துள்ளது



அமராவதி அணை  :::  09.06.2018 9.19 AM நிலவரப்படி

அணையின் இருப்பு [ அடி ]47.97 Cusecsஅதிகரித்துள்ளது
அணைக்கு நீர் வரத்து [ கன அடி ]250 Cusecsஅதிகரித்துள்ளது
அணையின் வெளியேற்றம் [ கன அடி ]11 Cusecsமாற்றமில்லை


அமராவதி அணை  :::  08.06.2018 8.17 AM

  
அணையின் இருப்பு [ அடி ]47.41 Cusecsஅதிகரித்துள்ளது
நீர் வரத்து [கனஅடி]95 Cusecsகுறைந்துள்ளது
வெளியேற்றம் [கன அடி ]11 Cusecsமாற்றமில்லை


2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் தெரியுமா ? ஆர்.எஸ்.எஸ். சின் ரகசிய திட்டத்தை அம்பலப்படுத்திய சிவசேனா !!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமராக்க ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளதாக சிவசேனா தெரிவித்துள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் கடந்த 7-ந் தேதி நிறைவடைந்தது. இதில் கலந்துகொள்ளுமாறு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜிக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

பாஜகவின் தாய் அமைப்பாக கருதப்படும் ஆர்.எஸ்.எஸ். ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு காங்கிரஸ் கட்சியின் உயர் மட்ட தலைவர்கள் மத்தியில் இருந்தும், பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்தும் பிரணாப் முகர்ஜிக்கு எதிர்ப்பு கிளம்பியது.

ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.இந்த சர்ச்சை ஓய்வதற்குள் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் பரபரப்பு தகவல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய அரசியல் நிலவரத்தை பார்க்கும்போது, 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைப்பது சாத்தியம் இல்லை. அவ்வாறு நடந்தால் மற்ற கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கள் ஆதரவை கொடுக்கமாட்டார்கள். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் பிரணாப் முகர்ஜியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு உள்ளது. அவர் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவராக இருப்பார் என்று சஞ்வய் ராவுத் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரணாப் முகர்ஜி, தற்போது நம் நாட்டில் நிலவும் முக்கியமான பிரச்சினைகள் குறித்து எதுவும் வாய்திறக்கவில்லை. விலைவாசி உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளில் அரசு செயலற்று கிடக்கிறது. குறிப்பாக நீதித்துறையில் கூட அமைதியின்மை நிலவுகிறது.

இது குறித்து அவர் தனது உரையில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அந்த பிரச்சினைகளை அவர் நிச்சயம் பேசுவார் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்தோம் என சஞ்சய் பேசினார்.


பானி பூரி சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புக்கள்.…

பானி பூரி சாப்பிடுவதால் ஏற்படும் அபாயகரமான பாதிப்புக்கள்ஓர் அதிரவைக்கும் அறிக்கை!
வீடுகளிலேயே இனிப்பு, காரம் செய்து சாப்பிட்ட காலமெல்லாம் மலை யேறிப்போக,
தெருவுக்குத்தெரு பானிபூரி, சில்லிசிக்கன் கடைகள் முளைத்து விற்பனையில் அசுர வளர்ச்சி கண்டிருக்கின்றன. வட மாநிலத்து உணவான பானிபூரியை நம் மக்கள் ஆரத் தழுவிக் கொண்ட னர்.
சிறிய பூரிக்குள் மசாலா வைத்து, புதினா, மிளகு கலந்த ரசத்தில் மூழ்க வைத்துக் கொடுப்பதை நாம் லபக்கென ருசிக்கிறோம். அந்த ருசிக்குப் பின்னே
பானிபூரி சுடுவதற்கான மாவை காலில் மிதிக்கிற புகை ப்படம் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரபரப் பாக பகிரப்பட்டது. அது மட்டுமல்லசாலையோர தள்ளு வண்டிக் கடைகளில் பானி பூரி விற்கப்படுகிறது. சில கடைகள் சாக்கடை க்கு அருகிலே யே இருக்கின்றன.
சுற்றுச்சூழலே சுகாதாரமற்று இருக்கிறது.
பூரியை பெருவிரலால் உடைத்து அதனுள் மசாலாவைத் திணித்து புதினா நீரில் முக்கி எடுக்கின்றனர். கை பெருவிரல் நகத்தில் படிந்திருக்கும் அழுக்கு பானிபூரியிலும் ஒட்டிக் கொள்ளும்.
இப்படியாக சுகாதாரக் குறைபாடுள்ள பானி பூரியை சாப்பிடும் நமக்கு என்ன ஆகும்?
கையால் உடைத்து, தண்ணீரில் முக்கிக் கொடுக்கிறவரது கை எந்தளவு சுத்தமாக இருக்கிறது என்பதைப்பார்க்கவேண்டும். Hookworms, Pinworms போன்ற புழுக்கள் கைகளில் இருந்து தான் பரவுகின்றன. அதைச் சாப்பிடும் போது வயிற்றில் இப்புழுக்கள் உற்பத்தியா வதற்கான வாய்ப்புகளதிகம். கைகளி ல் பாக்டீரியா தொற்று ஏதேனும் இருந்தால் வாந்தி, வயிற்று ப்போக்கு ஆகியவைஏற்படலாம். வைரஸ் மூல ம் பரவும் ஹெபடைடிஸ் ஏற்படுவ தற்கான அபாயமும் உள்ளது.
பூரி தயாரிப்பதற்குப் பயன்படுத்தும் எண்ணெய் எப்படிப்பட்டது என்பதும் அவசியம். எண்ணெயை ஒரு முறை தான் கொதிக்க வைத்து பயன்படுத்தவேண்டும். நடைமுறையிலோ எண் ணெயை மீண்டும் மீண்டும் கொதிக்க வைத்துப் பயன்படுத்துகிறார்கள். ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தும்போது அந்த கெட்டஎண்ணெய் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
புதினாரசம் தயாரிக்கப்பயன்படுத்தப்படும் தண்ணீ ர் சுகாதாரமற்றதாக இருந்தால் அது பற்பல விளை வுகளை ஏற்படுத்தும். எனவே தெருவோரக் கடைகளில் விற்கப்படுகிற, சுகாதாரத்துக்கு உத்தரவாதமில்லாத இத் தகைய உணவுகளைத் தவிர்ப்பது அவசியம் .
நொறுவை உண வுகளிலேயே அதிகம் கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பது பானி பூரியில்தான். சாலையோரக் கடைகளில் விற்கப்படும் பானி பூரிகளை சாப் பிடாமல், சுகாதாரமான முறையில் தயாரிப் பதை சாப்பிடலாம். குறிப்பாக இவற்றை குழ ந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் அவசியம் தவிர்க்க வேண்டும்.
மூன்று வேளை உணவு எடுத்துக் கொள்வதை 5 வேளையாக பிரித்து எடுத் துக் கொள்வது நல்லது. பொதுவாகவே எல்லோருக்கும் மாலை வேளையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடுவதால் தான், ஏதாவது சாப்பிடத்தோன்றுகிறது. மாலை வேளையில் கொஞ்சம் சாப்பிடுவதை அவசியம் பின் பற்ற வேண்டும். அப்போதுதான் இரவு வேளையில் தேவையான அளவு மட்டுமே உணவை எடுத்துக் கொள்வோம்.
குழந்தைகள், கர்ப்பிணிகள்,சர்க்கரை நோயாளிகள் புரதச்சத்துள்ள உணவுப் பொருட்களான தயிர்வடை, பச்சைப் பயறு அடை, உளுந்தங்களி, கொண்டைக்கடலை, முளைகட்டிய பயறுக ளை சாப்பிடலாம். எடை குறைக்க நினைப்பவர்கள் ஃப்ரூட் சாலட், முளைகட்டிய பயறு வகைகளை பச்சையாக சாப்பி டலாம். பானிபூரிசாப்பிடுவதால் நமக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை எனும்போது ருசிக்காக ஏன் நோயை விலை கொடுத்து வாங்கவேண்டும்? நாம்தான் மாற்றி க்கொள்ள வேண்டும்


அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...