Showing posts with label விவசாயம். Show all posts
Showing posts with label விவசாயம். Show all posts

Thursday, 16 August 2018

மாதுளை நடுங்க பலன் அதிகம்

வறட்சியை தாங்கி வளரக்கூடிய பழ பயிர்களில் முதன்மையானது மாதுளை. அனைத்து மண் வகைகளிலும் வளரக்கூடிய குற்றுமர வகை. மாதுளைக்கு சத்துக்களும் சற்று கூடுதலாக தேவைப்படும். மாதுளையில் பல ரகங்கள் உள்ளன. இவற்றில் முத்துக்கள் அடர் சிவப்பு நிறத்தில் உள்ள இரகங்கள் பிரபலமானவை.
நடவு செய்யும்பொழுது செடிக்கு செடி இடைவெளி பத்து முதல் பன்னிரெண்டு அடி வரை இருக்கவேண்டும். ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட வயதுடைய பதியன் குச்சிகளை நடவு செய்யலாம். அரை அடி அகலம் மற்றும் ஒன்னரை அடி ஆழம் உடைய குழிகள் எடுத்து நடவு செய்வது சிறந்தது.
தயார் செய்த குழியில், நுன்னுயிர் உரம் கலந்த மண்புழு உரத்துடன் வேப்பம்புண்ணாக்கு மற்றும் சிறிது சுண்ணாம்பு தூள் கலந்து குச்சியை சுற்றி இடவேண்டும். மண் தன்மைக்குஏற்ப தண்ணீர் பாய்ச்சவேண்டும். மாதுளை துளிர்கள் வளரும் போது அனைத்தும் வளரவிடாமல் குறிப்பாக இரண்டு மற்றும் மூன்று துளிர் மட்டும் விட்டு மீதி கவாத்து செய்வதால் வளர்ச்சி வேகமாக இருக்கும்.
மூன்றாவது ஆண்டு இறுதியில் காய்ப்பு ஆரம்பிக்கும். பூக்கள் உதிராமல் தடுக்க மொட்டுகள் ஆரம்பிக்கும் போது சத்துக்கள் மற்றும் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். நான்கு மாதம் கழித்துதான் பழுக்க ஆரம்பிக்கும்.
மாதுளையை அதிகமாக தாக்கும் நோய்கள் சாறு உறிஞ்சும் பூச்சி மற்றும் பழ ஈக்கள். கற்பூரகரைசல் பூக்கள் தோன்ற ஆரம்பித்தது முதல் தெளித்தால் அளவுக்கு அதிகமாக பூக்கள் மற்றும் அனைத்து நோய்களையும் முற்றிலும் தடுக்கலாம். மாதுளை வருடத்தில் ஒரு முறை மட்டுமே காய்க்கும்.
மேம்படுத்தப்பட்ட சாணி கரைசல் வேரில் அளிப்பதன் மூலம் கரும் பச்சை நிற இலைகள் தோன்றும். திரட்சியான மற்றும் சுவையான பழங்கள் கிடைக்கும். மண்புழு உரம் மாதம் ஒருமுறை வேரில் இடலாம். மாதுளையில் காய்ப்பு முடிந்தவுடன் கவாத்து செய்ய வேண்டும். செடிகளின் அடி பகுதியில் தோன்றும் துளிர்களை வெட்டி விடவேண்டும்.

Monday, 6 August 2018

இயற்கை களைக்கொல்லி தயாரித்தல்

தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் 10 லிட்டர் கோமியம் 2 கிலோ எருக்கம் இலை 2 கிலோ - கல்உப்பு அரைக்கிலோ – சுண்ணாம்புக்கல் (சுண்ணாம்பு பவுடரை சேர்க்கக்கூடாது) தேவைகேற்ப எலுமிச்சை பழம் செய்முறை எருக்கம் இலை 2 கிலோவை நன்றாக இடித்து அல்லது மிக்சியில் போட்டு அரைத்து அவற்றை கோமியத்தில் ஊற விடவும். பிறகு சுண்ணாம்புக் கல்லையும் அவற்றில் போட்டு ஊற விட வேண்டும். கல் உப்பை தூளாக்கி அவற்றுடன் கலந்து ஒரு வாரம் வரை ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் இயற்கை களைக்கொல்லி தயாராகி விடும். பயன்படுத்தும் முறை களைக்கொல்லி கரைசல் ஒரு லிட்டர் 9 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து களைகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும். தெளிக்கும் பொழுது ஒரு எலுமிச்சைப் பழத்தின்சாறு கலந்து தெளிக்கவும் பயன்கள் சிறிய களைகள் முதல் பெரிய களைகள் வரை நன்றாக காய்ந்து விடும் களைக்கொல்லி தெளிக்கும் பொழுத பயிர் சாகுபடி செய்திருந்தால் அவற்றின் மேல் படாதவாறு தெளிக்க வேண்டும். முற்றிலும் இயற்கையான களைக்கொல்லி செலவு குறைவு பலன் அதிகம் சுற்றுபுற சூழல் பாதுகாப்பானது

- Karuppaih

பயிர்களுக்கு மண்புழு உரம் இடுதல்


🌿 பயிருக்கு ஏற்றவாறு உரங்கள் இட்டால் மிக அதிக லாபத்தை நம்மால் ஈட்ட முடியும் அதாவது எந்த பயிருக்கு எவ்வளவு மண்புழு உரம் இட வேண்டும் என்பது குறித்து இங்கு காணலாம்.

மக்காச்சோளப்பயிருக்கு ......

🌱 அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு உரத்தை இடலாம். பின்னர் 40 நாட்கள் கழித்து 125 கிலோ மண்புழு உரத்தை இடலாம்.

கடலை, வெங்காயப் பயிருக்கு...

🌱 அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு உரம் இடலாம். பின்னர் இரண்டாம் களை எடுத்தவுடன் 125 கிலோ மண்புழு உரத்தை இடலாம். மூன்றாம் களை எடுத்தவுடன் 125 கிலோ மண்புழு உரத்தை இடலாம்.

மரவள்ளி கிழங்கிற்கு......

🌱 அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு உரம் இடலாம். பின்னர் 90 நாட்கள் கழித்து 250 கிலோ மண்புழு உரத்தை இடலாம். 150 நாள் கழித்து 250 கிலோ மண்புழு உரம் இடலாம்.

கரும்பு மற்றும் வாழை பயிருக்கு.....

🌱 அடியுரமாக ஏக்கருக்கு 500 கிலோ மண்புழு உரம் இடலாம். பின்னர் 90 நாட்கள் கழித்து 250 கிலோ மண்புழு உரம் இடலாம். 180 நாட்கள் கழித்து 250 கிலோ மண்புழு உரம் இடலாம்.

வெற்றிலை பயிருக்கு....

🌱 கொடி தூக்கிய 60-ம் நாளில் கொடி ஒன்றுக்கு கால் கிலோ மண்புழு உரம் இடலாம்.

🌱 அதன் பின்னர் 100 நாள் கழித்து கால் கிலோ, 150 நாள் கழித்து கால் கிலோ, 200 நாள் கழித்து கால் கிலோ மண்புழு உரம் இட்டு வர நல்ல விளைச்சல் கிடைக்கும்.

மிளகாய், கத்தரி பயிருக்கு....

🌱 அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு உரத்தை இடலாம். பின்னர் 60 நாட்கள் கழித்து 250 கிலோ மண்புழு உரத்தை மூன்று முறை பிரித்து இடலாம்.

மலர் வகைகளுக்கு...

🌱 குறுகிய கால மலர் வகைகளான செவ்வந்தி, மரிக்கொழுந்து, மருகு, வாடாமல்லி, கோழிக்கொண்டை போன்றவற்றிற்கு, அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு உரத்தை இடலாம்.

🌱 நீண்டகால மலர் வகைகளான மல்லிகை, ரோஜா, காக்கட்டான், முல்லை, சம்பங்கி, கனகாம்பரம், அரளி போன்றவற்றிற்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செடி ஒன்றிற்கு 250 கிராம் மண்புழு உரத்தை இட்டு வந்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும்.

👉 மண்புழு உரம் இடுவது என்பது மண்ணிற்கேற்ப மாறுபடும். மேலே குறிப்பிடப்பட்டவை பொதுவாக இடும் அளவு ஆகும்.

👉 மண்புழு உரத்தை அதிகம் இட்டாலும் தவறில்லை. பயன் கிடைக்கும்.

👉 மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மண்புழு உரம் இட வேண்டிய அவசியம் இருக்காது. பண்ணைக்கழிவுகளை மட்டும் நிலத்தில் போட்டு வந்தால் போதுமானது.

- Karuppiah

Thursday, 26 July 2018

விவசாயி கடன் அட்டைத் திட்டம்


யிர் உற்பத்தி மற்றும் இடுபொருள் வாங்குதல் போன்ற சிறு அளவிலான பண தேவைகளை அதிக சிரமமின்றி உடனுக்குடன் வங்கி அமைப்புகளிலிருந்து பெற்றுத்தருவதே கிஸான் கடன் அட்டைத் திட்டத்தின் குறிக்கோளாகும்.
கிஸான் கடன் அட்டைத் திட்டத்தின் பலன் என்ன?
  • பணப் பட்டுவாடாநடைமுறைகளை எளிமைப்படுத்துகிறது
  • பணம் மற்றும்பொருள் வாங்குதல் தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது
  • ஓவ்வொரு பயிருக்கும்தனித்தனியாகக் கடனுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை
  • எந்த நேரத்திலும்உறுதியாகக் கிடைக்கக்கூடியதால் விவசாயிகளுக்கு வட்டிச்சுமையை வெகுவாக குறைக்கக்கூடியது
  • விதைகளையும்உரங்களையும் விவசாயிகள் தங்கள் வசதி மற்றும் தேர்வுக் கேற்றவகையில் வாங்கிக்கொள்ளலாம்
  • வாங்கும்போதேமுகவர்களிடமிருந்து தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம்
  • மூன்றுவருடங்களுக்கான கடன் வசதி உண்டு. பருவகால மதிப்பீடுகள் தேவையில்லை
  • விவசாய வருமானம்அடிப்படையில் அதிகபட்ச கடன் வரம்பு உண்டு
  • கடன் வரம்பைபொறுத்து எந்தத் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம்
  • பணம் திரும்பச்செலுத்துதல் அறுவடைக்குப் பிறகு மட்டுமே
  • விவசாய கடனுக்குவழங்கப்படும் அதே வட்டி விகிதம்
  • விவசாய கடனுக்குவழங்கப்படும் அதே கடன் உத்திரவாதம், பாதுகாப்பு, குறிப்பிட்ட வரம்பு மற்றும் ஆவணநிபந்தனைகள்
கிஸான் கடன் அட்டையைப் பெறுவது எப்படி?
  • உங்கள் அருகாமையிலுள்ள பொதுத்துறை வங்கிகளை அணுகி தகவல்களைப் பெறுங்கள்
  • தகுதியுடைய விவசாயிகள் கிஸான் கடன் அட்டையையும், வங்கி பாஸ் புத்தகத்தையும் பெறுவார்கள். இது உடையவரின் பெயர், முகவரி, வைத்திருக்கும் நிலம் பற்றிய விபரம், பணம்பெறும் வரம்பு, செல்லுபடியாகும் காலம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று ஆகியவற்றைக் கொண்டிருக்கும். மேலும் இது, அடையாள அட்டையாகவும் தொடர் செயல்பாடு அடிப்படையிலான நடவடிக்கைகளின் பதிவை வசதிசெய்யும் வகையிலும் பயன்படும்.
  • பணம் பெறுவர் அட்டையும் பாஸ் புத்தகத்தையும், அந்தக் கணக்கை செயல்படுத்திக்கொள்ளும்போது சமர்ப்பிக்க கோரப்படுகிறார்.

முன்னணி வங்கிகளின் கிஸான் கடன் அட்டைகள்

  • அலகாபாத் வங்கி        - கிஸான் கடன் அட்டை
  • ஆந்திரா வங்கி           - ஏ பி கிஸான் பச்சை அட்டை
  • பரோடா வங்கி           - பி கே சி சி
  • இந்திய வங்கி            - கிஸான் சமாதன் அட்டை
  • கனரா வங்கி             - கிஸான் கடன் அட்டை
  • கார்ப்பரேஷன் வங்கி      - கிஸான் கடன் அட்டை
  • தேனா வங்கி             - கிஸான் தங்க கடன் அட்டை
  • ஓரியண்ட் காமர்ஸ் வங்கி  - ஓரியண்டல் பச்சை அட்டை
  • பஞ்சாப் தேசிய வங்கி      - பிஎன்பி கிருஷி அட்டை
  • ஹைதராபாத் ஸ்டேட் வங்கி- கிஸான் கடன் அட்டை
  • இந்திய ஸ்டேட் வங்கி     - கிஸான் கடன் அட்டை
  • சிண்டிகேட் வங்கி        - எஸ் கே சி சி
  • விஜயா வங்கி             - விஜய கிஸான் அட்டை
விவசாய கடன் அட்டைதாரர்களுக்கான தனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம்
விவசாயக்  கடன் அட்டைதாரர்களுக்கென தனி நபர் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

  • நோக்கம்: விபத்துக்களால் உண்டாகும்  (உள்நாட்டிற்க்குள்) இறப்பு (அல்லது) நிரந்தர ஊனங்களுக்கான இழப்பீடுகளை அனைத்து விவசாய கடன் அட்டைதாரர்களுக்கும் வழங்குவது
  • பயனாளிகள்: 70 வயது வரையிலான அனைத்து விவசாய கடன் அட்டைதாரர்களும்
இத்திட்டத்தின் மூலம் கீழ்கண்ட அளவு இழப்பீட்டு பயன்கள் பெறலாம்
  • விபத்து மற்றும் வன்முறை காரணமான மரணம் எனில் ரூ.50,000/-.
  • நிரந்தரமான ஒட்டுமொத்த ஊனம் எனில்  ரூ.50,000/- .
  • இரண்டு கைகள் அல்லது கால்கள் இழப்பு, இரண்டு கண்கள் இழப்பு, அல்லது ஒரு கண் மற்றும் ஒரு கை அல்லது கால் இழப்பு எனில். ரூ.50,000/-
  • ஏதேனும் ஒரு கை அல்லது கால், அல்லது ஒரு கண் இழப்பு எனில் ரூ.25,000/-.
மாஸ்டர் பாலிஸியின் காலம்:3 ஆண்டு காலத்திற்கு செல்லக் கூடியது.
காப்பீட்டுக் காலம்: ஆண்டு சந்தா செலுத்தும் வங்கிகளில் இருந்து பிரீமியம் பெற்ற நாளில் இருந்து ஓராண்டு வரை காப்பீடு நடப்பில் இருக்கும். மூன்றாண்டுத் திட்டமெனில், பிரீமியம் பெறப்பட்ட நாள் முதல் மூன்றாண்டிற்கு காப்பீடு செல்லும்
பிரீமியம்: விவசாய கடன் அட்டைதாரரின் ஆண்டு சந்தா ரூ. 15/- ல், ரூ. 10/- த்தை  நேரடியாகவும், ரூ. 5/- கடன் அட்டைதாரரிடமிருந்து வசூலித்தும், வங்கி செலுத்த வேண்டும்
செயல்படும் வழிமுறை:  இந்தச் சேவையை செயல்படுத்த நான்கு காப்பீட்டுக் கழகங்கள் சரக வாரியான அடிப்படையில் பொறுப்பேற்று உள்ளன. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, அந்தமான் – நிக்கோபார், பாண்டிச்சேரி, தமிழ்நாடு, லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளுக்கான சேவையை யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி (லி) நிறுவனம் வழங்குகிறது .
விவசாய கடன் அட்டைவழங்கும் வங்கிக்கிளைகள், அட்டைகள் வழங்கப்படுவதேற்ப, மாதா மாதம் விவசாயிகளின் பெயர் பட்டியலுடன், பிரீமியத் தொகையை இணைத்து அனுப்ப வேண்டும்.
இழப்பீட்டு தொகை பெறும் முறை:  இறப்பு, குறைபாடுகள், நீரில் மூழ்கி மரணம் ஆகியவற்றுக்கு, இன்சூரன்ஸ் கம்பெனிகளால் அதற்காக உள்ள அலுவலகங்களில் நிர்வாக முறைகள் செயல்படுத்தப்படும்.
ஆதாரம் : தமிழ் உழவன் நாளிதழ்

ஆட்டுசாணி என்றால் இவ்வளவு சக்திகளா…?

இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாதம்தான் ஆட்டு எரு. ஆட்டு எருவில், மாட்டு எருவில் உள்ளதைப் போல 2 மடங்கு தழைச் சத்தும், சாம்பல் சத்தும் உள்ளன. ஓர் ஆடு, ஓராண்டுக்கு 500 முதல் 750 கிலோ வரை எருவைக் கொடுக்கிறது.
ஓர் ஏக்கர் நிலத்தை எல்லா சத்துகளையும் கொண்டு வளப்படுத்த 100 ஆடுகளை வளர்த்தால் போதுமானது. ஆட்டு எரு மண் வளத்தைப் பெருக்கி, பசுமைப் புரட்சிக்கு வித்திடுகிறது என்றால் மிகையாகாது.
ஆட்டு எருவை மண்ணில் இட்டால் கரிமப் பொருள்களின் அளவு அதிகரித்து ஈரப் பதத்தை சேமிக்கும் திறன் அதிகமாகிறது.
ஆட்டு எருவில் உள்ள சத்துகளின் அளவு, ஆட்டு இனம் மற்றும் அவற்றுக்கு அளிக்கப்படும் தீவனத்தைப் பொருத்தே இருக்கும்.
ஆடுகளுக்கு புரதச்சத்து நிறைந்த தீவனங்களான குதிரை மசால், முயல் மசால், வேலி மசால், சுபா புல், தட்டைப் பயறு போன்ற தீவனங்களை அளித்தால், எருவில் தழைச்சத்தின் அளவு அதிகமாக இருப்பதோடு, நுண்ணூட்டச் சத்துகளும், தாது உப்புகளும் அதிகமாகக் காணப்படும்.
ஆட்டு எருவில் 60 முதல் 70 சதம் தண்ணீரும், 2 சதம் தழைச் சத்தும், 0.4 சதம் மணிச் சத்தும் 1.7 சதம் சாம்பல் சத்தும் உள்ளன. மேலும், பயிர் வளர்ச்சிக்குத் தேவையான போரான், மெக்னீசியம், கோபால்ட், தாமிரம், துத்தநாகம், மாலிப்டினம் சத்துகளும் அதிகளவில் காணப்படுகின்றன.
நம்முடைய அன்றாட விவசாயத்திற்கு அதிகளவில் ஆட்டு எரு தேவைப்படுமாயின் அவற்றை ஆழ்கூள முறையில் தயார் செய்யலாம்.
அதற்கு முதலில் ஆட்டுக் கொட்டகையின் தரைப் பகுதியில் நிலக்கடலைத் தோல், சிறிய துண்டுகளாக வெட்டிய வைக்கோல், இலைச் சருகுகள், மரத்தூள், தேங்காய் நார்க் கழிவு போன்றவற்றை அரை அடி உயரத்தில் ஓர் ஆட்டிற்கு 7 கிலோ என்ற அளவில் பரப்ப வேண்டும்.
இவ்வாறு பரப்பினால் ஆட்டுப் புழுக்கையானது இந்த ஆழ் கூளத்தில் படிந்துவிடும். சிறுநீர் ஆழ் கூளத்தால் உறிஞ்சப்பட்டு தழைச் சத்து வீணாகாமல் பாதுகாக்கப்படும். ஆழ் கூளத்தில் உள்ள ஈரத் தன்மையைப் பொருத்து 3-லிருந்து 4 மாதங்களுக்கு ஒரு முறை ஆழ் கூள் ஆட்டு எருவை விவசாயத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.
ஆழ் கூள முறையைப் பொருத்தமட்டில் 10 ஆடுகளிலிருந்து ஓராண்டில் இரண்டரை டன் தரமான எரு கிடைக்கும். இதில் 50 கிலோ யூரியாவில் உள்ளதைப்போல, தழைச் சத்தும், 37 கிலோ சூப்பர் பாஸ்பேட்டில் உள்ள மணிச் சத்தும், 40 கிலோ பொட்டாஷில் உள்ள சாம்பல் சத்தும் கிடைக்கும்.
இவ்வாறு ஆழ் கூள முறையில் பெறப்படும் ஆட்டு எருவை வேளாண் பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தினால் களை எடுக்கும் செலவு குறையும். மேலும், நெல், தக்காளி, மிளகாய், கத்தரி மற்றும் அனைத்து விதமான வேளாண்மைப் பயிர்களுக்கும் இந்த எருவைப் பயன்படுத்தினால் அதிக லாபம் அடையலாம்.
எனவே, ஆட்டு எருவை முறையாகப் பயன்படுத்தி இயற்கை வழி வேளாண்மைக்கு வித்திட்டால் ரசாயன உரங்களால் ஏற்படும் தீமைகளைக் குறைக்க முடியும்.
ஆடுகளின் மூலம்
இயற்கை உரம்.
வேளாண்மை செய்திகள்

Sunday, 22 July 2018

மண் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம்


  • இரசாயன உரங்கள், தேவைக்கேற்ப அதிகமாக உபயோகிப்பதை தடுக்கவும், சுற்றுசூழலை பாதுகாப்பதற்கும் மண் பரிசோதனை அவசியமாகும்
  • பயிர் அறுவடைக்கு பின் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறைந்து விடும். எனவே மண் பரிசோதனை செய்து மண் வளம் அறிய வேண்டியது அவசியமாகும்.
  • மண் அரிப்பு, நீர் கரையோட்டம் மற்றும் சத்துக்கள் ஆவியாதல் போன்ற காரணத்தினால் மண்வளம் குன்றிவிடும். எனவே மண் பரிசோதனை மூலம் மண் வளத்தை அறிந்துக்கொள்வது அவசியமாகும்.
  • மண் வளத்தை நிலைநிறுத்துவதன் மூலம் பயிரின் உற்பத்தி, மற்றும் லாபத்தை மேம்படுத்தலாம்
  • மண்ணின் வளத்தை பேணிக்காப்பதற்கு தேவையான அளவு அங்கக உரங்கள் மற்றும் கனிசமான இரசாயன உரங்கள் இடவேண்டும்
  • பயிரின் தேவை, மண்ணின் தன்மை, உர உபயோகத் திறன் முதலியவற்றை கருத்தில் கொண்டு உர நிர்வாகம் அமைந்திட வேண்டும்
  • தேவையான நேரத்தில் மண் பரிசோதனை செய்வதன் மூலம் சரிவிகித சம அளவு சத்துக்களை பயன்படுத்தி பயிரின் உற்பத்தியை அதிகரிக்கலாம்

மண் பரிசோதனைக்கு மண் மாதிரி சேகரிப்பது எப்படி?

1) ஒரு வயலில் எடுக்கும் மண் மாதிரி அந்த வயலின் சராசரி தன்மையைக் காட்டும் வகையில் இருக்க வேண்டும். மண்ணின் வளமும், தன்மையும், ஒரே வயலில் கூட இடத்திற்கு இடம் மாறுபடும். ஆகையால், ஒரே இடத்தில் மண்மாதிரி எடுக்கக்கூடாது. ஏக்கருக்கு குறைந்தது 10 இடங்களில் எடுத்து கலந்து அதிலிருந்து கால் பங்கிட்டு முறையில் அரைகிலோ மண் மாதிரி எடுக்க வேண்டும்.

2) மண் மாதிரி எடுக்கும் சமயம் எரு குவிந்த இடங்கள், வரப்பு ஓரங்கள், மரநிழல் மற்றும் நீர் கசிவு உள்ள இடங்களை தவிர்க்க வேண்டும்.

3) மண் மாதிரி எடுக்க வேண்டிய இடத்திலுள்ள இலை, சருகு, புல், செடி ஆகியவற்றை மேல் மண்ணை நீக்காமல் கையினால் அப்புறப்படுத்த வேண்டும்.

4) ஆங்கில எழுத்து V வடிவக் குழி குறிப்பிட்ட ஆழத்திற்கு வெட்ட வேண்டும். குழியின் இரு பக்கங்களிலும் மேலிருந்து கீழ்வரை ஒரே – சீராக அரை அங்குல கனத்தில் செதுக்கவேண்டும். வெட்டிய மண்ணை ஒரு சட்டியிலோ (அ) சாக்கிலோ போட வேண்டும். காய்ந்து வெடித்த வயலில் குழி வெட்ட சிரமமாக இருந்தால் மண்கட்டி ஒன்றை பெயர்த்து மேலே வைத்து அதன் பக்கவாட்டில் மண்ணை குறிப்பிட்ட ஆழத்திற்கு செதுக்கி எடுக்கவும்.

5) V வடிவ குழியின் ஆழம் பயிருக்கு பயிர் மாறுபடும்.
பயிர்ஆழம்
நெல், கேழ்வரகு, கம்பு, வேர்க்கடலைமேலிருந்து 15 செ.மீ.
பருத்தி, கரும்பு, மிளகாய், வாழை, மரவள்ளிமேலிருந்து 22.5 செ.மீ.
தென்னை, மா மற்றும் பழத்தோட்ட பயிர்களுக்கு மூன்று மாதிரிகள்30.60.90 செ.மீ.
6) களர், உவர் நிலத்தில் ஒவ்வொரு அடிக்கும் 1 மண் மாதிரி வீதம் 3 மாதிரி எடுக்கவும்.
7) நிலம் சாகுபடியில் இல்லாத சமயத்தில் மண்மாதிரி எடுக்கவேண்டும்.
8) வயலில் சேகரித்த மண் ஈரமாக இருந்தால் நிழலில் உலர்த்த வேண்டும். சுத்தமான தரையில் (அ) காகித விரிப்பில் மண்ணை சீராகப்பரப்பி நான்கு சமபாகங்களாகப் பிரிக்கவும். பின்னர் எதிர் மூலையில் இருபாகங்களில் உள்ள மண்ணை நீக்கி விடவும். மீண்டும் மண்ணை பரப்பி முன்பு செய்தது போல் நான்கு சமபாகங்களாக பிரித்து வேறு எதிர் எதிர் மூலையில் உள்ள மண்ணை நீக்கிவிடவும். ஈரமான மண் மாதிரியை அனுப்பினால் பிளாஸ்டிக் பையில் மண் மாதிரி விவரத்தாள் அல்லது அட்டையை வைக்கவும்.
9) நுண்ணூட்ட ஆய்வு மாதிரிகளை மூங்கில் குச்சியால் மேற்கண்ட முறைப்படி எடுக்கவும். பென்சிலால் எழுதினால் எழுத்து அழியாது இப்படி பகுத்து பிரித்து சுமார் அரை கிலோ மண்ணை துணிப்பையில் இட்டு கட்டி விபரங்களை இணக்கவும்.
வேளாண்துறை மண் பரிசோதனை நிலையம் (அ) இப்கோவின் நடமாடும் மண் ஆய்வகம் (அ) தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அமைந்த ஆய்வு கூடங்களின் மூலம் மண் மாதிரிகளை ஆய்வு செய்து பயன்பெறவும்.
    ஆதாரம்: இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனம்

    மண்ணின் மாறுபட்ட தன்மைகளால் ஏற்படும் விளைவுகள்

    • மண்ணில் களர்த்தன்மை (பி.எச்.8.5க்கு மேல்) அதிகரித்தால், பயிருக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதனால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படும். மகசூல் குறையும்.
    • உவர்த்தன்மை (ஈசி 3.0க்கு மேல்) அதிகரித்தாலும், பயிருக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படும். மகசூல் குறையும்.
    • தழைச்சத்து, பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது. அளவு அதிகமானால், பயிர் அதிகம் வளர்ந்து பூச்சி நோய்த் தாக்குதலுக்கு உட்படுகிறது. மகசூல் பாதிக்கப்படும்.
    • மணிச்சத்து, பயிரில் மணிகள் முதிர்ச்சி அடையும், வேர் வளர்ச்சிக்கும் உதவுகிறது. அளவு அதிகமானால் பயிருக்குக் கிடைக்காமல் மண்ணில் வீணாகிறது.
    • சாம்பல்சத்து பயிரில் பூச்சிநோய்கள் வராமல் காக்கிறது. வறட்சியைத் தாங்க உதவுகிறது. அளவு அதிகமானால் பயிருக்குக் கிடைக்காமல், மண்ணில் வீணாகிறது.
    மண் பரிசோதனை ஏன் செய்ய வேண்டும்?
    • உரச்செலவைக் குறைந்து அதிக மகசூல் பெற்றிட
    • மண்ணில் உள்ள களர், அமிலத்தன்மைகளை அறிந்து தக்க சீர்திருத்தம் செய்திட தழை உரம், தொழு உரம், ஜிப்சம், சுண்ணாம்பு இவற்றின் அளவை அறிந்து இடவும்.
    • மண்ணின் உவர்த்தன்மைகளை அறிந்து வடிகால் வசதியைப் பெருக்குதல். உப்பைத்தாங்கி வளரும் சூர்யகாந்தி, பருத்தி மிளகாய்ப் பயிர்களைச் சாகுபடி செய்தல்.
    • மண்ணில் உள்ள தழை, மணி சாம்பல் சத்துக்களின் அளவை அறிந்திடவும்.
    • பயிர்களுக்குத் தேவையான உரமிடும் அளவை அறிந்து உரமிடவும்.
    • தேவைக்கேற்கு உரமிடுவதால் உரச்செலவை குறைக்கவும்.
    • இடும் உரம் பயிருக்கு முழுமையாக கிடைத்திடவும்.
    • அங்ககச்சத்தின் அளவு அறிந்து நிலத்தின் நிலையான வளத்தை பெருக்கிடவும்.
    • மண்ணின் தன்மைக்கேற்ப பயிரைத் தேர்ந்தெடுக்கவும் மண் பரிசோதனை அவசியம்.

    Tuesday, 17 July 2018

    பயிர்களின் நீர் மேலாண்மை & திட்டங்கள்

    நீர் நிர்வாகம்

    இறவை நிலங்களில் விதைத்தவுடன், விதைத்த 3ம் நாள் மொட்டு உருவாகும் சமயம், 50 சத பூக்கும் தருணம், காய் வளர்ச்சியடையும் தருணங்களில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும்.
    நீர் மேலாண்மை
    • நீர் மேலாண்மை என்பது உலகின் பெரும்பாலான பகுதிகளில் சில கோணங்களில் ஏற்படுகின்ற, மழையளவு பற்றாக்குறையையும் மாறுபாட்டையும் கையாளப் பயன்படுத்தப்படுவதாகும்.
    • விதைமுளைத்தல், மண்ணிலிருந்து ஊட்டச்சத்தை உறிஞ்சுதல் மற்றும் ஒளிச்சேர்க்கை போன்ற செயல்களைச் செய்ய தாவரங்களுக்கு நீர் இன்றியமையாததாகும்.
    • ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தாவரங்களின் வளர்ச்சிக்காக நீர்ப்பாய்ச்சும் செயல் நீர் மேலாண்மை எனப்படும்.
    • கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், குளங்கள், ஏரிகள், ஆறுகள்,  அணைகள், கால்வாய்கள் போன்றவை நீர்ப்பாய்ச்சுதலுக்குத் தேவையான ஆதார மூலங்களாகும். சில விவசாயிகள் பற்றாக்குறையினை நிரப்ப நீர்ப்பாசனத்தைப் பயன்படுத்துகின்றனர்.
    பாரம்பரிய முறை
    • ககப்பிமுறை, சங்கிலி முறை, ஏற்றம் முறை போன்ற முறைகள் பல நூற்றாண்டுகளாக நமது நாட்டில் நீர்ப்பாசனத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் முறைகளாகும். இவை மலிவானவை ஆனால் திறன் குறைந்தவை.
    நவீன நீர்ப்பாசன முறை
    • வயல்களில் பயிர்வரிசைகளுக்கிடையே உள்ள உழவுக்கால் (சால்) வழியாக நீர் பாய்ச்சும் கால்வாய்ப்பாசனம், வயல் முழுதும் நீரைத் தேக்கி வைக்கும் தேக்கு நீர்ப்பாசனம்.
    • ஈரத்தன்மையை நீண்ட நேரம் தக்க வைத்துகொள்ள இயலாத மண்வகைகளுக்கான தெளிப்பு நீர்ப்பாசனம், மழை நீர் குறைவாகக் கிடைக்கும் காலங்களில் தாவர வேருக்கு மிக அருகில் நீரானது சொட்டு சொட்டாக விடப்படும் சொட்டுநீர்ப்பாசனம் ஆகிய பாசன முறைகள் நவீன காலங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
    • பொதுவாக விளை நிலங்களில் தேங்கும் நீர் தாவரங்களுக்கு ஊறு விளைவிக்கும் என்பதால் நீர்ப்பாய்ச்சுதலில் கவனமுடன் இருக்க வேண்டும். உலகம் முழுவதிலும் வேளாண்மைக்காக 6௦ சதவிகித நன்னீர் பயன்படுத்தப்படுகிறது.

    Tuesday, 3 July 2018

    அக்ரி இன்டெக்ஸ் 2018 !!

    அக்ரி இன்டெக்ஸ் 2018 !!

    🌲 விவசாயத்தில் நாம் அறிந்து வைத்த விஷயங்களை கற்றுக் கொண்டு வேளாண்மை செய்து வருகிறோம். ஆனால் நாம் விவசாயத்தில் அறிந்திட பல விஷயங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

    🌲 மேலும் விவசாயத்தில் உள்ள நவீன கண்டுப்பிடிப்பு, கருவிகள், தொழில்நுட்பங்கள் மற்றும் கால்நடை சார்ந்த விஷயங்களை நாம் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

    🌲 அந்த வகையில் வருகிற ஜீலை 13 முதல் 16-ம் தேதி வரை கோவை மாவட்டம், கொடிசியா வளாகத்தில் அக்ரி இன்டெக்ஸ் - 2018 என்ற தலைப்பில் விவசாயக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

    கண்காட்சி நடைபெறும் நாள் : ஜீலை 13, 14, 15 மற்றும் 16.07.2018 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

    நடைபெறும் நேரம் : காலை 10 முதல் மாலை 6 மணி வரை

    கண்காட்சியில் கலந்து கொள்வதற்கான கட்டணம் - முற்றிலும் இலவசம்.

    🌿 மதியம் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    முகவரி :

    கொடிசியா வளாகம்,
    ஜி.டி நாயுடு டவர்,
    கோவை மாவட்டம் - 641018.

    கருத்தரங்கம் முன்பதிவு செய்ய : 04222222396, 7402615182

    கண்காட்சியின் சிறப்பம்சங்கள் :

    🌿 இந்த கண்காட்சியில் பாரம்பரிய விதைகள், பண்ணை கருவிகள், உழவு இயந்திரங்கள், தோட்டக்கலை தொழில்நுட்பம், நீர்ப்பாசனம், சொட்டு நீர் தௌpப்பு நீர் பாசனம், பம்ப் செட், சோலார் பம்ப் செட், நிழல் வலைகள், இயற்கை கீரை காய்கறிகள், கோழி கால்நடைத் தீவனங்கள், இயற்கை இடுபொருட்கள், தேன் பண்ணை, பாரம்பரிய அரிசி போன்றவை விவசாய அரங்கில் இடம்பெற உள்ளது.

    🌿 இன்றைய விவசாய உலகில் நவீன இயந்திரங்களின் பயன்பாடு, அதை பயன்படுத்தும் முறை, களை எடுக்கும் கருவி, அறுவடை கருவி, கலப்பை போன்ற கருவிகளின் பயன்பாட்டின் விளக்கத்தை நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

    🌿 அதுமட்டுமல்லாமல் முதல் நாள் அன்று கண்காட்சி துவக்க விழா, பண்ணை கருவிகள், உழவு கருவிகள் துவக்க விழா நடைபெற உள்ளது.

    🌿 இந்த கண்காட்சியில் பல்வேறு தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் முன்னோடி விவசாயிகள் மற்றும் முனைவர்கள் சிறப்பு உரையாற்ற உள்ளனர்.

    🌿 இந்த கண்காட்சியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் தங்களுடைய பொருட்களை பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக விவசாய அரங்குகள் (stall) அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் விவசாயம் சார்ந்த அரங்குகள் () முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    🌿 விவசாயம் சார்ந்த அரங்குகள் முன்பதிவு செய்ய 04222222131 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

    🌿 விருப்பமுள்ள விவசாயிகள் இந்த கண்காட்சியை பயன்படுத்தி விவசாயம் சார்ந்த பொருட்களை கொண்டு அரங்குகள் அமைத்து மற்ற விவசாயிகளுக்கு, தங்களுடைய பொருட்களை பற்றியும் மற்றும் தகவல்களை தெரியப்படுத்தலாம்.

    🌿 மேலும் கருத்தரங்கு முடிவில் விவசாயிகள் தங்களின் ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை கேட்கலாம். கண்காட்சி மற்றும் கருத்தரங்கிற்கு குறித்த நேரத்திற்கு சென்று விவசாய தொழில்நுட்பங்களை நேரடியாக பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

    Saturday, 30 June 2018

    ஆட்டு எரு: சத்துமிக்க இயற்கை உரம்



    பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள் மனித சமுதாயத்திற்கு பெரும் தீங்கை விளைவிக்கின்றன
    திருவெறும்பூர்: பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள் மனித சமுதாயத்திற்கு பெரும் தீங்கை விளைவிக்கின்றன.
    அன்றாடம் பயன்படுத்தப்படும் காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்படும் யூரியா போன்ற செயற்கை ரசாயன உரங்கள் உடலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கக் கூடியவை.
    அதேநேரத்தில், ரசாயன உரங்களின் விலையும் தற்போது வேகமாக உயர்ந்து வருகிறது. செயற்கை ரசாயன உரங்களால் நமக்கு ஏற்படும் ஆபத்துகளைப் போக்க இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாதம்தான் ஆட்டு எரு. ஆட்டு எருவில், மாட்டு எருவில் உள்ளதைப் போல 2 மடங்கு தழைச் சத்தும், சாம்பல் சத்தும் உள்ளன. ஓர் ஆடு, ஓராண்டுக்கு 500 முதல் 750 கிலோ வரை எருவைக் கொடுக்கிறது.


    ஓர் ஏக்கர் நிலத்தை எல்லா சத்துகளையும் கொண்டு வளப்படுத்த 100 ஆடுகளை வளர்த்தால் போதுமானது. ஆட்டு எரு மண் வளத்தைப் பெருக்கி, பசுமைப் புரட்சிக்கு வித்திடுகிறது என்றால் மிகையாகாது.
    ஆட்டு எருவை மண்ணில் இட்டால் கரிமப் பொருள்களின் அளவு அதிகரித்து ஈரப் பதத்தை சேமிக்கும் திறன் அதிகமாகிறது. ஆட்டு எருவில் உள்ள சத்துகளின் அளவு, ஆட்டு இனம் மற்றும் அவற்றுக்கு அளிக்கப்படும் தீவனத்தைப் பொருத்தே இருக்கும்.
    ஆடுகளுக்கு புரதச்சத்து நிறைந்த தீவனங்களான குதிரை மசால், முயல் மசால், வேலி மசால், சுபா புல், தட்டைப் பயறு போன்ற தீவனங்களை அளித்தால், எருவில் தழைச்சத்தின் அளவு அதிகமாக இருப்பதோடு, நுண்ணூட்டச் சத்துகளும், தாது உப்புகளும் அதிகமாகக் காணப்படும். ஆட்டு எருவில் 60 முதல் 70 சதம் தண்ணீரும், 2 சதம் தழைச் சத்தும், 0.4 சதம் மணிச் சத்தும் 1.7 சதம் சாம்பல் சத்தும் உள்ளன. மேலும், பயிர் வளர்ச்சிக்குத் தேவையான போரான், மெக்னீசியம், கோபால்ட், தாமிரம், துத்தநாகம், மாலிப்டினம் சத்துகளும் அதிகளவில் காணப்படுகின்றன.
    நம்முடைய அன்றாட விவசாயத்திற்கு அதிகளவில் ஆட்டு எரு தேவைப்படுமாயின் அவற்றை ஆழ்கூள முறையில் தயார் செய்யலாம்.
    அதற்கு முதலில் ஆட்டுக் கொட்டகையின் தரைப் பகுதியில் நிலக்கடலைத் தோல், சிறிய துண்டுகளாக வெட்டிய வைக்கோல், இலைச் சருகுகள், மரத்தூள், தேங்காய் நார்க் கழிவு போன்றவற்றை அரை அடி உயரத்தில் ஓர் ஆட்டிற்கு 7 கிலோ என்ற அளவில் பரப்ப வேண்டும்.
    இவ்வாறு பரப்பினால் ஆட்டுப் புழுக்கையானது இந்த ஆழ் கூளத்தில் படிந்துவிடும். சிறுநீர் ஆழ் கூளத்தால் உறிஞ்சப்பட்டு தழைச் சத்து வீணாகாமல் பாதுகாக்கப்படும். ஆழ் கூளத்தில் உள்ள ஈரத் தன்மையைப் பொருத்து 3-லிருந்து 4 மாதங்களுக்கு ஒரு முறை ஆழ் கூள் ஆட்டு எருவை விவசாயத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.
    ஆழ் கூள முறையைப் பொருத்தமட்டில் 10 ஆடுகளிலிருந்து ஓராண்டில் இரண்டரை டன் தரமான எரு கிடைக்கும். இதில் 50 கிலோ யூரியாவில் உள்ளதைப்போல, தழைச் சத்தும், 37 கிலோ சூப்பர் பாஸ்பேட்டில் உள்ள மணிச் சத்தும், 40 கிலோ பொட்டாஷில் உள்ள சாம்பல் சத்தும் கிடைக்கும்.
    இவ்வாறு ஆழ் கூள முறையில் பெறப்படும் ஆட்டு எருவை வேளாண் பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தினால் களை எடுக்கும் செலவு குறையும். மேலும், நெல், தக்காளி, மிளகாய், கத்தரி மற்றும் அனைத்து விதமான வேளாண்மைப் பயிர்களுக்கும் இந்த எருவைப் பயன்படுத்தினால் அதிக லாபம் அடையலாம்.

    Sunday, 10 June 2018

    ஒற்றைக் கலப்பையால் உழவு ஓட்டும் மாட்டு வண்டி... சந்தையில் இது புதுசு!


                சு
    மார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் வரைக்கும் மாட்டுக் கலப்பையால் மட்டுமே விவசாயிகள் உழவு ஓட்டிக் கொண்டிருந்தனர். அவற்றில் மரத்தினாலான கலப்பை (நாட்டுக் கலப்பை), இரும்பு அல்லது மண் புரட்டும் கலப்பை 
    (வளைப்பலகைக் கலப்பை, சட்டிக் கலப்பை, ஒரு வழிக் கலப்பை) மற்றும் சிறப்புக் கலப்பைகள் (ஆழக்கலப்பை, உளிக்கலப்பை, சால் கலப்பை, சுழல் கலப்பை, குழிப்படுக்கை அமைக்கும் கருவி) என மூன்று வகைகளைப் பயன்படுத்தி வந்தனர். அதன் பின்னர் வந்த டிராக்டர் கலப்பையானது மாட்டுக் கலப்பைகளையும், மாட்டு வண்டிகளையும் ஓரம் கட்ட வைத்தது. இதற்குத் தொழிற்புரட்சியும் முக்கியமான காரணம். ஆனால் தமிழ்நாட்டில் எங்கோ ஒரு மூலையில் மாட்டுக் கலப்பைகள் உழவு ஓட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. இன்று பெரும்பாலும் விவசாயத்துக்குத் திரும்பும் இளைஞர்களின் சாய்ஸ் டிராக்டரில் உழவு ஓட்டுவதாகத்தான் இருக்கும். அதற்கு நேரம் மிச்சம், வேலையாட்கள் செலவு குறைவு எனப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

    விவசாயம் செய்யும் அனைவரும் மாட்டுக் கலப்பைகளை தவிர்க்க முக்கியமான காரணம் ஒன்று உண்டு. பெரும்பாலான விவசாயிகளுக்கு மாட்டுக் கலப்பைகளை அளவு பார்த்துப் பொருத்தி உழத் தெரியாததுதான். மாட்டுக் கலப்பைமீது ஆர்வம் இருந்தும், அவற்றை இயக்கத் தெரியாதவர்களுக்காகத்தான் சந்தையில் அறிமுகமாகியுள்ளது `அக்னிகார்ட் ஒற்றைக் கலப்பை'. அக்னிகார்ட் ஒற்றைக் கலப்பையைப் புதிதாகச் சந்தையில் அறிமுகப்படுத்தியிருக்கும் கோவை, கணபதி பகுதியைச் சேர்ந்த சசிகுமாரிடம் பேசினோம்.
    ``மாட்டுக் கலப்பையில் பொதுவாக நடந்து உழவு ஓட்ட வேண்டும். எங்களுடைய அக்னிகார்ட் கலப்பையில் மாடுகளைப் பூட்டிவிட்டு அதன்மீது அமர்ந்து உழவு ஓட்டலாம். சாதாரண கலப்பையில் உழவு ஓட்டும்போது வளைவுகளில் கலப்பை ஓட்டுபவரின் கால்களில் இடிப்பதுபோல வரும். இதில் அப்படி எந்த விதமான தொல்லையும் வராது. பார்ப்பதற்கு மாட்டு வண்டி போன்ற தோற்றத்தில் இரண்டு வீல்களுடன் எங்களுடைய ஒற்றைக் கலப்பை இருக்கும். ஆட்கள் அமரும் பகுதிக்குக் கீழ்ப்பகுதியில் கலப்பை இருக்கிறது.
    வீட்டுக்கும் நிலத்துக்கும் தொலைவு அதிகமாக உள்ள விவசாயிகளுக்கு இக்கலப்பை மிகவும் உபயோகமாக இருக்கும். கலப்பை ஓட்டத் தெரியாமல் விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு ஒற்றைக் கலப்பை மிகவும் உபயோகமாக இருக்கும். இரண்டு நாள்கள் ஓட்டிப் பழகிவிட்டால் இந்தக் கலப்பை வண்டியானது எளிதாகவே இருக்கும். ஒருமுறை வாங்கிவிட்டால் அதன் பின்னர் எந்தச் செலவும் இருக்காது. அக்னிகார்ட் ஒற்றைக் கலப்பையில், கலப்பைப் பொருத்தும் இடத்தில் மூன்று அளவுகளில் பொருத்தும்படி கொடுக்கப்பட்டுள்ளன. மேற்புரம், அதிக ஆழம், குறைந்த ஆழம் என நமக்குத் தேவையான அளவுகளில் வைத்துக் கொண்டு உழவு ஓட்டலாம். சிறு குறு விவசாயிகளுக்கு இது மிகவும் உபயோகமானதாக இருக்கும். இதன் விலை 20 ஆயிரம் ரூபாய். முதலில் இரண்டு கலப்பைகள் பூட்டி உழவு ஓட்டும்படி வடிவமைத்துக் கொடுத்தோம். அதில் பெரிய மாடுகளை மட்டும்தான் பூட்டி ஓட்டும்படி இருந்தது.


                    அதிகமான விவசாயிகள் கேட்டுக் கொண்டதால் ஒற்றைக் கலப்பையை மட்டுமே பொருத்திக்கொடுக்கிறோம். இந்த ஒற்றைக் கலப்பையில் சிறிய மற்றும் பெரிய மாடுகளை வைத்து உழவு ஓட்டிக்கொள்ளலாம். சாதாரண கலப்பையும், அக்னிகார்ட் ஒற்றைக் கலப்பையும் ஒரே நேரத்தைத்தான் எடுத்துக் கொள்ளும். இதனைப் பராமரிக்க வருடம் ஒருமுறை வீல் பேரிங்குகளை மாற்றிக் கொள்ளலாம். அவ்வப்போது வீல்களுக்கு கிரீஸ் வைக்க வேண்டும். இதனால் வீல்கள் வேகமாகச் சுழலும், மாடுகளுக்கும் அவ்வளவு சுமையாக இருக்காது. ஒவ்வொரு சந்தைகளிலும், கண்காட்சிகளிலும் அக்னிகார்ட் ஒற்றைக் கலப்பையை அறிமுகப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். அப்போது விவசாயிகளிடம் டெமோவும் காட்டுகிறோம். அதிகமான விவசாயிகள் ஆர்வமுடன் விசாரித்துச் செல்கின்றனர்" என்றார்.

    Friday, 8 June 2018

    மாடுகளுக்கு மடிவீக்க நோய் வந்தால்


    மா
    டுகளுக்குப் பாரம்பர்ய முறை மூலம் வைத்தியம் செய்துகொள்கிறார், தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி மகேஷ். ஒரு காலைவேளையில் மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த மகேஷைச் சந்தித்தோம். 
    “என்கிட்ட எட்டு நாட்டு மாடுகள் இருக்கு. தினமும் காலையில 8 மணிக்குள்ள மாடுகளைக் குளிப்பாட்டிடுவேன். வெயில் வந்த பிறகு குளிப்பாட்டினால், சூட்டைக் கிளப்பிடும். தினமும் குளிப்பாட்டினாலே உடம்புல உஷ்ணம் அதிகமாகுறதைத் தவிர்த்துடலாம். கோடைக்காலத்துல பத்து மணிக்குள்ள மேய்ச்சலை முடிச்சிடுவோம். பிறகு சாயந்தரம் 4 மணிக்கு மேலதான் மேய்ச்சலுக்கு விடுவோம். அதனால, வெப்பத்துல இருந்து மாடுகளைக் காப்பாத்திட முடியுது. நான் ஏழு வருஷமா என்னோட மாடுகளுக்கு மூலிகை மருத்துவம்தான் செஞ்சுக்கிட்டுருக்கேன். வீட்டு அஞ்சறைப்பெட்டியிலேயே ஆடு மாடுகளுக்குத் தேவையான பாதி மருந்துகள் இருக்கு.  
    கோடைக்காலத்துல மாடுகளுக்குக் காய்ச்சல் வர வாய்ப்பிருக்கு. 10 கிராம் மஞ்சள்தூள், 10 கிராம் மிளகு, 10 கிராம் வெந்தயம், 10 கிராம் சீரகம், 2 பூண்டு, ஒரு கைப்பிடி வேப்பிலை, ஒரு கைப்பிடித் துளசி, 5 வெற்றிலை, 100 கிராம் நாட்டுச்சர்க்கரை, ஒரு கைப்பிடி திருநீற்றுப்பச்சிலை எல்லாத்தையும் ஒண்ணாச் சேர்த்து அரைச்சுக் கொடுத்தா காய்ச்சல் குணமாகிடும். இது ஒருவேளைக்கான அளவு. இது மாதிரி தினமும் ரெண்டு வேளைனு, மூணு நாள் கொடுத்தால் போதும். 
    மாடுகளுக்கு மடிவீக்க நோய் வந்தால், 30 சோற்றுக்கற்றாழை மடல்கள், 20 கிராம் மஞ்சள் தூள், ஒரு சுண்டைக்காய் அளவு சுண்ணாம்பு மூணையும் சேர்த்து நல்லா அரைச்சு மடியில தடவணும். தினமும் 3 வேளை 3 நாள்களுக்குத் தடவிவந்தால் மடிநோய் குணமாகிடும்” என்றார். 

    தொடர்புக்கு, மகேஷ், செல்போன்: 87549 69831. 

    From Vikatan

    கால்நடைகளைத் தாக்கும் வெப்ப நோய்கள்... கைகொடுக்கும் பாரம்பர்ய மருத்துவம்!

    ற்போது நிலவிவரும் கோடைப்பருவத்தில்... வெப்பநிலை அதிகரிப்பால் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களைத் தடுக்கும் முறைகள் குறித்துத் தஞ்சாவூரில் உள்ள மரபுசார் கால்நடை மூலிகை மருத்துவ மையத்தின் முன்னாள் தலைவரும் கால்நடை மருத்துவருமான புண்ணியமூர்த்திச் சொன்ன விஷயங்கள் இங்கே இடம்பிடிக்கின்றன.  


    “கோடைக்காலத்தில் ஏற்படும் நோய்களை நம்முடைய பாரம்பர்ய மருத்துவம் மூலமே குணப்படுத்த முடியும். வழக்கமாக மாடுகளுக்குக் கோடைக்காலத்தில் அயற்சி ஏற்படும். இதற்கு மாடுகள் நிற்கும் இடத்தில் குறைந்தபட்சம் 25 அடி சுற்றளவுக்கு நிழல் இருந்தால்தான் கால்நடைகளை வெப்பம் தாக்காமல் பாதுகாக்க முடியும். ஹெச்.எஃப் போன்ற கலப்பின மாடுகள், 4 டிகிரி முதல் 21 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலையைத்தான் தாங்கும். அதனால், அவற்றை மலைப்பிரதேசங்களில் மட்டுமே வளர்க்க முடியும். சமவெளிப்பகுதியில் வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். கால்நடைகளுக்குக் கோடைக்காலத்தில் நான்கைந்து முறை தண்ணீர் குடிக்க விட வேண்டும். இரவு எட்டு மணியளவில் கால்நடைகளுக்குத் தாகம் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் அவசியம் தண்ணீர் கொடுக்க வேண்டும். 

    வெந்தயத்தை ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்து, நிழலில் உலர்த்தி, மாவாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு மாட்டுக்கு ஒரு கைப்பிடி வெந்தய மாவு என்ற அளவில், தீவனத்தில் கலந்து கொடுத்துவந்தால் மாடுகளின் உடல் குளிர்ச்சியடையும். அதேபோல ஒரு மாட்டுக்கு ஒரு கைப்பிடி அளவு பெருநெல்லிக்காயை இடித்துத் தீவனத்தில் கலந்துகொடுக்கலாம். நெல்லிக்காய்க்குப் பதிலாக ஒரு கைப்பிடி நெல்லி வற்றலைத் தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைத்தும் கொடுக்கலாம். தினமும் ஒரு கட்டு வீதம் அகத்திக்கீரை, 2 மொந்தன் வாழைப்பழம் எனக் கொடுத்து வந்தால் மாடுகளை வெப்ப நோய்களிலிருந்து காப்பாற்றலாம்.கோடைக்காலத்தில் மாடுகளுக்கு மடி அம்மை நோய் வர வாய்ப்புகள் உண்டு. இந்த நோய் வந்தால், மாடுகளின் மடியில் கொப்புளங்கள் உருவாகி மாடுகள் பாதிக்கப்படும். ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள், பூண்டு 2 பல், தலா ஒரு கைப்பிடி துளசி, வேப்பிலை, திருநீற்றுப்பச்சிலை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து... வெண்ணெயில் குழைத்து, தினமும் மூன்று வேளைகள் மடியில் தடவிவந்தால் மடி அம்மை குணமாகும். ஆடுகளுக்கு அம்மை நோய் தாக்கினாலும் இதே மருந்தைப் பயன்படுத்திக் குணமாக்கலாம். 

    தலா ஒரு ஸ்பூன் வெந்தயம், மிளகு, சீரகம் ஆகியவற்றை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து அரைத்துக்கொள்ள வேண்டும். இதோடு 2 பூண்டு, 1 ஸ்பூன் மஞ்சள்தூள், 2 கைப்பிடி நாட்டுச்சர்க்கரை ஆகியவற்றை அரைத்துச் சேர்க்க வேண்டும். அக்கலவையுடன் ஒரு மூடி தேங்காய் துருவல் சேர்த்துப் பிசைந்து மாடுகளுக்குத் தினமும் ஒருவேளை வீதம் 3 நாள்களுக்குக் கொடுத்தால்... வாய்ப்புண், காய்ச்சல் மற்றும் கோமாரி உள்ளிட்ட பாதிப்புகள் வராது. 

    கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோயைத்தடுக்க... ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு கைப்பிடி கீழாநெல்லி ஆகியவற்றை இடித்துத் தூளாக்கி, தனியாகவோ அல்லது அரிசி  குருணையோடோ கலந்து கொடுக்க வேண்டும். இது 10 கோழிகளுக்கான அளவு. 3 முதல் 5 நாள்களுக்குக் கொடுத்துவந்தால் போதுமானது.” 

    தொடர்புக்கு, கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி, செல்போன்: 98424 55833.

    கிராமங்களைக் காத்த இட்டேரிகள்!

    காட்டில் உணவில்லாததால், விவசாய நிலங்களைத் தேடி வருகின்றன நம்நாட்டின் தேசிய பறவையான மயில்கள். ஒரு காலத்தில் உயிர்வேலிகள் இவற்றுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தன. உயிர்வேலிகள் இல்லாததால், தற்போது விவசாய நிலங்களில் வலம் வருகின்றன மயில்கள். இதற்கு உயிர்வேலி மூலம் தீர்வு இருக்கிறது என்கிறார் மயில்கள் குறித்து ஆய்வு செய்துவரும் கரூரைச் சேர்ந்த ஆசிரியர் ராஜசேகரன். 

    “முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, கிராமங்கள் ‘இட்டேரி’ எனும் உயிர்வேலிகளால் இணைக்கப்பட்டிருந்தன. இட்டேரி என்பது கொங்குநாட்டுச் சொல். இருபுறமும் அடர்ந்த வேலி. நடுவில் ஒற்றையடிப் பாதை அல்லது மாட்டுவண்டித்தடம். இதுவே இட்டேரி என்று அழைக்கப்படும். இதில் கள்ளி வகைகள், முள் செடிகள், வேம்பு, மஞ்சகடம்பு, நுணா, புரசு போன்ற மர வகைகள்; நொச்சி, ஆடாதொடை, ஆவாரை போன்ற செடி வகைகள்; பிரண்டை, கோவைக்காய் போன்ற கொடி வகைகள் ஆகியவற்றோடு பெயர் தெரியாத எண்ணற்ற புல் பூண்டுகள் நிறைந்திருக்கும். 



    இவை உயிர்வேலியாய் இருந்து விவசாய நிலங்களைக் காத்து வந்தன. உயிர் வேலிகளில் எண்ணற்ற உயிரினங்களும் வாழ்ந்து வந்தன. உயிர்வேலிக்கடியில் கறையான் புற்றுகள், எலி வங்குகள் ஆகியவை காணப்படும். நிழல், ஈரம், இலைக்குப்பைகள் ஆகியவை நிலத்தில் இருப்பதால், நிலத்தில் எண்ணற்ற பூச்சியினங்களும் இருந்தன. இப்பூச்சிகளை உணவாக்கிக்கொள்ள வண்டுகள், நண்டுகள், பாம்புகள், உடும்புகள், ஓணான்கள், கோழிகள், குருவிகள், அழுங்குகள், ஆமைகள் எனப் பல பிராணிகள் வந்தன. மனிதர்களுக்குக் கோவைப்பழம், கள்ளிப்பழம், சூரப்பழம், பிரண்டைப்பழம் போன்ற சுவையான கனிவகைகள், காய்கள், மூலிகைகள் எனப் பலவும் கிடைத்துவந்தன.  

    வேலியில் வாழ்ந்த குருவிகள், ஓணான்கள், தவளைகள் ஆகியவை பயிர்களைச் சேதப்படுத்த வரும் பூச்சிகளை உண்டு அழித்தன. பாம்புகள், ஆந்தைகள் ஆகியவை எலிகளை உண்டன. பறவைகளின் எண்ணிக்கையைப் பாம்புகளும், வல்லூறுகளும் கட்டுப்படுத்தின. பாம்புகளின் எண்ணிக்கையை மயில்களும் கழுகுகளும் கட்டுப்படுத்தின. மயில்களின் எண்ணிக்கையைக் குள்ளநரிகளும் காட்டுப் பூனைகளும் கட்டுப்படுத்தின. குள்ளநரிகள், மயில்களின் முட்டைகளையும், குஞ்சுகளையும் உணவாக்கிக்கொண்டன. இப்போது மயில்களின் எதிரிகளான குள்ளநரிகளும் காட்டுப்பூனைகளும் அழிந்துவருவதால், மயில்களின் எண்ணிக்கை பலமடங்கு பெருகிவிட்டன. 

    ஆஸ்திரேலிய நாட்டின் மக்கள் தொகையைவிடக் கங்காருகளின் எண்ணிக்கை அதிகம் என்று பி.பி.சியின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இப்போது கங்காருகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று அந்நாட்டுச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்லி வருகிறார்கள். அதேபோல இந்தியாவிலும் மயில்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஆபத்தானது. குறிப்பிட்ட ஓர் உயிரினத்தின் எண்ணிக்கை அதிகரித்தால், அதனால் அதிகளவு எதிர்மறை விளைவுகள் ஏற்படும். 

    சமீபகாலமாக மயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, இயற்கை சமநிலையின்மையை உணர்த்துகிறது. எனவே சுற்றுச்சூழல் குறித்த விழிப்பு உணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். கம்பிவேலி கலாசாரம் அதிகரித்துக் கொண்டிருப்பதால், மிகப்பெரிய ஆபத்தை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். உயிர்வேலிகளின் அழிவு நம் எதிர்காலத்தின் அழிவு. உயிர்வேலிகளைக் காப்பதும் புதிய உயிர்வேலிகளை அமைப்பதும், நாம் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்” என்றார் ராஜசேகரன். 

    தொடர்புக்கு: ராஜசேகரன், செல்போன்: 99449 24271


    From Vikatan.

    கால்நடைகளுக்குத் தீவனம்... நிலத்துக்கு உரம்... உயிர்ச்சூழலை உருவாக்கும் உயிர்வேலிகள்!

    மீப காலங்களில் புவி வெப்பமயமாதல், பல்லுயிர்பெருக்கம், பருவநிலை மாற்றம் போன்றவை குறித்து அதிகமாகப் பேசி வருகிறோம். பல்லுயிர்ச்சூழலை மேம்படுத்துவதற்கும், புவியின் வெப்பத்தைக் குறைப்பதற்கும் அதிகளவு தாவரங்களை நடுவதுதான் தீர்வாகச் சொல்லப்பட்டு வருகிறது.


    ஆனால், இந்த விஷயங்களை ஆண்டாண்டு காலமாக நம் முன்னோர் கடைப்பிடித்து வந்துள்ளனர்.  ஒவ்வொருவரின் நிலத்திலுமே பல்லுயிர்ச்சூழல் நிலவியிருந்தது. அதற்குக் காரணமாக இருந்தவை உயிர்வேலிகள். அவற்றை அழித்துக் கம்பி வேலிகளை உருவாக்கியதன் விளைவு நிலத்தில் பல்லுயிர்ச்சூழல் அழிந்து பல்வேறு பிரச்னைகள் உருவாகியுள்ளன. 

    ஆனாலும், ஆண்டாண்டு காலமாக உயிர்வேலி முறையைக் கடைப்பிடித்து வரும் விவசாயிகளும் உண்டு. குறிப்பாகக் கரூர், ஈரோடு, கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்கள் அடங்கிய கொங்கு மண்டலத்தில் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன உயிர்வேலிகள். அந்த வகையில், பல ஆண்டுகளாக உயிர்வேலிகளைப் பராமரித்து வருகிறார், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்து முருகன். தொண்டாமுத்தூர் அடுத்துள்ள குளத்துப்பாளையம் கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்துவரும் முத்து முருகனின் நிலத்தைச் சுற்றி மரங்கள், செடிகள், கொடிகள் கொண்ட உயிர்வேலி அமைக்கப்பட்டுள்ளது. உயிர்வேலியில் ஏராளமான பறவைகள் மற்றும் உயிரினங்கள் குடிகொண்டுள்ளன. 




    ஒரு காலைவேளையில் தோட்டத்தில் இருந்த முத்துமுருகனைச் சந்தித்தோம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, உயிர்வேலி குறித்துக் கேட்டதும் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார், முத்து முருகன். 


    “எனக்குப் பூர்விகம் இந்த ஊர்தான். 1984-ம் வருஷத்துல இருந்து விவசாயம் செஞ்சுட்டுருக்கேன். எனக்கு இரண்டரை ஏக்கர் நிலமிருக்கு. காய்கறிகள், மரவள்ளி கிழங்குதான் முக்கிய சாகுபடி. என்னோட நிலத்தைச் சுத்தி உயிர்வேலி இருக்கு. எங்க தாத்தன் பூட்டன் காலத்துல அமைச்ச உயிர்வேலி. அதைத் தொடர்ந்து பராமரிக்கிறதோடு பாச்சான்(கள்ளிச்செடி வகை), கொட்டைச் செடி, கள்ளினு நானும் சில தாவரங்களை வேலியில நடவு செஞ்சுருக்கேன். உயிர் வேலியில மரங்களும் இருக்குறதால அது காற்றுத்தடுப்பனாவும் இருக்கு. உயிர்வேலிகள்ல கிடைக்குற இலை தழைகள், ஆடு மாடுகளுக்குத் தீவனமாகுது. அந்த இலைதழைகளை நிலத்துல போட்டா மட்கி உரமாயிடும். இப்படி ஏகப்பட்ட நன்மைகள் இருக்கு” என்ற முத்து முருகன் தொடர்ந்தார்...  


    “வேம்பு, கருவேல், வெள்வேல், இலந்தை, பனை, சீத்தா, கிளுவை, நொச்சி, நாணல், கள்ளி, பாச்சான், மூங்கில், மருதாணி, அரப்பு, ரோஜா, சவுக்கு, முருங்கை, வேலிப்பருத்தி, பிரண்டை, முடக்கத்தான், தூதுவளை, சங்கன் செடி, கீழாநெல்லி, சீந்தில், கற்பூரவல்லி, கோவைக்காய் கொடி, கண்டங்கத்திரி மாதிரியான செடி கொடி வகைகள் உயிர்வேலிக்கு ஏத்த தாவரங்கள். 

    பெரும்பாலான உயிர்வேலிகள் பறவை எச்சம் மூலமாவும், காற்று மூலமாவும் பரவி வளர்ந்ததுதான். இதையெல்லாம்  அப்பப்போ வெட்டிச் சரி பண்ணிக்கிட்டே வந்தால் போதும். இந்த வகையில நாம நடவு பண்ணாத பல செடிகள் தானாகவே முளைச்சுடும். 

    அதுல நிறைய மூலிகைச்செடிகள், கொடிகளும் இருக்கும். அந்தக்காலத்துல ஏதாவது மூலிகை தேவைன்னா உயிர்வேலியிலதான் வந்து வைத்தியருங்க தேடுவாங்க. உயிர்வேலிகள்ல தாவரங்கள் அடர்ந்து இருக்குறதால, பறவைகள், பிராணிகள்னு பல உயிரினங்கள் குடியேறி உயிர்ப்பா இருக்கும். கம்பிவேலிகள், மின்வேலிகள் அமைச்சா அங்கே உயிரோட்டம் இருக்காது” என்ற முத்துமுருகன் நிறைவாக, 

    “உயிரினங்களுக்கு உணவு, மனிதனுக்கு மருந்து, வயலுக்குப் பாதுகாப்பு, சுற்றுச்சூழலுக்கு உதவினு உயிர்வேலிகளோட பயன்பாட்டைச் சொல்லிகிட்டே போகலாம். பாரம்பர்ய விவசாயம் அழிஞ்சு போனதாலதான் இன்னிக்கு உயிர்வேலிகள் அழிஞ்சுடுச்சு. அதனால, திரும்பவும் பாரம்பர்ய விவசாய முறைகளைக் கையிலெடுக்கணும். செலவு பண்ணி கம்பி வேலி அமைக்கிறதைத் தவிர்த்துட்டு உயிர்வேலி அமைச்சா, அது சூழலுக்குச் செய்ற பெரிய உதவியா இருக்கும்” என்று சொல்லி விடைகொடுத்தார். 

    தொடர்புக்கு, முத்து முருகன், செல்போன்: 94424 26823.
    From Vikatan

    Sunday, 3 June 2018

    நாட்டு மாடு விற்பனைக்கு

      

     
     விற்பனைக்கு - 3 ஆம் ஈத்து மயிலை மாடு இன்னும் 5 நாட்களில் கன்று ஈனும்,செவலை காளை சேர்க்கப்பட்டுள்ளது, பால் நாள் ஒன்றுக்கு 6 லி, கால் அணைக்க தேவையில்லை , பெண்கள் பால் கறக்கலாம்,நல்ல குணம்,சுழி சுத்தம் , விலை-89,000/-,
    இடம்- ஆருதொழுவு, காங்கேயம் தொடர்புக்கு - 9750995516, 8667580627




      



    கலப்பு பயிர் மற்றும் ஊடுபயிர் சாகுபடி செய்வதால் என்னென்ன பயன்கள் கிடைக்கிறது?

    கலப்பு பயிர் மற்றும் ஊடுபயிர் சாகுபடியால் கிடைக்கும் பயன்கள்...



    ** வயல் மட்டத்திலிருந்து வரப்பின் ஓரத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் தட்டை பயறு விதைக்க வேண்டும். இந்த தட்டை பயறில் நெற்பயிரை தாக்காத அசுவினிகள் உற்பத்தியாகும். இதனால் ஏராளமான பொறிவண்டுகள் கவரப்படும். இந்த பொறிவண்டுகள் நெற்பயிரை தாக்கும் பலவிதமான சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுபடுத்துகின்றன.

    ** நிலக்கடலையில் ஆமணக்கு செடிகளை வயல் ஓரங்களில் 2 மீட்டருக்கு ஒரு செடி வீதம் நடவு செய்வதால் புரோடீனியா புழுக்களை கவர்ந்து அழிக்கலாம்.

    ** நிலக்கடலையோடு 250 கிராம் கம்பு சேர்த்து கலப்பு பயிராக விதைத்து நிலக்கடலையை தாக்கும் சுருள்பூச்சி, இலைப்பேன் மற்றும் அந்துபூச்சியின் சேதத்தை கட்டுப்படுத்தலாம். 

    ** 10 வரிசை நிலக்கடலைக்கு ஒரு வரிசை என்ற அளவில் ஊடு பயிராக செய்து பொறிவண்டுகளின் பெருக்கத்தை அதிகரிக்கலாம். சிவப்பு கம்பளிப்புழு தாக்குதல் காணப்படும் பகுதிகளில் 5 வரிசை நிலக்கடலைக்கு ஒரு வரிசை தட்டை பயிரை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.

    ** துவரை, பாசிப்பயறு ஆகியவற்றுடன் சோளம் ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் தத்துப்பூச்சி மற்றும் காய்ப்புழுக்களின் எண்ணிக்கையை கட்டுபடுத்தலாம்.

    ** பருத்தியின் ஓரங்களில் மக்காச்சோளம் பயிரிடுவதால் அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, அந்துபூச்சிகள் போன்றவை அச்செடி மேல் படும் போது ஊண் விழுங்கிகள் மக்காச்சோளம் பயிரில் அதிகமாக உற்பத்தி ஆவதால் இப்பூச்சிகள் பருத்தி செடிக்குப் பரவுவதை தடுக்க முடியும்.

    ** பருத்தியுடன் சூரியகாந்தியை 2.2 என்ற விகிதத்தில் பயிரிடுவதன் மூலம் பருத்தியை தாக்கும் பச்சைத் தத்துப்பூச்சியின் சேதம் குறைகிறது. பருத்தி அருகே பருத்தி குடும்பத்தை சேர்ந்த வெண்டை பயிர் செய்வதை தவிர்த்தல் நல்லது.

    ** பருத்தியில் பச்சைப் பயிர், உளுந்து, சோயாமொச்சை, ஆமணக்கு போன்ற பயிர்களை ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் பருத்தியை தாக்கும் பூச்சிகளின் பெருக்கத்தை குறைத்து சேதத்தைத் தவிர்க்கலாம்.

    ** சோளத்துடன் அவரையை 4:1 என்ற விகிதத்தில் விதைத்து சோளத்தண்டு புழுவின் சேதத்தையும், நிலக்கடலையுடன் கம்புபயிரை 6:1 என்ற விகிதத்தில் விதைப்பதன் மூலம் சுருள் பூச்சியின் சேதத்தையும் குறைக்கலாம்.

    ** கரும்பில் தக்கை பூண்டு ஊடுபயிராகப் பயிரிடுவதன் மூலம் கரும்பு தண்டு துளைப்பானைக் கட்டுபடுத்தலாம்.

    ** மக்காச் சோளத்தில் ஊடுபயிராக ஆமணக்கு பயிரிடுவதன் மூலம் புரொடினியா புழுக்களைக் கட்டுபடுத்த முடியும். மக்காச்சோளத்தில் ஊடுபயிராக சோளம் பயிரிடுவதன் மூலம் குருத்து ஈ மற்றும் தண்டு துளைப்பானின் எண்ணிக்கையைக் கட்டுபடுத்தலாம்.

    ** புகையிலைப் பயிரில் ஊடுபயிராக ஆமணக்கு பயிரிடுவதன் மூலம் புகையிலை வெட்டு புழுக்களின் சேதம் கட்டுப்படுத்தப்படுகின்றன. பயிரில் பூச்சி நோய் விரட்டித் தாக்கும் வேம்பு, சீதா, நக்ஸ்வாமிகா போன்ற மரங்களை வரப்பில் நடலாம். செவ்வந்திப் பூ, கடுகு, ஆமணக்கு ஆகியனவற்றை பயிர்களைச் சுற்றிலும் வளர்த்துப் பூச்சிகளை விரட்டலாம்.

    ** கரையான்களை கட்டுபடுத்திட வெட்டிவேர், திருகுக்கள்ளி, எருக்கு, காட்டாமணக்கு ஆகிய செடிகளை வயலிலேயே ஆங்காங்கே வளர விடலாம்.

    ** வெங்காயத்தைத் தாக்கும் வெட்டுப்புழுக்களை கட்டுபடுத்த வரப்பு ஓரங்களில் ஆமணக்கைக் கவர்ச்சிப் பயிராகப் பயிரிட்டு அதில் காணப்படும் முட்டைக் குவியல்களையும் இளம் புழுக்களையும் சேகரித்து அழிக்கலாம்.

    ** காய்கறிப் பயிர்களான முட்டைகோஸ், காலிஃப்ளவர் ஆகியவற்றுடன் கடுகு பயிரிடும் போது கடுகுச் செடி கவர்ச்சிப் பயிராக செயல்பட்டு வைர முதுகு அந்துப் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுபடுத்துகிறது.

    ** முட்டைக்கோசுடன் தக்காளி ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் வைர முதுகு அந்துபூச்சி மற்றும் இலைப்புழுவைக் கட்டுபடுத்தலாம். கலப்பு பயிர் மற்றும் ஊடுபயிர்களை இருபது முதல் முப்பது நாட்களுக்கு முன்னரே பயிரிட வேண்டும்

    அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

     அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...