தேமுதிக தலைவர் விஜயகாந்த்மற்றும் அவரது மனைவி பிரேமலதா இன்று அதிகாலை கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
திமுக தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி, ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் காலமானார். இதையடுத்து, அவரின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா நினைவிடத்திற்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.
விஜயகாந்த் அஞ்சலி ;கருணாநிதி மறைந்த போது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். அங்கிருந்து கண்ணீர் மல்க கருணாநிதியின் மறைவுக்கு வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் முதல் வேலையாக, கருணாநிதியின் நினைவிடத்தில் மனைவி பிரேமலதாவுடன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது கண்ணீர் விட்டு அழுதபடி அஞ்சலி செலுத்தினார்.

No comments:
Post a Comment