காட்டில் உணவில்லாததால், விவசாய நிலங்களைத் தேடி வருகின்றன நம்நாட்டின் தேசிய பறவையான மயில்கள். ஒரு காலத்தில் உயிர்வேலிகள் இவற்றுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தன. உயிர்வேலிகள் இல்லாததால், தற்போது விவசாய நிலங்களில் வலம் வருகின்றன மயில்கள். இதற்கு உயிர்வேலி மூலம் தீர்வு இருக்கிறது என்கிறார் மயில்கள் குறித்து ஆய்வு செய்துவரும் கரூரைச் சேர்ந்த ஆசிரியர் ராஜசேகரன்.
“முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, கிராமங்கள் ‘இட்டேரி’ எனும் உயிர்வேலிகளால் இணைக்கப்பட்டிருந்தன. இட்டேரி என்பது கொங்குநாட்டுச் சொல். இருபுறமும் அடர்ந்த வேலி. நடுவில் ஒற்றையடிப் பாதை அல்லது மாட்டுவண்டித்தடம். இதுவே இட்டேரி என்று அழைக்கப்படும். இதில் கள்ளி வகைகள், முள் செடிகள், வேம்பு, மஞ்சகடம்பு, நுணா, புரசு போன்ற மர வகைகள்; நொச்சி, ஆடாதொடை, ஆவாரை போன்ற செடி வகைகள்; பிரண்டை, கோவைக்காய் போன்ற கொடி வகைகள் ஆகியவற்றோடு பெயர் தெரியாத எண்ணற்ற புல் பூண்டுகள் நிறைந்திருக்கும்.
இவை உயிர்வேலியாய் இருந்து விவசாய நிலங்களைக் காத்து வந்தன. உயிர் வேலிகளில் எண்ணற்ற உயிரினங்களும் வாழ்ந்து வந்தன. உயிர்வேலிக்கடியில் கறையான் புற்றுகள், எலி வங்குகள் ஆகியவை காணப்படும். நிழல், ஈரம், இலைக்குப்பைகள் ஆகியவை நிலத்தில் இருப்பதால், நிலத்தில் எண்ணற்ற பூச்சியினங்களும் இருந்தன. இப்பூச்சிகளை உணவாக்கிக்கொள்ள வண்டுகள், நண்டுகள், பாம்புகள், உடும்புகள், ஓணான்கள், கோழிகள், குருவிகள், அழுங்குகள், ஆமைகள் எனப் பல பிராணிகள் வந்தன. மனிதர்களுக்குக் கோவைப்பழம், கள்ளிப்பழம், சூரப்பழம், பிரண்டைப்பழம் போன்ற சுவையான கனிவகைகள், காய்கள், மூலிகைகள் எனப் பலவும் கிடைத்துவந்தன. 
வேலியில் வாழ்ந்த குருவிகள், ஓணான்கள், தவளைகள் ஆகியவை பயிர்களைச் சேதப்படுத்த வரும் பூச்சிகளை உண்டு அழித்தன. பாம்புகள், ஆந்தைகள் ஆகியவை எலிகளை உண்டன. பறவைகளின் எண்ணிக்கையைப் பாம்புகளும், வல்லூறுகளும் கட்டுப்படுத்தின. பாம்புகளின் எண்ணிக்கையை மயில்களும் கழுகுகளும் கட்டுப்படுத்தின. மயில்களின் எண்ணிக்கையைக் குள்ளநரிகளும் காட்டுப் பூனைகளும் கட்டுப்படுத்தின. குள்ளநரிகள், மயில்களின் முட்டைகளையும், குஞ்சுகளையும் உணவாக்கிக்கொண்டன. இப்போது மயில்களின் எதிரிகளான குள்ளநரிகளும் காட்டுப்பூனைகளும் அழிந்துவருவதால், மயில்களின் எண்ணிக்கை பலமடங்கு பெருகிவிட்டன.
ஆஸ்திரேலிய நாட்டின் மக்கள் தொகையைவிடக் கங்காருகளின் எண்ணிக்கை அதிகம் என்று பி.பி.சியின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இப்போது கங்காருகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று அந்நாட்டுச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்லி வருகிறார்கள். அதேபோல இந்தியாவிலும் மயில்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஆபத்தானது. குறிப்பிட்ட ஓர் உயிரினத்தின் எண்ணிக்கை அதிகரித்தால், அதனால் அதிகளவு எதிர்மறை விளைவுகள் ஏற்படும்.
சமீபகாலமாக மயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, இயற்கை சமநிலையின்மையை உணர்த்துகிறது. எனவே சுற்றுச்சூழல் குறித்த விழிப்பு உணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். கம்பிவேலி கலாசாரம் அதிகரித்துக் கொண்டிருப்பதால், மிகப்பெரிய ஆபத்தை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். உயிர்வேலிகளின் அழிவு நம் எதிர்காலத்தின் அழிவு. உயிர்வேலிகளைக் காப்பதும் புதிய உயிர்வேலிகளை அமைப்பதும், நாம் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்” என்றார் ராஜசேகரன்.
தொடர்புக்கு: ராஜசேகரன், செல்போன்: 99449 24271
From Vikatan.
“முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, கிராமங்கள் ‘இட்டேரி’ எனும் உயிர்வேலிகளால் இணைக்கப்பட்டிருந்தன. இட்டேரி என்பது கொங்குநாட்டுச் சொல். இருபுறமும் அடர்ந்த வேலி. நடுவில் ஒற்றையடிப் பாதை அல்லது மாட்டுவண்டித்தடம். இதுவே இட்டேரி என்று அழைக்கப்படும். இதில் கள்ளி வகைகள், முள் செடிகள், வேம்பு, மஞ்சகடம்பு, நுணா, புரசு போன்ற மர வகைகள்; நொச்சி, ஆடாதொடை, ஆவாரை போன்ற செடி வகைகள்; பிரண்டை, கோவைக்காய் போன்ற கொடி வகைகள் ஆகியவற்றோடு பெயர் தெரியாத எண்ணற்ற புல் பூண்டுகள் நிறைந்திருக்கும்.

வேலியில் வாழ்ந்த குருவிகள், ஓணான்கள், தவளைகள் ஆகியவை பயிர்களைச் சேதப்படுத்த வரும் பூச்சிகளை உண்டு அழித்தன. பாம்புகள், ஆந்தைகள் ஆகியவை எலிகளை உண்டன. பறவைகளின் எண்ணிக்கையைப் பாம்புகளும், வல்லூறுகளும் கட்டுப்படுத்தின. பாம்புகளின் எண்ணிக்கையை மயில்களும் கழுகுகளும் கட்டுப்படுத்தின. மயில்களின் எண்ணிக்கையைக் குள்ளநரிகளும் காட்டுப் பூனைகளும் கட்டுப்படுத்தின. குள்ளநரிகள், மயில்களின் முட்டைகளையும், குஞ்சுகளையும் உணவாக்கிக்கொண்டன. இப்போது மயில்களின் எதிரிகளான குள்ளநரிகளும் காட்டுப்பூனைகளும் அழிந்துவருவதால், மயில்களின் எண்ணிக்கை பலமடங்கு பெருகிவிட்டன.
ஆஸ்திரேலிய நாட்டின் மக்கள் தொகையைவிடக் கங்காருகளின் எண்ணிக்கை அதிகம் என்று பி.பி.சியின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இப்போது கங்காருகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று அந்நாட்டுச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்லி வருகிறார்கள். அதேபோல இந்தியாவிலும் மயில்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஆபத்தானது. குறிப்பிட்ட ஓர் உயிரினத்தின் எண்ணிக்கை அதிகரித்தால், அதனால் அதிகளவு எதிர்மறை விளைவுகள் ஏற்படும்.
சமீபகாலமாக மயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, இயற்கை சமநிலையின்மையை உணர்த்துகிறது. எனவே சுற்றுச்சூழல் குறித்த விழிப்பு உணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். கம்பிவேலி கலாசாரம் அதிகரித்துக் கொண்டிருப்பதால், மிகப்பெரிய ஆபத்தை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். உயிர்வேலிகளின் அழிவு நம் எதிர்காலத்தின் அழிவு. உயிர்வேலிகளைக் காப்பதும் புதிய உயிர்வேலிகளை அமைப்பதும், நாம் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்” என்றார் ராஜசேகரன்.
தொடர்புக்கு: ராஜசேகரன், செல்போன்: 99449 24271
From Vikatan.
No comments:
Post a Comment