Showing posts with label உடல் நலம். Show all posts
Showing posts with label உடல் நலம். Show all posts

Sunday, 5 August 2018

முடிந்தவரை தொட்டதிற்கெல்லாம் ஆங்கில மருந்துக்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்

மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம்.
அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல் !
மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான். இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை. மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது. இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது.
நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவல் அனுப்பும். பதறிப்போன கல்லீரல் நொடிப் பொழுதில் ரத்தம் வெளியேறும் இடத்திற்கு ‘ப்ரோத்ரோம்பின்’ என்ற ரசாயனத்தை அனுப்பி வைக்கும். அந்த ரசாயனம் ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு சிலந்தி வலைப் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி ரத்தத்தை உறைய செய்துவிடும். இதனால் ரத்த வெளியேற்றம் தடுக்கப்படுகிறது.
கல்லீரல் மட்டும் இந்த வேலையை செய்ய வில்லை என்றால் ஒரு சின்ன காயம் போதும் நம்மைக் கொல்வதற்கு. இன்றைக்கு லேசான தலைவலி என்றாலும், உடல் மெலிவதற்கு என்றாலும், சத்துப் பற்றாக்குறை என்றாலும் மாத்திரைகளாக உள்ளே தள்ளுகிறோம். இந்த மாத்திரைகள் எல்லாவற்றிலும் நச்சுத் தன்மை நிறைந்திருக்கிறது. அந்த நச்சுத்தன்மையை உடலில் சேராமல் தடுத்து நம் உடலை பாதுகாப்பது கல்லீரல்தான்.
மதுவிலும் ஏராளமான விஷத்தன்மை உள்ளது. அந்த விஷத்தன்மையை போக்குவதற்காக இரவு முழுவதும் கல்லீரல் போராடுகிறது. கல்லீரல் விஷத்திற்கு எதிராக போராடும் வரைதான் குடிகாரர்கள் எவ்வளவு குடித்தாலும் அசராமல் நிற்பேன் என்று வசனம் பேசமுடியும்.
கல்லீரல் கெட்டு விட்டது என்றால் அவரால் ஸ்டெடியாக மூச்சுக் கூட விடமுடியாது. அப்புறம் எங்கு வசனம் பேசுவது.
கல்லீரல் ஒருவருக்கு சரியாக இல்லையெனில், சாப்பிடும் எந்த உணவும் செரிக்காது. உணவுப்பொருட்களை மட்டுமல்ல… மருந்து, மாத்திரைகள், ஆல்கஹால், ஏன் சமயத்தில் விஷத்தைக்கூடச் செரிக்கக்கூடிய சக்தி படைத்தது இந்தக் கல்லீரல். அத்தகைய முக்கியமானதொரு ஜீரண உறுப்பு இது. அதற்காக ‘எவ்ளோ அடிச்சாலும் தாங்குதே; ரொம்ப நல்லது போல’ என்று தாறுமாறாக அதற்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாது. கண்மூடித்தனமாக அளவு கடந்து குடிக்கிறபோது கல்லீரல் வீக்கத்தைத் தடுக்க இயலாது.
கல்லீரலை கழுதையோடு ஒப்பிடுவார்கள். கழுதை எவ்வளவு பாரத்தை அதன் மீது தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருந்தாலும் அசராமல் சுமக்கும். அதே கழுதை படுத்துவிட்டால் திரும்பவும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது. கல்லீரலும் அப்படிதான் தொடர்ந்து குடிக்க குடிக்க மது என்னும் விஷத்தோடு ஓயாமல் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும் !
இத்தகைய கல்லீரலை காப்பாற்ற மதுவையும் புகையும் தவிர்க்க வேண்டும். மாமிசம் அதை உண்பதால் பற்பல வியாதிகள் வருகின்றன எனவே மாமிசம் உண்பதை எல்லா விதங்களிலும் தவிர்போம். பால் கலந்த டீ, காப்பி மற்றும் செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக எலுமிச்சை சாறு இயற்கையான பழச்சாறுகள், கரும்புச்சாறு, பதநீர், மோர் போன்றவற்றை பருகலாம்.
உணவை நிதானமாக மென்று விழுங்க வேண்டும். நமக்கு அசதியாக இருக்கும்போது ஓய்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். முடிந்தவரை தொட்டதிற்கெல்லாம் ஆங்கில மருந்துக்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
கல்லீரல் காத்து நலமாய் வாழ்வோம்

Sunday, 22 July 2018

பொலிவு தரும் சீரகம்

பித்தம் போக்கும் அகத்திக் கீரை
# நெல்லி வற்றல் பொடியைத் தினமும் மூன்று வேளை  ஒரு டீஸ்பூன் எடுத்து நீருடன் கலந்து சாப்பிட்டால் தோல் நோய்கள் மட்டுப்படும். உடலில் சர்க்கரை அளவு குறையவும்  வாய்ப்புண்டு.
# வெந்தயக் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துவந்தால் நாள்பட்ட சொறி, சிரங்கு, பார்வைக்கோளாறு போன்றவை குறையும்.
# மஞ்சள் தூளில் சிறிது உப்பு சேர்த்து வெதுவெதுப்பான நீரில் வாயைக் கொப்பளித்தால் வாய்ப்புண்ணும் தொண்டைப் புண்ணும் குணமாகும்.
# பப்பாளிப் பழத்தைக் குழைத்து,  கண்ணில் படாமல் முகத்தில் பூசி உலறவைத்துப் பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் கரும்புள்ளிகள் நீங்கும்.
# மருதாணி இலையை மஞ்சளோடு  சேர்த்து அரைத்து, சொறி, சிரங்கு மீது பற்றுப்போட்டுவர சில நாட்களில் குணமாகும்.
# சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் கபக்கட்டு, காசம், இருமல் போன்ற சீதள நோய்கள் தீரும்.
# சித்தரத்தைப் பொடியைச் சிறிது பனங்கற்கண்டு தூளுடன் சேர்த்து காலை, மாலை சாப்பிட்டுவர சளி, இருமல், தொண்டைப்புண், நீர்க்கோவை, வாயு போன்றவை  தீரும்.
# செம்பருத்தி இலையை அரைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் சூடு தணியும்; கண்கள் குளிர்ச்சி பெறும்.
# அரிசி கழுவிய நீரில் அகத்திக் கீரையை வேகவைத்துச் சாப்பிட்டுவந்தால் பித்தம் தொடர்பான தலைச்சுற்றல் குணமாகும்.

பொலிவு தரும் சீரகம்

# ஆப்பிள் பழத் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமான அளவில் இருக்கிறது. இந்த பெக்டின் நம் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்குவதில் சிறந்தது.
# தொடர்ந்து பூண்டு சாப்பிட்டுவந்தால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
#   ரத்தத்தில் சிவப்பணு உற்பத்திக்கு பீட்ரூட், புடலங்காய், பசலைக் கீரை, பேரீச்சம்பழம், அவரை, பச்சைக் காய்கறிகள், துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, முருங்கைக் கீரை போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
# வெங்காயம், நெல்லிக்காய், வெந்தயக் கீரை, பனங்கற்கண்டு, மாதுளம் பழம், நாவற்பழம், கோவக்காய், பச்சைப் பயறு, மோர், இளநீர் போன்றவை உடலின் சூட்டைத் தணிக்கும்.
# சீரகப் பொடியை வெண்ணெய்யில் குழைத்துச் சாப்பிட வயிற்று எரிச்சல் மட்டுப்படும்.
# சீரகத் தண்ணீர் குடித்துவர சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் ஜொலிக்கும்; கூந்தல் வலுப்பெறும். முடியின் வேர்க்கால்கள் வளர்வதற்கும் சீரகத் தண்ணீர் உதவும்.
# மலச்சிக்கலைப் போக்க, சீரகத்தில் உள்ள நார்ச்சத்து உதவும்.
# சீரகத்தை லேசாக வறுத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டுவர, நரம்புகள் வலுப்பெறும்.

Sunday, 8 July 2018

நல்லெண்ணெயின் சில அழகு நன்மைகள்!




முகப்பரு
நல்லெண்ணெய் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவி, முகப்பரு மற்றும் பருக்களால் வரும் தழும்புகளைத் தடுக்கும். அதற்கு தினமும் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, பருக்கள் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் குறைவதோடு, தழும்புகளும் குறையும்.

சரும வறட்சி
பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு சரும பிரச்சனை தான் சரும வறட்சி. இந்த சரும வறட்சியைத் தடுக்க பல்வேறு வழிகள் உள்ளன. அதில் ஒன்று நல்லெண்ணெய். இந்த நல்லெண்ணெயை டோனர் வடிவில் பயன்படுத்தி வந்தால், சருமத்தின் இளமைத்தன்மை தக்க வைக்கப்பட்டு, சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும். அதற்கு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதை முகம், கை, கால்களில் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள்.இப்படி தினமும் பயன்படுத்தி வருவதால், சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.

மென்மையான உதடுகள்
நல்லெண்ணெய் உதடுகளுக்கு ஒரு நல்ல நிறத்தை வழங்கும். ஒருவர் தினமும் நல்லெண்ணெயை உதடுகளுக்கு பயன்படுத்தி வந்தால், உதடுகள் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும். அதற்கு நல்லெண்ணெயை தினமும் இரவில் படுக்கும் முன் உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். ஆனால் நல்லெண்ணெயைப் பயன்படுத்திய உடனேயே பலன் கிடைக்காது. தினமும் பயன்படுத்தி வந்தால் தான் பலனைக் காண முடியும். உங்கள் உதடுகள் ஒரே பயன்பாட்டில் பிங்க் நிறத்தில் காட்சியளிக்க வேண்டுமானால், சில துண்டுகள் பீட்ரூட்டை வெயிலில் உலர்த்தி பொடி செய்து கொள்ளுங்கள். பின் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயில் 1 சிட்டிகை பீட்ரூட் பவுடர் சேர்த்து கலந்து, உதட்டின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இப்படி தினமும் ஒருமுறை செய்து வாருங்கள்.

வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க

வாழைக்காயில் மிக அதிக அளவில் இரும்புச் சத்து நிறைந்திருக்கிறது. நோஞ்சானாக இருப்பவர்கள் அடிக்கடி உணவில் வாழைக்காயை சேர்த்துக் கொண்டால் உடல் தேற ஆரம்பிக்கும். 

நீரிழிவு வாழைக்காய் உணவில் சேர்த்துக் கொண்டால், பசி மிக விரைவாக அடங்கி விடும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் வாழைக்காயை சாப்பிடலாமா என்ற சந்தேகம் இயல்பாக எழுவது வழக்கம் தான். ஆனால் நீரிழிவு நோயுள்ளவர்கள் வாழைக்காய் கச்சல் செய்து சாப்பிடுங்கள். அதாவது வாழைக்காயில் சீரகமும் மிளகும் சேர்த்து சாப்பிட வேண்டும். அப்படி அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

ரத்த விருத்திக்கு ரத்த விருத்திக்கு வாழைக்காயை சமைத்து சாப்பிட்டு வருவது நல்லது. வாழைக்காயின் மேல் தோலை மட்டும் சீவி விட்டு, சமைப்பது தான் சிறந்த முறை. அப்போது தான் நார்ச்சத்து முழுமையும் நம்முடைய உடலுக்கு வந்து சேரும். வாழைக்காயின் மேல் தோலை மெலிதாக சீவி எடுத்து அதை சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வதக்கி வைத்துக் கொண்டு, அதனுடன் ஒரு ஸ்பூன் உளுந்து, சிறிது சீரகம், மிளகாய் வற்றல், பூண்டு 4 பல், உப்பு, ஒரு நெல்லிக்காய் அளவு புளி ஆகியவற்றைச் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டு வந்தால், ரத்தம் சுத்தமாகும். அது மட்டுமல்லாது, வயிறு இரைச்சல், வாயில் எச்சில் ஊறுதல், வயிற்றுப்போக்கு ஆகியவை குணமாகும்.

வயிற்றுப் போக்குக்கு பத்திய சாப்பாடு சாப்பிடுகிறவர்கள் வாழைப் பிஞ்சினை நெய்யில் வதக்கி, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வாருங்கள். வயிற்றுப் போக்கு உடனடியாக நிற்கும்.

ஏப்பம் சிலருக்கு அடிக்கடி தொடர்ந்து ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். அதற்கு மிக முக்கியமான காரணமே அஜீரணக் கோளாறு தான். அப்படி அஜீரணக் கோளாறுகள் ஏதேனும் இருந்தால், வாழைக்காயினை சின்ன சின்ன வில்லைகளாக வெட்டி, வெயிலில் நன்கு உலர்த்தி, பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியை பாலில் கலந்து குடித்து வர அஜீரணக் கோளாறு நீங்கும். அதேபோல், உலர்த்திய வாழைக்காயுடன் சிறிது உளுந்து, மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து அரைத்து இட்லி பொடி, சாதப்பொடி போலவும் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வரலாம். வயிற்றுக் கடுப்பு தீரும்.

Saturday, 30 June 2018

சிறுதானியம்... பெரும் பலன்கள்!

ஆறுமாதக் குழந்தை முதல் அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு சிறுதானியம். ஒவ்வொரு சிறுதானியத்துக்கும் தனித்துவச் சிறப்புகள் உள்ளன. எந்தெந்த சிறுதானியத்தில் என்னென்ன சிறப்புகள் என்பதைத் தெரிந்துகொண்டால், அவற்றைப் பயன்படுத்தி உடலை வலுப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.
கம்பு - ஆரோக்கியமான சருமத்தைத் தரும். பார்வைத்திறன் மேம்படும். உடல் வெப்பம் தணியும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும். பாலூட்டும் தாய்மார்களுக்கு, பால் சுரக்க உதவும்.

தினை - இதயத்தைப் பலப்படுத்தும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும். மகிழ்ச்சியான மனநிலையைத் தரும்.

சாமை - ரத்தசோகையைக் குணப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. மலச்சிக்கல் தீரும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும். உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.

சோளம் - உணவுக் குழாய் தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படும். ரத்த ஓட்டத்தைச் சீர்செய்யும். செரிமான சக்தி மேம்படும். வாயுத்தொல்லை நீங்கும். உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடியது.
கேழ்வரகு - எலும்புகளை உறுதிசெய்யும். இரும்புச்சத்து நிறைந்துள்ளது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். உடல் வெப்பத்தைக் குறைக்கும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும். சருமத்தில் பளபளப்பு உண்டாகும்.

வரகு - உடல் எடையைக் குறைக்கும். மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். மூட்டுவலி இருப்போர் அவசியம் சாப்பிட வேண்டும். சர்க்கரை, நரம்பு தொடர்பான பிரச்னைகளுக்கு நல்லது.

குதிரைவாலி - சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும். நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், செரிமான மண்டலத்தை சீராக்கும், மலச்சிக்கலைத் தடுக்கும்.

Wednesday, 20 June 2018

அல்சரை விரட்ட ஆறு வகையான சாப்பாடு..!

வாழைத்தண்டு
வாழைத் தண்டுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அதை சட்னி போல் அரைத்து சாறு பிழிந்து தினமும் குடித்து வர வேண்டும். இதனால் அல்சர் மற்றும் சிறுநீரகக் கற்கள் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

கொத்தமல்லி
அல்சர் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் தங்களின் உணவில் கொத்தமல்லியை அதிகமாக சேர்த்து சாப்பிட வேண்டும்.
ஏனெனில் இது அல்சர் இருப்பவர்களுக்கு நல்ல டானிக்காக உள்ளது. மேலும் இந்த கொத்தமல்லி பசியை தூண்டி, பித்தத்தைக் குறைத்து. காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளது.

வல்லாரை
அல்சர், மஞ்சள் காமாலை, தொழுநோய், பேதி, நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்தி போன்ற பிரச்சனைகளுக்கு வல்லாரைக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
மேலும் இந்த வல்லாரைக் கீரையை அல்சர் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் 2 வேளைகள் சிறிதளவு இலைகளை பச்சையாக சாப்பிட்டால், மிகவும் நல்லது.

வெங்காயம் மற்றும் பூண்டு
தினமும் நாம் சாப்பிடு உணவில் வெங்காயம் மற்றும் பூண்டை அதிகமாக சேர்த்து சாப்பிட்டு வந்தால், அல்சர், ரத்த அழுத்தம், இருமல், ஆஸ்துமா, காய்ச்சல், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

மணத்தக்காளி கீரை
மணத்தக்காளி கீரையை தினமும் சமைத்து சாப்பிடுவதன் மூலம் வாய் புண், வயிற்று புண் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளது.
மேலும் இந்த மணத்தக்காளி கீரை ஜீரணக் கோளாறுகள், புற்றுநோய், ஈரல் கோளாறுகள், இருமல், அனீமியா, தோல் வியாதிகள் போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த மருந்தாக உள்ளது.

பச்சை வாழைப்பழம்
பச்சை வாழைப்பழம், வயிற்று உபாதையில் ஏற்படும் புண்களை போக்கும் தன்மைக் கொண்டது. எனவே அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு பச்சை வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகிவிடும்.

Tuesday, 12 June 2018

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உளுந்தின் பயன்கள்

  இந்திய உணவு வகைகள் உலக உணவு வகைகளில் முதன்மையானது. சீன உணவு வகைகளில் பெரும்பாலும் அசைவம் நிறைந்திருக்கும். ஆனால் முழுக்க முழுக்க மூலிகைகள் நிறைந்த சைவ உணவே இந்திய உணவாகும்.



  இந்திய உணவில் இரண்டு வகை உண்டு.


தென்னிந்திய உணவு வகை,
வட இந்திய உணவு வகை.

  தென்னிந்திய உணவுகளை விருந்தோம்பல் உணவு என்பார்கள். அறுசுவை கொண்ட உணவு இதுதான். குறிப்பாக தமிழக மக்களின் பிரசித்திபெற்ற உணவு இட்லிதான். தமிழக இட்லியை விரும்பி உண்ணாதவர் உலகில் எவரும் இருக்க முடியாது.

  குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இட்லிதான். இவை உடலுக்கு தெம்பையும் புத்துணர்ச்சியையும் கொடுத்து உடலை பாதுகாக்கிறது. இந்த இட்லியில் இவ்வளவு மருத்துவக் குணம் உள்ளதற்குக் காரணம் உளுந்துதான். மனிதனுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்த உணவுகளுள் உளுந்தும் ஒன்று. இதன் வெளித் தோல் கருப்பாகவும், உட்புறம்நன்கு வெண்மையாகவும் காணப்படும்.

  இந்தியாவில் அனைத்து பகுதியிலும் பயிராகும் ஒருவகை செடியாகும். பணப்பயிர்களில் இதுவும் ஒன்று.கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும். இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

உடல் சூடு தணிய 

இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.

உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

தாது விருத்தியாக

உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.

எலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு

தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.

இடுப்பு வலுப்பெற

சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.

இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

குழந்தைகளுக்கு
சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

பெண்கள்
நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.

உளுந்தின் பயன்களைப் பற்றி தனிப் புத்தகமே எழுதும் அளவுக்கு மருத்துவப் பயன் உள்ளது.உளுந்தை தினமும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.


நன்றி : inruoruthagaval

வெண்புள்ளி தேமல் மறைய எளிய குறிப்புகள்..!

1ஆரஞ்சு தோலை பொடி செய்து தினமும் தேயத்து குளித்து வந்தால் தேமல் குறையும்.

2 மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை தேமல் உள்ள பகுதிகளில் தேய்த்தால் தேமல் மறையும்.
3 மலைவேம்பு இலைகளை அரைத்து அதன் சாறை தேமல் மீது பூசி வந்தால் தேமல் மற்றும் அரிப்பு குறையும்.
4 துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.

5 கீழாநெல்லி இலை, கொத்தமல்லி இலை இவற்றை பாலில் அரைத்து தேமல் உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால் தேமல் குறையும்.
6 வெள்ளைப் பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்துத் தினமும் தோலில் தேய்த்துக் குளித்துவர தேமல் குறையும்.
7 தேமல் மறைய சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் மறைந்து, சருமம் இயல்பு நிலை அடையும்
8 முள்ளங்கிச் சாறு, எலுமிச்சைச் சாறு, தக்காளிச் சாறு மூன்றையும் கலந்து தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வர தேமல் குறையும்.
9 ஆடு தீண்டாப் பாளையை, தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் மறையும்.
10 தொட்டாற்சுருங்கி இலையை நன்கு அரைத்து அதன் சாற்றை தேமல் உள்ள இடங்களில் காலையிலும் மாலையிலும் தடவிவந்தால் ஐந்தே நாட்களில் தேமல் பறந்து போய்விடும்.


From vivasayathaikappom

Sunday, 10 June 2018

வீட்டு விச பூச்சிகளின் கடியும் அதற்கான மருந்தும்..! பல்லி தேனீ குளவி தேள் கம்பளிபூச்சி பூரான் அரனை

பல்லி!
பல்லி கடிப்பது அரிதான ஒன்று. அப்படி கடித்தால், அவுரி இலை மற்றும் அதன் வேர் ஆகியவற்றை 50 கிராம் எடுத்து, 500 மில்லி தண்ணீரில் போட்டு 100 மில்லி அளவுக்கு சுண்டும் வரை காய்ச்சி, தினமும் 25 மில்லி வீதம் நான்கு நாட்கள் குடித்து வந்தால் விஷம் குறையும்.


பூச்சிக் கடி!
சில நேரங்களில் பெயர் தெரியாத பூச்சிகள் கடித்துவிடும். எந்த பூச்சி கடித்தாலும், வெதுவெதுப்பான நீரில், மக்காச்சோளமாவு, சமையல் சோடா இரண்டையும் சேர்த்துக் கலந்து, பூச்சிக் கடித்த இடத்தில் தடவினால்… விஷம் இறங்கும்.

அரணைக் கடி!
அரணை கடிப்பதைவிட நக்கிச் சென்றுவிடும். இதுவே விஷம் என்பார்கள். இதற்கு சீமை அகத்தி இலையை விழுதாக அரைத்து, தேங்காய் எண்ணெயில் குழைத்து கடிவாயில் பூசி வந்தால் விஷம் குறையும்.
தேனீ, குளவி!
தேனீ, குளவி கொட்டினால் மாங்காய் காம்பில் இருந்து வழியும் பாலை கடிவாயில் தடவினால் விஷம் இறங்கும். அல்லது கடிவாயில் சுண்ணாம்பு தடவினால் வீக்கம் குறைந்து விஷமும் இறங்கும்.

தேள் கடி!
20 மிளகுடன், தேங்காய் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக மென்று தின்றுவந்தால் தேள்கடி விஷம் குறையும். அல்லது வெள்ளைப் பூண்டை அரைத்து கடிவாயில் தடவினால் விஷம் குறையும். புளியைக் கரைத்து சிறிது குடித்துவிட்டு, தேள் கொட்டிய இடத்தில் தடவினால் விஷம் இறங்கும். தேன், எலுமிச்சைச் சாறு இரண்டையும் குழைத்து கடிவாயில் தடவினாலும் விஷம் இறங்கும்.

கம்பளிப்பூச்சி!
கம்பளிப்பூச்சியின் ரோமம் உடலில் பட்ட இடத்தில் நல்லெண்ணெய் தடவினால் வீக்கம், அரிப்பு நீங்கும். அல்லது முருங்கை இலையை அரைத்து பற்று போட்டாலும் அரிப்பு குறையும். வெற்றிலையை சாறு வரும் அளவுக்கு அழுத்தி தேய்த்தாலும் அரிப்பு குறையும்.

பூரான்!
வெற்றிலைச் சாற்றில் மிளகை நான்கு மணி நேரம் ஊறவைத்து, அதை எடுத்து காயவைத்து சாப்பிட்டு வந்தால், பூரான் கடி விஷம் குறையும். துளசி இலைகளைக் காயவைத்து பொடி செய்து, 5 மிளகு சேர்த்து மென்று தின்றால் பூரான் விஷம் குறையும்.

விஷக்கடி வலி நீங்க!
கரிசலாங்கண்ணி இலையை ஆட்டுப்பாலில் அரைத்து கொடுத்தால், விஷக்கடியால் ஏற்படும் வலி குறையும்.
மேற்சொன்ன எந்த ஜந்து கடித்தாலும் நாட்டுத் தக்காளி, மணத்தக்காளி செடிகளின் இலைகளையும் இடித்து சாறு பிழிந்து, அதில் 200 மில்லி தினமும் குடித்து வந்தால் விஷம் குறையும். விஷ ஜந்துக்கள் எது கடித்தாலும், உடனடியாக கடிவாயில் சுண்ணாம்பைத் தடவி, எட்டு மிளகை வாயில் போட்டு மென்று விழுங்குவது முதல் உதவியாக இருக்கும்.

நாய், பூனை, பாம்பு!
நாய், பூனை ஆகிய செல்லப் பிராணிகள் கடித்தால், உடனடியாக வெங்காயம், உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து கடிபட்ட இடத்தில் தடவினால் விஷம் குறையும். எலி கடிக்கும் இதே வைத்தியம் பலன் கொடுக்கும். இந்த முதல் உதவியைச் செய்தபிறகு மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சை எடுப்பது நல்லது. சாதாரண பாம்புகள் கடித்தால், சுண்ணாம்பை தடவி, எட்டு மிளகை வாயில் போட்டு மென்று விழுங்குவதே போதுமானதாக இருக்கும். விஷப்பாம்புகள் என்றால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது.

Nandri Vivasayamkapom

Saturday, 9 June 2018

கோடைக்காலத்தின் வரப்பிரசாதம் நுங்கின் மருத்துவ குணங்கள்!

1. வெயில் காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் தான் பனைமரம். பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை.


2. அந்தவகையில் கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு. நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.

3. நுங்குக்கு, கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டுடன், நுங்கை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

4. நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி, பசியையும் தூண்டும். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு - இரண்டுக்குமே நுங்கு மருந்தாக இருப்பது அதிசயம். நுங்கைச் சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

5. சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக, எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை சாப்பிட்டால், தாகம் அடங்கிவிடும். ரத்தசோகை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும். நுங்கை அரைத்து, தேங்காய்ப் பால் சேர்த்துக் குடித்தால், அல்சர், வயிற்றுப்புண் பிரச்னை தீரும்.

6. நுங்கில் 'ஆந்த்யூசைன்’ என்னும் ரசாயனம் இருப்பதால், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் கட்டிகள் வருவதைத் தடுக்கும். வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்கள் வருவதைத் தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.அதேபோல், பதநீரும், நம் ஊர் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற, மிகச் சிறந்த பானம். உடல் உஷ்ணத்தை உடனே தணித்து, உடலைக் குளிரவைக்கும் தன்மை கொண்டது.

7. நம் உடல் வெயில் காலத்தில் சந்திக்கும் அனைத்து அசௌகரியங்களில் இருந்தும், நம்மைக் காக்கும் நுண்சத்துக்கள் பதநீரில் அதிகம். ரத்த சோகையைப் போக்கும். தலையில் பேன் தொல்லை இருப்பவர்கள், பதநீரைத் தலையில் தேய்த்துக் குளிக்கலாம். இப்படி நுங்கும் பதநீரும் நமக்கு அள்ளித் தரும் நன்மைகள் ஏராளம்!''

8. நுங்கை இளநீருடன் ஜூஸாக அரைத்து அருந்தலாம். தலைக்கு தேய்த்தும் குளிக்கலாம். சருமமும் உடலும் பொலிவடையும்.நுங்கை மசித்து வியர்க்குரு கட்டிகள் இருக்கும் இடத்தில் பூசினால், விரைவில் சரியாகும். தோலும் பளபளப்பாகும்.

9. பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டியுடன் சுக்கு சேர்த்துச் சாப்பிட்டால், நன்றாகப் பசி எடுக்கும். சுக்கு, மிளகு, கருப்பட்டி சேர்த்து, குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால், தாய்ப் பால் நன்கு சுரக்கும். குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும்.

10. நுங்கை இளநீருடன் ஜூஸாக அரைத்து அருந்தலாம். தலைக்கு தேய்த்தும் குளிக்கலாம். சருமமும் உடலும் பொலிவடையும்.  

11. பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டியுடன் சுக்கு சேர்த்துச் சாப்பிட்டால், நன்றாகப் பசி எடுக்கும்.

12. சுக்கு, மிளகு, கருப்பட்டி சேர்த்து, குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால், தாய்ப் பால் நன்கு சுரக்கும். குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும்.

13. நுங்கை மசித்து வியர்க்குரு கட்டிகள் இருக்கும் இடத்தில் பூசினால், விரைவில் சரியாகும். தோலும் பளபளப்பாகும்.

14.  நுங்கை அரைத்து, தேங்காய்ப் பால் சேர்த்துக் குடித்தால், அல்சர், வயிற்றுப்புண் பிரச்னை தீரும்.

ஏழு சிறுதானியங்களும், எக்கச்சக்கமான பலன்களும்!

தினை

திணை புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, பாஸ்பரஸ், மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டது. இதயத்தைப் பலப்படுத்தவும், கண்பார்வை சிறப்பாக இருக்கவும் உறுதுணையாக இருக்கும்.
குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தினையைக் கூழாக்கித் தருவார்கள்; அது, தாய்ப்பால் நன்கு சுரக்க உதவும். இது கபம் தொடர்பான நோய்களை நீக்கும். வாயுத்தொல்லையை விரட்டும். தினையில் இட்லி, அல்வா, காரப் பணியாரம், பாயசம், அதிரசம் ஆகியவற்றைச் செய்து சாப்பிடலாம்.

கேழ்வரகு / ராகி

அரிசி, கோதுமையைவிட கேழ்வரகில் ஊட்டச்சத்துகள் அதிகம். குறிப்பாக சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து, வைட்டமின் பி அதிக அளவில் உள்ளன. இதனால் எலும்புத் தேய்மானம், ரத்தசோகை, இதய நோய், மலச்சிக்கல், சர்க்கரைநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிறந்தது.


ராகியைக் களியாகச் செய்து சாப்பிட்டால், உடல் உஷ்ணம் நீங்கும்; உடல் வலிமை பெறும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது. அஜீரணக் கோளாறுகள் நீங்கும்; குடற்புண்கள் குணமாகும்; பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் சீராகும். கர்ப்பிணிப் பெண்கள் தினமுமே சாப்பிட்டுவரலாம். கேழ்வரகில் கூழ் செய்து பச்சிளம் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இதில், இட்லி, தோசை, கொழுக்கட்டை, இடியாப்பம், அடை, இனிப்பு வகைகள் என பலவற்றைச் செய்யலாம்.

சாமை

சாமையில் அரிசியைவிடப் பலமடங்கு நார்ச்சத்து உள்ளதால், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. மற்ற சிறுதானியங்களைவிட சாமையில் இரும்புச்சத்து அதிகம். இது, ரத்தசோகையை நீக்க உதவும். மலச்சிக்கலைப் போக்கும். வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வைத் தரும். சாமையில் உள்ள தாதுஉப்புகள் உயிரணுக்களின் அளவை அதிகரிக்கச் செய்யும். இதில், இட்லி, மிளகுப் பொங்கல் (வெண்பொங்கல்), இடியாப்பம், காய்கறி பிரியாணி என வகை வகையாக உணவுகளைச் செய்ய முடியும்.

குதிரைவாலி

குதிரைவாலியில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளன. புரதச்சத்தும் உயிர்ச்சத்தும்கூட அதிகமாக இருக்கின்றன. இதில் உள்ள நார்ச்சத்து, புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்களைத் தவிர்க்க உதவும். செல்களைப் பாதுகாக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகச் செயல்படும் தன்மை இதற்கு உண்டு.
வாயுக் கோளாறுகளைத் தீர்க்கும். இடுப்புவலி, வயிற்றுக் கடுப்பு, காய்ச்சல் போன்ற நேரங்களில் குதிரைவாலி களி, குதிரைவாலி கஞ்சி சிறந்த உணவாக இருக்கும்..

வரகு

உடலுக்கு அதிகச் சக்தியளிக்கும் வரகில், அரிசி, கோதுமையைவிட நார்ச்சத்து அதிகம். விரைவில் செரிமானமாகும் தன்மைகொண்டது. மேலும் தானியங்களில் அதிகம் புரதம், தாது உப்புகளைக் கொண்டது. இதில், பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீஸ், காப்பர், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் பி அனைத்தும் நிறைந்துள்ளன.
சிறுநீர்ப் பெருக்கி; மலச்சிக்கலை போக்கும்; உடல்பருமனைக் குறைக்கும். ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், தேவையற்ற நச்சுகளை வெளியேற்றி ரத்த ஓட்டத்தைச் சீர்செய்யவும் உதவும். கல்லீரலைச் சீராக்கும், நரம்பு மண்டலத்தையும், எலும்புகளையும் பலப்படுத்தும். மாதவிடாய்க் கோளாறு உள்ள பெண்களுக்கு வரகு, வரம். இதில் புட்டு, வெண்பொங்கல், கார பணியாரம், இட்லி, புளியோதரை, உப்புமா என விதவிதமாகச் செய்ய முடியும்.

கம்பு

வைட்டமின்கள் நிறைந்த கம்பு, உடலுக்குச் சிறந்த ஆற்றலையும் வலிமையையும் தரும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; சோர்வை நீக்கி, புத்துணர்வு தரும்; அஜீரணக் கோளாறுகளைச் சரிசெய்யும். வயிற்றுப் புண் வராமல் தவிர்க்கும்.
வளரும் குழந்தைகளுக்கும் பூப்பெய்திய பெண்களுக்கும் ஏற்றது. உடலுக்கு நன்மை தரும் கொழுப்பு இதில் உள்ளதால், இதய நோயிலிருந்து பாதுகாக்கும். மேலும் சிறுநீரைப் பெருக்கி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சோளம்

நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து நிறைந்த சோளம், உடல் எடை அதிகரிக்க உதவும். ஆஸ்டியோபொரோசிஸ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சோளத்தில் செய்த உணவுகள் சிறந்தவை. தோல் தொடர்பான நோய்கள், சொரியாசிஸ், தோல் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சோளம் ஏற்றதல்ல.
சர்க்கரைநோய் உள்ளவர்கள், செரிமானக் கோளாறு பிரச்னை இருப்பவர்கள், ரத்தசோகை இருப்பவர்களுக்கு சோளம் சிறந்தது. சிறுநீரைப் பெருக்கும்; உடலில் உள்ள உப்பைக் கரைக்கும். இதில் உள்ள பீட்டாகரோட்டின் கண் குறைபாடுகளைச் சரிசெய்ய உதவும். இதில் தோசை, பணியாரம் தயாரிக்கலாம்.




Sunday, 3 June 2018

சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த கீரையை போன்ற மாமருந்து உலகில் வேறு இல்லை...

முருங்கை கீரையின் மகத்துவங்கள்...



** முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.

** முருங்கைக்கீரையின் சாறு இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லது.

** சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

** மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. 
மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.

** ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.

** குழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுத்த வேண்டும்.

** நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும்.

** முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது.

** மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு சிறப்பு..

தேமலை குணப்படுத்த படிங்க.....

தேமல் பிரச்சனைக்கு வேப்பிலை, மாதுளை, கல்யாண முருங்கை ஆகியவை மருந்தாகிறது.



1.. வேப்பிலையை பயன்படுத்தி தேமலை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

வேப்பிலை, மஞ்சள் பொடி, கடுக்காய் பொடி. செய்முறை: வேப்பிலையை பசையாக அரைத்து சாறு எடுக்கவும். இதனுடன் சிறிது மஞ்சள் பொடி, கடுக்காய்பொடி சேர்க்கவும்.
இவைகளை நன்றாக கலந்து தேமல் இருக்கும் இடத்தில் பூசிவைத்து கழுவிவர தேமல் குணமாகும். எந்தவகையான தேமலாக இருந்தாலும் அதை ஆரம்ப நிலையில் தடுப்பது நல்லது. வேப்பிலை அற்புதமான மூலிகையாக விளங்குகிறது.

அம்மை கண்டபோது, தொற்றுநோய்கள் வந்தபோது இல்லத்தின் முற்றத்தில் வேப்பிலையை வைப்பது வழக்கம். இது தொற்றுக் கிருமிகளை தடுக்க கூடியது.

2.. மாதுளையை பயன்படுத்தி தேமலுக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

மாதுளை, பூண்டு, கடுக்காய் பொடி. செய்முறை: 2 ஸ்பூன் மாதுளை சாறு, கால் ஸ்பூன் பூண்டு பசை, கால் ஸ்பூன் கடுக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து தேமல் இருக்கும் இடத்தில் அழுத்தி தேய்த்து சிறிது நேரத்துக்கு பின் கழுவிவர தேமல் வெகுவிரைவில் மறையும்.

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட பூண்டில் நோய் கிருமிகளை அகற்றும் வேதிப்பொருள் உள்ளது. மாதுளை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. நுண்கிருமிகளை அழிக்கும் தன்மை உடையது. தோலுக்கு மென்மை கொடுக்க கூடியது.

3.. கல்யாண முருங்கையை பயன்படுத்தி தேமலுக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

கல்யாண முருங்கை, உப்பு, வெங்காயம். செய்முறை: கல்யாண முருங்கை இலை பசை, உப்பு, வெங்காய சாறு ஆகியவற்றை கலந்து தேமல் உள்ள இடத்தில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்துவர வெகுவிரைவில் தேமல் மறையும்.

மருத்துவ குணங்களை கொண்ட கல்யாண முருங்கையில் முட்கள் இருக்கும். இது மூட்டு வலியை குணப்படுத்தும். சளியை போக்கும். வயிற்று கிருமிகளை அழிக்கும் தன்மை உடையது.

கல்யாண முருங்கை சிவந்த நிறமுடைய பெரிய பூக்களை கொண்டது. கல்யாண முருங்கையை அரிசி மாவில் சேர்த்து அரைத்து தோசையாகவோ அல்லது அடையாகவோ சாப்பிடும்போது ரத்த ஓட்டம் சீராகும்.

சளி பிரச்னையை தீர்க்கும். வலியை போக்கும். பூஞ்சை காளான்களை அழிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி உடையது.

வெங்காயம், மாதுளை, பூண்டு, வேப்பிலை ஆகியவை தோல்நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டவை. இவைகளை பயன்படுத்துவதன் மூலம் தேமலை குணப்படுத்தலாம்.

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...