Thursday, 23 August 2018

இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் கடும் சரிவு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரே நாளில் 27 பைசா சரிவடைந்து 70.08 பைசாவாக குறைந்தது.
துருக்கியின் பொருளாதார சரிவின் காரணமாக அதன் நாணயமான லிரா வரலாறு காணாத சரிவினைக் கண்டுள்ளது. இதனால் அண்மைகாலமாக உலக அளவில் டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாணயங்களும் சரிவினை கண்டுள்ளன. இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டது.
அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியது. இந்நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு இன்று மீண்டும் சரிவடைந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரே நாளில் 27 பைசா குறைந்தது. இதனால் காலை நேர வர்த்தகத்தில் இந்திய ரூபாய் மதிப்பு 70.08 ஆக சரிவடைந்தது.
அமெரிக்க ரிசர்வ் வங்கி தனது கொள்கை முடிவு கூட்டத்துக்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது. இதன் மூலம் அமெரிக்க வங்கிகள் வட்டி விகிதங்களை அதிகரிக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் பல்வேறு நிதி நிறுவனங்களும் டாலரகளை வாங்கியதால் அதன் தேவை அதிகரித்து மதிப்பு உயர்ந்தது. இதன் காரணமாக இந்திய ரூபாய் கடும் சரிவை சந்தித்துள்ளதாக நிதி ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய பங்குச்சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாக உள்ளது.

No comments:

Post a Comment

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...