Tuesday, 21 August 2018

ஆண்டுக்கு ஒரு நீட் தேர்வு.. சிபிஎஸ்இக்கு பதில் என்.டி.ஏ தேர்வை நடத்தும்: மத்திய அரசு புது அறிவிப்பு

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஜூலை 7ஆம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், வெளியிட்ட அறிக்கையில், ஆண்டுக்கு இரு முறை ஆன்-லைன் மூலமாக நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவித்திருந்தது. இதையடுத்து கடுமையான எதிர்ப்புகள் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எழுந்தன. மேலும் நீர் தேர்வு, எழுத்து தேர்வு மூலமாகவே, நடைபெற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன.
இதையடுத்து இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் நீட் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் அதுவும், எழுத்துத் தேர்வு மூலமாக நடைபெறும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பழைய அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. 2018 நவம்பர் 1ம் தேதியிலிருந்து 30ம் தேதிவரை நீட் தேர்வுக்காக விண்ணப்பிக்கலாம். 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி அட்மிட் கார்டுகளை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மே 5ம் தேதி தேர்வு நடைபெறும், ஜூன் 5ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும். சிபிஎஸ்இ இதுவரை நீட் தேர்வை நடத்திய நிலையில், இனிமேல் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (NTA) தேர்வை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ கடந்த வருடம் நடத்திய நீட் தேர்வு பெரும் குழறுபடிகளை உள்ளடக்கியிருந்தது. தமிழில் மொழியாக்கம் செய்ததிலும் பெரும் தவறுகள் நடந்தன. சென்னை ஹைகோர்ட் மதுரை கிளை, சிபிஎஸ்இ செயல்பாட்டுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தது. கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...