Tuesday, 21 August 2018

கடல் நீர் மட்டம் உயர்வதால் சுனாமி அபாயம்: மிரட்டும் அதிர்ச்சி தகவல்

தற்போது பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட போது, கடல் நீர் மட்டம் உயர்ந்து தெரிகிறது. இதனால், ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்கும் சுனாமி அபாயம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேராசிரியர் ஆய்வு: பருவ நிலைமாற்றத்தால், கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் வர்ஜீனியா தொழில்நுட்ப உதவி பேராசிரியர் ராபர்ட் வெயிஸ் தலைமையில் நிபுணர்கள் குழு ஆய்வு செய்தது.

கடல் நீர் மட்டம் உயர்வு: பருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் தற்போது உயர்ந்து சிறிதளது உயர்ந்துள்ளது. குறிப்பாக தெற்கு சீனாவில் மகாயூ கடலில் 1.5 அடி முதல் 3 அடி வரை கடல் நீர் உயர்ந்துள்ளது.

ரிக்டரில் 8.8 நிலக்கம் ஏற்படும் அபாயம்: அந்த பகுதிகளில் மக்கள் தொகை அடர்த்தியாகவே இருக்கின்றது. கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், அங்கு 8.8 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுனாமி அபாயம் ஏற்பட்டுள்ளது.


உலகம் முழுக்க தாக்கும் அபாயம்: தொடக்கத்தில் தென்சீன கடல் பகுதி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து தொடங்கி தெற்கு தைவான் வழியாக உலகம் முழுக்க சுனாமி தாக்குதல் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கட்டுரை இதழில் தகவல்கள் வெளியாகியுள்ளதால் பரப்பு ஏற்பட்டுள்ளது.

from tamil.gizbot

ஆண்டுக்கு ஒரு நீட் தேர்வு.. சிபிஎஸ்இக்கு பதில் என்.டி.ஏ தேர்வை நடத்தும்: மத்திய அரசு புது அறிவிப்பு

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஜூலை 7ஆம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், வெளியிட்ட அறிக்கையில், ஆண்டுக்கு இரு முறை ஆன்-லைன் மூலமாக நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவித்திருந்தது. இதையடுத்து கடுமையான எதிர்ப்புகள் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எழுந்தன. மேலும் நீர் தேர்வு, எழுத்து தேர்வு மூலமாகவே, நடைபெற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன.
இதையடுத்து இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் நீட் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் அதுவும், எழுத்துத் தேர்வு மூலமாக நடைபெறும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பழைய அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. 2018 நவம்பர் 1ம் தேதியிலிருந்து 30ம் தேதிவரை நீட் தேர்வுக்காக விண்ணப்பிக்கலாம். 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி அட்மிட் கார்டுகளை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மே 5ம் தேதி தேர்வு நடைபெறும், ஜூன் 5ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும். சிபிஎஸ்இ இதுவரை நீட் தேர்வை நடத்திய நிலையில், இனிமேல் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (NTA) தேர்வை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ கடந்த வருடம் நடத்திய நீட் தேர்வு பெரும் குழறுபடிகளை உள்ளடக்கியிருந்தது. தமிழில் மொழியாக்கம் செய்ததிலும் பெரும் தவறுகள் நடந்தன. சென்னை ஹைகோர்ட் மதுரை கிளை, சிபிஎஸ்இ செயல்பாட்டுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தது. கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி ‘டிஸ்மிஸ்’ - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களை கிண்டல் செய்த ஊழியரை வேலையில் இருந்து நீக்கிய நிறுவனம்

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களைக் கிண்டல் செய்து சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்த ஊழியரை உடனடியாக வேலையைவிட்டு தனியார் நிறுவனம் நீக்கியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த யூசுப் அலி. இவர் கேரளாவில் பிறந்தவர் என்றபோதிலும், குறிப்பிட்ட வயதுக்குப்பின் ஓமன் நாட்டுக்குச் சென்று வர்த்தகம் செய்து மிகப்பெரிய தொழிலதிபராக இருந்து வருகிறார். இவரின் நிறுவனம் லூலு குரூப் இன்டர்நேஷனல் என்று அழைக்கப்படுகிறது. கேரளாவில் கொச்சி, எர்ணாகுளம், திருவனந்தபுரத்தில் இவரின் நிறுவனத்தின் கிளைகள் உள்ளன.
 
மழைவெள்ளத்தால் கேரள மாநிலம் பாதிக்கப்பட்ட நிலையில், லூலு குழுமத்தின் தலைவர் யூசுப் அலி, ரூ.12 கோடி நிதியுதவியை முதல்வர் பினராயி விஜயனுக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும், கேரள மாநிலத்துக்குத் தொடர்ந்து நிவாரணப் பொருட்களை அனுப்பி வைப்பதாகவும் அரசிடம் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், ஓமன் நாட்டில் லூலு குழுமத்தின் நிறுவனத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ராகுல் செரு பழயட்டு பணியாற்றிவந்தார். இவர் லூலு குழுமத்தின் நிதித்துறையில் பணியாற்றி வந்தார். கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் மக்கள் சிக்கி இருப்பதைப் பார்த்து ராகுல் புகைப்படம் வெளியிட்டு பேஸ்புக்கில் கிண்டலாகக் கருத்துக்களை வெளியிட்டு இருந்தார்.
இந்தக் கருத்து ஏற்கெனவே மழைவெள்ளத்தில் சிக்கி, உறவுகளையும், சொந்தங்களையும் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கும் கேரள மக்களுக்கு மேலும் வேதனையைத் தருவதாக இருந்தது. இந்தக் கருத்துக்கு ஏராளமான மக்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்தச் சூழலில் ராகுலின் பொறுப்பற்ற செயலைக் கண்டித்த லூலு குழும நிறுவனம் அவரை உடனடியாக வேலையில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் நிறுவனத்தின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து ஓமனில் உள்ள லூலு குழும நிறுவனத்தின் மனிதவள மேலாளர் வெளியிட்ட அறிவிப்பில், “ கேரள மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், புண்படுத்தும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்த ராகுல் உடனடியாக நிறுவனத்தில் இருந்து நீக்கப்படுகிறார். அவர் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் விடுவிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், லூலு குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வி. நந்தகுமார் கூறுகையில், “கேரள மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், அவர்களை நோகடித்த ராகுலை உடனடியாக வேலையில் இருந்து நீக்கியுள்ளோம்.இதுபோன்ற செயல்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்பதை நாங்கள் எங்கள் நடவடிக்கை மூலம் சமூகத்துக்கு சொல்லி இருக்கிறோம். எங்கள் நிறுவனம் எப்போதும் மனிதநேயத்துக்கும், மனிதர்களின் உணர்வுகளுக்கும் தொடர்ந்து மதிப்பளிக்கும்” என கலீஜ் டைம்ஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்துக்கு பின் ராகுல் பேஸ்புக்கில் வெளிப்படையாக மன்னிப்புக் கோரியுள்ளார். “நான் மனம்வருந்தி மன்னிப்பு கோருகிறேன். கேரள மாநிலத்தின் அப்போதைய வெள்ள சூழலை நான் உணரவில்லை. அதன் தீவிரம் தெரியாமல் நான் கருத்துக்களைத் தெரிவித்துவிட்டேன். என்னுடைய கருத்து இந்த அளவுக்கு மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தி இருக்கும் என்பதை உணரவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

பிரிந்த வடகொரியா, தென்கொரியா குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு

இராண்டாம் உலகப் போரின் முடிவில் கொரியா வடகொரியா, தென்கொரியா என இரண்டாக உடைந்தது. அதனைத் தொடர்ந்து 1953-ல் வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் போர் ஏற்பட்டது.

60 ஆண்களுக்குப் பிறகு இந்தப் போரில் பிரிந்து போன குடும்பங்கள் ஒன்றாக இணையும் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. தென்கொரியாவைச் சேர்ந்தவர்கள் வடகொரியாவுக்குச் சென்று போரின்போது பிரிந்த தங்கள் உறவினர்களைச் சந்தித்தனர்.


இந்தச் சந்திப்பு வடகொரியாவின் சுற்றுலாத் தலமான மவுண்ட் கும்காங் நகரில் சனிக்கிழமை நடைபெற்றது.
இரு நாட்டுக் குடும்பங்களின் சந்திப்பில்  89 வயதான சோ சன் டு தனது மூத்த சகோதரி பற்றிக் கூறும்போது,  "எனக்கு நினைவிருக்கிறது நீ எவ்வளவு அழகாக இருப்பாய் என்று... உன்னை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது'' என்றார்.
பல ஆண்டுகளாக பிரிந்திருந்த உறவினர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி அழுதனர். வரும் புதன்கிழமைவரை நடைபெறும் இந்தச் சந்திப்பில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சந்தித்துப் பேச உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

10-ம் வகுப்பு முடித்த தனித்தேர்வர்கள் நேரடியாக பிளஸ் 2 தேர்வெழுத முடியாது: தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு முடித்த தனித்தேர்வர்கள் இந்த கல்வியாண்டு முதல் நேரடியாக பிளஸ் 2 தேர்வெழுத முடியாது என, தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “நடைபெறவுள்ள செப்டம்பர்/அக்டோபர் 2018 பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு இத்துறையால் நடத்தப்பட்ட மேல்நிலை தேர்வெழுதி தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்து ஹால் டிக்கெட் பெறப்பட்டு தவிர்க்க முடியாத காரணங்களால் தேர்வுக்கு வருகை புரியாத தனித்தேர்வர்கள், தோல்வியுற்ற அல்லது வருகை புரியாத பாடங்களைத் தேர்வெழுத ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசாணை எண்.185, பள்ளிக்கல்வி துறை, நாள் 9.08.2017 இன் படி, பழைய நடைமுறை பாடத்திட்டத்தின் படி (200 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 1200 மதிப்பெண்களுக்கு) தேர்வெழுதி தோல்வியுற்ற மேற்குறிப்பிட்ட வகை தனித்தேர்வர்களுக்கு தேர்வர்கள் செப்டம்பர்/அக்டோபர் 2018 மற்றும் மார்ச் 2019 ஆகிய இரு பருவங்களில் மட்டுமே தோல்வியுற்ற/வருகை புரியாத பாடங்களைத் தேர்வெழுத வாய்ப்பளிக்கப்படும்.
அரசாணை 1(டி), எண்.573, பள்ளிக்கல்வி துறை, நாள் 03.10.2017 இன் படி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று நேரடி தனித்தேர்வராக பிளஸ் 2 தேர்வெழுத இப்பருவம் முதல் விண்ணப்பிக்க இயலாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு முடித்த தனித்தேர்வர்கள் இதுநாள் வரை நேரடியாக பிளஸ் 2 தேர்வை எழுத முடியும். இந்நிலையில், தனித்தேர்வர்கள் நேரடியாக பிளஸ் 2 தேர்வெழுத முடியாது என்ற அறிவிப்பின் மூலம், அவர்கள் பிளஸ் 1 பொதுத்தேர்வை முடித்த பிறகே பிளஸ் 2 தேர்வெழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக அளவில் வரி ஏய்ப்பு செய்வதாக புகார்; மாதச் சம்பளதாரர்களை குறிவைக்கும் வருமானவரித் துறை: புதிய தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்ய முடிவு

மாதச் சம்பளம் வாங்குபவர்களும் வருமான வரி செலுத்துவதில் அதிக அளவில் மோசடி செய்வதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, ரிட்டன் தாக்கல் விண்ணப்பங்களைத் தீவிர ஆய்வுக்கு உட்படுத்த வருமானவரித் துறை முடிவு செய்துள்ளது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக் கையை அதிகரிக்கவும், வரி ஏய்ப்பு செய்பவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும் வருமானவரித் துறை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.


வரி ஏய்ப்பு செய்பவர்களைக் கண்டுபிடித்து, சோதனை நடத்துவதற்காக தென் மண்டல வருவாய் புலனாய்வுப் பிரிவில் தனிக்குழுவும் ஏற்படுத்தப்பட் டுள்ளது. இந்தக் குழுவினர்தான் கடந்த சில மாதங்களாக பிரபல நிறுவனங்களில் சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்தக் குழுவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பெங்களூருவில் மாதச் சம்பளம் வாங்கும் முன்னணி ஐடி நிறுவனங்களைச் சேர்ந்த சில ஊழியர்கள் பெரிய அளவிலான மோசடி செய்ததை வருமானவரித் துறை கண்டுபிடித்தது. இதனால் மாதச் சம்பளம் வாங்குபவர்களின் வரி தாக்கல் விவரங்களையும் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்த வருமானவரித் துறை முடிவு செய்துள்ளது.
பெங்களூருவில் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்தவர்களின் ஆவணங்களை ஆய்வு செய்தபோது, போலியான நஷ்ட கணக்குகளைத்  தெரிவித்து இருப்பது தெரிந்தது. குறிப்பாக, வங்கிக் கடன் மூலம் வாங்கிய வீட்டினால் நஷ்டம். எனவே, நான் கட்டிய வருமான வரியை திரும்பக் கொடுக்குமாறு சுமார் ஆயிரம் பேர் ரிட்டன் தாக்கல் செய்திருந்தனர். இதன் மூலம் அவர்கள் திரும்பப் பெற நினைத்த தொகையின் மதிப்பு ரூ.18 கோடி.
போலியான ஆவணங்கள்
வீட்டினால் நஷ்டம் ஏற்பட்டதாக அவர்கள் அளித்த ஆவ ணங்களைச் சேகரித்து விசாரணை நடத்தியதில், குறிப்பிட்ட சில தணிக்கையாளர்கள் அவற்றை தயார் செய்து கொடுத்தது தெரிந்தது. தணிக்கையாளர்களின் அலுவலகங்களில் ஆய்வு செய்தபோது, அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியாகத் தயார் செய்து கொடுக்கப்பட்டது தெரிந்தது.
அதைத் தொடர்ந்து போலியான ஆவணங்கள் மூலம் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்த நபர்களின் ஐடி அலுவலகத்துக்கே நேரில் சென்று வருமானவரித் துறையினர் விசாரணை நடத்தினர். போலி ஆவணங்கள் தொடர்பாக சிபிஐயிடம் வருமானவரித் துறை புகார் அளித்துள்ளது.
மாதச் சம்பளம் வாங்குபவர் களும் பெரிய அளவில் மோசடியில் ஈடுபடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மாதச் சம்பளக் காரர்களைக் கண்காணிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வீட்டுச் சொத்தின் மீது நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக  அறிக்கை சமர்ப்பித்தால் வருமானவரித் துறை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்யவும் முடிவு செய்துள்ளது.  போலிகளைக் கண்டுபிடிக்க வருமானவரித் துறையும்  ‘ரோபோ ஆடிட்’ என்ற தொழில்நுட்பத்தைப் பெரிய அளவில் பயன்படுத்தத் துவங்கியுள்ளது. 
காலக்கெடு நீட்டிப்பு
2017-2018 ஆண்டுக்கான வருமானவரிக் கணக்கு தாக்கல்  செய்துள்ளவர்களின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டில் தாக்கல் செய்தவர்களை விட இருமடங்காக அதிகரித்துள்ளது. இதுவரை சுமார்  3.5  கோடி பேர் ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர். இதனால் வருமானவரிக் கணக்கு ரிட்டன் தாக்கல் செய்வோரின் வசதிக்காக அதற்கான காலக் கெடு  வருகிற 31-ம் தேதி வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது.
இருமடங்கு அதிகரிப்பு
வருமானவரிக் கணக்கு ரிட்டன் தாக்கல் செய்வது இருமடங்காக அதிகரித்துள்ளதைப் போல செலுத்திய வரியைத் திரும்பப் பெறுவதும்  அதிகரித்துள்ளது.  கடந்த ஆண்டில்  ரூ.57,551 கோடியை வரி செலுத்தியவர்கள் திரும்பப்  பெற்றுள்ளனர்.  ஆனால் இந்த ஆண்டு இதுவரை மட்டுமே 77,800  கோடி ரூபாயைத்  திரும்பக் கேட்டு ரிட்டன் ஆவணங்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...