
பயிருக்கு ஏற்றவாறு உரங்கள் இட்டால் மிக அதிக லாபத்தை நம்மால் ஈட்ட முடியும் அதாவது எந்த பயிருக்கு எவ்வளவு மண்புழு உரம் இட வேண்டும் என்பது குறித்து இங்கு காணலாம்.
மக்காச்சோளப்பயிருக்கு ......

அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு உரத்தை இடலாம். பின்னர் 40 நாட்கள் கழித்து 125 கிலோ மண்புழு உரத்தை இடலாம்.
கடலை, வெங்காயப் பயிருக்கு...

அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு உரம் இடலாம். பின்னர் இரண்டாம் களை எடுத்தவுடன் 125 கிலோ மண்புழு உரத்தை இடலாம். மூன்றாம் களை எடுத்தவுடன் 125 கிலோ மண்புழு உரத்தை இடலாம்.
மரவள்ளி கிழங்கிற்கு......

அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு உரம் இடலாம். பின்னர் 90 நாட்கள் கழித்து 250 கிலோ மண்புழு உரத்தை இடலாம். 150 நாள் கழித்து 250 கிலோ மண்புழு உரம் இடலாம்.
கரும்பு மற்றும் வாழை பயிருக்கு.....

அடியுரமாக ஏக்கருக்கு 500 கிலோ மண்புழு உரம் இடலாம். பின்னர் 90 நாட்கள் கழித்து 250 கிலோ மண்புழு உரம் இடலாம். 180 நாட்கள் கழித்து 250 கிலோ மண்புழு உரம் இடலாம்.
வெற்றிலை பயிருக்கு....

கொடி தூக்கிய 60-ம் நாளில் கொடி ஒன்றுக்கு கால் கிலோ மண்புழு உரம் இடலாம்.

அதன் பின்னர் 100 நாள் கழித்து கால் கிலோ, 150 நாள் கழித்து கால் கிலோ, 200 நாள் கழித்து கால் கிலோ மண்புழு உரம் இட்டு வர நல்ல விளைச்சல் கிடைக்கும்.
மிளகாய், கத்தரி பயிருக்கு....

அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு உரத்தை இடலாம். பின்னர் 60 நாட்கள் கழித்து 250 கிலோ மண்புழு உரத்தை மூன்று முறை பிரித்து இடலாம்.
மலர் வகைகளுக்கு...

குறுகிய கால மலர் வகைகளான செவ்வந்தி, மரிக்கொழுந்து, மருகு, வாடாமல்லி, கோழிக்கொண்டை போன்றவற்றிற்கு, அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு உரத்தை இடலாம்.

நீண்டகால மலர் வகைகளான மல்லிகை, ரோஜா, காக்கட்டான், முல்லை, சம்பங்கி, கனகாம்பரம், அரளி போன்றவற்றிற்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செடி ஒன்றிற்கு 250 கிராம் மண்புழு உரத்தை இட்டு வந்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும்.

மண்புழு உரம் இடுவது என்பது மண்ணிற்கேற்ப மாறுபடும். மேலே குறிப்பிடப்பட்டவை பொதுவாக இடும் அளவு ஆகும்.

மண்புழு உரத்தை அதிகம் இட்டாலும் தவறில்லை. பயன் கிடைக்கும்.

மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மண்புழு உரம் இட வேண்டிய அவசியம் இருக்காது. பண்ணைக்கழிவுகளை மட்டும் நிலத்தில் போட்டு வந்தால் போதுமானது.
- Karuppiah
No comments:
Post a Comment