Thursday, 23 August 2018

பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம் பரப்புரைக்கு தூதுவராக நடிகர் விவேக் நியமனம்

சென்னை தலைமைச் செயலகத்தில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம்என்கிற விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார். 

கடந்த ஜூலை 4ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 2019 ஜனவரி முதல் பிளாஸ்டிக் பொருட்களை தமிழகத்தில் பயன்படுத்த தடை விதித்து அரசாணை வெளியிட்டார். 

மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கும் தடை விதிப்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவிற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அங்கு பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், மாற்றுப் பொருட்கள் குறித்த மாநில அளவிலான விழிப்புணர்வு பரப்புரையை தொடங்கி வைத்தார். 

பிறகு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த குறும்படம் மற்றும் விழிப்புணர்வு தொடர்பான நடவடிக்கைகளை குறிக்கும் லோகோ, இணையதளங்கள் ஆகியவை வெளியிடப்பட்டன. 

பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு விளம்பரத் தூதராக நடிகர்கள் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா நியமிக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியின் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தூய்மையான தமிழகத்தை உருவாக்க ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக்கிற்கு பதில் மாற்றுப்பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். 

மேலும், அமைச்சர்கள் பிளாஸ்டிக் கோப்புகளுக்கு பதிலாக இன்று முதல் காகித கோப்புகளை பயன்படுத்துவார்கள் எனவும் முதலமைச்சர் பழனிசாமி இந்த நிகழ்வில் அறிவித்தார். 

No comments:

Post a Comment

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...