தமிழகத்தில் உள்ள அப்பர் பவானி அணை இன்று மாலை திறக்கப்படுவதால் கேரள மாநிலம் அட்டப்பாடியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி 39 பேர் பலியாகியுள்ளனர். 50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் முக்கிய அணைகள் அனைத்தும் நிரம்பியதால் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இடுக்கி, மலம்புழா, எடமலையார் உள்ளிட்ட அணைகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவின் வடக்கு மாவட்டங்களில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மலம்புழா அணைக்கு தண்ணீர் கொண்டு சேர்க்கும் கல்பாத்தி அணை இன்று காலை நிரம்பியது. இதனால் அந்த அணை திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மலம்புழா அணைக்கு கூடுதல் தண்ணீர் வருவதால் அந்த நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.
இதுபோலவே பாலக்காடு மாவட்டம் வாளையாறு அணையும் இன்று நிரம்பியது. அணை எந்தநேரமும் திறக்கப்படலாம் என தெரிகிறது. தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அப்பர் பவானி அணை அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளது. இந்த அணை இன்னும் சில மணிநேரங்களில் திறக்கப்பட உள்ளது.
இந்த அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் முழுவதும் கேரளாவின் அட்டப்பாடி வழியாக ஆற்றில் சென்று கடலில் கலக்கும். இதனால் அட்டப்பாடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment