- விமானத்தின் குறிப்பிட்ட ஒரு ஜன்னல் கண்ணாடிக்கு மேல் பகுதியில் கருப்பு நில முக்கோண குறியீடு பொறிக்கப்பட்டிருக்கும் அந்த ஜன்னல் வழியாக பார்த்தால் விமானத்தின் றெக்கையும், இன்ஜினும் தெளிவாக தெரியும். விமானம் பறக்கும் போது இன்ஜினில் கோளாறு ஏற்பட்டால், விமானிகள் இந்த ஜன்னல் வழியாக பார்த்து தான் இன்ஜின் கோளாறை உறுதி செய்வர்.
- காற்று அழுத்தம் பொதுவாக விமானங்களில் எந்த பகுதியிலும் ஓட்டைகள் இருப்பதில்லை. ஆனால் விமானத்தின் மையபகுதியில் உள்ள ஜன்னல்களில் மட்டும் சிறிய ஓட்டை இருக்கும். விமானம் பறக்கும் போது விமானத்திற்குள் ஒரு வித காற்று அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த அழுத்தம் தொடர்ந்து காணப்பாட்டால் பயணிகளுக்கு மூச்சு திணறல் கூட ஏற்படும். இந்த ஓட்டை காற்றழுதத்தை ஓரளவு சீர் செய்யும்.
- ரகசிய ஓய்வறை அதிக நேரம் பயணம் செய்யும் விமானங்களில் விமானத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஓய்வெடுக்க தனியாக ரகசிய அறை அமைக்கப்பட்டிருக்கும். அங்கு செல்ல பயணிகளுக்கு அனுமதி கிடையாது. சில நேரங்களில் வம்பு செய்யும் பயணிகளிடமிருந்து தங்களை காத்துக்கொள்ளவும் விமான ஊழியர்கள் இந்த அறையை பயன்படுத்துகின்றனர்.
- கைப்பிடி பட்டன் விமானத்தில் உள்ள சிட்களின் கைப்பிடி அருகில் சிறிய பட்டன் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்த பட்டனை அழுத்துவதன் மூலம் அந்த கைப்பிடியின் உயரத்தை மாற்றிக்கொள்ளலாம். இது ஊனமுற்றவர்களுக்கு பயனளிக்கும்.
- கழிவறை லாக் விமானத்தில் உள்ள கழிவறையில் உள்ள லாக்களை நீங்கள் உள்ள சென்று பூட்டிக்கொண்டாலும் அதை வெளியே இருந்து திறக்கும் வசதி இருக்கும். அவசர காலத்தின் போது, விமான ஊழியர்கள் இந்த முறையை பயன்படுத்து கொள்வர், பொதுவாக வயதானவர்கள் கழிவறை பயன்படுத்து திடீர் என மயங்கி விழுந்தால் அவர்களை மீட்க இது பயனளிக்கும்.
- மஞ்சள் நிறப்பிடி விமானம் பறக்கும் போது மிகவும் ஈக்கட்டான நிலையில் விமானத்தை உடனடியாக தரையிறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்பொழுது அருகில் எந்த விமான நிலையமும் இல்லாவிட்டால் விமானி விமானத்தை தண்ணீரில் தரையிறக்க முடிவு செய்வார். அவ்வாறான நேரங்களில் பயணிகளை விமானத்தின் றெக்கையின் மேற்பகுதியில் நிற்க வைத்து அவர்களின் உயிரை காப்பாற்ற விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கும். அந்த நேரங்களில் விமானத்தின் றெக்கையில் பயணிகள் நிற்கும் போது தண்ணீருக்கும் விழுந்துவிடாமல் இருக்க கயிறு கட்டப்படும். அதற்காக விமான பகுதியில் நிரந்தரமாக மஞ்சள் நில ஹூக் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும்.
- ஆஷ் டிரே விமானத்தின் புகைபிடிப்பது என்பது தடை செய்யப்பட்ட ஒன்று தான், இருந்தாலும் அங்கு ஆஷ் டிரேவை நீங்கள் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கலாம். அந்த ஆஷ்டிரே எதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது என்றால் சிலர் தடையை மீறியும் புகைபிடிப்பர் அவர்கள் புகைத்துவிட்டு சிகரெட்டை கீழே போட்டால் தீ விபத்துநடக்க வாய்ப்புள்ளது. அதை தடுக்க அவர்களுக்காக ஆஷ்டிரை அமைக்கப்பட்டுள்ளது.
- ஆக்சிஜன் இருக்காது விமானம் பறக்கும் போது விமானத்திற்குள் ஆக்சிஜன் குறைந்தால் விமானத்தில் உள்ள பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்படும் இதை சமாளிக்க அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கப்படும். ஆக்சிஜன் பொதுவாக எளிதில் தீப்பற்றக்கூடியது. மாறாக பெரியம் பெராக்ஸைடு, சோடியம் குளோரேட், பொட்டாசியம் குளோரேட், ஆகியன இருக்கும். இதை ரியாக் செய்யவைத்தால் இருந்து இருந்து ஆக்சிஜன் வெளி வரும் இதை தான் பயணிகள் சுவாசிக்க முடியும்.
- மருத்துவகருவி பொதுவாக விமானங்களில் முதலுதவி பெட்டி இருக்கும் என நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இதய அடைப்பால் ஒருவர் மரணத்தை தவழுப்போகும் வேலையில் அவர்களை காப்பாற்றும் டிபிர்லேட்டர் எனும் கருவியும் பெரும்பாலான விமானங்களில் இருப்பது நம்மில் பலருக்கு தெரியாது.
- ஸ்கை மார்ஷல் விமானத்தை தீவிரவாதிகள் கடத்துவதில் இருந்து பாதுகாக்கவும், பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் சில விமானங்களில் ஸ்கை மார்ஷல் என்பவர் நியமிக்கப்படுவார். இவர் பயணியோடு பயணியாக விமானத்தில் பயணம் செய்வார். இவர் தான் ஸ்கை மார்ஷல் பயணிகள் கண்டுபிடிக்க முடியாது. சில நேரங்கள் ஸ்கை மார்ஷல் குறித்த விபரம் கேப்டன் தவிர மற்ற ஊழியர்களுக்கு கூட தெரியாது. இவர்களுக்கு தீவிரவாதிகள் விமானத்தை கடத்த முயலும் போது அவர்களிடம் இருந்து விமானத்தை மீட்க பயிற்சி அளிக்கப்பட்டிருக்கும். சில நேரங்களில் விமானம் கடத்தப்பட்டாலும் விமானத்தில் பயணிகள் போல நடித்து வெளில் உள்ள அதிகாரிகள் பயணிகளை மீட்கும் முயற்சியில் அதிகாரிகளுக்கு நம்பகமான ஆளாகவும் ஸ்கை மார்ஷல் செயல்படுவார்.
- காக்பிட் கேமரா பொதுவாக விமானங்களில் “பிளாக் பாக்ஸ்” எனும் விமான பயணத்தின் போது விமானிகளில் உரையாடல்கள் பதிவாகும் பெட்டி இருக்கும். இந்த பெட்டியில் தற்போது கேமராவும் இணைக்கப்பட்டுள்ளது. சில விமானங்களில் விமானத்தை ஓட்டும் அறைகளில் நடப்பது முற்றிலுமாக “பிளாக் பாக்ஸில் பதிவாகிவிடும்” அதே போல் பயணிகள் அமர்ந்திருக்கும் இடத்திலும் கேமராக்கள் அமைக்கப்பட்டிருக்கும். இது பயணிகளின் நடவடிக்கையை கண்காணிக்க உதவும்.
Thursday, 24 May 2018
விமானத்தைப் பற்றி அறியாத தகவல்கள்
ஆண்களை விட பெண்களின் ஆயுள் அதிகம் ஏன்? - அமெரிக்க ஆய்வில் புதிய தகவல்
ஆண்களை விடவும் பெண்கள் அதிக காலம் உயிர்வாழ்தாகவும், இதற்கு அவர்களது உடல் மற்றும் மரபியல் ரீதியான காரணங்கள் இருப்பதாகவும் அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆண்களை ஒப்பிடுகையில் உடல் வலிமையை வைத்து, பெண்கள் பலவீனமானவர்கள் என சொல்லப்படுவதுண்டு. ஆனால், வாழ் நாட்களை பொறுத்தவரை, ஆண்களை விடவும் பெண்கள் அதிககாலம் உயிர் வாழ்வதாக ஏற்கனவே புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அமெரிக்காவின் துர்ஹமில் உள்ள டியூக் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆய்வு செய்துள்ளனர். இவர்களது ஆய்வு சமீபத்தில் வெளியாகியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
‘‘பெண்கள் மரபியல் ரீதியாகவும் சரி, உயிரியல் ரீதியாகவும் வலிமையாக இருக்கின்றனர். இதன் காரணமாகவே, ஆண்களை விடவும், பெண்களுக்கு கூடுதலான ஆயுட் காலம் இருப்பதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பஞ்சம், தொற்று நோய் பாதிப்பு என பல சூழல்களிலும், ஆண்களை விடவும், பெண்கள் அதை எதிர்கொண்டு அதிகஅளவில் தாக்குப்பிடித்து வருவதை புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
பிறந்த குழந்தைகளில் கூட ஆண் குழந்தைகளை ஒப்பிட்டால், பெண் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளன. ஆண்களை விடவும், பெண்களின் வாழ்நாள் அதிகரித்து இருக்க மரபியல் ரீதியான காரணங்களும், சுரபிகளும் கராணமாக இருக்கலாம். குறிப்பாக எஸ்ரோஜன் ஹார்மோன்கள், அவர்களுக்கு நோய் எதி்ப்பு சக்தியை அதிகமாக வழங்குகிறது. எனவே அவர்கள் தொற்றுநோய் உள்ளிட்டவை பரவும் போது அதை எதிர்கொள்ளும் திறன் அவர்களின் உடலுக்கு உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆய்வு செய்த அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகப் பேராசிரியர் வெர்ஜினியா சரோலில் கூறுகையில் ‘‘கடந்த 250 ஆண்டு காலம், ஆண் - பெண் விகிச்சார அடிப்படையிலான இறப்பு விவரங்கள் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.. அதன் அடிப்படையில் சில விவரங்கள் தெரிய வந்துள்ளன. ஆண்களை விடவும், பெண்களின் வாழ்நாள் அதிகம் இருந்துள்ளதை உறுதி செய்ய முடிகிறது. அதில் ஆண்களை விடவும் பெண்கள், ஆறு மாதங்கள் முதல் 4 ஆண்டுகள் வரை கூடுதல் காலம் வாழ்ந்துள்ளதும் உறுதியாகியுள்ளது அதற்கான காரணங்களை ஆய்வு செய்தபோது மரபியல் மற்றும் உயிரியல் காரணங்கள் இருப்பதையும் உறுதி செய்துள்ளோம்’’ எனக்கூறினார்.
இருமல் சளி காய்ச்சல் குணமாக சித்த வைத்தியம்
சளி,கபம், நெஞ்சு சளி, குணமாக தூதுவளை, ஆடாதோடா, கண்டங்கத்திரி இலையுடன் சுக்கு, மிளகு, திப்பிலி கலந்து கஷாயம் செய்து தேனுடன் கலந்து சாப்பிட, நாள்பட்ட கட்டிய சளியும் கரையும்.
கருந்துளசியை பிழிந்து, சாரு எடுத்து, தினமும் காலை மாலை இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட சளி – கபம், மார்பு சளி குணமாகும்.
ஆடாதோடா இலையை போடி செய்து தேன்கலந்து தினமும் சாப்பிட்டு வர, இருமல் சளி நிற்கும்
கடுக்காய் பொடியுடன் நெல்லி பொடியையும் கலந்து தேனில் கலந்து சாப்பிட்டால் சளி, கபம் நீங்கும்.
குழந்தைகள் சளியினால் மூச்சு விட சிரமபட்டால், சிறிது தேங்காய் எண்ணெய் மூக்கில் தடவிட, சிரமம் குறையும்
அமுக்கிராங்கிழங்கு பொடி செய்து, தினமும் இரவில் பாலுடன் சாப்பிட்டு வந்தால்,கபம் போகும்
தூதுவளை ரசம் அல்லது தூதுவளை சூப் குடித்தால் சளி போய்விடும்
தேங்காய் எண்ணையை கற்பூரம் சேர்த்து சுடவைத்து நெஞ்சில் தடவினால், நெஞ்சு சளி குணமாகும்.
ரோஜா பூவை முகர்ந்து பார்த்தல் மூக்கடைப்பு நீங்கும்
அருகம்புல் சாரு சளிக்கு மிகவும் நல்லது.
மாதுளம் பழம் சளிக்கு மிகவும் நல்லது. மாதுளம் பழச்சாறை எலுமிச்சம் சாருடன் கலந்து சாப்பிட்டால் சளி சரியாகும்.
கற்பூரவள்ளி இலையை சூடாக்கி, நெற்றியில் பற்று போட்டால், நெற்றியில்
கோத்திருக்கும் நீர் வெளியேறும்
காய்ச்சல் குணமாக சித்த வைத்தியம்
நிலவேம்பு குடிநீர் அணைத்து விதமான காய்ச்சலையும் குணபடுத்தும்.
ஈர பசையுடன் உள்ள வேப்பமர பட்டையை இடித்து அதில் கால் பங்கு சீரக பொடியுடன் பசும்பாலில் கலந்து சாப்பிட காய்ச்சல் குணமாகும்.
திப்பிலியுடன் , குப்பைமேனி செடியை பொடிசெய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமலுடன் கூடிய காய்ச்சல் சரியாகும்
துளசி, வில்வ இலை, வெப்ப இலை, சந்தனம், கடுக்காய், மிளகு, சிற்றரத்தை ஆகியவை பொடியாக அரைத்து காயவைத்து கொண்டால், காய்ச்சல் வரும் சமயம் 1 தேக்கரண்டி வென்னீரில் கலந்து காலை மாலை குடித்து வர, சுரம் குணமாகும்
வேப்பிலையை வறுத்து அடியில் வைத்து படுத்தால், சுரம் போய்விடும்.
உத்தாமணி-வல்லாரை இலைகளை மிளகுடன் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால், காய்ச்சல் சரியாகும்.
சளி இருமல் குணமாக சித்த வைத்தியம்
சீரகத்தை வறுத்து பொடிசெய்து, கல்கண்டுடன் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
பொன்னாரை விதையை பசும்பால் விட்டு நன்றாக அரைத்து குழந்தைக்கு கொடுத்து வர, கக்குவான் இருமல் சரியாகும்.
நாட்பட்ட இருமல் நிற்க, முற்றின வெண்டைக்காயை சூப் பண்ணி சாப்பிட்டால், சிறிது சிறிதாக குணம் ஆகும்
சுக்கு மிளகு திப்பிலி சம அளவில் கலந்து போடி செய்து தினமும் 3 வேலை தேனுடன் கலந்து சாப்பிட தொண்டை வலி சரியாகும்.
மூச்சிறைப்பு குணமாக சித்த வைத்தியம்
விஷ்ணுகிராந்தி பொடியை வென்னீரில் கலந்து சாப்பிட்டால், சளியினால் வரும் மூச்சிறைப்பு சரியாகும்.
கரிசலாங்கண்ணி இலையை அரிசி திப்பிலியுடன் பொடி செய்து சாப்பிட, கபத்தினால் வரும் மூச்சிறைப்பு சரியாகும்.
வேப்பிலையுடன் ஓமவல்லி இலையை அரைத்து நெற்றியில் தடவிவர சளி சரியாகும்
கட்டிகளை கரைக்கும் தன்மையுடைய சப்பாத்திக் கள்ளி
நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளியின் மருத்துவ பயன்பாட்டுக்கு மிக மிக்கிய காரணம், இதி உள்ள கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற சத்துக்களும் உயர்தரமான நார்சத்தும் நிறைந்துள்ளது.
உடலில் உள்ள அனைத்து கட்டிகளையும் கரைக்க இவை பயன்படுகிறது. வெயிலில் ஏற்படும் நாவரட்சிக்கும், வெய்யில் ஏற்படுத்தும் உடல் சோர்வை போக்கவும் உஷ்ணத்தை குரைக்கவும் இந்த சப்பாத்திக் கள்ளி பழம் உதவி புரியும்.
நாகதாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் குரல்வளை, பித்தப்பை, மலக்குடல் சார்ந்த அனைத்து குறைபாடுகளும் நீங்கும். காச இருமல், இரத்தம் குக்குதலும் தீரும். ஞாபக மறதி எனப்படும் அல்ஸைமர் நோய்க்கு இது மருந்தாக பயன்படுத்தலாம். இந்த பழத்தை தொடர்ந்து எடுத்துக்கொள்ளவதால் கண் பார்வை கூர்மையாகிறது.
சப்பாத்திக் கள்ளி பழத்தில் உள்ள உயர்தரமான நார்ச்சத்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றி உடல் பருமனை குறைக்கிறது. சப்பாத்திக்கள்ளியை நன்கு பசையாக்கி சிறிது விளக்கெசப்பாத்திக் கள்ளியை முட்கள் நீக்கி சுத்திகரித்து பசையாக்கி 20 கிராம் அளவில் தினமும் இருவேளை சாப்பிட்டு வர உஷ்ணமாக மலம் வெளியேறுதல் மற்றும் மாதவிலக்கு நிற்கும் காலத்தில் ஏற்படும் பல்வேறு தொல்லைகள் இல்லாமல் போகும்.
முட்களுள்ள சப்பாத்திக்கள்ளியின் இலைத்தண்டை பிளந்து, வெளிப்புறமுள்ள முட்களை நீக்கி, உட்புறமாக சிறிது மஞ்சளை தடவி, அனலில் வாட்டி, கட்டிகளின் மேல் இறுக்கமாக கட்டி வைத்து வர ஆரம்ப நிலையிலுள்ள கட்டிகள் விரைவில் உடைந்து புண் எளிதில் ஆறும். புண் ஆற தாமதமானால் மஞ்சளை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வர விரைவில் குணமுண்டாகும்ண்ணெய் விட்டு வதக்கி வீக்கம், வலி கண்ட இடத்தில் மேற்பூச்சாகப் பூசி வைக்க விரைவில் வீக்கம் வற்றும். வலியும் விலகும்
உடலில் உள்ள அனைத்து கட்டிகளையும் கரைக்க இவை பயன்படுகிறது. வெயிலில் ஏற்படும் நாவரட்சிக்கும், வெய்யில் ஏற்படுத்தும் உடல் சோர்வை போக்கவும் உஷ்ணத்தை குரைக்கவும் இந்த சப்பாத்திக் கள்ளி பழம் உதவி புரியும்.
நாகதாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் குரல்வளை, பித்தப்பை, மலக்குடல் சார்ந்த அனைத்து குறைபாடுகளும் நீங்கும். காச இருமல், இரத்தம் குக்குதலும் தீரும். ஞாபக மறதி எனப்படும் அல்ஸைமர் நோய்க்கு இது மருந்தாக பயன்படுத்தலாம். இந்த பழத்தை தொடர்ந்து எடுத்துக்கொள்ளவதால் கண் பார்வை கூர்மையாகிறது.
சப்பாத்திக் கள்ளி பழத்தில் உள்ள உயர்தரமான நார்ச்சத்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றி உடல் பருமனை குறைக்கிறது. சப்பாத்திக்கள்ளியை நன்கு பசையாக்கி சிறிது விளக்கெசப்பாத்திக் கள்ளியை முட்கள் நீக்கி சுத்திகரித்து பசையாக்கி 20 கிராம் அளவில் தினமும் இருவேளை சாப்பிட்டு வர உஷ்ணமாக மலம் வெளியேறுதல் மற்றும் மாதவிலக்கு நிற்கும் காலத்தில் ஏற்படும் பல்வேறு தொல்லைகள் இல்லாமல் போகும்.
முட்களுள்ள சப்பாத்திக்கள்ளியின் இலைத்தண்டை பிளந்து, வெளிப்புறமுள்ள முட்களை நீக்கி, உட்புறமாக சிறிது மஞ்சளை தடவி, அனலில் வாட்டி, கட்டிகளின் மேல் இறுக்கமாக கட்டி வைத்து வர ஆரம்ப நிலையிலுள்ள கட்டிகள் விரைவில் உடைந்து புண் எளிதில் ஆறும். புண் ஆற தாமதமானால் மஞ்சளை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வர விரைவில் குணமுண்டாகும்ண்ணெய் விட்டு வதக்கி வீக்கம், வலி கண்ட இடத்தில் மேற்பூச்சாகப் பூசி வைக்க விரைவில் வீக்கம் வற்றும். வலியும் விலகும்
ஸ்டெர்லைட்டை மூடக் கோரி மோடிக்கு விஜயகாந்த் கடிதம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை, அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம், இயற்கைச் சூழலை பாதிப்பதாக புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தொடர்ந்து 100 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த மக்களின் போராட்டத்தை கலைக்கும் வகையில் போலீஸார் தடியடி நடத்தினர். அதன்பிறகு போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் இறந்துள்ளனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் ஆதரவு இல்லாமல் எந்த திட்டத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்த முடியாது. எனவே, மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட இங்குள்ள தமிழக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். மேலும், கலவரத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு அவசர கால அடிப்படையில் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். ஸ்டெர் லைட் ஆலையை இழுத்து மூடுவதே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல தீர்வை ஏற்படுத்தும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை கையாள்வதில் அதிமுக தலைமையிலான அரசு தோல்வியடைந்துள்ளது. எனவே, இந்த ஆட்சி தொடர வேண்டுமா அல்லது கலைக்கப்பட வேண்டுமா என ஆளு நர் முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
ஆதாரம் the Hindu
ஆதாரம் the Hindu
மறு உத்தரவு வரும் வரை உடல்களை பதப்படுத்தி வைக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
மறு உத்தரவு வரும் வரை தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் உடல்களை பதப்படுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மூலம் விசாரிக்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஜிம்ராஜ் மில்டன், பார்வேந்தன், பாவேந்தன் ஆகியோர் இணைந்து பொது நல வழக்கு தொடர்ந்தனர்.
அவர்கள் கோரிக்கை மனுவில், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி வழங்க செல்லும் வழக்கறிஞர்களை தடுக்க கூடாது. மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் பணி செய்ய தடை விதிக்க வேண்டும். பலியானவர்கள் உடலை தனியார் மருத்துவர்களைக் கொண்டு மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும், என்ற கோரிக்கைகளை வைத்தனர்.
இந்த வழக்கு அவசர வழக்காக நீதிபதிகள் ரவீந்தரன், வேல்முருகன் ஆகியோர் இன்று மதியம் விசாரித்தனர்.
மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி வாதிட்டார்.
100 நாட்களாக போராட்டத்தை வழி நடத்தியவர்கள் குறிவைத்து சுடப்பட்டுள்ளனர். மிருகங்களை வேட்டையாடுவதை போல நடந்துள்ளனர். முழங்காலுக்கு கீழாக சுடவேண்டிய விதிகள் பின்பற்றபடவில்லை. இன்று கூட அண்ணா நகரில் ஒருவர் பலி என தகவல் வந்துள்ளது. போராட்டம் குறித்து முன்னரே அறிவித்தும், அனுமதியும் வழங்கவில்லை.
பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. டாட்டா நிறுவனத்தின் நானோ காருக்காக நிலம் வழங்கும் அரசின் முடிவுக்கு எதிராக மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் விவசாயிகள் போராட்டத்தில் இதேபோல தூப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டதுபோல, மாவட்ட நீதிபதி குழுவை அமைக்க வேண்டும்.
இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலளித்து பேசியதாவது:
மாஜிஸ்திரேட் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு நடைபெறுகிறது. அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மக்களோடுதான் அரசும் உள்ளது. ஆனால் மனுவில் இல்லாத தகவல்களையெல்லாம் வாதங்களாக முன் வைக்கிறார்கள். விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும். என்றார்.
நீதிபதிகள் ரவீந்திரன், வேல்முருகன் கண்டனம்....
வழக்கு கோரிக்கை, அரசின் வாதம் என அனைத்தும் சட்டத்திற்குட்பட்டுதான் இருக்கவேண்டும். நீதிமன்றத்துக்குள் அரசியலை கொண்டு வராதீர்கள். அரசியலை கேட்க இங்கே வரவில்லை. நாங்கள் இங்கே உட்கார்ந்தால் அனைவரையும் சட்டத்தின் பார்வையில்தான் பார்க்கிறோம். நீதிமன்றத்திற்கு வெளியே நடப்பது ஏதும் தெரியாமல் இங்கே உட்காருகிறோம் என நினைக்க வேண்டாம். என நீதிபதிகள் தெரிவித்தனர். நாங்கள் அரசை குற்றம் சாட்டவில்லை. அந்த நோக்குடன் நாங்கள் வரவில்லை. ஆனால் வழக்கு தொடர்பாக மட்டுமே வாதங்களை முன்வைக்க சொல்கிறோம் என்றனர்.
உடற்கூறு ஆய்வு நடந்து முடியட்டும். மறு உத்தரவு வரும் வரை அவர்களின் உடல்களை பதப்படுத்துங்கள். உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்தவுடன் அதன் தன்மையை பொறுத்து மறு ஆய்வு தேவையா இல்லையா என உத்தரவிடுகிறோம் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை மே 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். சட்ட உதவிகள் வழங்க வழக்கறிஞர்களை அனுமதிக்க வேண்டும். வழக்கு குறித்து தமிழக அரசு நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
ஆதாரம் One India
ஆதாரம் One India
ஊழல் புரையோடிப் போன மாநிலங்களில் தமிழகத்திற்கு முதலிடம்
சென்னை: ஊழல் நிறைந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
சி.எம்.எஸ் இந்தியா 2018ஆம் ஆண்டின் ஊழல் நிறைந்த மாநிலங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, , பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 13 மாநிலங்களில் நடத்தப்பட்டது.
அதேபோல் பொது விநியோகத் துறை, மின்சாரத்துறை, மருத்துவத்துறை, பள்ளிக்கல்வித் துறை, தண்ணீர் விநியோகம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், வங்கி சேவை, காவல்துறை, நீதித்துறை, வீட்டுமனை, போக்குவரத்து என 11 துறைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது. மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
ஊழலுக்கு எதிராக போராடுவதில் மிக மோசமான நிலையில் இருக்கிறது. இதில் தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்கள் அடங்கும். ராஜஸ்தான், கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்கள் ஓரளவுக்கு போராடக் கூடியதாக உள்ளன.
போராட்ட குடிமக்கள் சார்ந்த மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், பீகார், தெலுங்கானா உள்ளன. ஊழலுக்கு எதிராக போராடுவதில் குறைவான செயல்பாடு கொண்ட மாநிலங்களில் ஆந்திரா, மேற்குவங்கம், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளன.
நாடு முழுவதும் பொது விநியோகத் துறையில் 75% அளவு ஊழல் நிறைந்துள்ளது. இதையடுத்து போக்குவரத்து, காவல்துறை, வீட்டுவசதி, நிலப் பதிவு, சுகாதாரம், மருத்துவ சேவை ஆகிய துறைகள் உள்ளன. ஆதார் கார்டு பெற 7% பேரும், வாக்காளர் அடையாள அட்டை பெற 3% பேரும் அளித்துள்ளனர்.
மேலும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், புகார் பதிவு செய்தல், வழக்குப்பதிவு செய்தல், ரேஷன் கார்டு பெறுதல், உள்நோயாளிப் பிரிவில் சேருதல், பள்ளி சேர்க்கை, ரசீதுகளில் திருத்தம் போன்றவற்றிற்கு லஞ்சம் கொடுத்துள்ளனர்.
சி.எம்.எஸ் இந்தியா 2018ஆம் ஆண்டின் ஊழல் நிறைந்த மாநிலங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, , பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 13 மாநிலங்களில் நடத்தப்பட்டது.
அதேபோல் பொது விநியோகத் துறை, மின்சாரத்துறை, மருத்துவத்துறை, பள்ளிக்கல்வித் துறை, தண்ணீர் விநியோகம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், வங்கி சேவை, காவல்துறை, நீதித்துறை, வீட்டுமனை, போக்குவரத்து என 11 துறைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது. மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
ஊழலுக்கு எதிராக போராடுவதில் மிக மோசமான நிலையில் இருக்கிறது. இதில் தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்கள் அடங்கும். ராஜஸ்தான், கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்கள் ஓரளவுக்கு போராடக் கூடியதாக உள்ளன.
போராட்ட குடிமக்கள் சார்ந்த மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், பீகார், தெலுங்கானா உள்ளன. ஊழலுக்கு எதிராக போராடுவதில் குறைவான செயல்பாடு கொண்ட மாநிலங்களில் ஆந்திரா, மேற்குவங்கம், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளன.
நாடு முழுவதும் பொது விநியோகத் துறையில் 75% அளவு ஊழல் நிறைந்துள்ளது. இதையடுத்து போக்குவரத்து, காவல்துறை, வீட்டுவசதி, நிலப் பதிவு, சுகாதாரம், மருத்துவ சேவை ஆகிய துறைகள் உள்ளன. ஆதார் கார்டு பெற 7% பேரும், வாக்காளர் அடையாள அட்டை பெற 3% பேரும் அளித்துள்ளனர்.
மேலும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், புகார் பதிவு செய்தல், வழக்குப்பதிவு செய்தல், ரேஷன் கார்டு பெறுதல், உள்நோயாளிப் பிரிவில் சேருதல், பள்ளி சேர்க்கை, ரசீதுகளில் திருத்தம் போன்றவற்றிற்கு லஞ்சம் கொடுத்துள்ளனர்.
தொடா்ந்து ஏற்றம் காணும் பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.80.42 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 72.35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
கா்நாடகா சட்டசபை தோ்தலுக்கு பின்னா் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயா்ந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் கைவிடப்பட்டது. இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை தொடர்ச்சியாக உயா்ந்து வருவதால், பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 31 பைசா உயர்ந்து ரூ.80.42 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு 21 பைசா உயர்ந்து ரூ. 72.35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஆதாரம் samayam
Subscribe to:
Posts (Atom)
அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்
அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...

-
நாவல் மரம் எல்லா வகையிலும் ஒரு சிறப்பான மரம். நாவல் மரம் என்று எடுத்துக்கொண்டால், திருநாவலூர் என்று ஒரு ஊர் இருக்கிறது, திருச்சி பக்கத்தில...
-
கண்ணுக்கு தெரியாத காற்றைக்கூட நம் தமிழர்கள் விட்டுவைக்காமல் அந்த காற்று ( #Air / #Wind ) வீசும் திசை பொருத்து நான்காகவும், அது வீசும் வேகத்...
-
சுதந்திரத்துக்கு முன் கட்டப்பட்டவை – 25 காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்டவை – 25 திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் – 36 அதிமுக ஆட்சியில் கட்டப...