Saturday, 25 August 2018

கோயம்புத்தூரை சேர்ந்த ஆசிரியை ஸதிக்கு நல்லாசிரியர் விருது அறிவிப்பு

தமிழகம் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட 6 பேரில் கோயம்புத்தூரை சேர்ந்த ஆசிரியை ஸதிக்கு மட்டுமே மத்திய அரசு வழங்கும் நல்லாசிரியர் விருதுஅறிவிக்கப்பட்டுள்ளது. 

சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி கௌரவிக்கும் நல்லாசிரியர் விருது தமிழகத்தில் ஒருவருக்கும் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

அந்த வகையில், கோயம்புத்தூர் மலுமிச்சம்பட்டியை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஆசிரியை ஸதி தமிழகம் சார்பாக இந்தாண்டு நல்லாசிரியர் விருது பெறவுள்ளார். 

கடந்தாண்டு வரை தேசியளவில் 354 பேர் நல்லாசிரியர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு வந்தனர். தமிழகத்தை சேர்ந்த 22 ஆசியர்கள் கடந்தாண்டு வரை இந்த விருதை பெற்று வந்தனர்.


இந்த நடைமுறையை மாற்றிய மத்திய மனித வளத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிக் கல்வித் துறை, நடப்பாண்டு முதல் 45 பேருக்கு மட்டுமே நல்லாசிரியர் விருது வழங்கப்படும் என அறிவித்தது. 

நாடு முழுவதும் விருதுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலும் குறைந்தது. இந்நிலையில் தேசிய ஆசியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக ஆசிரியை ஸதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...