Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Monday, 6 August 2018

பனிகள்

 பனிகள் தூங்கும் மலரே!
முத்தம் தங்கும் முகமே!
வாசம் சிந்தும் வனமே!
கவிதை செல்லும் தடமே!
காதல் ஏங்கும் இடமே!
இன்னும் மாயமென்ன!
என்னை ஆய்வதென்ன!
#தினகரன்பொன்கதிர்

Sunday, 29 July 2018

அழகான காட்சிகள்

இப்போதெல்லாம்
அழகான காட்சிகள்
ரசிக்கபடுவதற்கு பதில்
படம்பிடிக்கபடுகின்றன.....

                       பாபு யாழினி

நீ நான் நாம்

நான் நதியாய் வறண்டே வாட! நீ புது நீராய் நீண்டே ஓட! என் தேகத்தில் உன் இரத்தம்! என் சுவாசத்தில் உன் சத்தம்! உயிரே செல்! கிளியே சொல்! நம் தேகங்கள் இரு கரைகளைப் போலே! நாம் சேர்ந்திட வழி அது கூட! பூ மலர்களை நதியில் நிரப்பிடலாமா! அந்தப் பூக்களில் நாம் படர்ந்திடலாமா! அந்த நிலவொளியில் நாம் கலந்திடலாமா! நம் பார்வைகள் ஏதோ புது அழகுகள் வாங்க! நம் பாசைகள் நீண்ட மௌனத்தைத் தாங்க! அந்தக் காதலில் வேறு அர்த்தம்! அந்தப் பார்வையில் புது யுத்தம்! இது முடிவோ சொல்! இதன் இனிமை சொல் அதன் முடிவில் சொல்!
#தினகரன்பொன்கதிர்

Monday, 4 June 2018

கவிதைகள் தினகரன்பொன்கதிர்



நான் தெற்கு வடக்கு அலைகிறேன்
நீ கிழக்கே சென்று தொலைகிறாய்!
நான் பூக்கள் வளர்க்கும் காட்டிலே!
உன் பட்டாம்பூச்சி வந்து ஆளவா!
என்னை ஆளுமா!



#தினகரன்பொன்கதிர்

Sunday, 3 June 2018

கவிதைகள் தினகரன்பொன்கதிர்



நத்தைக் கூடைப் போல் இதயம் மெல்ல மெல்ல ஆசைக் கனவுகளை தினம் சுமந்த படியே நாட்களைக் கடக்கிறது! #நம்புங்கள்கனவுபழிக்கும்

#தினகரன்பொன்கதிர்

கவிதைகள் தினகரன்பொன்கதிர்





பாதி பார்வை பார்த்திடு என் ஆவி காத்திடு! பாராமலே நீ போவதால் நெஞ்சில் பாரம் கூடுது! #பார்வைவிழுமோசொல்

#தினகரன்பொன்கதிர்

கவிதைகள் தினகரன்பொன்கதிர்


தன் மகளுக்கு முன்னால்
அப்பா தோற்றுப் போவது மகள் தோற்றுப்போகக் கூடாது யாரிடமும் தோற்றுவிடக் கூடாது என்பதற்காகவே! #அப்பாமகளுக்கானஉலகம்

#தினகரன்பொன்கதிர்

கவிதைகள் தினகரன்பொன்கதிர்


பழிபோட்டுப் பிழைக்காதே நீயும் ஒருநாளில் பலி ஆடே! சதிபோட்டுச் சிரிக்காதே உன் தீது திரும்பும் ஒழியாதே! #கர்மாஉனதுசம்பளம்

#தினகரன்பொன்கதிர்

கவிதைகள் தினகரன்பொன்கதிர்




நீ அந்தத் தொலை வானம் தொட்டு ஓடும் நிலவானா உனைத் தொடர்ந்தேனா தினம் நடந்தேனா நெருக்கத்தின் தூரம் தினம் நீளுதடி!

#தினகரன்பொன்கதிர்

கவிதைகள் தினகரன்பொன்கதிர்










உன் பொட்டு வெச்ச முகம் பாத்தேனே! பூ மொட்டு போலே மெல்ல வெடுச்சேனே! குங்குமத்தில் சேந்தேதா சங்கமித்து இருப்பேனே!

#தினகரன்பொன்கதிர்

கவிதைகள்_தினகரன்பொன்கதிர்__4


இசை உன்னிடம் கருவுற்று
கருவிகளில் பிரசவிக்கிறதோ!
பிரசவித்து எழும் ஸ்வரங்கள்
காதோடு விழும் வரங்கள்!
நீ தந்த உயிருள்ள இசைபோல்

இனி வருவது கடினமே!
நீ இசைக் கலைஞன் மட்டுமா!
நீயே ஒரு இசைக் கருவியே!
எங்கள் இசை அருவியே!

#தினகரன்பொன்கதிர்


Monday, 28 May 2018

கவிதைகள் தினகரன்பொன்கதிர்__3

கன்னி மலர்கள்
பார்வை அழைக்கும்!
காளையர்களை
காதல் வலைக்கும்!

#தினகரன்பொன்கதிர்

கவிதைகள் தினகரன்பொன்கதிர்__2

பணிவு என்பது அவமானமல்ல!
அது வயது சார்ந்தோ!
அது தகுதி சார்ந்தோ!
இருக்க வேண்டியதில்லை!
பணியாத எதுவும் வளர்ந்ததில்லை!
பணிவு கொள் கற்றுக்கொள்ள!

#தினகரன்பொன்கதிர்

கவிதைகள் தினகரன்பொன்கதிர்__1

உன்னப் போல யாருமில்ல!
முன்னப் போல நீயில்லை!
இப்படித் தான்
தொடங்கி முடிகிறது!
எல்லா உறவுகளுமே!

#எந்தமனிதனுக்கும்
#தினகரன்பொன்கதிர்


Tuesday, 22 May 2018

பாடலாசிரியர் தினகரன்பொன்கதிர்

கடல் போலே தாகம்
நான் கொண்ட போது
மங்கையில் கங்கை நீ
எனை தாண்டி போகலாமோ
இதழாலே நீயும் தாகம் தீரடி!


#பாடலாசிரியர் தினகரன்பொன்கதிர்

Monday, 21 May 2018

இளைய நிலா



இளைய நிலாவே
நான் இளைத்ததும் ஏனோ!
தொலைவினில் நீயோ
நான் தொலைந்து விட்டேனோ!
நிலவே நீயெங்கு தேடினேன்!
என் வானில் பெண் நிலவில்லை!


*பாடலாசிரியர் தினகரன்பொன்கதிர்*

Saturday, 19 May 2018

கரும்புமல்லிகையே

உன் சேலையில் திரிச்ச நூலா
நான் உன்னை சுத்தித் சுத்தி
தினம் திரியுரனடி!
நீ கட்டும் சேலையில தான்
என் மனசு கசங்குதடி!
#கரும்புமல்லிகையே
#தினகரன்பொன்கதிர்

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...