Showing posts with label புதிய தகவல்கள். Show all posts
Showing posts with label புதிய தகவல்கள். Show all posts

Monday, 27 August 2018

A \ C கார் பயன்படுத்துவோருக்கு ஓர் எச்சரிக்கை

A \C  காரை பயன்படுத்தும்போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \C  ஐ இயக்கி  ஜன்னலை மூடக்கூடாது .காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A \C  ஐ இயக்கவேண்டும். இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் பல அதிர்ச்சி உண்மைகள் 



கண்டறியப்பட்டுள்ளன .பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள DASHBOARD  ,இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன .சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50  மில்லி கிராம் .

வீடுகளில் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400  முதல் 800  மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும். அதே வேளையில் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000  மில்லி கிராம் வரையில் இருக்கும் .இது மனித உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட 40  மடங்கு அதிகம் .

இதன் காரணமாக கேன்சர் ,லுக்கூமியா ,சிறு நீராக பாதிப்பு கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கார்களிலுள்ள ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைப்பதனால் அதிகப்படியான பென்சீன் வெளியேறிவிடும் .

இதன் மூலமா நான் சொல்லிக்கிறது என்னண்ணா A \C  காருல உக்காந்து போயி என்ஜாய் பண்ண விரும்புறவுங்க கொஞ்ச நேரம் ஜன்னல திறந்து காத்து வாங்கிட்டு  அப்புறமா A \C  ஐ  ஆண் பண்ணி என்ஜாய் பண்ணுங்க .

Saturday, 25 August 2018

கோயம்புத்தூரை சேர்ந்த ஆசிரியை ஸதிக்கு நல்லாசிரியர் விருது அறிவிப்பு

தமிழகம் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட 6 பேரில் கோயம்புத்தூரை சேர்ந்த ஆசிரியை ஸதிக்கு மட்டுமே மத்திய அரசு வழங்கும் நல்லாசிரியர் விருதுஅறிவிக்கப்பட்டுள்ளது. 

சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி கௌரவிக்கும் நல்லாசிரியர் விருது தமிழகத்தில் ஒருவருக்கும் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

அந்த வகையில், கோயம்புத்தூர் மலுமிச்சம்பட்டியை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஆசிரியை ஸதி தமிழகம் சார்பாக இந்தாண்டு நல்லாசிரியர் விருது பெறவுள்ளார். 

கடந்தாண்டு வரை தேசியளவில் 354 பேர் நல்லாசிரியர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு வந்தனர். தமிழகத்தை சேர்ந்த 22 ஆசியர்கள் கடந்தாண்டு வரை இந்த விருதை பெற்று வந்தனர்.


இந்த நடைமுறையை மாற்றிய மத்திய மனித வளத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிக் கல்வித் துறை, நடப்பாண்டு முதல் 45 பேருக்கு மட்டுமே நல்லாசிரியர் விருது வழங்கப்படும் என அறிவித்தது. 

நாடு முழுவதும் விருதுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலும் குறைந்தது. இந்நிலையில் தேசிய ஆசியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக ஆசிரியை ஸதி தெரிவித்துள்ளார்.

பட்டய கணக்காளர்கள் வேலை தேட புதிய இணையதளம்: செப்டம்பர் 1 முதல் செயல்படும் என அறிவிப்பு

இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கம் ( ICAI) வேலைவாய்ப்பு தளத்தினை தொடங்க உள்ளது. பட்டய கணக்காளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் தங்கள் உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப் பினை அதிகரிக்கும் விதமாக இந்த முயற்சியினை எடுத்துள்ளது.
இந்த வேலைவாய்ப்பு தளத் தினை செப்டம்பர் 1-ம்தேதி அறி முகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
CAjobs.com என்கிற இந்த தளத் தினை ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் துணைத் தலைவர் கெகி மிஸ்திரி தொடங்கி வைக்க உள்ளார்.
இது தொடர்பாக இந்திய பட்டய கணக்காளர் சங்கத்தின் தலைவர் தீரஜ் குமார் கந்தேல்வால் கூறுகை யில், பட்டய கணக்காளர்களுக்கும், அவர்களது தேவை இருக்கும் நிறுவனங்களுக்கும் இணைப்பு பாலமாக இந்த தளம் இருக்கும்.
ஆகஸ்ட் 31-ம் தேதி மும்பையில் நடைபெற உள்ள தலைமைச் செயல் அதிகாரிகள் மாநாட்டில் இந்த இணையதளம் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
ஆடிட்டர்களை தேர்ந்தெடுப்பது நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. அந்த குறையை இந்த தளம் பூர்த்தி செய்யும். இந்த தளத்தில் இந்திய பட்டய கணக்காளர்கள் பதிவு பெற்று, பல்வேறு துறைகளிலும் உள்ள 1.60 லட்சம் பேரின் தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
இந்த தளத்தின் மூலம் பெண் உறுப்பினர்களுக்கு பகுதி நேர வேலை வாய்ப்புகள் எளிதாகும் என்றார். ஆரம்பத்தில் இந்த தளம் இலவச சேவைகளை கொண்டிருக்கும் என்றும் குறிப் பிட்டார்.

From Hindu

டிவிஎஸ் ரேடியோன் அறிமுகம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் புதிதாக ரேடியோன் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் டிவிஎஸ் நிறுவனம் அதிக மக்கள் விரும்பும் மோட்டார் சைக்கிள் சந்தையில் இறங்கியுள்ளது. நேற்று நடை பெற்ற அறிமுக நிகழ்ச்சியில் நிறுவ னத்தின்  இணை நிர்வாக இயக்கு நர் சுதர்சன் வேணு பேசுகையில், வாடிக்கையாளர்களுக்கு மேம் பட்ட மோட்டார் சைக்கிள் அனு பவத்தை அளிக்க வேண்டும் என்கிற வகையில் புதிய பிரிவில் இறங்கியுள்ளோம். 110 சிசி பிரிவில் மேம்பட்ட வடிவமைப்பு, புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்ட இன்ஜின், அதிக கிரவுண்ட் கிளி யரன்ஸ் என வாடிக்கையாளர் களை ஈர்க்கும் அம்சங்களுடன் இருக்கும். நகர்ப்புற போக்கு வரத்து நெரிசல், மற்றும் கிராமப்புற சாலைகளைக் கருத்தில் கொண்டு வடிவமைத்துள்ளோம் என்றார்.

நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கேஎன் ராதாகிருஷ்ணன் பேசுகையில்,    மோட்டார் வாகன சந்தையில் 7 சதவீத சந்தையை டிவிஎஸ் வைத்துள்ளது என்றார். மேலும் பண்டிகைக் காலம் மற்றும் புத்தாண்டை இலக்கு வைத்து புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளோம். இந்த ஆண்டில் 2 லட்சம் ரேடியோன் மோட்டார் சைக்கிள்களை விற்க இலக்கு வைத்துள்ளோம். அடுத்த மாதத்திலிருந்து விற்பனை தொடங்கு வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்றார். இந்த மோட்டார் சைக்கிளின் டெல்லி விற்பனையக விலை ரூ.48,400 ஆகும்.
புதிய மோட்டார் சைக்கிள் உருவாக்கத்துக்கான ரூ.60 கோடி வரை நிறுவனம் முதலீடு செய்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
அகலமான மற்றும் வசதி யான சீட்கள், பிரேகிங் தொழில் நுட்பங்களில் புதுமை, அதிக சக்தி கொண்ட முகப்பு விளக்கு, எளிதான கிரவுண்ட் ரீச்சபிள் என இந்த பிரிவில் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ற வசதிகள் இதில் உள்ளன. 10 லிட்டர் பெட்ரோல் டேங்க் வசதி கொண்டது. 69.3 கிமீ மைலேஜ் அளிக்கும் என்று சுதர்சன் வேணு கூறினார்.
From Hindu

தகவலை முதலில் அனுப்பியவரைக் கண்டறிய முடியாது: இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது வாட்ஸ் அப்

வாட்ஸ் அப் வழியாக பல்வேறு நபர்களுக்கு அனுப்பப்படும் குறுந்தகவல்கள் முதலில் யாரால் அனுப்பப்பட்டது என்று கண்டறியும் வகையிலான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொண்ட இந்தியாவின் கோரிக்கையை வாட்ஸ் அப் நிறுவனம் நிராகரித்துள்ளது.

குறுந்தகவல்கள் எங்கிருந்து அனுப்பப்படுகின்றன எனக் கண்காணிப்பது வாட்ஸ் அப் நிறுவனத்தின் என்கிரிப்ஷன் நடை முறையை வலுவற்றதாக மாற்றி விடும் என்று குறிப்பிட்டுள்ள வாட்ஸ் அப், இத்தகைய தொழில்நுட்பங் கள் தனிநபர் தகவல்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது.
பல்வேறு வகையான உணர்வு பூர்வமான உரையாடல்களுக்கு வாட்ஸ் அப் தளம் பயன்படுவதாக தெரிவித்துள்ள அந்த நிறுவனம், தவறான தகவல்களை அறிந்து கொள்வது குறித்து மக்களுக்கு அறிவுறுத்தும் வகையிலான செயல்பாடுகளுக்கு நிறுவனம் முக்கியத்துவம் அளித்துவருவ தாகவும் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப் வழியாக பரவும் வதந்திகளால் நிகழும் குற்றங் களைத் தடுக்கும் வகையில், ஒரு குறிப்பிட்ட குறுந்தகவல் யாரால் முதலில் அனுப்பப்படுகிறது என்கிற தகவலை கண்டறியும் தொழில் நுட்பத்தை  அறிமுகப்படுத்த வேண்டும் என வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு இந்திய அரசு சமீபத்தில் கோரிக்கை வைத்தது.
இந்நிலையில் இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தை அறிமுகப் படுத்துவது தவறான பயன்பாடு களைத் தீவிரப்படுத்தும். மேலும் வாட்ஸ் அப் செயல்படும் முறைக்கு இது முற்றிலும் எதிரானது என வாட்ஸ் அப் செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிக அளவில் வதந்திகள் பரவுவதன் காரணமாக கடந்த சில மாதங்களாக வாட்ஸ் அப் நிறுவனம் சர்ச்சையில் சிக்கி வரு கிறது. வாட்ஸ் அப் வதந்திகள் காரணமாக நாட்டின் பல பகுதி களிலும் குற்ற செயல்கள் நிகழ்வ தாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வாரத் தொடக்கத்தில் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை, வாட்ஸ் அப் தலைமை செயல் அதிகாரி கிறிஸ் டேனியல்ஸ் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த ரவி சங்கர் பிரசாத், வாட்ஸ் அப் வழியாக புழக்கத்தில் விடப்படும் வதந்திகள் முதலில் யாரால் அனுப்பப்படுகிறது என்பதை கண் டறியும் தொழில்நுட்பத்தை உடைய உள்ளூர் அமைப்பு ஒன்றை ஏற் படுத்துமாறு வாட்ஸ் அப் நிறுவனத் தைக் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக குறை தீர்ப்பு அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு கேட்டுக்கொண்ட தாகவும் அவர் கூறினார். வதந்தி களைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் குற்றங் களுக்கு உடந்தையாக இருந்ததாக வாட்ஸ் அப் நிறுவனம் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். இந்த சந்திப்பு குறித்து எந்தக் கருத்தையும் டேனியல்ஸ் அப்போது தெரிவிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப் நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன் றாக இந்தியா உள்ளது. 150 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ் அப் செயலியை, இந்தியாவில் 20 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள்.
வதந்திகளைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு 2 நோட்டீஸ் களை இந்திய அரசாங்கம் அனுப்பியுள்ளது.
இந்தியாவுக் கான தலைவர் ஒருவரும், அணியும் அமைக்கப்பட்டுவருவதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. பார்வேர்ட் குறுந்தகவல்களைக் கண்டறியும் வசதியும், பார்வேர்டு குறுந்தகவல்களை குறிப்பிட்ட முறைகளுக்குமேல் பிறருக்கு அனுப்பமுடியாத கட்டுப்பாடு களும் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் முன்னதாக விளக்கம் அளித்திருந்தது.
இதுதொடர்பாக கடந்த மாதம் வாட்ஸ் அப் தலைமை செயல்பாட்டு அதிகாரி மேத்யூ ஐடீமா தலைமையிலான குழு இந்திய தகவல் தொடர்பு செயலர் மற்றும் அரசு அதிகாரிகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
From Hindu

Wednesday, 22 August 2018

வெற்றிலை என்பது போதை பொருளா…?

வெற்றிலை மூன்று ரகத்தில் பயிர் செய்யப்படுகிறது. 

கருப்பு நிறம் இல்லாத தளிர் நிறம் உள்ள வெற்றிலைக்கு வெள்ளை வெற்றிலை என்று பெயர்.இது மணமாக இருக்கும். கருப்பு நிறத்தில் உள்ள வெற்றிலைக்கு கருப்பு வெற்றிலை அல்லது கம்மாறு வெற்றிலை என்று பெயர். கற்பூர மணம் உள்ள வெற்றிலை தாமரை இலை போன்று பெரியதாகவும் நல்ல நிறத்தோடும் இருக்கும்.இதற்கு கற்பூர வெற்றிலை என்று பெயர்.
இந்த மூன்று விதமான வெற்றிலைகளும் சுவையில் விறுவிறுப்பு பொருந்திய கார்ப்புத்தன்மை உடையதாகும்.
கம்மாறு வெற்றிலைச் சாறை தினமும் காலை உணவிற்கு பிறகு அரை ‘அவுன்ஸ்’ வீதம் மூன்று நாள் குடித்து வந்தால் வாத, பித்த கபத்தால் ஏற்படும் ஏற்றத்தாழ்வை குறைக்கும். உடலில் நீர் ஏற்றம், தலையில் நீர் ஏற்றம், தலை பாரம் உணவு செரியாமை,மந்தம், குரல் கம்மல் வயிற்றுவலி, வயிற்று உப்புசம் ஆகியவை நீங்கும். இந்த வெற்றிலையை பாக்கும் சுண்ணாம்பும் சேர்த்து உபயோகிக்கும் போது தாம்பூலம் என்கிறோம்
இந்த தாம்பூலத்தை உபயோகிக்கும் முன் வெற்றிலையின் காம்பையும், நுனியையும் பின்புறத்தில் உள்ள நரம்பையும் நீக்கியே உண்ண வேண்டும்.
அது மட்டுமல்லாமல் வெற்றிலை போடும் போது முதலில் பாக்கை மெல்லக் கூடாது.ஏன் என்றால் பாக்கு துவர்ப்புத் தன்மை உடையது. இத்தன்மையால் உமிழ்நீர் சுரக்காது. எனவே ஒரு வெற்றிலையை மென்ற பிறகே பாக்கு வெற்றிலையை மெல்ல வேண்டும். இப்படி செய்வதால் துவர்த்தல், சொக்குதல், மூர்ச்சையாதல், பிசுபிசுத்தன்மை முதலியன ஏற்படாமல் இருக்கும்.
அப்படி இல்லாமல் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு,இவைகளை ஒன்றாக மெல்லும் போது அதில் நின்று ஊறிய முதல் நீர் நஞ்சாகவும், இரண்டாவது நீர் மிகு பைத்தியம் தருபவையாகவும், மூன்றாவது நீர் அமிர்தமாகவும், நான்காவது நீர் அதி இனிப்பாகவும்,ஐந்து மற்றும் ஆறாவது நீர்கள் பித்தத்தோடும், அக்கினி மந்தம், ஆகியவற்றை உண்டாக்கும் என்பதால் தான் வெற்றிலைப் பாக்கை உண்ணும் போது முதல் மற்றும் இரண்டாவது நீர்களை துப்பி விட வேண்டும்.
மூன்றாவது மற்றும் நான்காவது நீர்களை விழுங்கிவிட வேண்டும். ஐந்தவது நீர் சுரக்கும் முன்பு வெற்றிலையை துப்பி விட வேண்டும். இதுவே தாம்பூலம் உண்ணும் முறையாகும்.
காலையில் பாக்கு அதிகமாகவும், வெற்றிலை, சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் மலக்குற்றம் நீங்கி இரண்டு முதல் நான்கு முறை பேதியாகும். எனவே மந்தம் மலச்சிக்கல் உள்ளவர்கள் காலையில் பாக்கை அதிகமாகவும், வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும் சேர்த்து கொள்ள வேண்டும். மதியம் சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் வெற்றிலை பாக்கு குறைவாகவும் மென்றால் நல்ல பசி உண்டாகும்.
பசி இல்லாதவர்கள் மதிய உணவுக்கு பின்பு இவ்விதமாக உண்டால் ஆரோக்கியமான பசி உண்டாகும். மாலையில் வெற்றிலை அதிகமாகவும் பாக்கு, சுண்ணாம்பு, குறைவாகவும் மெல்வதால் வாயிலுள்ள ரணங்கள் குணமாகும்.
வயிற்று ரணத்தால் வாயில் வீசும் துர்வாடை நீங்கி நல்ல மணம் வீசும். இப்படி நோய்க்கேற்றவாறு வெற்றிலை, பாக்குகளை கூட்டிக்குறைக்கும் போது பல்வேறுபட்ட நோய்கள் நீங்கும்.வெற்றிலையை இளம் சூட்டில் வதக்கி சாறு எடுத்து அச்சாற்றை மூக்கில் இரண்டு துளி விட தலை நோய், தலைபாரம், தலையில் நீர்தேக்கம் ஆகியவை நீங்கும்.
இரண்டு வெற்றிலையுடன் 50 கிராம் ஊற வைத்த சிவப்பு அரிசியை சேர்த்து உண்டால் கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். சிறுவர்களுக்கு மலக்குற்றம் நீங்கும். அதோடு இருமல், மூச்சுதிணறல், கோழைக்கட்டு ஆகியவை நீங்குவதோடு இதை பெண்கள் உண்டால் ஆண்கள் மீது பற்றும் ஆண்கள் உண்டால் பெண்களின் மீது பற்றும் உண்டாகும்.
வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு என்பது போதை பொருள் அல்ல அதில் புகையிலை சேர்க்கும் போதே போதை பொருளாக உருவெடுக்கிறது..!

இந்தியாவில் அணுகுண்டு சோதனை


1948 – இந்திய அணுசக்தித்துறை தொடங்கப்பட்டது.
1955 – அணுசக்தி மையம் செயல்படத்தொடங்கியது.
1957 – விஞ்ஞானி பாபாவின் பெயரால் பாபா அணு ஆராய்ச்சி மையமானது.
1962 – நங்கலில் முதலாவது கனநீர் இயந்திரம் நிறுவப்பட்டது.
1963 – 40 மெகாவாட் திறன் கொண்ட சிரஸ் அணு உலை பழுதடைந்து சீர் செய்யப்பட்டது.
1967 – யுரேனியத்தை வெட்டி எடுக்கவும், பிரிக்கவும் யுரேனியம் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா உருவாக்கப்பட்டது.
1969 – தாராப்பூர் அணுசக்தித்திட்டம் யூனிட் 1 மற்றும் யூனிட் 2 வர்த்தக இயக்கத்தை தொடங்கின.
1971 – கல்பாக்கம் இந்திராகாந்தி அணுஆராய்ச்சி மயம் தொடங்கப்பட்டது.
1972 – பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் பூர்ணிமா ஆராய்ச்சி ரியாக்டர் தொடங்கப்பட்டது.
1973 – இராசத்தான் அணுசக்தி மையம் யூனிட் 1 வர்த்தக இயக்கத்தை தொடங்கியது.
1974 – தார் பலைவனத்தில் உள்ள போக்ரான் என்னுமிடத்தில் முதலாவது இந்திய அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
1998 – அடுத்தடுத்து 2 நாட்களில் 5 நிலத்தடி அணுகுண்டுகள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன.
Narendra Modi – 2014 till date
Manmohan Singh – 2004-14
Atal Bihari Vajpayee – 1998-2004
IK Gujral – 1997-98
HD Deve Gowda – 1996-97
AB Vajpayee – 1996
PV Narasimha Rao – 1991-96
Chandra Shekhar – 1990-91
VP Singh – 1989-90
Rajiv Gandhi – 1984-89
Indira Gandhi – 1980-84
Charan Singh – 1979-80
Morarji Desai – 1977-79
Indira Gandhi – 1966-77
Gulzarilal Nanda – 1966-66
Lal Bahadur Shastri – 1964-66
Gulzarilal Nanda – 1964
Jawaharlal Nehru – 1947-64
கடந்த 1974-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, இந்தியா முதன்முதலாக அணுகுண்டு சோதனை நடத்தி யது. அதன்பின், 1998-ம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தான் மாநிலம் போக்ரானில் அடுத்தடுத்து 5 அணுகுண்டு சோதனைகளை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் நடத்திக் காட்டினார். அதன்பின், 1999-ம் ஆண்டு மே 11-ம் தேதி தேசிய தொழில்நுட்ப தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இன்றும் கூட உலக அரங்கில் இந்தியா அணு சக்தி நாடாக அங்கீகரிக்கப்படவில்லை..!

வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா..?

இளநீர், `பூலோகக் கற்பக விருட்சம்’ என்று ஏன் அழைக்கப்படுகிறது ?
இயற்கை தந்த பெருங்கொடை இளநீர். உடல்சூடு, வயிற்றுப் புண், வாய்ப்புண்… எல்லாவற்றுக்கும் நாம் நாடுவது இளநீரைத்தான். எவ்வித செயற்கை ரசாயனங்களும் சேராத, நூறு சதவிகிதம் சுத்தமான, உடலுக்கு எந்தவிதமான தீங்கையும் ஏற்படுத்தாத தூய பானமாக இளநீர் இருக்கிறது.

இளநீர்
இளநீரை வெறும் வயிற்றில் குடித்தால்தான் பலன் கிடைக்கும் என்று ஒரு கருத்து உண்டு. அதேநேரம், வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றில் சுரக்கும் அமிலங்களுடன் கலந்து வயிற்றுப்புண் ஏற்படும்” என்றும் சிலர் கூறுகிறார்கள். எது உண்மை?சித்த மருத்துவர் சிவராமன்
“தயார் நிலையில் இருக்கக்கூடிய, உடலுக்குத் தேவையான கனிமங்கள், உப்புகள் மிகுந்த, சோர்வைப் போக்கி உடனடியாக ஆற்றலைத் தரக்கூடிய பானம் இளநீர். மூன்று வயது குழந்தையிலிருந்து யார் வேண்டுமானாலும் இளநீர் குடிக்கலாம். பொதுவாக, சாப்பாட்டுக்கு முன் இளநீர் குடிப்பது நல்லது. இளநீரில் உள்ள கனிமங்கள் மற்றும் உப்புகளை முழுவதுமாக நம் உடல் கிரகித்துக்கொள்ள, இளநீரை வெறும் வயிற்றில்தான் குடிக்க வேண்டும். மழை, பனிக் காலங்களில் மட்டும் அதிகாலையில் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஆஸ்துமா, சளித் தொந்தரவு இருப்பவர்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம்.
அதிகக் காரத்தன்மை கொண்ட, உடலுக்குச் சூட்டைக் கொடுக்கக்கூடிய, பித்தத்தை அதிகப்படுத்தக்கூடிய உணவுகளைத்தான் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இளநீர் உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது. பித்தத்தைத் தணிக்கக்கூடியது. அதனால், வெறும் வயிற்றில் குடிப்பதால் எந்தப் பாதிப்பும் இல்லை.
சர்க்கரை நோயாளிகளுக்கு, உடனடியாகச் சர்க்கரையை அதிகப்படுத்திவிடும். நோய் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, இளநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகமான உப்புகள் இருப்பதால், சிறுநீரக நோயாளிகளும் இளநீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. மற்றபடி, அனைவரும் குடிக்கலாம்” என்கிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன்
செய்தி:விகடன்

Tuesday, 21 August 2018

கடல் நீர் மட்டம் உயர்வதால் சுனாமி அபாயம்: மிரட்டும் அதிர்ச்சி தகவல்

தற்போது பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட போது, கடல் நீர் மட்டம் உயர்ந்து தெரிகிறது. இதனால், ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்கும் சுனாமி அபாயம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேராசிரியர் ஆய்வு: பருவ நிலைமாற்றத்தால், கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் வர்ஜீனியா தொழில்நுட்ப உதவி பேராசிரியர் ராபர்ட் வெயிஸ் தலைமையில் நிபுணர்கள் குழு ஆய்வு செய்தது.

கடல் நீர் மட்டம் உயர்வு: பருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் தற்போது உயர்ந்து சிறிதளது உயர்ந்துள்ளது. குறிப்பாக தெற்கு சீனாவில் மகாயூ கடலில் 1.5 அடி முதல் 3 அடி வரை கடல் நீர் உயர்ந்துள்ளது.

ரிக்டரில் 8.8 நிலக்கம் ஏற்படும் அபாயம்: அந்த பகுதிகளில் மக்கள் தொகை அடர்த்தியாகவே இருக்கின்றது. கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், அங்கு 8.8 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுனாமி அபாயம் ஏற்பட்டுள்ளது.


உலகம் முழுக்க தாக்கும் அபாயம்: தொடக்கத்தில் தென்சீன கடல் பகுதி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து தொடங்கி தெற்கு தைவான் வழியாக உலகம் முழுக்க சுனாமி தாக்குதல் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கட்டுரை இதழில் தகவல்கள் வெளியாகியுள்ளதால் பரப்பு ஏற்பட்டுள்ளது.

from tamil.gizbot

பிரிந்த வடகொரியா, தென்கொரியா குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு

இராண்டாம் உலகப் போரின் முடிவில் கொரியா வடகொரியா, தென்கொரியா என இரண்டாக உடைந்தது. அதனைத் தொடர்ந்து 1953-ல் வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் போர் ஏற்பட்டது.

60 ஆண்களுக்குப் பிறகு இந்தப் போரில் பிரிந்து போன குடும்பங்கள் ஒன்றாக இணையும் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. தென்கொரியாவைச் சேர்ந்தவர்கள் வடகொரியாவுக்குச் சென்று போரின்போது பிரிந்த தங்கள் உறவினர்களைச் சந்தித்தனர்.


இந்தச் சந்திப்பு வடகொரியாவின் சுற்றுலாத் தலமான மவுண்ட் கும்காங் நகரில் சனிக்கிழமை நடைபெற்றது.
இரு நாட்டுக் குடும்பங்களின் சந்திப்பில்  89 வயதான சோ சன் டு தனது மூத்த சகோதரி பற்றிக் கூறும்போது,  "எனக்கு நினைவிருக்கிறது நீ எவ்வளவு அழகாக இருப்பாய் என்று... உன்னை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது'' என்றார்.
பல ஆண்டுகளாக பிரிந்திருந்த உறவினர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி அழுதனர். வரும் புதன்கிழமைவரை நடைபெறும் இந்தச் சந்திப்பில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சந்தித்துப் பேச உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, 20 August 2018

அலுவலகம், வீடுகளில் அழகு தாவரமாக மூங்கில்

தமிழகத்தின் வறட்சி மாவட்டங்களிலும் தண்ணீர் பற்றாக்குறையாக இருந்தாலும் நன்கு வளரும் மர வகைகள் இவை இரண்டுமாகும்…

ஒரு மூங்கில் தனது வாழ்நாளில் 450 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, ஆக்சிஜனை வெளியிடுகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். எனவே, மூங்கில் சுற்றுச்சூழலை பாதுகாக்க சிறந்த மரம் என்று கருதப்படுகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் இரண்டு மூங்கில் மரங்களை வளர்த்தால் காற்று மண்டலம் தூய்மைப்படும் என்கின்றனர் உலக சுற்றுச்சூழல் வல்லுனர்கள்.
ஒரு மனிதனுக்கு ஓர் ஆண்டில் தேவைப்படும் பிராணவாயு அதாவது ஆக்சிஜன் 292 கிலோ. ஒரு நாளைக்கு தேவைப்படுவது 800 கிராம் எனக் கணக்கிட்டுள்ளது. இது உலக சுகாதார நிறுவனத்தின் (W.H.O.) ஆராய்ச்சி முடிவு. ஒரு மூங்கில் குத்து ஓர் ஆண்டில் 309 கிலோ உயிர்க் காற்றைத் தருகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு 850 கிராம். ஒரு மனிதனுக்கு நாள் ஒன்றுக்குத் தேவை 800 கிராம். ஆனால், ஒரு குத்து தருவதோ 850 கிராம். ஒரு மூங்கில் குத்தில் வெளியிடக்கூடிய பிராண வாயு
மூங்கில்
மூங்கில் (Bamboo) புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். புல் வகையிலேயே மிகவும் பெரிதாக வளரக்கூடியது மூங்கிலேயாகும். சில மரங்கள் ஒரு நாளில் ஒரு மீட்டர் உயரம் வரை வளர்கின்றன. இவற்றில் ஏறத்தாழ 1000 சிற்றினங்கள் உள்ளன. உலகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட இனவகை மூங்கில்கள் வளர்க்கப்படுகின்றன.[3] மூங்கில் புல் வகையைச் சேர்ந்த ஒரு மரம் ஆகும். மூங்கில் மரம் 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் அதிக அளவு பருமன் 1 சென்ட்டிமீட்டரிலிருந்து 30 சென்ட்டிமீட்டர் வரை இருக்கும். மூங்கில் மிகவும் வேகமாக வளரக்கூடிய ஒரு மரம். ஒரே நாளில் 250 cm (98 in) கூட தக்க சூழ்நிலையில் வளருவதாகத் தாவரவியலாளர் கண்டறிந்துள்ளனர்.
ஒரு மூங்கில் மரத்தின் வயது 60 ஆண்டுகள். ஆனால், அது 60 அடி உயரம் வரை வளரும் காலமே 59 நாட்கள்தான். கடல் மட்டத்திற்கு மேல் 4000 மீட்டர் உயரம் உள்ள பிரதேசங்களில்தான் மூங்கில் நன்றாக வளரும். எனவே மலைச்சரிவுகளும், மிக வறண்ட பகுதிகளும் மூங்கில் வளர்வதற்கு ஏற்ற இடங்கள்.சீனா, இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா,நேபாளம்,பங்களாதேசு, கோஸ்டிரிக்கா, கென்யா ஆகிய நாடுகள் மூங்கில் உற்பத்தியில் முன்னணி நாடுகளாக இருக்கின்றன.
இந்தியாவில் 156 வகை மூங்கில் இனங்கள் பயிரிடப்படுகின்றன. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்காளம், ஒரிசா, ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிராமாநிலங்கள் முதலிடம் பெற்று நிற்பவை. மூங்கிலின் வேர் நிலத்தை ஒரு அடிக்கு மேல் பற்றிக் கொண்டிருக்கும். மூங்கில் ஒன்றோடொன்று இணைந்து வளரும் தொகுப்பு 6 கியூபிக் மீட்டர் வரை இருக்கும்.
மூங்கில் வளர்ப்பு…
மூங்கில் புல் வகையை சேர்ந்த தாவரம். வெப்ப மண்டலத்தில் நன்கு வறட்சியை தாங்கி வளரும் இயல்பு உடையது.
மூங்கிலில் பல வகைகள் உள்ளன. அதிகமாய் வளர்ப்பது முள் இல்லாத மூங்கில் மற்றும் போல் மூங்கில்.
ஆடி பட்டத்தில் நடவு செய்வது சிறப்பு. ஏனெனில் ஆடியில் அவ்வப்போது பெய்யும் மழையால் நன்கு வேர் பிடித்து கோடை காலம் வருவதற்குள் வறட்சி தாங்கும் அளவிற்க்கு வளர்ந்து விடும்.
மூங்கில் நடவு செய்யும் பொழுது செடிக்கு செடி மற்றும் வரிசைக்கு வரிசை இடைவெளி 25 அடி இருக்குமாறு நட வேண்டும்.
கண்டிப்பாக ஒவ்வொரு விவசாயியும் தன் வயல் ஓரங்களில் வளர்க்க வேண்டிய மரம். மூங்கில் மற்ற பயிர்களின் வளர்ச்சியை பாதிக்கும், அதனால் விளைபயிர்களுக்கு தொந்தரவு இல்லாத இடத்தில் மூங்கிலை வளர்க்க வேண்டும்.
முள் இல்லாத மூங்கில்:
முள் இல்லாத மூங்கில் அதிக உயரம் வளர்வது இல்லை. ஆனால் இதன் பயன்பாடு அதிகம். இந்த வகை மூங்கில் குச்சியின் நடுவில் இடைவெளிெ இருக்காது. இதனால் விவசாய கருவிகளான கத்தி மற்றும் மண்வெட்டி போன்றவற்றின் கைப்பிடிகள் செய்வதற்கு உகந்தது. கூரை வீடுகள் கட்டுவதற்கும் பயன்படுகிறது. பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்ய பந்தல் அமைக்க இந்த முள் இல்லாத கெட்டி மூங்கில் அதிகம் பயன்படுத்த படுகிறது. குறைந்தது மூன்று வருடம் நிலைத்து நிற்க கூடியது. இதனால் விவசாயிகளுக்கு செலவில்லாத ஒரு பந்தல் அமைகிறது.
நடுப்பகுதியில் போல் உள்ள மூங்கில்கள்:
அடுத்து நடுப்பகுதியில் போல் உள்ள மூங்கில்கள் அதாவது நடுப்பகுதியில் இடைவெளி உள்ள முங்கில்கள் வீடு கட்டவும் கூடைகள் பின்னுவதற்கும் பயன் படுத்த படுகின்றன.
நட்ட ஐந்தாம் வருடத்தில் இருந்து வெட்டி விற்பனை செய்யலாம். மூங்கில் தொடர்ந்து அறுபது வருடங்கள் வரை உயிர் வாழும். மானாவரி நிலத்தில் மூங்கில் பயிரிட்டால், பயிரிட்ட ஐந்தாம் ஆண்டு முதல் தொடர்ந்து அறுபது வருடங்கள் வருமானம் பெறலாம்.
நன்கு முற்றிய மூங்கில்களில் இருந்து மூங்கில் அரிசி எடுக்கப்படுகிறது. இந்த அரிசியானது மிகவும் சத்து உடையது. அதிக சுவையாக இருக்கும். சாதாரண அரிசி போன்று சமைத்து உண்ணலாம். அடுத்து மூங்கில்களில் இருந்து உதிரும் இலைகள் மண்புழு உரம் தயாரிக்க பயன் படுகின்றது . உரத்தின் தரமானது மற்ற தழைகள் மூலம் தயாரிப்பததை விட தரமானதாக இருக்கும். உயர் தர காகிதம் தயாரிக்க மற்றும் ரூபாய் நோட்டு தயாரிப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது.
ஆளுக்கொரு மூங்கில் மரம் அல்லது குறைந்தபட்சம் வீட்டிற்கு ஒரு மூங்கில் மரம் இருந்தால் சுற்றுச்சுழல் பாதிப்பு என்ற சொல்லுக்கே இடமில்லாமல் போய்விடும்!எனவே, மூங்கில் வளர்த்து சுற்றுச் சூழலை பாதுகாப்போம்

(ஆப்பிள்) ஸ்டீவ் ஜாப்ஸ் 56 வயதில் இறப்பதற்கு முன்பாக சொன்ன செய்தி: விசித்திரனமது..!

உலகமே வியந்து பொறாமைப் பட்ட உச்ச நிலையைத் தொட்ட ஆப்பிள் நிறுவனத்தின் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் உடல்நலம் குன்றி 56 வயதில் இந்த உலகை விட்டு பிரிவதற்கு முன்பாக சொன்ன செய்தி. வர்த்தக உலகில் வெற்றியின் உச்சம் தொட்டேன். மற்றவர் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது.



நோயுற்று படுக்கையில் இருக்கும் இப்போது என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன். பெற்ற புகழும், செல்வமும் அதனால் அடைந்த பெருமையும் இப்போது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது. உங்கள் காரை ஓட்ட யாரையாவது நியமிக்கலாம். 

உங்களுக்காக சம்பாதிக்க எத்தனை பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் வலிகளையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது.
எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடிவிட முடியும். ஆனால் வாழ்க்கை தொலைந்து விட்டால் திரும்ப கிடைக்கவே கிடைக்காது. வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாலும் நாடகம் முழுமையாக முடியும் என்று சொல்ல முடியாது.நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் திரை விழலாம். நாம் பக்குவமடையும் போதுதான் சில விஷயங்கள் புரியும். முப்பது ரூபாய் கடிகாரமும் சரி, மூன்று லட்சம் ரூபாய் கடிகாரமும் சரி ஒரே நேரம்தான் காட்டும்.

செலவழிக்க வாய்ப்பு இல்லாதபோது உங்கள் மணிபர்சில் நூறு ரூபாய் இருந்தாலும் ஒன்றுதான். ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான். நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும், 30,000 சதுர அடி பங்களாவில் வசிப்பதும் ஒன்றுதான். ஆகவே உங்களைச் சுற்றிலும் இருக்கும் அனைவரிடமும் அன்புடன் பேசிப் பழகுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி !

வாரிசையே அழிக்க துவங்கும் செயற்கை கரு ஊசி..! ஆபத்தின் பிடியில் தூய இனத்தை இழக்கிறோம்..!

பொங்கல் பண்டிகையின் நோக்கமே விவசாயிகளுக்கு உதவும் சூரியனையும், மாடுகளையும் நினைவில் கொண்டு பூஜிப்பதுதான். ஆண்டு முழுவதும் தாவரங்களின் ஒளிச்சேர்கைக்கு உதவும் சூரியனுக்கு, சூரியப்பொங்கல் வைத்துப் படைப்பது முதல் நாள். அடுத்த நாள், மண்ணுக்காகவும், மனிதர்களுக்காகவும் உழைக்கும் மாடுகளை கௌரவிக்கும் விதமாக, அலங்கரித்து, படையலிட்டு கொண்டாடுவார்கள். இதெல்லாம் ஆண்டாண்டு காலமாக தமிழர்கள் கடைபிடித்து வரும்… பண்பாட்டு வழக்கம்.
ஒரு காலத்தில் வீடுகளில் மாடுகள் இருப்பது கௌரவம் என்ற நிலை, எந்திரங்களின் வரவுக்குப் பிறகு மாறிவிட்டது. பெரும்பாலான தொழுவங்களில் டிராக்டர்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும், மண் மீதும், மாடுகள் மீதும் உள்ள பாரம்பர்யப் பிணைப்பை அறுத்தெரிய விரும்பாத பலர், இன்றைக்கும் மாடுகளை…நாட்டு மாடுகளைப் பராமரித்து வருகிறார்கள்.
நாம் மறந்துபோன, பாரம்பர்ய விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் நாட்டு மாடுகளின் பங்களிப்பு அபாரமானது. இவற்றின் சிறப்பே, குறைந்த தீவனத்தை எடுத்துக் கொண்டு உழவுக்கு உதவி செய்வதோடு, கணிசமான அளவில் பாலும் கொடுப்பதுதான். கலப்பின மாடுகளின் பாலைவிட நாட்டு மாடுகளின் பாலுக்கு தனிச்சுவை உண்டு. அதிலிருந்து கிடைக்கும் தயிர், மோர், நெய்க்குக்கூட தனிச்சுவை இருப்பதை மறுக்க முடியாது!
காங்கேயம், உம்பளாச்சேரி, புலிகுளம், மணப்பாறை, பர்கூர்… என தமிழ்நாட்டுக்கென பாரம்பர்ய ரகங்கள் இருப்பதுபோல… ஆந்திராவுக்கான சிறப்பு, புங்கனூர், ஓங்கோல் இன மாடுகள். அதிலும் ‘புங்கனூர் குட்டை’ என்ற ரகம் இந்திய மாட்டினங்களில் அருகி வரும் இனமாகக் கண்டறியப்பட்டுள்ளது. தமிழக-ஆந்திர மாநிலங்களின் எல்லையோரத்தில் இருக்கும் சித்தூர் மாவட்டம், புங்கனூர் மாடுகளுக்குப் புகழ்பெற்ற பகுதி.

‌இந்திய இனங்கள்ல 32 வகைகள் இருக்கு. அதுல நாலு ரகங்கள், குட்டை ரகத்தைச் சேர்ந்தவை. கேரளாவுல இருக்கிற வெச்சூர், மலநாடு கிட்டா, காசர்கோட் குள்ளன் கிட்டா மாடுகள் மாதிரியே… இந்த புங்கனூர் இன மாடுகளும் குள்ளமானவை. மூணு, நாலடி அடி உயரம்தான் இருக்கும். இந்த ரகத்தை, சித்தூர் மாவட்டத்துல இருக்கிற புங்கனூர் ஜமீன்தார், அவரோட பண்ணையில வெச்சு பராமரிச்சு பிரபலபடுத்தினதா சொல்றாங்க. அதனால இதுக்கு ‘புங்கனூர் குட்டை’னு பேர் வந்துச்சு” என்று பெயர் காரணம்
‌முப்பதுக்கும் மேற்பட்ட நாட்டு மாடு இனங்களும், நாப்பதுக்கும் மேற்பட்ட ஆட்டு இனங்களும் இருக்கு.

அந்தந்தப் பகுதி கால நிலைக்கு ஏற்பத்தான் கால்நடைகளும், அதன் குணாதிசயங்களும் இருக்கும். ஆந்திராவுல இருக்கிற புங்கனூர் குட்டை என்ற ரகமும் நாட்டு இனம்தான். அதேமாதிரி, தமிழ்நாட்டோட நாட்டு இனங்களான காங்கேயம், புலிகுளம், உம்பளாச்சேரி, பர்கூர் இன மாடுகளும் நம்முடைய சீதோஷ்ண நிலையில் இருப்பவை. தற்போது, நாட்டு இனங்களுக்கான கருவூட்டல் ஊசியும் அந்தந்தப் பகுதி அரசு கால்நடைப் பண்ணைகளில் கிடைக்கிறது.
உதாரணமாக, காங்கேயம் இனத்தின் கருவை அதே இனப் பசுவுக்கு செலுத்தினால்தான், ஒரிஜனல் இனமாகக் கிடைக்கும். இல்லாவிட்டால், குணாதிசயம் மாறி, கலப்பினமாகிவிடும். அந்தந்தப் பகுதி கால நிலைக்குப் பொருந்திப் போகிற இனங்களை வளர்த்து… நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும்

Sunday, 19 August 2018

எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை ஊக்கப்படுத்த புதிய திட்டம் கொண்டு வரும் மத்திய அரசு

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய திட்டம் வகுத்துள்ளது.  வரும் செப்டம்பர் 7ஆம் தேதி, இ-மொபைலிடி மாநாட்டை பிரதமர் மோடிதொடங்கி வைக்கிறார். அதில், எலக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க உள்ளது. முதல்கட்டமாக 4 மில்லியனுக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட மாசடைந்த 9 நகரங்களைத் தேர்வு செய்கிறது.



அங்கு சுற்றுச்சூழலை தூய்மையாக்க எலக்ட்ரிக் வாகனப் பயன்பாடு உள்ளிட்ட விஷயங்களை நடைமுறைப்படுத்த உள்ளது. இதையடுத்து ஒரு மில்லியனுக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களைத் தேர்வு செய்ய உள்ளது.

இதில் மிகவும் பரபரப்பாக காணப்படும் மும்பை - புனே மற்றும் டெல்லி - சண்டிகர் ஆகிய வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பரில் எகானமிக் டைம்ஸில் வெளிவந்த தகவலின் படி, ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களுக்கு 100 நாள் சர்வதேச சவால் விடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த காலக்கட்டத்தில் வாகன உற்பத்தியாளர்கள் எலக்ட்ரானிக் வாகனங்களுக்கு தேவையான உற்பத்திப் பிரிவு, பேட்டரி, சார்ஜிங் கட்டமைப்பு ஆகியவற்றை இந்தியாவில் ஏற்படுத்த வேண்டும்.  கடந்த பிப்ரவரியில் பேசிய மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, எலக்ட்ரிக் வாகனங்களுக்கு புதிய திட்டங்கள் ஏதும் அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை என்றார். ஆனால் புதிய திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
From Samayam

90 ஆண்டுகள் பழமையான திருச்சி கொள்ளிடம் பாலம் உடைந்தது: ஒரு தூண் சரிந்த நிலையில் மற்றொரு தூணும் உள்வாங்கியது

திருச்சி மாநகரில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 90 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த பாலத்தில் ஒரு தூணில் விரிசல் ஏற்பட்டு சரிந்த நிலையில், மற்றொரு தூண் நேற்று மாலை உள்வாங்கியதைத் தொடர்ந்து பாலம் உடையத்  தொடங்கியுள்ளது.
திருச்சியில் நெ1. டோல்கேட்- திருவானைக்காவல் பகுதியை இணைக்கும் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாழ்ந்த பாலம் உள்ளது. இந்த பாலம் 1928-ம் ஆண்டில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. கீழே செங்கல் கட்டுமானத்தில் தூண்களும் பாலத்தின் மீது பெரிய இரும்பு தண்டவாளங்களைக் கொண்டு பக்கவாட்டு தடுப்பும் அமைக்கப்பட்டு, பாலத்தின் மீது தார் போடப்பட்டிருந்தது.
இந்தப் பாலம் வலுவிழந்ததைத் தொடர்ந்து 2007 முதல் கனரக வாகனங்கள், பேருந்துகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
புதிய பாலம்
இதைத் தொடர்ந்து இந்த பாலத்தின் அருகிலேயே சென்னை நேப்பியர் பாலத்தின் மாதிரியில் கட்டப்பட்ட புதிய பாலத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2016-ல் காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தார்.
இந்நிலையில், கடந்த 4 தினங்களாக கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் பழைய பாலத்தின் 18-வது தூணில் கடந்த 16-ம் தேதி இரவு லேசான விரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பாலத்தின் இருவாயில்களும் முற்றிலுமாக அடைக்கப்பட்டு, யாரும் செல்ல முடியாதவாறு தடை செய்யப்பட்டது.

கொள்ளிடம் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், 18-வது தூணில் ஏற்பட்டிருந்த விரிசல் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி, அந்த தூண் சரிந்து முழுமையாக உள் வாங்கியது. இதனால் பாலத்தின் மேல்பகுதி உடைந்தது. கொள்ளிடம் ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், பழைய பாலத்தின் 20-வது தூண் நேற்று திடீரென உள்வாங்கியது. இதனால் பாலம் ஓரிரு நாளில் முற்றிலுமாக இடிந்து விழ வாய்ப்புள்ளது என்கின்றனர் பொதுப்பணித் துறை
அதிகாரிகள்.
பாலம் உடைந்தது ஏன்?
ஆற்றில் தண்ணீர் இல்லாத காலத்திலும் பழைய பாலத்தின் அடியில் தூண் உள்ள பகுதியில் தொடர்ந்து தண்ணீர் தேங்கியதும், பாலத்தில் தூண்களுக்கு அருகிலேயே மணல் அள்ளியதுமே தூண்கள் சேதமடைய காரணம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
ஆனாலும், வெள்ளம் வடிந்த பின்னர்தான் தூண் இடிந்ததற்கான காரணம் தெரியவரும். இந்த பாலத்துக்கு 60 ஆண்டுகள்தான் ஆயுள், ஆனால் 90 ஆண்டுகளை கடந்து விட்டதும்கூட பாலம் பழுதடைய காரணமாக இருக்கலாம்  என பொதுப்பணித் துறை பொறியாளர்கள் தெரிவித்தனர்.

10 நாட்கள் போலீஸாருடன் நின்று போக்குவரத்தை சீர் செய்யவும்: கோவையில் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு வினோத தண்டனை

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் போலீஸாருடன் தகராறு செய்து தாக்கிய இளைஞரை 10 நாட்கள் போக்குவரத்துப் போலீஸாருடன் நின்று போக்குவரத்தைச் சரிசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸார் இரு சக்கர வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி ஆவணங்களை கேட்டனர். மது போதையில் வாகனத்தை ஓட்டி வந்த வடவள்ளியைச் சேர்ந்த இளைஞர் சுதர்சன் அங்கிருந்த காவல் துறையினருடன் தகராறில் ஈடுபட்டுத் தாக்கினார்.
இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்ப்படுத்தினர். அவரது வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் வழக்கமாக அவருக்கு அளிக்க வேண்டிய தண்டனைக்கு மாறாக போலீஸாரின் கஷ்டத்தை அந்த இளைஞர் தெரிந்துக்கொள்ள வேண்டும், அதை அவர் உணரவேண்டும் என்பதற்காக அவருக்கு வினோத தண்டனையை வழங்கினார்.
அதன்படி சுதர்சன், போக்குவரத்து போலீஸாருடன் இணைந்து கோவை பிரதானச் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடவேண்டும், தினமும் பணியை முடித்து சரியாக பணியாற்றியதாக அதிகாரி முன் கையொப்பமிட்டுச் செல்லவேண்டும் என்று உத்தரவிட்டார்.
நீதிமன்ற நடுவரின் உத்தரவை அடுத்து இன்று காலைமுதல் வேகாத வெயிலில் கோவை ஆம்னி பேருந்து நிலையம் முன்பு வேர்க்க விறுவிறுக்க போக்குவரத்தைச் சரி செய்யும் பணியில் சுதர்சன் ஈடுபட்டார்.
நீதிமன்ற நடுவரின் உத்தரவை வரவேற்றுள்ள போலீஸாரும் பொதுமக்களும், இதே போன்று சாலையில் வேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டுகிற, மோட்டார் ரேஸ் செல்லுகிற இளைஞர்களுக்கு 10 நாட்கள் அவசர சிகிச்சை விபத்து வார்டில் பணியாற்றும் வேலையை அளிக்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.

இன்சூரன்ஸ் பணத்தை எளிதாக பணத்தை பெறுவதற்கான வழிமுறை

செய்யக்கூடியவை
                 எப்.ஐ.ஆர். ஒரு பெரும் விபத்திற்கான அல்லது மூன்றாம் நபருக்குகான இன்சூரன்ஸ் பணத்தை கிளம்ப் செய்ய போலீசில் விபத்து குறித்து புகார் செய்து அது குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது அவசியம் அப்பொழுது தான் இன்சூரன்ஸ் பெற இந்த சம்பவம் தகுதி பெறும். இது எந்த வகையான வாகன இன்சூரன்ஸ் ஆக விபத்துக்களுக்கு எப்.ஐ.ஆர் பதிவு என்பது அவசியம்.
                மிகச்சிறிய விபத்துகளுக்கு எப்.ஐ.ஆர் தேவையில்லை. பெரும் விபத்துக்கள், உயிரிழப்பு ஏற்படும் விபத்துக்கள், காயங்கள் ஏற்படும் வகையிலான விபத்துக்களுக்கு எப்.ஐ.ஆர் கட்டாயம் போடப்பட வேண்டும். கார் திருட்டிற்கும் கட்டாயம் எப்.ஐ.ஆர். போடபட்டிருக்க வேண்டும். இந்த எப்.ஐ.ஆரின் ஒரு காப்பியை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஒரு காப்பியை உங்களிடமும் வைத்துக்கொள்ளுங்கள்.
                 தகவல் அளிப்பது முக்கியம் உங்கள் வாகனம் விபத்தில் சிக்கினால் விரைவாக இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தகவல் அளிக்கப்பட வேண்டியது அவசியம் அதிகபட்சம் 7 நாட்களுக்குள் தகவல் அளிக்கப்படவேண்டும். சில நிறுவனங்கள் இதற்குள் குறைவான கால அளவையே நிர்ணயித்துள்ளனர். சில நிறுவனங்கள் 24 மணி நேரம் சில நிறுவனங்கள் 48 மணி நேரங்கள் கூட நிர்ணயித்துள்ளன.
                  இதனால் முடிந்த அளவிற்கு சிக்கிரமாக உங்கள் வாகனம் விபத்திற்குள்ளான சம்பவத்தை உடனடியாக இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தெரிவித்து விடுங்கள். சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உங்கள் வாகனத்தை டோ செய்து செல்லும் வசதி, பிக்கப் செய்யும் வசதிகளையும் வழங்குகிறது. அதையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். ஆவணங்களை சமர்பித்தல் இன்சூரன்ஸ் பணத்தை கிளம்ப் செய்யக்கூடிய பணிகள் நீங்கள் போதிய ஆவணங்களை சமர்பிக்காதவரை துவங்காது. இதனால் விபத்து குறித்த தகவல்களை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவிக்கும் போதே இன்சூரன்ஸ் பணத்தை கிளம்ப் செய்ய தேவையான ஆவணங்கள் குறித்தும் அதற்கான கால அவகாசம் குறித்தும் கேட்டு தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
                  பொதுவாக மோட்டார் கிளம்ப் பார்ம். இன்சூரன்ஸ் பாலிசி, ஆர்சி புக், விபத்து நடக்கும் போது வாகனம் ஓட்டியவரின் டிரைவிங் லைசன்ஸ் ஆகிய ஆவணங்கள் தான் சமர்பிக்க வேண்டியது இருக்கும். இதில் ஒரு ஆவணம் தவறினால் கூட இன்சூரன்ஸ் பணம் கிளம்ப் ஆகாமல் போய்விடும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். விபத்து ஆதாரம் விபத்து நடந்த சம்பவத்தை முடிந்தால் உங்கள் செல்போனிலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு சாதனத்திலோ படம் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள். இது. இன்சூரன்ஸ் பணம் கிடைக்க ஒரு ஆதாரமாக இருக்கும். செல்போனில் வீடியோவும் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
                  இந்த வீடியோவில் உள்ள கார் என் தெரியும் படியாக பார்த்துக்கொள்ளுங்கள். மேலும் விபத்தின் சாட்சியாக இருந்தவர்கள், அல்லது விபத்து ஏற்படுத்தியவர்கள் இருந்தால் அவர்களின் பெயர், முகவரி, தொடர்பு எண்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் இன்சூரன்ஸ் பணம் கிளம்ப் செய்யும் போது தேவைப்படலாம். பாலிசி டாக்குமெண்ட் நீங்கள் இன்சூரன்ஸ் பாலிசியை எடுக்கும் போது பாலிசி பத்திரத்தை கவனமாக வாசிக்க வேண்டும் அதில் உள்ள விதிமுறைகளை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எந்தெந்த வகையிலான விபத்துக்கள் எல்லாம் இந்த பாலிசியில் கவர் ஆகும். எந்த விபத்துக்கள் ஆகாது என்பது அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். உங்கள் வாகனம் விபத்திற்குள்ளானல் அது இன்சூரன்ஸ் படி கிளம்ப் ஆகுமா ஆகாத என்பதை முன்பே உங்களுக்கு தெரிந்திருந்தால் அதற்கு தகுந்தார் போல் நீங்கள் செயல்பட முடியும்.
செய்யக்கூடாதவை
வாகனத்தை அகற்றாதீர்கள் நீங்கள் விபத்து ஏற்பட்டால் விபத்து குறித்த போதிய ஆதாரங்களை சேகரிக்கும் வரை வாகனத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தாதீர்கள். இதனால் உங்களுக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைப்பதில் தாமதமோ, அல்லது குறைந்த அளவிலான இன்சூரன்ஸ் பணமோ கிடைக்ககூடும். சில நேரம் காரணமாக கூட இன்சூரன்ஸ் பணம் முழுவதும் ரத்தாகலாம். என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அதே போல இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஒப்புதல் கிடைத்த பின்புதான் வாகனத்தை சரி செய்ய வேண்டும். அதற்கு முன் வாகனம் ரிப்பேர் செய்யப்பட்டால் இன்சூரன்ஸ் கிளம்ப் முழுவதும் ரத்தாகி போக வாய்ப்புள்ளது. இதனால் இன்சூரன்ஸை நிறுவனத்திடம் இது குறித்து உறுதி செய்து கொள்ளுங்கள்.
உண்மைகளை மறைத்தல் விபத்து ஏற்பட்டவுடன் எவ்வாறு விபத்து நடந்தது என்பதை உண்மையாக நிறுவனங்களுக்கு தெரியப்படுத்துங்கள். நீங்கள் ஏற்படுத்திய விபத்திற்கு கிளம்ப் கிடைக்காது என்பதை அறிந்து கிளம்ப் கிடைக்கும்படியாக சில பொய்களையோ சில உண்மைகளை மறைந்தோ தகவல்களை சொல்ல கூடாது. அவ்வாறு நீங்கள் உண்மைகளை மறைத்ததையோ, பொய்கள் சொல்லியதையோ இன்சூரன்ஸ் நிறுவனத்தார் கண்டுபிடித்தார்கள் என்றால் உங்கள் பாலிசி முழுமையாக ரத்து செய்யப்படும், மேலும் நீங்கள் செலுத்திய கிளம்ப் தொகையும் கிடைக்காது.
மூன்றாம் நபருடன் சமரசம் செய்யாதீர்கள் உங்கள் காரை நீங்கள் விபத்து ஏற்படுத்தாமல் மற்றவர்கள் செய்த தவறால் விபத்து நடந்தால், சிலர் உங்களை வந்து இந்த சம்பவத்தை போலீசிற்கோ இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கோ தெரியபடுத்தவேண்டாம் நாமே முடித்து கொள்ளலாம் என சமரசம் பேசினால் அவர்களுடன் ஒத்து போகாதீர்கள். இன்சூரன்ஸ் பணத்தை கிளம்ப் செய்ய எப்.ஐ.ஆர் அவசியம் என்பதால் இந்த விபத்தை நிச்சயமாக முறையாக பதிவு செய்யுங்கள். நீங்கள் சமரசம் செய்துகொண்டால் இன்சூரன்ஸ் பணம் கிடைப்பதில் பல சிக்கல்கள் இருக்கும். வாக்குமூலம் வேண்டாம் உங்கள் பாலிசி தொகை ஏதோ சில காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டால், இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு எதுவும் எழுதி கையெழுத்திட தேவையில்லை. ரத்து செய்த கிளம்பை ரிவியூ செய்ய உரிமை உள்ளது. எதுவும் எழுதி கொடுக்க நேர்ந்தால், அதை உங்கள் சட்ட ஆலோசகரிடம் ஆலோசித்த பின்பு அதை செய்யுங்கள்

From drivespark

Saturday, 18 August 2018

நவா (நாவல்) மரத்தை வீட்டருகில் வளர்க்க கூடாததற்கு காரணம்

நாவல் மரம் எல்லா வகையிலும் ஒரு சிறப்பான மரம். நாவல் மரம் என்று எடுத்துக்கொண்டால், திருநாவலூர் என்று ஒரு ஊர் இருக்கிறது, திருச்சி பக்கத்தில் திருவானைக்காவல் என்று ஒரு ஊர் இருக்கிறது. இங்கெல்லாம் நாவல்தான் தலவிருட்சமாக இருக்கிறது. 



நாவல் மரத்திற்கென்று பெரிய மருத்துவ குணங்கள் உண்டு. நாவல் பட்டை சாறு எல்லா வகையிலும் நல்லதைக் கொடுக்கும். நாவல் இலையை பொடி செய்து சாப்பிட்டால் பேதி நிற்கும். இந்தப் பொடியால் பல் தேய்த்தால் பல் ஈறுகள் வலுவடையும். நாவல் இலையின் சாம்பல் நாள்பட்ட தீக்காயங்கள், வெட்டுக் காயங்களை குணப்படுத்தும். நாவல் பழம் நீரிழவு நோய் எனப்படும் சர்க்கரை வியாதியை எல்லா வகையிலும் தீர்க்கக் கூடியது. விநாயகருக்கும் நாவல் பழம் மிகவும் விசேஷமானதாக இருக்கிறது. குறிப்பாக விநாயகர் சதுர்த்தி அன்று நாவல் பழம் வைத்து, வழிபட்டால் நல்லது என்று சொல்வார்கள்.
நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் உடம்பிற்கு குளிர்ச்சி தரும். மேலும் சிறுநீரகப் பாதையில் உள்ள தொற்றுகளை விரட்டும், நீர்க்கடுப்பு பிரச்சனையையும் தீர்க்கும். சிறுநீரகத் தொற்றையும் போக்கும், சிறுநீர்க் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் போன்றவற்றையும் போக்கும் தன்மை நாவல் பழத்திற்கு இருக்கிறது.
இதுதவிர, நாவல் பழத்தில் புரோட்டின், நார்சத்து, விட்டமின் சி, டி போன்றவையும் இருக்கிறது. தற்போது பல ஊர்களில் நாவல் மரம் இல்லை. மக்களுக்குத் தெரியாத இடங்களில் மட்டும் இருக்கிறது. பொதுவாக நாவல் மரங்களை வளர்த்தால் நல்லது. ஆனா‌ல் வீட்டில் வளர்ப்பது அவ்வளவு விசேஷம் கிடையாது. நிலங்களில் வைத்து வளர்க்கலாம். நாவல் மரங்களைத் தேடி கரு வண்டுகள் அதிகமாக வரும்.
கரு நாகங்களும் நாவல் மரத்தில் வந்து குடி கொள்ளும். அந்த மரத்திலிருந்து வெளிப்படக்கூடிய வைப்ரேஷன், அதனுடைய காற்‌றி‌ன் கு‌ளி‌ர்‌ச்‌சி போன்றவை இவைகளை ஈர்க்கும். அதனால் இதனை வீடுகளில் வளர்க்காமல், விளை நிலங்கள், தோட்டம் போன்ற இடங்களில் வளர்த்தால் நல்லது. அந்தக் காற்று உடலிற்கும் நல்லது, மகிழ்ச்சியும் தரக்கூடியது

Sunday, 12 August 2018

ஆசியாவிலேயே மிகப்பெரியது தமிழகத்தில் தான் உள்ளது

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்.
இன்று ப்ளூடோ என்ற ஓன்பதாவது கோள் நமது பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கபடுவதற்கு முக்கியமான காரணம் இந்த இடம். வரலாற்று சிறப்புமிக்க இடம்.
நிறைய எரிக்கல் , துணை கோள்கள் , நம்மை போல் உயிரினங்கள் வாழ்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படும் சூரிய குடும்பங்கள் , இன்னும் இங்கு நம்மவர்கள் ஆற்றி உள்ள சாதனைகள் கணக்கில் அடங்காது , அப்படி பட்ட சிறப்புமிக்க இடத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா ..?
இது வேலூர்-திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் ஜவ்வாது மலைகளில் காவலூர் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது.

இதனை நமது முன்னால் பிரதமர்.திரு. இராஜீவ் காந்தி யால் திறந்து வைக்கப்பட்டது. இந்த இடம் பூமத்திய ரேகை ( Equator ) மையப்பகுதியில் அமைந்துள்ளது. அமேரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் கூட Northern Hemisphereஐ மட்டும் தான் ஆராய்ச்சி செய்ய முடியுமாம். ஆனால் இந்த பகுதிகளில் இருந்து Northern and Southern Hemispheres களை ஆராய்ச்சி செய்ய முடியும் என்பதுதான் இந்த இடத்தின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.
Southern Hemisphere ல துள்ளியமாக ஆராய்ச்சி செய்ய அமெரிக்கர்கள் கூட இங்கு தான் வர வேண்டும்.
மற்றுமொரு முக்கியமான அம்சம் இங்கு இருந்து மட்டுமே 300 நாட்களுக்கு மேலாக திறந்த வான் வெளி (

Clear Sky ) கிடைக்கின்றன.
இந்த தொலை நோக்கி யின் கண்ணாடி( Lens ) 9.3 ( 90 இன்ச் ) மீட்டர் Diameter , உங்களால் நம்ப முடிகிறதா.??? இன்னும் ஆச்சரியமான விஷயம் இது முழுக்க முழுக்க இந்தியர்களால் குறிப்பாக தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது.

இங்கு 6 இன்ச், 10 இன்ச் , 13 இன்ச் , 18 இன்ச் , 24 இன்ச் , 30 இன்ச் , 40 இன்ச் , 48 இன்ச் மற்றும் 90 இன்ச் Telescope பயன்பாட்டில் உள்ளது. இந்த 48 இன்ச் Telescope ஜெர்மன்-ரஷ்யா-இந்தியா கூட்டு தொழில் நுட்பத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்கு நடைபெற்ற கண்டுபிடிப்புகள் மூலம் நமது நாடு உலக அரங்கில் தடம் பதித்தது வார்த்தைகளாளும் மற்றும் எழுத்துக்களாலும் கூற இயலாது.
எனது கல்லூரி படிக்கும் சமயத்தில் நான் மாணவனாக இந்த ஆராய்ச்சி மையத்தில் தங்கி இங்கு ஆராய்ச்சியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.

இங்கு ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு மேல் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் இங்கு அனுமதிக்கபடுவார்கள்.அவர்களுக்கு உங்கள் கண்களுக்கு பூமியை தவிர்த்து அனைத்து கிரகங்கள், புகழ்பெற்ற நட்சத்திரங்கள், கோள்கள், துனை கோள்கள் காண்பிக்கப்படும். உங்கள் பிள்ளைகள் பள்ளி புத்தகங்களில் மட்டும் படிக்கும் அவையை அவர்கள் புற கண்களுக்கு காண்பிக்க ஒரு அரிய வாய்ப்பு.
இங்கு அருகில் பீமா நீர்வீழ்ச்சி, குழந்தைகளுக்கான பூங்கா , படகு சவாரி, கற்கால மனிதர்கள் வாழ்ந்த வீடு, ஆங்கிலேயர்கள் கட்டிய கண்ணாடி மாளிகை, இயற்கை மருத்துவ பூங்கா, இயற்கை மலைத்தேன், பலாப்பழம், கொய்யா, ராம் சீதா பழம் அதிகமாக கிடைக்கும்.
உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் , உங்கள் கண்களுக்கு மிருகங்கள் கண்களில் படலாம்.
இங்கு தங்கும் விடுதிகள் இல்லை , வனத்துறை மற்றும் டிராவல்ஸ் பங்களா மட்டுமே உள்ளது.

உணவிற்கு ஜமூனாமத்தூர் மற்றும் ஆலங்காயத்திற்கு தான் செல்ல வேண்டும். இது மிகவும் அடர்தியான காட்டு பகுதி ஆதலால் டார்ச் லைட் போன்ற உபகரணங்கள் மிகவும் முக்கியமானது.
இந்த இடத்திற்கு செல்ல
1. பெங்களூர்- திருப்பத்தூர்-ஆலங்காயம்-காவலூர்.
2.சென்னை-வேலூர்-வாணியம்பாடி – ஆலங்காயம்-காவலூர் ,
3. சேலம்- அரூர் – ஊத்தங்கரை – திருப்பத்தூர் – ஆலங்காயம்-காவலூர்
4.பாண்டிச்சேரி – திருவண்ணாமலை – போளூர் – ஜமூனாமத்தூர் – காவலூர்.

Contact
Indian Institute of Astrophysics,
Kavalur Tamilnadu

முகநுல் பகிர்வு

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...