Monday, 27 August 2018

நவீன விவசாயத் தொழில்நுட்பத்தை அறிந்துவர ஜார்க்கண்ட் விவசாயிகள் இஸ்ரேல் பயணம்

இஸ்ரேலுக்குச்  சென்று நவீன விவசாய தொழில்நுட்ப பயிற்சி பெறுவதற்காக ஜார்கண்ட் விவசாயப் பிரதிநிதிகள் 26 பேரை அம்மாநில முதல்வர் ரகுவர் தாஸ், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழியனுப்பி வைத்தார்.
ஜார்க்கண்டில் பாசன வசதி இல்லாத பகுதிகள் அதிகம் என்பதால் அங்குள்ள விவசாயிகள், சவால்களை எதிர்கொள்ள நேரிடுகிறது, மேலும் இஸ்ரேலிலும் இப்பிரச்சினை மிகப்பெரிய அளவில் உள்ளது. ஆனால் உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நீர்ப்பாசன பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்துள்ளார். இதனால் அங்கு விவசாயத்தை, வெற்றியடைந்த தொழிலாக மாற்றிக்காட்டியிருக்கிறார்கள்.
இதுகுறித்து முதல்வர் தாஸ் தெரிவித்ததாவது:
தற்போது விவசாயிகள், நீர்ப்பாசன வசதியின்றி பெரிய சவாலை சந்தித்து வருகிறார்கள். மேலும், விவசாயத்திற்கான நிலமும் பற்றாக்குறையாக உள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை ஒரு வருடத்தில் ஒரு பயிர் மட்டுமே பயிரிடும் நிலையே உள்ளது.
இஸ்ரேல் நாட்டில் இதேபோன்ற பிரச்சினைகள் உள்ளன. ஆனால் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி இப் பிரச்சினைகளை அந்நாட்டு மக்கள் சமாளித்துள்ளனர்.
இஸ்ரேல் நாட்டிலிலிருந்து பயிற்சி பெற்று திரும்பும் விவசாயிகள், மற்ற விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான மாஸ்டர் பயிற்சியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.
மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு ஹைடெக் பண்ணைய தொழில்நுட்பங்களைப் பற்றிய அறிவை வழங்கும் பொறுப்புகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
உலகம் முழுவதிலுமிருந்து விவசாய ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள், விவசாயிகள், விஞ்ஞானிகள் ஆகியோர் கலந்துகொள்ளும் 'மொமெண்ட்டும் ஜார்க்கண்ட்' என்ற ஒரு மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் மாநிலத்தில் உள்ள விவசாயிகளும் கலந்துகொள்வார்கள்.
கருத்துப் பரிமாற்றங்களுக்கு இது ஒரு வழி. சிறந்த உற்பத்திக்கு புதுமையான விவசாய நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி இதில் பேசப்படும்.
இதனால் வரும் 2022ம் ஆண்டுக்குள் நவீன விவசாயத்தில் நமது விவசாயிகளும் மேம்பட்ட நிலையில் இருப்பார்கள். பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக அளித்த வாக்குறுதியும் நிறைவேறும்.
இன்றுவரை, உணவு வழங்குதலில் மற்ற மாநிலத்தையே சார்ந்திருக்க வேண்டிய நிலையே ஜார்க்கண்ட்டுக்கு உள்ளது. இதில் ஜார்க்கண்ட் தன்னிறைவு பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
இவ்வாறு ஜார்க்கண்ட் முதல்வர் ரகுவர் தாஸ் தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கு பயிற்சி மேற்கொள்ள செல்லும் விவசாயிகளில் ஒருவர் கூறுகையில்,‘‘நமது இந்திய நாட்டிற்காகவும் சேர்த்துதான் விவசாய பயிற்சி பெற்றுவர ஜார்க்கண்ட் முன்னே செல்கிறது. அந்நாட்டவர் அனுபவங்களை பெற்று திரும்புவோம்'' என்றார்.

A \ C கார் பயன்படுத்துவோருக்கு ஓர் எச்சரிக்கை

A \C  காரை பயன்படுத்தும்போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \C  ஐ இயக்கி  ஜன்னலை மூடக்கூடாது .காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A \C  ஐ இயக்கவேண்டும். இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் பல அதிர்ச்சி உண்மைகள் 



கண்டறியப்பட்டுள்ளன .பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள DASHBOARD  ,இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன .சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50  மில்லி கிராம் .

வீடுகளில் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400  முதல் 800  மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும். அதே வேளையில் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000  மில்லி கிராம் வரையில் இருக்கும் .இது மனித உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட 40  மடங்கு அதிகம் .

இதன் காரணமாக கேன்சர் ,லுக்கூமியா ,சிறு நீராக பாதிப்பு கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கார்களிலுள்ள ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைப்பதனால் அதிகப்படியான பென்சீன் வெளியேறிவிடும் .

இதன் மூலமா நான் சொல்லிக்கிறது என்னண்ணா A \C  காருல உக்காந்து போயி என்ஜாய் பண்ண விரும்புறவுங்க கொஞ்ச நேரம் ஜன்னல திறந்து காத்து வாங்கிட்டு  அப்புறமா A \C  ஐ  ஆண் பண்ணி என்ஜாய் பண்ணுங்க .

தமிழகத்தில் கடந்த 5 மாதங்களில் காற்றாலைகள் மூலம் 798 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி

தமிழகத்தில் கடந்த 5 மாதங்களில் 798.30 கோடி யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் சுமார் 25 ஆயிரம் காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் 12 ஆயிரத்துக்கும் மேற் பட்டவை தமிழகத்தில் உள்ளன. இவற்றின் மூலம் அதிகபட்சமாக 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். காற் றின் வேகத்தைப் பொறுத்து ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்.
.
தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திண் டுக்கல், கோவை, திருப்பூர் மாவட் டங்களில்தான் காற்றாலைகள் உள்ளன. வழக்கமாக மே மாதம் முதல் செப்டம்பர் வரை காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அப்போது அதிக அளவு காற்றாலை மின்சாரம் உற்பத்தியாகும். கடந்த ஆண்டு காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அதிகபட்ச மாக சுமார் 5,100 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தியானது. இந்த ஆண்டிலும் காற்று, மழை காரணமாக சராசரியாக 4 ஆயிரம் மெகாவாட்டுக்கு மேல் மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது. இதுகுறித்து இந்திய காற்றாலை கள் சங்கத் தலைவர் கே.கஸ்தூரி ரங்கையன் ‘இந்து தமிழ்’ செய்தி யாளரிடம் கூறியது:

நாடு முழுவதும் 34,135 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன்கொண்ட காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் மூலம் 8,236 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். தமிழகத்தின் மொத்த மின் தேவையில் சீசன் காலங்களில் 30 முதல் 35 சதவீதத்தை காற்றா லைகள் பூர்த்தி செய்கின்றன. இங்கு சுமார் 130 துணை மின் நிலையங்களுடன் 12 ஆயிரம் காற்றாலைகள் இணைக்கப்பட் டுள்ளன. அனைத்து மின் நிலையங் களிலும் உள்ள மீட்டர்களில் ‘சிம் கார்டு’ பொருத்தியுள்ளதால் காற்றாலைகள் மூலம் உற்பத்தி யாகும் மின்சாரத்தின் அளவை துல்லியமாக அளவிட முடியும்.
இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் இதுவரை 798.30 கோடி யூனிட் மின்சாரம் காற்றா லைகள் மூலம் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது. வரும் அக்டோபர் 15-ம் தேதி வரை காற்றாலைகள் மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். காற்றாலைகள் உற்பத்தி செய் யும் மின்சாரத்தில் 80 சதவீதம் வரை தமிழக மின் வாரியத்தால் பயன்படுத்தப்படுகிறது. இதை 100 சதவீதமாக உயர்த்த வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம். தேவைக்கு அதிகமாக மின் சாரத்தை உற்பத்தி செய்யும் போது, பற்றாக்குறை நிலவும் வெளி மாநிலங்களுக்கு மின் சாரத்தை விற்கலாம் எனவும் அரசுக்கு யோசனை தெரிவித் துள்ளோம். காற்றாலை மின் சாரத்தை முழுமையாகப் பயன் படுத்தும்போது, அனல் மின்சாரத் தின் பயன்பாட்டைக் குறைக்க முடியும். இது நிலக்கரி பற்றாக் குறை பிரச்சினைக்குத் தீர்வு கொடுப்பதுடன், சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்கும்.

நிலுவைத்தொகை வழங்கப்படுமா?
காற்றாலைகளின் மேம்பாட் டுக்கு அரசு உதவ வேண்டும். காற்றாலைகள் வழங்கும் மின் சாரத்துக்கு உரிய தொகையை, மின்சாரத் துறை உடனுக்குடன் வழங்க வேண்டும். ஓராண்டுவரை நிலுவை வைப்பதால் காற்றாலை உற்பத்தியாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். புதிதாக காற்றாலைகள் நிறுவ முன்வருவோரை ஊக்குவிக்க வேண்டும். இன்னும் அதிக அள வில் காற்றாலைகளை நிறுவினால், தமிழ்நாட்டின் மின் தேவையில் பெருமளவை பூர்த்தி செய்து, தொழிற் துறையினருக்கும் தடை யின்றி மின்சாரம் வழங்கலாம். உபரி மின்சாரத்தை ஹரியானா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங் களுக்கு வழங்கி, தமிழகத்துக்கு அதிக தேவையுள்ள மார்ச், ஏப்ரல் மாதங்களில் அங்கிருந்து மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ள லாம். இதன் மூலம் ஆண்டு முழு வதும் சீரான மின் விநியோகத்தை உறுதிப்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த 10 நாட்களுக்குத் தமிழகம், சென்னையில் இடியுடன் கூடிய மழை- தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் அடுத்த 10 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் இன்று அவரின் முகநூலில் பதிவிட்டு இருப்பதாவது:
தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. பருவமழை இல்லாத பகுதிகளிலும், அடுத்த10 நாட்களில் இந்த மழை இருக்கும். கடந்த வாரத்தில் அதிகமான மழை மேற்கு தமிழகத்திலேயே பெய்துவிட்டது.இப்போது சிறிய இடைவெளிக்குப்பின், கிழக்குப்பகுதியில் மழை தனது பணியைச் செய்ய இருக்கிறது. அடுத்த சில நாட்களுக்கு, அதாவது நாள்தோறும் கூட தமிழகத்திலும், சென்னையிலும் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்.
வடசென்னையில் இன்று இரவுகூட மழை இருக்கும். இன்று இரவு தென்சென்னை புறகர் பகுதிகளில் காஞ்சிபுரத்தில் இருந்து நகர்ந்து வரும் மேகக்கூட்டங்களால் மழைபெய்ய வாய்ப்புண்டு. ஒருவேளை இன்று இரவு மழை பெய்யாவிட்டாலும் கூட, அடுத்த 10 நாட்களுக்கு நல்ல மழையை எதிர்பார்க்கலாம். ஆனால், வெள்ளம் வருவதுபோல் மழை பெய்யாது. சென்னையில் இதுபோன்ற மழையால் வெள்ளமும் வராது. செங்கல்பட்டில் நேற்று 50மிமி மழை பெய்தது, இன்றும் மழை பெய்யக்கூடும்
பெங்களூரிலும் அடுத்து வரும் நாட்களில் நாள்தோறும் நகரில் பல்வேறு இடங்களில் மழை பெய்யக்கூடும். ஆனால், வெள்ளம் வரும் அளவுக்குக் கனமழை இருக்காது. கேரளாவைப் பொறுத்தவரை மழை தற்போது அங்கு இடைவெளி கொடுத்துள்ளது. ஆனால், சில நேரங்களில், ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும். ஆனால், அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அளவுக்கு மிககனமழை இருக்காது. இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

From Hindu

Saturday, 25 August 2018

டிச.3 வரை ஜெயலலிதா நலமுடன் இருந்தாா் – எய்ம்ஸ் மருத்துவா்கள் தகவல்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனையில் 9 முறை பாா்த்ததாகவும், டிசம்பா் 3 வரை அவா் நலமுடன் இருந்ததாகவும் எய்ம்ஸ் மருத்துவா்கள் சசிகலா தரப்பு வழக்கறிஞா் செந்தூா் பாண்டியன் நடத்திய குறுக்கு விசாரணையில் தொிவித்துள்ளனா். 

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2016 டிசம்பா் 5ம் தேதி உயிாிழந்ததாக அப்போலோ மருத்துவமனை அறித்தது. இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் எழுந்ததை தொடா்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம்அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சசிகலா தரப்பு வழக்கறிஞா் ராஜா செந்தூா் பாண்டியன் தலைமையில் குறுக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது. 

இதனிடையே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சோந்த நுரையீரல் சிறப்பு நிபுணா் கில்னானி, இதய நோய் நிபுணா் நிதிஷ் நாயக், மயக்கவியல் நிபுணா் அன்ஜன் டிரிக்கா ஆகியோரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடா்ந்து வழக்கறிஞா் ராஜா செந்தூா் பாண்டியன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து எய்ம்ஸ் மருத்துவா்கள் 9 முறை அவரை பாா்த்ததாக தொிவித்துள்ளனா். 

மேலும் டிசம்பா் 3ம் தேதி வரை அவா் நலமுடன் இருந்ததாக மருத்துவா்கள் தொிவித்துள்ளனா். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அப்போதைய முதல்வா் ஓ.பன்னீா் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா், மக்களவை துணைசபாநாயகா் தம்பிதுரை ஆகியோா் சிகிச்சை விவரம் குறித்து அவ்வபோது எய்ம்ஸ் மருத்துவா்களிடம் தொிவித்ததாக கூறியுள்ளனா். இதனைத் தொடா்ந்து தற்போதைய துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம், அமைச்சா்களிடம் விசாரணை தொடங்கலாம் என்று எதிா்பாா்ப்பதாக வழக்கறிஞா் தொிவித்துள்ளாா்.

கோயம்புத்தூரை சேர்ந்த ஆசிரியை ஸதிக்கு நல்லாசிரியர் விருது அறிவிப்பு

தமிழகம் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட 6 பேரில் கோயம்புத்தூரை சேர்ந்த ஆசிரியை ஸதிக்கு மட்டுமே மத்திய அரசு வழங்கும் நல்லாசிரியர் விருதுஅறிவிக்கப்பட்டுள்ளது. 

சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி கௌரவிக்கும் நல்லாசிரியர் விருது தமிழகத்தில் ஒருவருக்கும் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

அந்த வகையில், கோயம்புத்தூர் மலுமிச்சம்பட்டியை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஆசிரியை ஸதி தமிழகம் சார்பாக இந்தாண்டு நல்லாசிரியர் விருது பெறவுள்ளார். 

கடந்தாண்டு வரை தேசியளவில் 354 பேர் நல்லாசிரியர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு வந்தனர். தமிழகத்தை சேர்ந்த 22 ஆசியர்கள் கடந்தாண்டு வரை இந்த விருதை பெற்று வந்தனர்.


இந்த நடைமுறையை மாற்றிய மத்திய மனித வளத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிக் கல்வித் துறை, நடப்பாண்டு முதல் 45 பேருக்கு மட்டுமே நல்லாசிரியர் விருது வழங்கப்படும் என அறிவித்தது. 

நாடு முழுவதும் விருதுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலும் குறைந்தது. இந்நிலையில் தேசிய ஆசியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக ஆசிரியை ஸதி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் அடுத்த மாதம் வெள்ளம்: பேரிடர் கண்காணிப்பு மையம் எச்சரிக்கை

கேரளாவைத் தொடர்ந்து பெங்களுருவில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக கொட்டித் தீர்த்த மழையால், மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தற்போது மழை பொழிவு குறைந்துள்ளதால் வெள்ளம் வடிந்து வருகின்றது.

இந்த வெள்ளத்தில் 370க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்தது. மறுபுறம் கர்நாடகா மாநிலம் குடகுவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 22 பேர் பலியாகினர்.

பெங்களூருவில் வெள்ள அபாயம்:
கேரளாவைத் தொடர்ந்து, அடுத்த மாதம் (செப்டம்பர்) பெங்களூருவில் வெள்ளம் ஏற்பட அதிக வாய்புள்ளதாக அதிர்ச்சி தகவலை மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் Karnataka State Natural Disaster Monitoring Centre (KSNDMC எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையை தொடர்ந்து அரசு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி இருக்கிறார்கள். இந்த ஆண்டு பெங்களூருவில் 90% கண்டிப்பாக வெள்ளம் ஏற்படும் என்ற எச்சரிக்கை அங்கு வசிக்கும் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்கக் கடலில் ஏற்படும் காற்றழுத்தம் புயலாக மாறும் என்றும், அது நகர்ந்து, தமிழகத்தில் சில மாவட்டங்களிலும், பெங்களூருவில் விட்டு விட்டு கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர் பாராத கன மழை பெய்யும், அதுவும் 4 நாட்களில் இந்த மழை தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. 

பட்டய கணக்காளர்கள் வேலை தேட புதிய இணையதளம்: செப்டம்பர் 1 முதல் செயல்படும் என அறிவிப்பு

இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கம் ( ICAI) வேலைவாய்ப்பு தளத்தினை தொடங்க உள்ளது. பட்டய கணக்காளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் தங்கள் உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப் பினை அதிகரிக்கும் விதமாக இந்த முயற்சியினை எடுத்துள்ளது.
இந்த வேலைவாய்ப்பு தளத் தினை செப்டம்பர் 1-ம்தேதி அறி முகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
CAjobs.com என்கிற இந்த தளத் தினை ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் துணைத் தலைவர் கெகி மிஸ்திரி தொடங்கி வைக்க உள்ளார்.
இது தொடர்பாக இந்திய பட்டய கணக்காளர் சங்கத்தின் தலைவர் தீரஜ் குமார் கந்தேல்வால் கூறுகை யில், பட்டய கணக்காளர்களுக்கும், அவர்களது தேவை இருக்கும் நிறுவனங்களுக்கும் இணைப்பு பாலமாக இந்த தளம் இருக்கும்.
ஆகஸ்ட் 31-ம் தேதி மும்பையில் நடைபெற உள்ள தலைமைச் செயல் அதிகாரிகள் மாநாட்டில் இந்த இணையதளம் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
ஆடிட்டர்களை தேர்ந்தெடுப்பது நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. அந்த குறையை இந்த தளம் பூர்த்தி செய்யும். இந்த தளத்தில் இந்திய பட்டய கணக்காளர்கள் பதிவு பெற்று, பல்வேறு துறைகளிலும் உள்ள 1.60 லட்சம் பேரின் தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
இந்த தளத்தின் மூலம் பெண் உறுப்பினர்களுக்கு பகுதி நேர வேலை வாய்ப்புகள் எளிதாகும் என்றார். ஆரம்பத்தில் இந்த தளம் இலவச சேவைகளை கொண்டிருக்கும் என்றும் குறிப் பிட்டார்.

From Hindu

டிவிஎஸ் ரேடியோன் அறிமுகம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் புதிதாக ரேடியோன் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் டிவிஎஸ் நிறுவனம் அதிக மக்கள் விரும்பும் மோட்டார் சைக்கிள் சந்தையில் இறங்கியுள்ளது. நேற்று நடை பெற்ற அறிமுக நிகழ்ச்சியில் நிறுவ னத்தின்  இணை நிர்வாக இயக்கு நர் சுதர்சன் வேணு பேசுகையில், வாடிக்கையாளர்களுக்கு மேம் பட்ட மோட்டார் சைக்கிள் அனு பவத்தை அளிக்க வேண்டும் என்கிற வகையில் புதிய பிரிவில் இறங்கியுள்ளோம். 110 சிசி பிரிவில் மேம்பட்ட வடிவமைப்பு, புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்ட இன்ஜின், அதிக கிரவுண்ட் கிளி யரன்ஸ் என வாடிக்கையாளர் களை ஈர்க்கும் அம்சங்களுடன் இருக்கும். நகர்ப்புற போக்கு வரத்து நெரிசல், மற்றும் கிராமப்புற சாலைகளைக் கருத்தில் கொண்டு வடிவமைத்துள்ளோம் என்றார்.

நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கேஎன் ராதாகிருஷ்ணன் பேசுகையில்,    மோட்டார் வாகன சந்தையில் 7 சதவீத சந்தையை டிவிஎஸ் வைத்துள்ளது என்றார். மேலும் பண்டிகைக் காலம் மற்றும் புத்தாண்டை இலக்கு வைத்து புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளோம். இந்த ஆண்டில் 2 லட்சம் ரேடியோன் மோட்டார் சைக்கிள்களை விற்க இலக்கு வைத்துள்ளோம். அடுத்த மாதத்திலிருந்து விற்பனை தொடங்கு வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்றார். இந்த மோட்டார் சைக்கிளின் டெல்லி விற்பனையக விலை ரூ.48,400 ஆகும்.
புதிய மோட்டார் சைக்கிள் உருவாக்கத்துக்கான ரூ.60 கோடி வரை நிறுவனம் முதலீடு செய்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
அகலமான மற்றும் வசதி யான சீட்கள், பிரேகிங் தொழில் நுட்பங்களில் புதுமை, அதிக சக்தி கொண்ட முகப்பு விளக்கு, எளிதான கிரவுண்ட் ரீச்சபிள் என இந்த பிரிவில் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ற வசதிகள் இதில் உள்ளன. 10 லிட்டர் பெட்ரோல் டேங்க் வசதி கொண்டது. 69.3 கிமீ மைலேஜ் அளிக்கும் என்று சுதர்சன் வேணு கூறினார்.
From Hindu

தகவலை முதலில் அனுப்பியவரைக் கண்டறிய முடியாது: இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது வாட்ஸ் அப்

வாட்ஸ் அப் வழியாக பல்வேறு நபர்களுக்கு அனுப்பப்படும் குறுந்தகவல்கள் முதலில் யாரால் அனுப்பப்பட்டது என்று கண்டறியும் வகையிலான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொண்ட இந்தியாவின் கோரிக்கையை வாட்ஸ் அப் நிறுவனம் நிராகரித்துள்ளது.

குறுந்தகவல்கள் எங்கிருந்து அனுப்பப்படுகின்றன எனக் கண்காணிப்பது வாட்ஸ் அப் நிறுவனத்தின் என்கிரிப்ஷன் நடை முறையை வலுவற்றதாக மாற்றி விடும் என்று குறிப்பிட்டுள்ள வாட்ஸ் அப், இத்தகைய தொழில்நுட்பங் கள் தனிநபர் தகவல்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது.
பல்வேறு வகையான உணர்வு பூர்வமான உரையாடல்களுக்கு வாட்ஸ் அப் தளம் பயன்படுவதாக தெரிவித்துள்ள அந்த நிறுவனம், தவறான தகவல்களை அறிந்து கொள்வது குறித்து மக்களுக்கு அறிவுறுத்தும் வகையிலான செயல்பாடுகளுக்கு நிறுவனம் முக்கியத்துவம் அளித்துவருவ தாகவும் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப் வழியாக பரவும் வதந்திகளால் நிகழும் குற்றங் களைத் தடுக்கும் வகையில், ஒரு குறிப்பிட்ட குறுந்தகவல் யாரால் முதலில் அனுப்பப்படுகிறது என்கிற தகவலை கண்டறியும் தொழில் நுட்பத்தை  அறிமுகப்படுத்த வேண்டும் என வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு இந்திய அரசு சமீபத்தில் கோரிக்கை வைத்தது.
இந்நிலையில் இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தை அறிமுகப் படுத்துவது தவறான பயன்பாடு களைத் தீவிரப்படுத்தும். மேலும் வாட்ஸ் அப் செயல்படும் முறைக்கு இது முற்றிலும் எதிரானது என வாட்ஸ் அப் செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிக அளவில் வதந்திகள் பரவுவதன் காரணமாக கடந்த சில மாதங்களாக வாட்ஸ் அப் நிறுவனம் சர்ச்சையில் சிக்கி வரு கிறது. வாட்ஸ் அப் வதந்திகள் காரணமாக நாட்டின் பல பகுதி களிலும் குற்ற செயல்கள் நிகழ்வ தாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வாரத் தொடக்கத்தில் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை, வாட்ஸ் அப் தலைமை செயல் அதிகாரி கிறிஸ் டேனியல்ஸ் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த ரவி சங்கர் பிரசாத், வாட்ஸ் அப் வழியாக புழக்கத்தில் விடப்படும் வதந்திகள் முதலில் யாரால் அனுப்பப்படுகிறது என்பதை கண் டறியும் தொழில்நுட்பத்தை உடைய உள்ளூர் அமைப்பு ஒன்றை ஏற் படுத்துமாறு வாட்ஸ் அப் நிறுவனத் தைக் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக குறை தீர்ப்பு அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு கேட்டுக்கொண்ட தாகவும் அவர் கூறினார். வதந்தி களைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் குற்றங் களுக்கு உடந்தையாக இருந்ததாக வாட்ஸ் அப் நிறுவனம் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். இந்த சந்திப்பு குறித்து எந்தக் கருத்தையும் டேனியல்ஸ் அப்போது தெரிவிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப் நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன் றாக இந்தியா உள்ளது. 150 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ் அப் செயலியை, இந்தியாவில் 20 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள்.
வதந்திகளைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு 2 நோட்டீஸ் களை இந்திய அரசாங்கம் அனுப்பியுள்ளது.
இந்தியாவுக் கான தலைவர் ஒருவரும், அணியும் அமைக்கப்பட்டுவருவதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. பார்வேர்ட் குறுந்தகவல்களைக் கண்டறியும் வசதியும், பார்வேர்டு குறுந்தகவல்களை குறிப்பிட்ட முறைகளுக்குமேல் பிறருக்கு அனுப்பமுடியாத கட்டுப்பாடு களும் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் முன்னதாக விளக்கம் அளித்திருந்தது.
இதுதொடர்பாக கடந்த மாதம் வாட்ஸ் அப் தலைமை செயல்பாட்டு அதிகாரி மேத்யூ ஐடீமா தலைமையிலான குழு இந்திய தகவல் தொடர்பு செயலர் மற்றும் அரசு அதிகாரிகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
From Hindu

நெல்லை மாவட்டத்தில் 74 சதவிகிதம் கூடுதல் மழைப் பொழிவு - ஆட்சியர் தகவல்

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக இதுவரை 74 சதவிகிதம் கூடுதல் மழைப் பொழிவு இருந்த விவரம் தெரியவந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலுமிருந்து ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது குறைகளையும் தேவைகளையும் தெரிவித்தனர். அப்போது விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வேளாண்மையை இயந்திரமயமாக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட கையேடுகளும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டன. பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி வரை 51.8 செ.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவைவிடவும் 30 செ.மீ அதிகமாகும். அதாவது, சராசரியில் 74 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. தற்போது மாவட்டத்திலுள்ள அணைகளில் 73 சதவிகிதம் நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 12 சதவிகித நீர் மட்டுமே இருந்தது. 
தற்போது மாவட்டம் முழுவதும் உள்ள 21 குளங்களில் 3 மாத காலத்துக்குத் தேவையான நீர் இருக்கிறது. 98 குளங்களில் 2 மாத நீர் இருப்பும் 629 குளங்களில் ஒரு மாதத்துக்குத் தேவையான தண்ணீர் இருப்பும் உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், கிணறுகளில் சராசரியாக 2 மணி முதல் 3 மணிநேரம் பாசனம் செய்யும் நிலைமை இருக்கிறது. அதனால், மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அனைத்து அணைகளிலும் கார் பருவ சாகுபடிக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரையிலும் 13,340 ஹெக்டேர் பரப்பளவில் கார்பருவ பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கார் பருவ நெல் சாகுபடிக்குத் தேவையான விதைகள், உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள், அனைத்து அரசு வேளாண்மைத் துறை விரிவாக்க மையங்கள், தனியார் விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
பாரதப் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகையான 12.74 கோடி ரூபாயைப் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பலனாகக் கடந்த 17-ம் தேதி ரூ.1.08 கோடி நிவாரணத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு தினங்களில் ரூ.1.03 கோடி நிலுவைத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.

உனக்கும் ஒண்ணும் கிடைக்கப் போறதில்ல! - கனிமொழியிடம் அப்போதே சொன்ன அழகிரி

தி.மு.கவில் கனிமொழிக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படாமல் இருப்பதில் அதிருப்தியில் இருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். ' பொதுக்குழுவில் சீனியரான துரைமுருகன் முன்னிறுத்தப்படுவதில் தவறு இல்லை. அதேநேரம், கனிமொழிக்கும் பதவி வழங்கப்படும் என எதிர்பார்த்தோம்' என்கின்றனர் ஆதங்கத்துடன்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.கவின் பொதுக்குழு கூட இருக்கிறது. வரும் 28-ம் தேதி நடக்கும் நிகழ்வில் தி.மு.கவின் புதிய தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதில், கழகத்தின் புதிய பொருளாளராக துரைமுருகன் பொறுப்பேற்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், துரைமுருகன் கையில் வைத்திருக்கும் முதன்மை நிலையச் செயலாளர் பதவி, டி.ஆர்.பாலுவுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் அறிவாலய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். மொத்தம் மூன்றே பதவிகளுக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க இருக்கின்றனர். இதனால் கனிமொழி ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
" கருணாநிதி மறைவுக்குப் பிறகு, ' கட்சிக்குள் கனிமொழி கால் ஊன்றிவிடக் கூடாது' என்பதில் குடும்ப உறுப்பினர்கள் சிலர் உறுதியாக இருக்கின்றனர். அவருக்குப் பதவி அளிப்பது பற்றி ஸ்டாலினும் பதில் சொல்லவில்லை. கருணாநிதியின் வாரிசுகளில் செல்வியோ தமிழரசுவோ நேரடி அரசியலுக்குள் வரவில்லை. ராஜ்ய சபா எம்.பி, மகளிரணித் தலைவி எனக் கருணாநிதியால் பதவி கொடுத்து உயர்த்தப்பட்டவர் கனிமொழி. அழகிரியைக் கட்சிக்குள் கொண்டு வந்த கருணாநிதியே, இரண்டு முறை அவரைக் கட்சியை விட்டு நீக்கவும் செய்தார். இறுதிவரையில் கருணாநிதியிடம் தண்டனை வாங்காதவர் கனிமொழி மட்டும்தான்" என விவரித்த தி.மு.க நிர்வாகி ஒருவர்,
" ஸ்டாலினுக்குப் பிறகு அந்த இடத்துக்கு கனிமொழி வந்துவிடுவார் என்ற கவலைதான் குடும்ப உறுப்பினர்கள் சிலரிடம் உள்ளது. மாநிலத்தின் முதல்வராக ஸ்டாலின் வந்த பிறகு இதைப் பற்றி யோசிக்கலாம். அதற்கு முன்னதாக, கனிமொழிக்குக் கட்சியில் உயர் பதவி கொடுக்காமல் ஒதுக்கி வைப்பது சரியானதல்ல என்றே நினைக்கிறோம். கட்சிக்காரர்கள் மத்தியிலும், ' குடும்பம் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கிறது. அழகிரிதான் தவறு செய்கிறார்' என்ற பேச்சு உள்ளது. கனிமொழியையும் புறக்கணித்துவிட்டால், தலைமை மீதே கட்சிக்காரர்கள் குற்றம் சொல்ல வேண்டிய நிலை உருவாகலாம். 'தனக்குரிய அந்தஸ்து வேண்டும்' என்பதில் உறுதியாக இருக்கிறார் கனிமொழி. அதைப் பற்றி வெளிப்படையாகவும் அவர் கேட்கவில்லை. ' அண்ணன் என்ன முடிவெடுத்தாலும் சரி' எனப் பேசி வருகிறார்" என்றவர்,
" காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், ஸ்டாலினுடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தார் கனிமொழி. அப்போது விருந்தினர்கள் உள்பட யார் வந்தாலும் அவரையும் அருகில் அமர வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார் ஸ்டாலின். இதனைக் கவனித்த அழகிரி, ' நான் பார்த்துட்டுத்தான் வர்றேன். நீயும் ஓடிக்கிட்டே இருக்க. உனக்கு அவர் (ஸ்டாலின்) ஒன்னும் செய்யப் போறதில்லை' எனக் கனிமொழியைப் பார்த்துக் கூறினார். இந்த வார்த்தைகளை அருகில் இருந்த கட்சியின் சீனியர்களும் கேட்டனர். கருணாநிதியின் இறுதிக் காரியம் முடிந்து மறுநாள் ஸ்டாலின், அழகிரி, செல்வி, தமிழரசு, கனிமொழி உள்ளிட்டோர் சமாதியில் மாலை வைக்கச் சென்றனர். மற்றவர்கள் மாலை வைக்கும்போது, கனிமொழியையும் அருகில் அழைத்து  மாலை வைக்கச் சொன்னார் அழகிரி. இதன்பிறகு, சி.ஐ.டி காலனியில் உள்ள கனிமொழியின் வீட்டுக்கு இரண்டு முறை சென்றிருந்தார் அழகிரி. அப்போது பேசும்போதும், ' நான் இருக்கிறேன். எதற்கும் கவலைப்படாதம்மா' என ஆறுதல் கூறிவிட்டுச் சென்றார். கட்சிப் பதவியில் சீனியர்களை முன்னிறுத்துவது சரியானதுதான். அதேநேரம், ஸ்டாலின் தலைமையை ஏற்றுச் செயல்படும் கனிமொழிக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றுதான் சொல்கிறோம்" என்றார்.
" ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அத்தனை கட்சிகள் ஆதரித்தும் 13 சதவீத வாக்குகள்தான் தி.மு.கவுக்குக் கிடைத்தது. இந்தத் தேர்தலில் கனிமொழி பிரசாரம் செய்யவில்லை. இதேபோல், முன்பு ஒருமுறை சங்கரன்கோயில் இடைத்தேர்தலில், ' கனிமொழி பிரசாரம் செய்ய வேண்டாம்' எனக் கூறிவிட்டார் ஸ்டாலின். அந்தத் தேர்தலில் தி.மு.க படுதோல்வியைச் சந்தித்தது. இதைப் பற்றிப் பேசிய கருணாநிதி, ' அவள் பிரசாரம் செய்திருந்தால் டெபாசிட்டாவது கிடைத்திருக்கும். இப்படியொரு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டீர்கள்' எனச் சாடினார். அதேபோல், ஏற்காடு இடைத்தேர்தல் பிரசாரத்துக்கும் கனிமொழி போகாமல் இருந்ததைக் கவனித்த கருணாநிதி, நேரடியாக அவரைக் களமிறக்கினார். அந்தப் பகுதி மக்களிடம், காடுவெட்டி குருவைக் குண்டாஸில் போட்ட சம்பவத்தைக் கண்டித்துப் பேசினார். அந்தத் தேர்தலில் 35 சதவீத வாக்குகள் தி.மு.கவுக்கு வந்து சேர்ந்தது. தற்போது தமிழ்நாட்டில் பலமுனைப் போட்டி வந்துவிட்டது. தெற்கு, மேற்கு ஆகிய மாவட்டங்களில் தி.மு.கவுக்கான அடிப்படை வாக்குகள் பெரிதாக இல்லை. பலமுனைப் போட்டியால் மீண்டும் ஆட்சிக்கு வருவதே கேள்விக்குறியாகிவிடக் கூடாது. ' கட்சி கைக்குள் வந்துவிட்டது. ஆட்சியைப் பிடித்துவிடுவோம்' என நினைத்தால், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடுவதற்கான வாய்ப்புகளே அதிகம்" என அச்சப்படுகின்றனர் கட்சியின் முன்னணி நிர்வாகிகள்.
அதேநேரம், தி.மு.கவின் சீனியர் ஒருவர் நம்மிடம் பேசும்போது, " கட்சியின் ஒட்டுமொத்த மகளிர் அணியையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் கனிமொழி. இதுவே அவருக்கு மிகப் பெரிய பலம். மீண்டும் அவருக்கு ராஜ்யசபா எம்.பி பதவி வழங்குவது குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது. ஆனால், தேர்தலில் போட்டியிட்டு வெல்லவே கனிமொழி விரும்புகிறார். தற்போது வரையில் ஸ்டாலினின் குட்புக்கில் இருக்கிறார் கனிமொழி. அவருக்கு உரிய முக்கியத்துவமும் அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

From Vikatan

Friday, 24 August 2018

முதல் பார்வை: லக்‌ஷ்மி

தன் கனவுடன் குருவின் கனவுக்காகவும் சேர்த்து டான்ஸ் ஆடும் சிறுமியின் கதையே 'லக்‌ஷ்மி'.
வங்கியில் வேலை செய்யும் நந்தினியின் (ஐஸ்வர்யா ராஜேஷ்) மகள் லக்‌ஷ்மி (தித்யா). அம்மாவுக்கு இசை, நடனம் என்றால் அறவே பிடிக்காது. மகள் லக்‌ஷ்மிக்கு பேச்சு, மூச்சு, அசைவு, ஆர்வம், முயற்சி, பயிற்சி எல்லாமே நடனம்தான். இந்திய அளவில் மிகப் பெரிய நடனப்போட்டி ஒன்று நடைபெற இருப்பதை தொலைக்காட்சி மூலம் அறிந்துகொள்ளும் லக்‌ஷ்மி அதில் பங்கேற்க வேண்டும் என்ற ஆவலில் சென்னை டான்ஸ் அகாடமியில் சேர நினைக்கிறாள். ஆனால், பெற்றோருடன் வந்தால்தான் அங்கு சேர முடியும் என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது. இதனிடையே பள்ளிக்குப் போகும் வழியில் காபி ஷாப்பில் இசைக்கும் இசையால் உற்சாகமாகி அங்கேயே ஆட ஆரம்பித்து, அந்த காபி ஷாப் உரிமையாளர் கிருஷ்ணாவுடன் (பிரபுதேவா) பேசிப் பழகும் லக்‌ஷ்மி அவரை அப்பாவாக நடிக்கச் சொல்கிறாள். அதன்மூலம் டான்ஸ் அகாடமியில் சேர்கிறாள். ஆனால், போட்டியில் கலந்துகொள்வதற்கு லக்‌ஷ்மி தகுதி பெறவில்லை. இதனால் கலங்கி நிற்கும் லக்‌ஷ்மியை கிருஷ்ணா தேற்றி, டான்ஸ் அகாடமியில் அவரைத் தேர்வு செய்ய பரிந்துரைக்கிறார்.


உண்மையில் யார் இந்த கிருஷ்ணா, அவர் சொன்னவுடன் எப்படி லக்‌ஷ்மியைத் தேர்வு செய்கிறார்கள், இதனால் கிருஷ்ணாவுக்கு விதிக்கப்படும் நிபந்தனை என்ன, ஏன் நந்தினி தன் மகளை டான்ஸ் ஆடக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கிறாள், அம்மாவுக்கே தெரியாமல் ஏன் லக்‌ஷ்மி டான்ஸ் ஆடுகிறாள், தன் கனவை லக்‌ஷ்மியால் அடைய முடிந்ததா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.
நடனத்தை மையமாகக் கொண்டு ஒரு முழுப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய். அதில் சில தருணங்களை உணர்வுப்பூர்வமாக்கி நெகிழ வைத்திருக்கிறார்.
அலட்டிக்கொள்ளாமல் அளவாக நடிப்பது பிரபுதேவாவின் இயல்புதான். ஆனால், எமோஷலான சில காட்சிகளிலும் அந்த அளவைக் கடைப்பிடித்திருப்பது நெருடல். நீங்க இதை நடனம்னு சொல்றீங்க, நான் இதை மூச்சுன்னு சொல்வேன் என கவிதையை நடனமாகக் காட்சி ரீதியாக வெளிப்படுத்தும் விதத்தில் பிரபுதேவா அசத்துகிறார். தன் மாணவர்களுக்கு மூச்சுப் பயிற்சியின் அவசியத்தை உணர்வை, ஆற்றலை வெளிக்கொணர்ந்து பெஸ்ட் பெர்பாமன்ஸை கொண்டுவரச் செய்வதில் சிறந்த மாஸ்டர் என்பதை நிரூபித்திருக்கிறார்.
தித்யா தமிழ் சினிமாவின் புதுவரவு. காபி ஷாப், பஸ் ஸ்டாப், சாவு மேளம், சாலை என இடம் பொருள் பற்றிக் கவலைப்படாமல் எனர்ஜியுடன் டான்ஸ் ஆடும் விதத்தில் கவனம் ஈர்க்கிறார். குருவின் ஏக்கத்தையும் தனக்கான கனவாக மாற்றிக்கொள்ளும் இடத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு படத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லை. கிடைத்த இடங்களில் தன்னை தக்கவைத்துக் கொண்டார். கருணாகரனைப் படத்தில் வீணடித்திருக்கிறார்கள். கோவை சரளாவின் கதாபாத்திரம் சரியாகக் கட்டமைக்கப்படவில்லை. ஆனாலும், தன் பாவனைகளால் அப்பாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.
அர்ஜுனாக நடித்திருக்கும் ஜீத் தாஸும், அர்னால்டாக நடித்திருக்கும் அக்‌ஷத் சிங்கும் சிரிப்பைப் படர விட்டு, நடனத்தில் வெளுத்து வாங்குகிறார்கள். போட்டிக்கு சவால் விட்டு எதிர்வினையாற்றும் சல்மான் யூசுஃப்கான் கச்சிதமான தேர்வு.
சென்னை- மும்பை நகரங்களின் அழகை கண்களுக்கும் கடத்தி இருக்கும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா கதையிலும் பங்களிப்பு செய்திருக்கிறார். சாம் சி.எஸ். இசையில் ஆலா ஆலா, புலியாட்டம் பப்பரப் பப்பா, இறைவனே இறைவனே உந்தன் அருள்பொழிவாயா பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. உயிரோட்டமான பின்னணி இசையால் படத்தைத் தூக்கி நிறுத்துகிறார். ஆண்டனியின் எடிட்டிங் நேர்த்தி.
இந்தி ரியாலிட்டி டான்ஸ் ஷோவில் சூப்பர் டான்ஸராகப் பின்னி எடுத்த தித்யாவைக் கதையின் நாயகியாக்கி அவர் கதாபாத்திரத்தின் பெயரையே படத்தின் டைட்டிலாக வைத்திருக்கிறார் இயக்குநர் விஜய். டான்ஸ் மாஸ்டர் கதபாத்திரத்தில் பிரபுதேவாவை நடிக்க வைத்து கதாபாத்திரத் தேர்வில் தேர்ந்த இயக்குநருக்கான திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். சென்னை நடனக்குழுவில் டான்ஸ் ஆடத் தெரிந்த அக்‌ஷத் சிங், ஜீத் தாஸ் ஆகியோரைப் பயன்படுத்தி இருக்கும் விதம் பாராட்டுக்குரியது.
ஆனால், காட்சிகளில் நம்பகத்தன்மை இல்லாமல் நாடகப் பணியே மேலோங்கி இருப்பது உறுத்தலாக இருக்கிறது. தித்யா எதேச்சையாக காபி ஷாப்பில் நுழைவது, அங்கு இருக்கும் இசையின் லயத்திற்கேற்ப ஆடுவது, அதை உரிமையாளர் அனுமதிப்பது, பின் அவரே டான்ஸ் அகாடமியில் சேர்ப்பது எல்லாம் செயற்கையாகவே உள்ளது. பள்ளி முதல்வர்- தித்யா காட்சிகளும் நம்பும்படி இல்லை.
தித்யாவின் தந்தை யார் என்பதற்கும் படத்தில் பதில் இல்லை. பிரபுதேவாவின் கடந்த கால வாழ்க்கையையும் போதுமான அளவுக்குச் சொல்லப்படவில்லை. மிக முக்கியமான பிரிவுக்கான காரணத்தை வசனங்களிலேயே கடந்துபோவது ஏற்புடையதாக இல்லை. இவற்றைத் தாண்டி, கடைசி 25 நிமிட உணர்வுப்பூர்வ தருணங்கள் லக்‌ஷ்மியுடன் ஒரு ஒட்டுதலை ஏற்படுத்துகின்றன. மேடையில் இருக்கும் ஆணிகளை அப்புறப்படுத்தும் தித்யா அண்ட் கோவின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. கிளைமேக்ஸ் காட்சி அழுத்தத்தின் உச்சம்.

From இண்டு

60 வயது மாநிறம் படத்தின் sneak peek


Thursday, 23 August 2018

வெளியானது ‘தல’ அஜித்தின் விஸ்வாசம் ஃபர்ஸ்ட்லுக்

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.  வீரம், வேதாளம், விவேகம் படத்துக்குப் பின் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித், தற்போது நடித்துள்ள படம் விஸ்வாசம்.
இப்படத்தில் அஜித் இரண்டு வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. வயதான தோற்றத்தை படம்பிடித்த படக்குழுவினர். அவரின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளை எடுத்து வருவதாக தெரிகிறது.


இதில் நயன்தாரா, கோவை சரளா, விவேக், யோகி பாபு, தம்பிராமய்யா நடித்து வருகின்றனர். இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நள்ள வரவேற்ப்பை பெற்றுள்ளது. இப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகும் என்பதையும் படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். 

பார்சல் வாங்க பாத்திரத்தோடு வந்தால் 5 சதவீதம் தள்ளுபடி

பிளாஸ்டிக் பைகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ள நிலையில், ஹோட்டலுக்கு பார்சல் வாங்க பாத்திரத்தோடு வந்தால் பில்லில் 5 சதவீதம் தள்ளுபடி என்று தமிழ்நாடு ஹோட்டல் சங்கம் அறிவித்துள்ளது.

பிளாஸ்டிக் பைகளுக்கு தமிழ்நாடு அரசு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் விதமாக ஹோட்டல்களில் பார்சல் வாங்க பாத்திரம் கொண்டு வருபவர்களுக்கு பில்லில் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழ்நாடு ஓட்டல் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ஓட்டல்கள் சங்கத் தலைவர் எம்.ரவி கூறுகையில், சராசரியாக ஒவ்வொரு பார்சலுக்கு கிட்டத்தட்ட 3 முதல் 4 சதவீதம் வரை செலவழிக்கிறோம். பார்சல் வாங்க வருபவர்கள் அவர்களாகவே பாத்திரம் கொண்டு வந்துவிட்டால் 5 சதவீதம் வரை தள்ளுபடி செய்ய தயாராக இருக்கிறோம். இது குறித்து அறிவிப்பு பலகைகளை வைக்கும் படி சென்னை உணவகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், வேலூர், மதுரை, சிதம்பரம் உள்பட மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 2 லட்சம் உணவகங்கள் உள்ளன. உணவகங்களில் பார்சலுக்கு பாத்திரம் கொண்டு வரும்படி ஏற்கனவே அறிவுறுத்த தொடங்கியுள்ளோம். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கேரியரில் தான் சாப்பாடு வாங்கிச் செல்வது வழக்கமாக இருந்தது. அதன் பிறகு, வாழை இலை, தையல் இலை, அலுமினியம் ஃபாயில்கள் போன்றவற்றை பயன்படுத்த ஹோட்டல்களில் முடிவு செய்யப்பட்டு நாளடைவில் பிளாஸ்டிக் பைகள் வந்துவிட்டது. தற்போது பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் கேரியர் காலத்திற்கு செல்கிறோம் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம் பரப்புரைக்கு தூதுவராக நடிகர் விவேக் நியமனம்

சென்னை தலைமைச் செயலகத்தில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம்என்கிற விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார். 

கடந்த ஜூலை 4ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 2019 ஜனவரி முதல் பிளாஸ்டிக் பொருட்களை தமிழகத்தில் பயன்படுத்த தடை விதித்து அரசாணை வெளியிட்டார். 

மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கும் தடை விதிப்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவிற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அங்கு பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், மாற்றுப் பொருட்கள் குறித்த மாநில அளவிலான விழிப்புணர்வு பரப்புரையை தொடங்கி வைத்தார். 

பிறகு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த குறும்படம் மற்றும் விழிப்புணர்வு தொடர்பான நடவடிக்கைகளை குறிக்கும் லோகோ, இணையதளங்கள் ஆகியவை வெளியிடப்பட்டன. 

பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு விளம்பரத் தூதராக நடிகர்கள் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா நியமிக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியின் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தூய்மையான தமிழகத்தை உருவாக்க ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக்கிற்கு பதில் மாற்றுப்பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். 

மேலும், அமைச்சர்கள் பிளாஸ்டிக் கோப்புகளுக்கு பதிலாக இன்று முதல் காகித கோப்புகளை பயன்படுத்துவார்கள் எனவும் முதலமைச்சர் பழனிசாமி இந்த நிகழ்வில் அறிவித்தார். 

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘கனா’ டீஸர்


இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் கடும் சரிவு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரே நாளில் 27 பைசா சரிவடைந்து 70.08 பைசாவாக குறைந்தது.
துருக்கியின் பொருளாதார சரிவின் காரணமாக அதன் நாணயமான லிரா வரலாறு காணாத சரிவினைக் கண்டுள்ளது. இதனால் அண்மைகாலமாக உலக அளவில் டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாணயங்களும் சரிவினை கண்டுள்ளன. இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டது.
அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியது. இந்நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு இன்று மீண்டும் சரிவடைந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரே நாளில் 27 பைசா குறைந்தது. இதனால் காலை நேர வர்த்தகத்தில் இந்திய ரூபாய் மதிப்பு 70.08 ஆக சரிவடைந்தது.
அமெரிக்க ரிசர்வ் வங்கி தனது கொள்கை முடிவு கூட்டத்துக்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது. இதன் மூலம் அமெரிக்க வங்கிகள் வட்டி விகிதங்களை அதிகரிக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் பல்வேறு நிதி நிறுவனங்களும் டாலரகளை வாங்கியதால் அதன் தேவை அதிகரித்து மதிப்பு உயர்ந்தது. இதன் காரணமாக இந்திய ரூபாய் கடும் சரிவை சந்தித்துள்ளதாக நிதி ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய பங்குச்சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாக உள்ளது.

Wednesday, 22 August 2018

கோவாவில் அரசு பணி தேர்வு எழுதிய அனைவரும் 'ஃபெயில்' - தேர்வுத் துறை அதிர்ச்சி

கோவாவில் கணக்காளர் அரசுப் பணிக்கான தேர்வு முடிவு வெளியானதில் தேர்வு எழுதிய 8 ஆயிரம் பேரும் பெயிலாகியிருப்பது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்டதாரிகள் மட்டும் இத்தேர்வு எழுத தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும் 100 க்கு குறைந்தபட்சம் 50 மதிப்பெண்கள் கூட அவர்கள் பெறவில்லை என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கோவாவின் கணக்குத்துறை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ''கோவா அரசு அலுவலகங்களில் கணக்காளர் பதவிக்கு 80 காலியிடங்கள் ஏற்பட்டன. இதற்கான தேர்வு ஜனவரி மாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று தேர்வு எழுதிய ஒரு விண்ணப்பதாரர் கூட தேர்ச்சியடையவில்லை.
சாதாரண கணக்காளர் பதவிக்கான தேர்வு விளம்பரத்தை கணக்குகள் இயக்குநரகம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டிருந்தது. 5 மணிநேர தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, கணக்கு தொடர்பான கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு 100 மதிப்பெண்கள். இதில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெறுவதற்கு தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் இவர்கள் வாய்மொழி நேர்முகத் தேர்வுக்கு முன்பு நடத்தப்படும் இறுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருப்பார்கள்.'' என்று கணக்குகள் இயக்குநர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் கோவா பொதுச் செயலாளர் பிரதீப் பட்கோங்கர் தேர்வு முடிவு குறித்து காட்டமாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முதலில் தேர்வு முடிவு வெளியாக ஏன் இவ்வளவு காலம் ஆனது என்ற கேள்வி எழுகிறது. தேர்வு எழுதிய 8 ஆயிரம் பேரும் ஒரு தேர்வில் தேர்ச்சியடையவில்லை என்றால் மாநிலத்தின் கல்வி முறை சீர்குலைந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது. இது பட்டதாரிகளை உருவாக்கும் கோவா பல்கலைக்கழகத்திற்கும் வணிக கல்லூரிகளுக்கும் மிகப்பெரிய அவமானம்'' என்று பிரதீப் பட்கோங்கர் தெரிவித்துள்ளார்.

வெள்ள நிவாரண நிதிக்காக சிறப்பு லாட்டரி: கேரள அரசு முடிவு

கேரள வெள்ள நிவாரணத்துக்கு நிதி திரட்டுவதற்காக சிறப்பு லாட்டரி திட்டத்தை நடத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதன் காரணமாக மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகை 3.48 கோடியில், 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை, துணை ராணுவப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் உதவிகள் குவிந்து வருகிறது. உணவுப் பொருட்கள், ஆடைகள், மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள், நிதியுதவி என கேரள மக்களுக்கு நாடுமுழுவதும் இருந்து உதவிக்கரம் நீண்டு வருகிறது.
எனினும் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வரவும், அதற்கு தேவையான நிதியை திரட்டவும் மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து கேரள மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வெள்ள நிவாரண பணிகளுக்கு தேவைப்படும் நிதியை திரட்டுவதற்காக, ஜிஎஸ்டி மீது 10 சதவீத கூடுதல் வரி விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அதுபோல், வெள்ள நிவாரண நிதி தேவைக்காக, சிறப்பு லாட்டரி சீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துவது என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதியுதவி ஏற்கப்படுமா? - முடிவெடுக்கவில்லை மத்திய அரசு

கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை பாதிப்பையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க முன் வந்துள்ள நிலையில், அதனை ஏற்க மத்திய அரசின் அனுமதி தேவை. இந்த விஷயத்தில் மத்திய அரசு இன்னமும் முடிவெடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதன் காரணமாக மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகை 3.48 கோடியில், 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை, துணை ராணுவப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 67 ஹெலிகாப்டர்கள், 24 சரக்கு விமானங்கள், 548 மோட்டார் படகு கள் மீட்புப் பணியில் பயன்படுத்தப் படுகின்றன. மத்திய அரசு ரூ.600 கோடி நிதியுதவியை அறிவித்துள்ளது. பல மாநிலங்களும் நிதியுதவி அளித்துள்ளன.
மாநிலத்தின் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. 8 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் 8 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 8,000 வீடுகள் இடிந்துள்ளன. 26,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. 40,000 ஹெக்டேர் பயிர்கள் அழுகியுள்ளன. 134 பாலங்கள் இடிந்துள்ளன. 16,000 கி.மீ. சாலைகள் சேதமடைந்துள்ளன. ரூ.21,000 கோடிக்கும் அதிகமாக பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 368 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு பல்வேறு தரப்பினரும், நிவாரணப் பொருட்கள், நிதியுதவி செய்து வருகின்றனர். மத்திய அரசின் சார்பில் 600 கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் செய்ய முன் வந்துள்ளது.
இதனை அந்நாட்டு துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷித் உறுதிப்படுத்தியுள்ளார். ஐக்கிய அரசு அமீரகத்தில் ஏராளமான கேரள மக்கள் பணி புரிந்து வருவதால் அவர்களின் துயரில் பங்கு கொள்வதாக அவர் தெரிவித்து இருந்தார்.
ஆனால் இந்த நிதியுதவியை கேரள அரசு தானாக பெற முடியாது. வெளிநாடுகளில் இருந்து யார் நிதி பெற வேண்டும் என்றாலும், வெளியுறவு அமைச்சகத்தின் முறையான அனுமதி பெற வேண்டும். அதுமட்டுமின்றி வெளிநாடுகள் சார்பில் அளிக்கப்படும் இதுபோன்ற நிதியை பெறுவதற்கு மத்திய அரசு கொள்கை முடிவு எடுப்பது மிகவும் அவசியம்.
மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே கேரள அரசால் இந்த நிதியை பெற்றுக் கொள்ள முடியும்.இதற்கு முன்பு இயற்கை பேரிடர் நடந்தபோது பல சமயங்களில் வெளிநாடுகள் நிதி அளிக்க முன் வந்தன. அப்போது மத்திய அரசு அதனை ஏற்க மறுப்பு தெரிவித்தது.
2004-ம் ஆண்டு சுனாமி பாதிப்பு ஏற்பட்டபோது அமெரிக்க நிதியுதவி அளிக்க முன்வந்தது. அப்போதைய மத்திய அரசு அதனை ஏற்க மறுத்ததாக அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ரோன் சென் குறிப்பிடுகிறார். எந்த ஒரு பேரிடரையும் எதிர்கொண்டு சமாளிக்கும் நிலைமை இந்தியாவுக்கு இருப்பதால் வெளிநாட்டு நிதி தேவையில்லை என அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.
ஆனால் தேவையை கருதி சில சமயங்களில் வெளிநாட்டு நிதி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் சியாம் சரண் கூறுகையில் ‘‘வெளிநாடுகளில் இருந்து பேரிடர் காலங்களில் நிதி பெறுவதற்கு என தனியாக விதிமுறைகள் ஏதும் இல்லை. எனினும் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் கிடைத்தால் நிதியை பெற்றுக் கொள்ளலாம்’’ எனக் கூறியுள்ளார்.
மாலத்தீவு, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் கேரள வெள்ள பாதிப்புக்கு நிதியுதவி அளிக்க முன் வந்துள்ள நிலையில் இந்த விஷயத்தில் மத்திய அரசு இன்னமும் முடிவெடுக்கவில்லை என வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெற்றிலை என்பது போதை பொருளா…?

வெற்றிலை மூன்று ரகத்தில் பயிர் செய்யப்படுகிறது. 

கருப்பு நிறம் இல்லாத தளிர் நிறம் உள்ள வெற்றிலைக்கு வெள்ளை வெற்றிலை என்று பெயர்.இது மணமாக இருக்கும். கருப்பு நிறத்தில் உள்ள வெற்றிலைக்கு கருப்பு வெற்றிலை அல்லது கம்மாறு வெற்றிலை என்று பெயர். கற்பூர மணம் உள்ள வெற்றிலை தாமரை இலை போன்று பெரியதாகவும் நல்ல நிறத்தோடும் இருக்கும்.இதற்கு கற்பூர வெற்றிலை என்று பெயர்.
இந்த மூன்று விதமான வெற்றிலைகளும் சுவையில் விறுவிறுப்பு பொருந்திய கார்ப்புத்தன்மை உடையதாகும்.
கம்மாறு வெற்றிலைச் சாறை தினமும் காலை உணவிற்கு பிறகு அரை ‘அவுன்ஸ்’ வீதம் மூன்று நாள் குடித்து வந்தால் வாத, பித்த கபத்தால் ஏற்படும் ஏற்றத்தாழ்வை குறைக்கும். உடலில் நீர் ஏற்றம், தலையில் நீர் ஏற்றம், தலை பாரம் உணவு செரியாமை,மந்தம், குரல் கம்மல் வயிற்றுவலி, வயிற்று உப்புசம் ஆகியவை நீங்கும். இந்த வெற்றிலையை பாக்கும் சுண்ணாம்பும் சேர்த்து உபயோகிக்கும் போது தாம்பூலம் என்கிறோம்
இந்த தாம்பூலத்தை உபயோகிக்கும் முன் வெற்றிலையின் காம்பையும், நுனியையும் பின்புறத்தில் உள்ள நரம்பையும் நீக்கியே உண்ண வேண்டும்.
அது மட்டுமல்லாமல் வெற்றிலை போடும் போது முதலில் பாக்கை மெல்லக் கூடாது.ஏன் என்றால் பாக்கு துவர்ப்புத் தன்மை உடையது. இத்தன்மையால் உமிழ்நீர் சுரக்காது. எனவே ஒரு வெற்றிலையை மென்ற பிறகே பாக்கு வெற்றிலையை மெல்ல வேண்டும். இப்படி செய்வதால் துவர்த்தல், சொக்குதல், மூர்ச்சையாதல், பிசுபிசுத்தன்மை முதலியன ஏற்படாமல் இருக்கும்.
அப்படி இல்லாமல் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு,இவைகளை ஒன்றாக மெல்லும் போது அதில் நின்று ஊறிய முதல் நீர் நஞ்சாகவும், இரண்டாவது நீர் மிகு பைத்தியம் தருபவையாகவும், மூன்றாவது நீர் அமிர்தமாகவும், நான்காவது நீர் அதி இனிப்பாகவும்,ஐந்து மற்றும் ஆறாவது நீர்கள் பித்தத்தோடும், அக்கினி மந்தம், ஆகியவற்றை உண்டாக்கும் என்பதால் தான் வெற்றிலைப் பாக்கை உண்ணும் போது முதல் மற்றும் இரண்டாவது நீர்களை துப்பி விட வேண்டும்.
மூன்றாவது மற்றும் நான்காவது நீர்களை விழுங்கிவிட வேண்டும். ஐந்தவது நீர் சுரக்கும் முன்பு வெற்றிலையை துப்பி விட வேண்டும். இதுவே தாம்பூலம் உண்ணும் முறையாகும்.
காலையில் பாக்கு அதிகமாகவும், வெற்றிலை, சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் மலக்குற்றம் நீங்கி இரண்டு முதல் நான்கு முறை பேதியாகும். எனவே மந்தம் மலச்சிக்கல் உள்ளவர்கள் காலையில் பாக்கை அதிகமாகவும், வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும் சேர்த்து கொள்ள வேண்டும். மதியம் சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் வெற்றிலை பாக்கு குறைவாகவும் மென்றால் நல்ல பசி உண்டாகும்.
பசி இல்லாதவர்கள் மதிய உணவுக்கு பின்பு இவ்விதமாக உண்டால் ஆரோக்கியமான பசி உண்டாகும். மாலையில் வெற்றிலை அதிகமாகவும் பாக்கு, சுண்ணாம்பு, குறைவாகவும் மெல்வதால் வாயிலுள்ள ரணங்கள் குணமாகும்.
வயிற்று ரணத்தால் வாயில் வீசும் துர்வாடை நீங்கி நல்ல மணம் வீசும். இப்படி நோய்க்கேற்றவாறு வெற்றிலை, பாக்குகளை கூட்டிக்குறைக்கும் போது பல்வேறுபட்ட நோய்கள் நீங்கும்.வெற்றிலையை இளம் சூட்டில் வதக்கி சாறு எடுத்து அச்சாற்றை மூக்கில் இரண்டு துளி விட தலை நோய், தலைபாரம், தலையில் நீர்தேக்கம் ஆகியவை நீங்கும்.
இரண்டு வெற்றிலையுடன் 50 கிராம் ஊற வைத்த சிவப்பு அரிசியை சேர்த்து உண்டால் கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். சிறுவர்களுக்கு மலக்குற்றம் நீங்கும். அதோடு இருமல், மூச்சுதிணறல், கோழைக்கட்டு ஆகியவை நீங்குவதோடு இதை பெண்கள் உண்டால் ஆண்கள் மீது பற்றும் ஆண்கள் உண்டால் பெண்களின் மீது பற்றும் உண்டாகும்.
வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு என்பது போதை பொருள் அல்ல அதில் புகையிலை சேர்க்கும் போதே போதை பொருளாக உருவெடுக்கிறது..!

இந்தியாவில் அணுகுண்டு சோதனை


1948 – இந்திய அணுசக்தித்துறை தொடங்கப்பட்டது.
1955 – அணுசக்தி மையம் செயல்படத்தொடங்கியது.
1957 – விஞ்ஞானி பாபாவின் பெயரால் பாபா அணு ஆராய்ச்சி மையமானது.
1962 – நங்கலில் முதலாவது கனநீர் இயந்திரம் நிறுவப்பட்டது.
1963 – 40 மெகாவாட் திறன் கொண்ட சிரஸ் அணு உலை பழுதடைந்து சீர் செய்யப்பட்டது.
1967 – யுரேனியத்தை வெட்டி எடுக்கவும், பிரிக்கவும் யுரேனியம் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா உருவாக்கப்பட்டது.
1969 – தாராப்பூர் அணுசக்தித்திட்டம் யூனிட் 1 மற்றும் யூனிட் 2 வர்த்தக இயக்கத்தை தொடங்கின.
1971 – கல்பாக்கம் இந்திராகாந்தி அணுஆராய்ச்சி மயம் தொடங்கப்பட்டது.
1972 – பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் பூர்ணிமா ஆராய்ச்சி ரியாக்டர் தொடங்கப்பட்டது.
1973 – இராசத்தான் அணுசக்தி மையம் யூனிட் 1 வர்த்தக இயக்கத்தை தொடங்கியது.
1974 – தார் பலைவனத்தில் உள்ள போக்ரான் என்னுமிடத்தில் முதலாவது இந்திய அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
1998 – அடுத்தடுத்து 2 நாட்களில் 5 நிலத்தடி அணுகுண்டுகள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன.
Narendra Modi – 2014 till date
Manmohan Singh – 2004-14
Atal Bihari Vajpayee – 1998-2004
IK Gujral – 1997-98
HD Deve Gowda – 1996-97
AB Vajpayee – 1996
PV Narasimha Rao – 1991-96
Chandra Shekhar – 1990-91
VP Singh – 1989-90
Rajiv Gandhi – 1984-89
Indira Gandhi – 1980-84
Charan Singh – 1979-80
Morarji Desai – 1977-79
Indira Gandhi – 1966-77
Gulzarilal Nanda – 1966-66
Lal Bahadur Shastri – 1964-66
Gulzarilal Nanda – 1964
Jawaharlal Nehru – 1947-64
கடந்த 1974-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, இந்தியா முதன்முதலாக அணுகுண்டு சோதனை நடத்தி யது. அதன்பின், 1998-ம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தான் மாநிலம் போக்ரானில் அடுத்தடுத்து 5 அணுகுண்டு சோதனைகளை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் நடத்திக் காட்டினார். அதன்பின், 1999-ம் ஆண்டு மே 11-ம் தேதி தேசிய தொழில்நுட்ப தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இன்றும் கூட உலக அரங்கில் இந்தியா அணு சக்தி நாடாக அங்கீகரிக்கப்படவில்லை..!

வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா..?

இளநீர், `பூலோகக் கற்பக விருட்சம்’ என்று ஏன் அழைக்கப்படுகிறது ?
இயற்கை தந்த பெருங்கொடை இளநீர். உடல்சூடு, வயிற்றுப் புண், வாய்ப்புண்… எல்லாவற்றுக்கும் நாம் நாடுவது இளநீரைத்தான். எவ்வித செயற்கை ரசாயனங்களும் சேராத, நூறு சதவிகிதம் சுத்தமான, உடலுக்கு எந்தவிதமான தீங்கையும் ஏற்படுத்தாத தூய பானமாக இளநீர் இருக்கிறது.

இளநீர்
இளநீரை வெறும் வயிற்றில் குடித்தால்தான் பலன் கிடைக்கும் என்று ஒரு கருத்து உண்டு. அதேநேரம், வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றில் சுரக்கும் அமிலங்களுடன் கலந்து வயிற்றுப்புண் ஏற்படும்” என்றும் சிலர் கூறுகிறார்கள். எது உண்மை?சித்த மருத்துவர் சிவராமன்
“தயார் நிலையில் இருக்கக்கூடிய, உடலுக்குத் தேவையான கனிமங்கள், உப்புகள் மிகுந்த, சோர்வைப் போக்கி உடனடியாக ஆற்றலைத் தரக்கூடிய பானம் இளநீர். மூன்று வயது குழந்தையிலிருந்து யார் வேண்டுமானாலும் இளநீர் குடிக்கலாம். பொதுவாக, சாப்பாட்டுக்கு முன் இளநீர் குடிப்பது நல்லது. இளநீரில் உள்ள கனிமங்கள் மற்றும் உப்புகளை முழுவதுமாக நம் உடல் கிரகித்துக்கொள்ள, இளநீரை வெறும் வயிற்றில்தான் குடிக்க வேண்டும். மழை, பனிக் காலங்களில் மட்டும் அதிகாலையில் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஆஸ்துமா, சளித் தொந்தரவு இருப்பவர்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம்.
அதிகக் காரத்தன்மை கொண்ட, உடலுக்குச் சூட்டைக் கொடுக்கக்கூடிய, பித்தத்தை அதிகப்படுத்தக்கூடிய உணவுகளைத்தான் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இளநீர் உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது. பித்தத்தைத் தணிக்கக்கூடியது. அதனால், வெறும் வயிற்றில் குடிப்பதால் எந்தப் பாதிப்பும் இல்லை.
சர்க்கரை நோயாளிகளுக்கு, உடனடியாகச் சர்க்கரையை அதிகப்படுத்திவிடும். நோய் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, இளநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகமான உப்புகள் இருப்பதால், சிறுநீரக நோயாளிகளும் இளநீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. மற்றபடி, அனைவரும் குடிக்கலாம்” என்கிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன்
செய்தி:விகடன்

Tuesday, 21 August 2018

கடல் நீர் மட்டம் உயர்வதால் சுனாமி அபாயம்: மிரட்டும் அதிர்ச்சி தகவல்

தற்போது பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட போது, கடல் நீர் மட்டம் உயர்ந்து தெரிகிறது. இதனால், ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்கும் சுனாமி அபாயம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேராசிரியர் ஆய்வு: பருவ நிலைமாற்றத்தால், கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் வர்ஜீனியா தொழில்நுட்ப உதவி பேராசிரியர் ராபர்ட் வெயிஸ் தலைமையில் நிபுணர்கள் குழு ஆய்வு செய்தது.

கடல் நீர் மட்டம் உயர்வு: பருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் தற்போது உயர்ந்து சிறிதளது உயர்ந்துள்ளது. குறிப்பாக தெற்கு சீனாவில் மகாயூ கடலில் 1.5 அடி முதல் 3 அடி வரை கடல் நீர் உயர்ந்துள்ளது.

ரிக்டரில் 8.8 நிலக்கம் ஏற்படும் அபாயம்: அந்த பகுதிகளில் மக்கள் தொகை அடர்த்தியாகவே இருக்கின்றது. கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், அங்கு 8.8 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுனாமி அபாயம் ஏற்பட்டுள்ளது.


உலகம் முழுக்க தாக்கும் அபாயம்: தொடக்கத்தில் தென்சீன கடல் பகுதி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து தொடங்கி தெற்கு தைவான் வழியாக உலகம் முழுக்க சுனாமி தாக்குதல் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கட்டுரை இதழில் தகவல்கள் வெளியாகியுள்ளதால் பரப்பு ஏற்பட்டுள்ளது.

from tamil.gizbot

ஆண்டுக்கு ஒரு நீட் தேர்வு.. சிபிஎஸ்இக்கு பதில் என்.டி.ஏ தேர்வை நடத்தும்: மத்திய அரசு புது அறிவிப்பு

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஜூலை 7ஆம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், வெளியிட்ட அறிக்கையில், ஆண்டுக்கு இரு முறை ஆன்-லைன் மூலமாக நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவித்திருந்தது. இதையடுத்து கடுமையான எதிர்ப்புகள் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எழுந்தன. மேலும் நீர் தேர்வு, எழுத்து தேர்வு மூலமாகவே, நடைபெற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன.
இதையடுத்து இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் நீட் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் அதுவும், எழுத்துத் தேர்வு மூலமாக நடைபெறும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பழைய அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. 2018 நவம்பர் 1ம் தேதியிலிருந்து 30ம் தேதிவரை நீட் தேர்வுக்காக விண்ணப்பிக்கலாம். 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி அட்மிட் கார்டுகளை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மே 5ம் தேதி தேர்வு நடைபெறும், ஜூன் 5ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும். சிபிஎஸ்இ இதுவரை நீட் தேர்வை நடத்திய நிலையில், இனிமேல் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (NTA) தேர்வை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ கடந்த வருடம் நடத்திய நீட் தேர்வு பெரும் குழறுபடிகளை உள்ளடக்கியிருந்தது. தமிழில் மொழியாக்கம் செய்ததிலும் பெரும் தவறுகள் நடந்தன. சென்னை ஹைகோர்ட் மதுரை கிளை, சிபிஎஸ்இ செயல்பாட்டுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தது. கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி ‘டிஸ்மிஸ்’ - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களை கிண்டல் செய்த ஊழியரை வேலையில் இருந்து நீக்கிய நிறுவனம்

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களைக் கிண்டல் செய்து சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்த ஊழியரை உடனடியாக வேலையைவிட்டு தனியார் நிறுவனம் நீக்கியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த யூசுப் அலி. இவர் கேரளாவில் பிறந்தவர் என்றபோதிலும், குறிப்பிட்ட வயதுக்குப்பின் ஓமன் நாட்டுக்குச் சென்று வர்த்தகம் செய்து மிகப்பெரிய தொழிலதிபராக இருந்து வருகிறார். இவரின் நிறுவனம் லூலு குரூப் இன்டர்நேஷனல் என்று அழைக்கப்படுகிறது. கேரளாவில் கொச்சி, எர்ணாகுளம், திருவனந்தபுரத்தில் இவரின் நிறுவனத்தின் கிளைகள் உள்ளன.
 
மழைவெள்ளத்தால் கேரள மாநிலம் பாதிக்கப்பட்ட நிலையில், லூலு குழுமத்தின் தலைவர் யூசுப் அலி, ரூ.12 கோடி நிதியுதவியை முதல்வர் பினராயி விஜயனுக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும், கேரள மாநிலத்துக்குத் தொடர்ந்து நிவாரணப் பொருட்களை அனுப்பி வைப்பதாகவும் அரசிடம் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், ஓமன் நாட்டில் லூலு குழுமத்தின் நிறுவனத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ராகுல் செரு பழயட்டு பணியாற்றிவந்தார். இவர் லூலு குழுமத்தின் நிதித்துறையில் பணியாற்றி வந்தார். கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் மக்கள் சிக்கி இருப்பதைப் பார்த்து ராகுல் புகைப்படம் வெளியிட்டு பேஸ்புக்கில் கிண்டலாகக் கருத்துக்களை வெளியிட்டு இருந்தார்.
இந்தக் கருத்து ஏற்கெனவே மழைவெள்ளத்தில் சிக்கி, உறவுகளையும், சொந்தங்களையும் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கும் கேரள மக்களுக்கு மேலும் வேதனையைத் தருவதாக இருந்தது. இந்தக் கருத்துக்கு ஏராளமான மக்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்தச் சூழலில் ராகுலின் பொறுப்பற்ற செயலைக் கண்டித்த லூலு குழும நிறுவனம் அவரை உடனடியாக வேலையில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் நிறுவனத்தின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து ஓமனில் உள்ள லூலு குழும நிறுவனத்தின் மனிதவள மேலாளர் வெளியிட்ட அறிவிப்பில், “ கேரள மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், புண்படுத்தும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்த ராகுல் உடனடியாக நிறுவனத்தில் இருந்து நீக்கப்படுகிறார். அவர் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் விடுவிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், லூலு குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வி. நந்தகுமார் கூறுகையில், “கேரள மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், அவர்களை நோகடித்த ராகுலை உடனடியாக வேலையில் இருந்து நீக்கியுள்ளோம்.இதுபோன்ற செயல்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்பதை நாங்கள் எங்கள் நடவடிக்கை மூலம் சமூகத்துக்கு சொல்லி இருக்கிறோம். எங்கள் நிறுவனம் எப்போதும் மனிதநேயத்துக்கும், மனிதர்களின் உணர்வுகளுக்கும் தொடர்ந்து மதிப்பளிக்கும்” என கலீஜ் டைம்ஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்துக்கு பின் ராகுல் பேஸ்புக்கில் வெளிப்படையாக மன்னிப்புக் கோரியுள்ளார். “நான் மனம்வருந்தி மன்னிப்பு கோருகிறேன். கேரள மாநிலத்தின் அப்போதைய வெள்ள சூழலை நான் உணரவில்லை. அதன் தீவிரம் தெரியாமல் நான் கருத்துக்களைத் தெரிவித்துவிட்டேன். என்னுடைய கருத்து இந்த அளவுக்கு மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தி இருக்கும் என்பதை உணரவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

பிரிந்த வடகொரியா, தென்கொரியா குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு

இராண்டாம் உலகப் போரின் முடிவில் கொரியா வடகொரியா, தென்கொரியா என இரண்டாக உடைந்தது. அதனைத் தொடர்ந்து 1953-ல் வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் போர் ஏற்பட்டது.

60 ஆண்களுக்குப் பிறகு இந்தப் போரில் பிரிந்து போன குடும்பங்கள் ஒன்றாக இணையும் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. தென்கொரியாவைச் சேர்ந்தவர்கள் வடகொரியாவுக்குச் சென்று போரின்போது பிரிந்த தங்கள் உறவினர்களைச் சந்தித்தனர்.


இந்தச் சந்திப்பு வடகொரியாவின் சுற்றுலாத் தலமான மவுண்ட் கும்காங் நகரில் சனிக்கிழமை நடைபெற்றது.
இரு நாட்டுக் குடும்பங்களின் சந்திப்பில்  89 வயதான சோ சன் டு தனது மூத்த சகோதரி பற்றிக் கூறும்போது,  "எனக்கு நினைவிருக்கிறது நீ எவ்வளவு அழகாக இருப்பாய் என்று... உன்னை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது'' என்றார்.
பல ஆண்டுகளாக பிரிந்திருந்த உறவினர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி அழுதனர். வரும் புதன்கிழமைவரை நடைபெறும் இந்தச் சந்திப்பில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சந்தித்துப் பேச உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

10-ம் வகுப்பு முடித்த தனித்தேர்வர்கள் நேரடியாக பிளஸ் 2 தேர்வெழுத முடியாது: தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு முடித்த தனித்தேர்வர்கள் இந்த கல்வியாண்டு முதல் நேரடியாக பிளஸ் 2 தேர்வெழுத முடியாது என, தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “நடைபெறவுள்ள செப்டம்பர்/அக்டோபர் 2018 பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு இத்துறையால் நடத்தப்பட்ட மேல்நிலை தேர்வெழுதி தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்து ஹால் டிக்கெட் பெறப்பட்டு தவிர்க்க முடியாத காரணங்களால் தேர்வுக்கு வருகை புரியாத தனித்தேர்வர்கள், தோல்வியுற்ற அல்லது வருகை புரியாத பாடங்களைத் தேர்வெழுத ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசாணை எண்.185, பள்ளிக்கல்வி துறை, நாள் 9.08.2017 இன் படி, பழைய நடைமுறை பாடத்திட்டத்தின் படி (200 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 1200 மதிப்பெண்களுக்கு) தேர்வெழுதி தோல்வியுற்ற மேற்குறிப்பிட்ட வகை தனித்தேர்வர்களுக்கு தேர்வர்கள் செப்டம்பர்/அக்டோபர் 2018 மற்றும் மார்ச் 2019 ஆகிய இரு பருவங்களில் மட்டுமே தோல்வியுற்ற/வருகை புரியாத பாடங்களைத் தேர்வெழுத வாய்ப்பளிக்கப்படும்.
அரசாணை 1(டி), எண்.573, பள்ளிக்கல்வி துறை, நாள் 03.10.2017 இன் படி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று நேரடி தனித்தேர்வராக பிளஸ் 2 தேர்வெழுத இப்பருவம் முதல் விண்ணப்பிக்க இயலாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு முடித்த தனித்தேர்வர்கள் இதுநாள் வரை நேரடியாக பிளஸ் 2 தேர்வை எழுத முடியும். இந்நிலையில், தனித்தேர்வர்கள் நேரடியாக பிளஸ் 2 தேர்வெழுத முடியாது என்ற அறிவிப்பின் மூலம், அவர்கள் பிளஸ் 1 பொதுத்தேர்வை முடித்த பிறகே பிளஸ் 2 தேர்வெழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...