நீர் நிர்வாகம்
இறவை நிலங்களில் விதைத்தவுடன், விதைத்த 3ம் நாள் மொட்டு உருவாகும் சமயம், 50 சத பூக்கும் தருணம், காய் வளர்ச்சியடையும் தருணங்களில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும்.
நீர் மேலாண்மை
இறவை நிலங்களில் விதைத்தவுடன், விதைத்த 3ம் நாள் மொட்டு உருவாகும் சமயம், 50 சத பூக்கும் தருணம், காய் வளர்ச்சியடையும் தருணங்களில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும்.
நீர் மேலாண்மை
- நீர் மேலாண்மை என்பது உலகின் பெரும்பாலான பகுதிகளில் சில கோணங்களில் ஏற்படுகின்ற, மழையளவு பற்றாக்குறையையும் மாறுபாட்டையும் கையாளப் பயன்படுத்தப்படுவதாகும்.
- விதைமுளைத்தல், மண்ணிலிருந்து ஊட்டச்சத்தை உறிஞ்சுதல் மற்றும் ஒளிச்சேர்க்கை போன்ற செயல்களைச் செய்ய தாவரங்களுக்கு நீர் இன்றியமையாததாகும்.
- ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தாவரங்களின் வளர்ச்சிக்காக நீர்ப்பாய்ச்சும் செயல் நீர் மேலாண்மை எனப்படும்.
- கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், குளங்கள், ஏரிகள், ஆறுகள், அணைகள், கால்வாய்கள் போன்றவை நீர்ப்பாய்ச்சுதலுக்குத் தேவையான ஆதார மூலங்களாகும். சில விவசாயிகள் பற்றாக்குறையினை நிரப்ப நீர்ப்பாசனத்தைப் பயன்படுத்துகின்றனர்.
- ககப்பிமுறை, சங்கிலி முறை, ஏற்றம் முறை போன்ற முறைகள் பல நூற்றாண்டுகளாக நமது நாட்டில் நீர்ப்பாசனத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் முறைகளாகும். இவை மலிவானவை ஆனால் திறன் குறைந்தவை.
- வயல்களில் பயிர்வரிசைகளுக்கிடையே உள்ள உழவுக்கால் (சால்) வழியாக நீர் பாய்ச்சும் கால்வாய்ப்பாசனம், வயல் முழுதும் நீரைத் தேக்கி வைக்கும் தேக்கு நீர்ப்பாசனம்.
- ஈரத்தன்மையை நீண்ட நேரம் தக்க வைத்துகொள்ள இயலாத மண்வகைகளுக்கான தெளிப்பு நீர்ப்பாசனம், மழை நீர் குறைவாகக் கிடைக்கும் காலங்களில் தாவர வேருக்கு மிக அருகில் நீரானது சொட்டு சொட்டாக விடப்படும் சொட்டுநீர்ப்பாசனம் ஆகிய பாசன முறைகள் நவீன காலங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
- பொதுவாக விளை நிலங்களில் தேங்கும் நீர் தாவரங்களுக்கு ஊறு விளைவிக்கும் என்பதால் நீர்ப்பாய்ச்சுதலில் கவனமுடன் இருக்க வேண்டும். உலகம் முழுவதிலும் வேளாண்மைக்காக 6௦ சதவிகித நன்னீர் பயன்படுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment