Sunday, 19 August 2018

எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை ஊக்கப்படுத்த புதிய திட்டம் கொண்டு வரும் மத்திய அரசு

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய திட்டம் வகுத்துள்ளது.  வரும் செப்டம்பர் 7ஆம் தேதி, இ-மொபைலிடி மாநாட்டை பிரதமர் மோடிதொடங்கி வைக்கிறார். அதில், எலக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க உள்ளது. முதல்கட்டமாக 4 மில்லியனுக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட மாசடைந்த 9 நகரங்களைத் தேர்வு செய்கிறது.



அங்கு சுற்றுச்சூழலை தூய்மையாக்க எலக்ட்ரிக் வாகனப் பயன்பாடு உள்ளிட்ட விஷயங்களை நடைமுறைப்படுத்த உள்ளது. இதையடுத்து ஒரு மில்லியனுக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களைத் தேர்வு செய்ய உள்ளது.

இதில் மிகவும் பரபரப்பாக காணப்படும் மும்பை - புனே மற்றும் டெல்லி - சண்டிகர் ஆகிய வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பரில் எகானமிக் டைம்ஸில் வெளிவந்த தகவலின் படி, ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களுக்கு 100 நாள் சர்வதேச சவால் விடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த காலக்கட்டத்தில் வாகன உற்பத்தியாளர்கள் எலக்ட்ரானிக் வாகனங்களுக்கு தேவையான உற்பத்திப் பிரிவு, பேட்டரி, சார்ஜிங் கட்டமைப்பு ஆகியவற்றை இந்தியாவில் ஏற்படுத்த வேண்டும்.  கடந்த பிப்ரவரியில் பேசிய மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, எலக்ட்ரிக் வாகனங்களுக்கு புதிய திட்டங்கள் ஏதும் அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை என்றார். ஆனால் புதிய திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
From Samayam

No comments:

Post a Comment

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...