Wednesday, 30 May 2018

இந்தியாவில் விமான நிலைய வேலைகளை கவனிக்க ரோபோ

விஸ்டாரா நிறுவனம் இந்திய விமான நிலையங்களில் ராடாஎன்ற என்ற செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்களை பண அமர்த்த உள்ளது. 

டாடா சன்ஸ் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அங்கமான விஸ்டாரா விமான சேவை நிறுவனம் இந்திய விமான நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக பிரத்யேக ரோபோக்களை அறிமுகம் செய்யப்போகிறது. 




முதலில் டெல்லி விமான நிலையத்திற்கு ஜூலை 5ஆம் தேதி அறிமுகமாகிறது ராடா என்ற பெயர் கொண்ட ரோபோ. இது பயணிகளுக்கு உதவுவது, அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வது, பொழுதுபோக்க பயன்படுவது போன்ற பல வேலைகளை செய்யும். 

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் (Artificial Intelligence) கொண்ட இந்த ரோபோ பயணிகளின் வரவேற்பை பொறுத்து மேலும் மேம்படுத்தப்படும் என்றும் விஸ்டாரா தெரிவித்துள்ளது.

Tuesday, 29 May 2018

சுளுக்கு மற்றும் தசைப்பிடிப்புகளுக்கு வீட்டு வைத்தியங்கள்

ஒரு சாதாரண சுளுக்கு அல்லது திருப்பத்திற்காக மருத்துவரிடம் அவசரமாக அடிக்கடி ஓடுவது சிக்கலாக உள்ளது உடற்பயிற்சிகள் அல்லது விளையாட்டுகளின் போது ஏற்படும் காயங்கள் என்று வரும்போது, அதிக பயிற்றுனர்கள் சில கைவைத்திய முறைகளை பின்பற்றுகின்றனர். அது முதல் உதவி மட்டுமல்ல, ஆனால் வீக்கம் தடுக்க மற்றும் வலியை மட்டுப்படுத்த ஒரு பெரிய தீர்வாகும். எனினும், எந்த பெரிய சுளுக்கு அல்லது சுளுக்கியிருக்கிற பகுதியில் நகர்த்த முடியவில்லை.என்றால் நீங்கள் ஒரு மருத்துவர் சென்று பார்க்க பரிந்துரைக்கப்படுகிறது



.சிறிய சுளுக்கு மற்றும் காயங்களைஇயற்கையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்ய முடியும்.பின்வருபவை, சுளுக்குக்கான சில தீர்வுகளாகும்.நீங்கள் உங்கள் சமையலறையில் இருந்து இந்த மறைக்கப்பட்ட முதல் உதவி பொருட்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

ஐஸ்/பனிகட்டி

  குளிர் அழுத்தி சுளுக்கு சிகிச்சைக்கு சிறந்த முறையாகும். ஒரு கைக்குட்டை அல்லது துண்டால் மூடப்பட்டிருக்கும் ஐஸ் பொதிகள் அல்லது ஐஸ் க்யூப்ஸ் வீக்கம் பாதிக்கப்பட்ட பகுதியில் பயன்படுத்தப்படும் போது.வீக்கத்தை தடுக்க மற்றும் வலியைக் குறைக்கலாம். ஐஸ் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் உறைந்த பட்டாணி அல்லது சோளம் ஒரு பேக் பயன்படுத்த முடியும். ஒரு நாளைக்கு மூன்று முறை 20 நிமிடங்கள் (அதிகமாக இல்லை) அதிகபட்சமாக ஐசை உபயோகிக்கலாம்.

மஞ்சள்

இந்த ஒரு பழைய கால தீர்வு ஆகும் மற்றும் சுளுக்குக்கு மட்டுமின்றி பல்வேறு பிற காயங்களுக்கும் அதிகமான வீடுகளில் சிகிச்சைக்கு பயன்படுத்தப் படுகிறது. மஞ்சள் தூளுக்கு இயற்கையான சிகிச்சைமுறைபண்புகள் உண்டு. அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தை குறைக்கின்றன மற்றும் வலி நிவாரணம் வழங்குகின்றன.

மஞ்சள் அதன் வலிப்பு குறைவு பண்புகளின் காரணமாக தசைகள் மற்றும் மூட்டுகளில் தளர்வை ஏற்படுத்தும். .சிறிது எண்ணை மற்றும் மஞ்சள் தூளை சுட வைத்து அதை தசை சுளுக்குபகுதியில் தடவவும். இரவு முழுவது அதை அப்படியே விடவும். நீங்கள் மஞ்சளை தண்ணீருடன் ஒரு தடித்த பேஸ்ட் தயாரித்து தடவ உபயோகிக்கலாம். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை வீதம் 2-3 நாடகளுக்கு, முழு நிவாரணம் பெற செய்யவும்.

பூண்டு

பூண்டில்பல ஆரோக்கியநன்மைகள் உண்டு. பூண்டு அழற்சி எதிர்ப்பு பண்புகள் வலி [1] மற்றும் வீக்கத்தை குறைக்க உதவும்.

பூண்டு குணப்படுத்தும் பண்புகள்,

நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வலிமை ஏற்றத்திற்கு உதவி, .

காயங்கள் மற்றும் சுளுக்கு சிகிச்சை முறையில் கூட உதவுகின்றன.

ஒரு மேசை கரண்டி பூண்டு சாறை தேங்காய் எண்ணையுடன் கலந்து, அதை சுளுக்கியிருக்கிறபகுதியில்மெதுவாக மசாஜ் செய்யவும். அரை மணி நேரத்திற்கு பின் கழுவி விடவும். இதை ஒரு நாளைக்கு மூன்று முறை 2-3 நாட்களுக்கு செய்யவும்.

பேதியுப்பு (எப்சம் உப்பு)

பேதியுப்பில் தசை வலியை ஆற்றவும் மற்றும் நம்முடைய நரம்புகளை அமைதிப்படுத்தவும் செய்கிற மெக்னீசியம் சல்பேட் நிரம்ப பெற்றுள்ளது உப்புக்கள் சிறிய சுளுக்கு சிகிச்சைக்கு மிகவும் பயனுள்ள தீர்வுகளில் ஒன்றாகும். சூடானநீர் மற்றும்பேதியுப்பு ஊறசெய்யவும். 15-20 நிமிடங்கள் வரை பாதிக்கப்பட்ட பகுதியில்ஊற வைக்கவும்..இதை ஒரு நாளைக்கு இருமுறை செய்யவும். வழக்கமான உப்பை கூட ஊற வைத்தலை தயாரிக்க உபயோகிக்கலாம், எனினும் அது வெறும் வலியை மற்றும் ஆற்றக் கூடும்.

ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெயில் ரிசினோலெயிக் அமிலத்தின் இருப்பு அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது இது சுளுக்கு காரணமாக வீக்கம் மற்றும் வலிக்கு நிவாரணம் வழங்க உதவுகிறது. ஆமணக்கு எண்ணெய் மூட்டு வலிக்குக் கூட ஒரு சிறந்த தீர்வு ஆகும். பாதிக்கப் பட்ட இடத்தை சிறுது ஆமணக்கு எண்ணையால் மசாஜ் செய்து அந்த இடத்தை க்ரேப் கட்டு கொண்டு சுற்றி வைக்கவும். இதை ஒரு நாளைக்கு, நீங்கள் வலி இல்லாமல் உணரும் வரை 2-3 தடவைகள் செய்யவும்.

Monday, 28 May 2018

இதுவரை எப்போதெல்லாம் ஸ்டெர்லைட் மூடப்பட்டது? எப்படி மீண்டும் திறக்கப்பட்டது?

மொத்தம் 13 உயிர்களைக் காவு வாங்கிய பின் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு ஸ்டெர்லைட்டுக்கு தடை விதிப்பது புதியது இல்லை. பலமுறை தடையை உடைத்து மீண்டும் தனது கதவைத் திறந்திருக்கிறது, ஸ்டெர்லைட் நிறுவனம். இதற்குப் பின்னால் மிகப்பெரிய வரலாறும் இருக்கிறது.



தூத்துக்குடியில் அமைக்கப்பட்டபோதே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுடன் சேர்ந்து மக்களும் போராட்டத்தில் இறங்கினர். சில கட்சிகள் தங்களின் அரசியல் லாபத்திற்காகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலைக்கு எதிராக 2 வருடங்களாகப் போராட்டங்கள் நடைபெற்றது. ஆனால் தகுந்த நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வழங்குதல், மரம் நடுதல் என ஸ்டெர்லைட் மக்களைக் கவரத் தொடங்கியது. மேலும், அப்போது நிகழ்ந்த சாதிச் சண்டை எனப் பல காரணங்களால் போராட்டம் நீர்த்துப் போனது.

1996-ம் ஆண்டு மக்களின் போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்துவிட்டு இயங்கிய ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக-டை-ஆக்சைடுடன் நச்சு வாயுக்களும் வெளியானது. இதனால் அருகில் உள்ள மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டன. வழக்கம் போல மக்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒருபடி மேலே போய் ஆலைக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்தனர்.


1998 அக்டோபர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. நாக்பூரை சேர்ந்த தேசிய சுற்றுச்சூழலுக்கான பொறியியல் ஆராய்ச்சி மையம் என்ற 'நீரி' ( National Environmental Engineering Research Institute ) அமைப்பு ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அந்தக் குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில்,"ஆலை வளாகத்திலும் அதனைச் சுற்றி உள்ள இடங்களிலும் உள்ள நிலத்தடி நீர் பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறது.சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீரில் குரோமியம், தாமிரம், ஈயம், காட்மியம், குளோரைட், ஃபுளோரைட், ஆர்சனிக் தாதுப் பொருட்கள் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இதனால் உடலுக்குப் பெரிய ஆபத்து இருக்கிறது" எனத் தெரிவித்தது. இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்டு உடனடியாக ஆலையை மூடச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அந்த அறிக்கையில் உள்ள பிழைகளைத் திருத்திவிட்டோம் என்று சொல்லி உயர் தீமன்றத்தில் மீண்டும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது, ஸ்டெர்லைட் நிர்வாகம். ஒரு மாதம் கழித்து மீண்டும் அவ்வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், "ஆலை இரண்டு மாதங்கள் இயங்கட்டும். அதன் பின்னர் 'நீரி' அமைப்பு ஸ்டெர்லைட்டில் மீண்டும் ஆய்வு செய்து அறிக்கையை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்" எனத் தீர்ப்பளிக்க, மீண்டும் திறக்கப்பட்டது ஸ்டெர்லைட் ஆலை.



முதல் அறிக்கையில் காட்டமாக பதிவு செய்திருந்த நீரி அமைப்பு, இரண்டாவது ஆய்வின் அறிக்கையில் நீர்த்துப்போன தகவல்களை தந்தது. மாறிப்போய் இருந்தது. இதனால் தொடர்ந்து இயங்கலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது வேதாந்தா நிறுவனத்துக்கு உற்சாகத்தையும், உள்ளூர் மக்களுக்கு வேதனையையும் கொடுத்தது. இங்குதான் தனது முதல் தடையை உடைத்து மீண்டும் இயங்கியது ஆலை.

இதற்கிடையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் 1996 நவம்பர் 7-ம் தேதி முதன் முதலில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில் 2010 செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பு கிடைத்தது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தீர்ப்பை அளித்தது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்ற சென்றதும் ஆலை நிர்வாகம். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 'உயர் நீதிமன்ற தீர்ப்பு ஏற்கும்படியாக இல்லை. நூறுகோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுத்து மீண்டும் ஆலையை இயக்கலாம்" எனத் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக்கோரி வைகோ சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், 2013 ஏப்ரல் 2-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் சீராய்வு செய்து திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். 2012 செப்டம்பர் 28-ல் ஸ்டெர்லைட் ஆலை மூட வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டு உள்ளார். இதற்கிடையில் 2013-ம் ஆண்டு நடந்த பெரும் விபத்து காரணமாக, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கைபடி ஸ்டெர்லைட்டை இழுத்து மூடினார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக இருந்தாலும், தமிழக அரசின் சார்பில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூட உத்தரவிட்டதால் ஆலையைத் திறக்க முடியவில்லை. அதற்காகத் தென்னிந்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் வழக்கைத் தாக்கல் செய்தது. அதில் தமிழக அரசின் சார்பில் கடுமையான வாதங்கள் வைக்கப்பட்டாலும், அவ்வழக்கை டெல்லி பசுமை தீர்ப்பாய அமர்வுக்கு மாற்றியது தென்னிந்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயம். வழக்கம்போல, ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சு வாயு வெளியேறியதற்கான அறிவியல் ஆதாரம் இல்லாததால் அந்த ஆலையைத் திறக்க டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. 2013-ல் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

20 ஆண்டுகளைக் கடந்து இயங்கிக் கொண்டிருக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் சிப்காட் விரிவாக்கப் பகுதியில் தனது 2-வது ஆலையின் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டது, ஸ்டெர்லைட் நிர்வாகம். இதை எதிர்க்கும் வகையில் 12.02.2018-ம் தேதியன்று குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கி, ஸ்டெர்லைட்டை மூடிட வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பேர் தூத்துக்குடியில் 144 தடையை மீறி பேரணியாகச் சென்றனர். காவல்துறையினர் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்நிலையில் சென்னை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 'ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்குத் தடை' விதித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர், புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ஸ்டெர்லைட் நிறுவன உரிமையாளர், அனில் அகர்வால் 'ஸ்டெர்லைட்டை மீண்டும் திறப்போம்' என்று சொல்லியிருக்கிறார். இவ்வளவு நடந்த பின்னர், ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க விடமாட்டோம் என உறுதி காட்டுகிறார்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினர். ஆனால், இப்போது தமிழக அரசு வெறும் லெட்டர்பேடின் மூலமாக சொல்லியிருக்கும் ஸ்டெர்லைட் மூடலை நிச்சயமாக அந்நிறுவனம் உடைக்கும். வரலாறும் அதைத்தான் சொல்கிறது.

ஆதாரம் விகடன்

ஜீவசமாதி! ஜீவசமாதி! ஜீவசமாதி! ஜீவசமாதி!!

ஜீவசமாதி! ஜீவசமாதி! ஜீவசமாதி! ஜீவசமாதி!!


நண்பர் ஒருவர் என்னை சந்திக்கையில் ஒரு கேள்வியைக் கேட்டார்.
ஐயா, ஜீவ சமாதி என்று சொல்கிறீர்களே, அது தற்கொலை அல்லவா ? 
அதற்கு உடந்தையாக, சாட்சியாக இருந்தவர்கள் கொலைகாரர்கள் தானே ? உயிரோடு ஒருவரைப் புதைப்பது கொலைதானே ? என்று கேட்டார்.

அவரைச் சொல்லி குற்றமில்லை. இன்றைய நடைமுறை சட்ட திட்டங்களின்படி அது தற்கொலை என்றே கொள்ளப்படும்.
உயிரோடு புதைப்பவர்கள் கொலைகாரர்களே என்று தீர்ப்பு சொல்லி விடுவார்கள். ஆனால் யோகிகள், சித்தர்கள், ஞானிகள் நிலை வேறு.
நதியானது கடலில் போய் சேர்வது போன்றது
யோகிகள் தன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக் கொள்வது.
ஒரு கல்லைக் கட்டிக் கொண்டு நீரில் குதித்தாலோ, தூக்கு போட்டுக் கொண்டாலோ அல்லது வேறு ஏதாவது உபாயத்தில் தன் உயிரை துன்புறுத்தி உடலில் இருந்து வெளியேற்றுவது தற்கொலைதான்.
அதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் ஒரு யோகியோ, சித்தரோ அவ்வாறு சமாதி ஆவதில்லை
.
ஜீவன் நீங்கிய பிறகும் அவர்கள் உடல் எப்படி அமர்ந்திருந்தார்களோ
அப்படியே அமர்ந்திருந்தபடி இருக்கும். மேலும் உடலானது
அழுகிப் போகாமல் அப்படியே வற்றி, சுருங்கிப் போய் இருக்கும்.
இது பல சந்தர்பங்களில் நிரூபணம் ஆகியுள்ளது.
ஆனால் உங்களாலோ, என்னாலோ எந்த வேதனையும் இல்லாமல்,
அசைவும் இல்லாமல் உயிரை உடலில் இருந்து பிரித்தெடுக்க முடியாது.
மூச்சை அடக்கி சிறிது நேரம் கூட அமர முடியாது.
நம் உடல் நம்மையும் மீறி மூச்சு விட்டுவிடும்.
அப்படியே கஷ்டப்பட்டு அடக்கினாலும் அசையாமல் இருக்க முடியாது.
இது மட்டுமல்ல உடலை பஞ்ச பூதங்களோடு கரைந்து போகச் செய்யவும் அவர்களால் முடியும்.
சாதாரணமாக மனிதர்கள் அவஸ்தைப்பட்டு, மலஜலம் கழிந்து
வாய் வழியாகவோ, மூக்கு வழியாகவோ பிராணன் போய் மரணிப்பார்கள். ஆனால் ஜீவ சமாதி ஆனது :
யோகியின் உடல் வாழ்க்கை முற்றுப் பெறுவது வேறு விதத்தில்.
நதியானது கடலில் கலப்பது போல யோகியின் ஜீவபோதமானது
பரபோதமாக மாறி அமைகிறது.
உடல் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட அவரின் உணர்ச்சியானது
எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறது.
பொறிகளாகிய கண், மூக்கு, செவி, போன்றவற்றில்
புலனாகும் உணர்ச்சிகள் ஏதும் யோகிக்கு இருக்காது.
தூங்கப் போவது போல ஒவ்வொன்றாக அவைகள்
தாமே ஒடுங்கிவிடுகின்றன.
அந்தி வேளை வரும் போது, தன் வீட்டுக்கு பறந்து வரும் பறவை போல யோகியின் மனமானது இறுதி கட்டத்தில் இருதயத்தில் அடங்கிவிடுகிறது.
உடலெங்கும் சீதம் பரவுகிறது.
அதாவது பிராணன் ஒவ்வொரு அவயத்தை விட்டும் மெதுவாக விலகுகிறது. பிராயாணி ஒருவன் வண்டி நிலையத்துக்கு வந்து சேருவது போல
யோகியின் பிராணன் உச்சந்தலைக்கு வந்து சேருகிறது.
அதனால் உச்சந்தலையில் மட்டும் நெடுநேரம் கதகதப்பு நீங்காதிருக்கும்.
அப்போது ஓம் என்ற பிரணவ ஓசை மட்டும் உள்ளே
ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆதிநாதத்தை கேட்டபடி
அதிலேயே ஒடுங்கி ஓம் என்ற ஓசையின் வடிவினனாகிய
பரமாத்மாவின் திவ்ய சொரூபம், அலகிலா ஜோதி, பேரின்பம், சித் அம்பரம்
என்ற நிலையை யோகி அடைவார்.
மேலைத்துவாரம் வழியாக ஜீவனை பரமனோடு இணைத்துக் கொள்வரர்.
இதுவே பிறப்பறுக்கும் மரணமிலாத பெரு வாழ்வு நிலை.
இது மரணமல்ல.இது ஜீவ ஐக்கியம். சரீரம் விழுந்து போகாமல்
சரீரத்தின் துணை கொண்டே வீடு பேறு அடையும் நிலை.
அதல்லாமல் மரணமிலாப் பெரு வாழ்வு என்பது ஆயுளை நீட்டித்துக் கொள்வதல்ல.
இந்த மரணமிலாப் பெருவாழ்வு நிலையை அடையவே
சித்தர்கள் தேகத்தை வலிமையாக்கி, ஆயுளை நீட்டித்துக் கொண்டார்கள்.
எனவே நண்பரே ஜீவ ஸமாதி என்பது தற்கொலையோ, கொலையோ அல்ல.
அது ஜீவ ஐக்கியம்.
இவ்வாறு ஐக்கியமானவர்கள் நினைத்த போது வரவும் முடியும்
என்று சொல்லப்படுவதுணடு.
அப்படி வந்து அருள்பாலித்த்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
இதைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால்,
சித்தர்கள் உறையும் ஜீவசமாதியில் போய் உண்மையான மனதோடு வேண்டுங்கள்,
ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்கள் இதை உங்களுக்கு செம்மமையாக
விளக்கி அருளுவார்கள்.
உயிர் போகினும் போகாதுடலினை வீங்கித்
தலைகிறுத்த கல்வது தனஞ்செயன்.
பிராணனைக் கட்டுப்படுத்த வல்லவர்களுக்கு
இந்த தனஞ்செயன் வாயுவை மற்ற ஒன்பது பிராணன்களில் இருந்து
பிரியாமல் இருக்க வைத்து நீண்டநாள் தன் ஆயுளை நீட்டித்துக் கொள்ள முடியும். பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது சாத்திமா ? என்று கேட்டால்
திருமூலர் சாத்தியமே என்கிறார்.
ஒத்த இவ்வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்த இவ்வொன்பதின் மிக்க தனஞ்செயன்
ஒத்து இவ்வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்தவே.
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த யோகியர் பிராணாயாமப் பயிற்சியின் வல்லமையால் இந்த தனஞ்செயன் என்கிற பத்தாவது பிராணனை
மற்ற பிராணன்களில் இருந்து பிரியாமல் செய்து
உடலையும், உயிரையும் காத்துக் கொண்டனர்.
திருமூலர் 4500 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்ததாகச் சொல்வார்கள்.
அகத்தியரோ பல யுகங்களாக வாழ்வதாகச் சொல்வது உண்டு.
அகத்தியர் ஒருவரல்ல பல பேர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும்
வாதிடுவோர் உண்டு.
ஆனால் இந்த திருமந்திரப் பாடலைப் படித்தால்
அது சாத்தியமே என்று தோன்றுகிறது.
இந்த தனஞ்செயன் வாயுவானது உயிர் போனாலும்
உடலை விட்டுப் போகாமல் மூன்று நாட்கள் வரை தங்கி இருந்து பின் உடலை வீங்கச் செய்து கபாலம் வழியாக வெளியேறும் என்பது சித்தர்கள் கூற்று.
இவ்வாயுவானது உடலைவிட்டு வெளியேறி விட்டால்
உடலானது உடனே வீங்கி வெடித்து விடும்.
இருக்கும் தனஞ்செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்
இருக்கும் உடலில் இருந்தில ஆகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.
இந்த தனஞ்செயன் என்கிற வாயுமட்டும் மரணத்திற்குப் பிறகு
மூன்று நாட்கள் இருப்பது ஏன் ?
அதாவது இந்த தனஞ்செயனானது இடகலை, பிங்கலை, சிகுவை, அத்தி, அலம்புடை, புருடன், காந்தாரி, சங்கிணி, குரு ஆகிய ஒன்பது நாடிகளிலும்
பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகன், தேவதத்தன் என்கிற ஒன்பது பிராணன்களுடன் கூடிஇருக்கும்.
அப்படி கூடி இருக்கும் வரைதான் உயிர் இருக்கும்.
இது பிரிந்து செயல்படும் இடத்தை நாற்சந்தி என்பார்கள்.
வயிரவன், முக்கியன், அந்தர்யாமி, பிரவஞ்சனன் என்ற
இந்த நாற்சந்திகளில் அந்தர்யாமி பிராணவாயுவை உடலினுள்ளேயும், இரத்தத்தினுள்ளேயும் உருவாக்கிக் கொண்டே இருப்பதால்தான்
இந்த தனஞ்செயன் வாயுவானது உடலில் தங்கிவிடுகிறது.
இதைப் பயன்படுத்தி சித்தர்கள் இறந்ததாகக் கருதப்படும் உடலில் பிராணவாயுவை அதிகரிக்கச் செய்து
உயிர் பெற்று ஏழ வைத்துவிடுவார்கள்.
இதனால்தான் இறந்தவர்களை புதைக்கச் சொல்கிறார்கள்.
சாதாரணமான மனிதர்களுக்கு புதைத்த உடலில் இருந்து
எவ்வித துன்பமும் இல்லாமல் தனஞ்செயன் வெளியறிவிடும்.
ஆனால் எரியூட்டப்படும் உடலில் இருந்து தனஞ்செயன்
வேதனையுடனும் வலியுடனும் டப் என்ற சத்தத்துடன்
மண்டையை உடைத்துக் கொண்டு வெளியேறும்.
மேலும் ஞானிகளின் சமாதி நிலையை மரணம் என்று எண்ணி
அவர்கள் தேகத்தை எரித்துவிடக் கூடும், என்று கருதியே
வள்ளலார் எரியூட்டுவதைக் கடுமையாக எதிர்த்தார்.
எரிப்பது என்பது கொலைக்குச் சமம் என்கிறார்.
வேலூருக்கருகே வள்ளிமலை கோவிலில் திருப்பணி வேலைகள்
நடந்து கொண்டிருந்த போது, உடைந்திருந்த படிக்கல்லை எடுத்து விட்டு,
புதுப் படிக்கல் போடுவதற்காக உடைந்த படிக்கல்லை நகர்த்திய போது,
உள்ளே சித்தர் ஒருவரின் அமர்ந்த திருக்கோலத்தைத்
தான் கண்டதாக திரு முருக கிருபானந்த வாரியார் சொல்லியிருக்கிறார்.
யோகியர் தேகத்தை மண்கூடத் தீண்டாது.
கேசரி, லம்பிகா யோகத்தில் அப்படி அமர்ந்திருப்பவர்களை
விபரம் தெரிந்தவர்கள் எழுப்பி விடமுடியும்.
அந்த இடத்தில் இது குறித்த விபரம் தெரிந்தவர்கள் யாரும்
இல்லையெனில் மீண்டும் புதைத்து விடுவார்கள்.
அப்படி லம்பிகா யோகத்தில் அமர்ந்திருப்பவர்கள்
இறந்தவர்கள் போலத்தான் காணப்படுவார்கள்.
அவர்கள் உடல் எத்தனை யுகங்களானாலும்
பூச்சிகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் அன்றி
வேறெதாலும் அழியாமல் அப்படியே இருக்கும்.
அவர்கள் வாயை பக்குவமாகத் திறந்து உள்ளே உள்நாக்குப் பகுதியை அடைத்திருக்கும் நாக்கை மெதுவாக எடுத்துவிட்டு,
மெதுவாக கைகால்களை நீட்டி படுக்க வைத்து,
மிகவும் மெதுவாக கை கால்களைத் தேய்த்து
இரத்த ஓட்டம் வரச் செய்தோமானால், அவர்களுக்கு மூச்சு வந்துவிடும்.
ஆனால் கண்களைத் திறந்து நம் மீது கோபித்துக் கொள்ளவும் கூடும்.
அறிந்துணர்வோம்! ஆழ்ந்து சிந்தித்து உணர்வோம்!
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

"நம்பரும் போயிடும்... பணமும் திருடப்படும்!” - டிஜிட்டல் திருடர்களின் புதிய வழி

தொழில்நுட்ப வளர்ச்சியால், டிஜிட்டல் உலகில் நன்மைக்கு ஈடாகப் பல தீமைகளும் நாள்தோறும் நிகழ்கின்றன. டெக்னாலஜியை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் குற்றவாளிகள் தற்போது புதிதாக `சிம்-ஸ்வாப்' (SIM-SWAP) என்னும் முறையைக் கையாள்கின்றனர்.
ஹைதராபாத் சைபர் க்ரைம் காவல் நிலையம் சில நாள்களுக்கு முன்பு ஃபேஸ்புக் பதிவில் தகவல் ஒன்றை வெளியிட்டது. அதில் தற்போது சிம்-ஸ்வாப் என்ற புது வழியில் குற்றங்கள் நடைபெறுவதாகவும், அது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் உங்கள் வங்கிக் கணக்கு எண்ணைத் திருடிப் பண மோசடியிலும் அவர்கள் ஈடுபடுவதாக அதில் குறிப்பிட்டு அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு கூறியுள்ளனர்.


சிம்-ஸ்வாப் ' மூலம் மோசடி எவ்வாறு நிகழ்கிறது?
புதிதாக சிம் கார்டு ஒன்றை வாங்கி, ரேண்டமாக ஏதோ ஓர் எண்ணுக்குத் தொடர்பு கொள்ளும் குற்றவாளிகள், தங்களை வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியாக அறிமுகம் செய்துகொள்கின்றனர். அவ்வாறு தொடர்பு கொண்டு, ``தங்களின் மொபைல் எண்ணுக்கு 10 ஜிபி இன்டர்நெட் இலவசமாகக் கிடைத்திருக்கிறது. அதை ஆக்டிவேட் செய்ய வேண்டுமென்றால் அவர்கள் சொல்லும் 16 இலக்கு எண்ணை 121 என்ற வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுக்குக் குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால் இலவச இன்டர்நெட் பேக் ஆக்டிவேட் செய்யப்படும்" என்று கூறித் தொடர்பைத் துண்டிக்கின்றனர். அவர்களால் புதியதாக வாங்கப்பட்ட சிம் கார்டில் இருக்கும் எண்ணைத்தான் அவர்கள் 16 இலக்கு எண்ணாக நம்மிடம் சொல்வார்கள்.
அதாவது நமது மொபைல் எண்ணை 3ஜி வசதியிலிருந்து 4ஜி வசதிக்கு மாற்றுவதற்கு இந்த முறையைத்தான் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செய்கின்றன. உங்கள் கையில் ஒரு வெற்று சிம்கார்டைக் கொடுத்துவிடுவார்கள். உங்களிடம் கொடுக்கப்பட்ட புதிய சிம் கார்டின் 16 இலக்கு எண்ணை 121 என்ற எண்ணுக்கு உங்கள் மொபைலிலிருந்து குறுஞ்செய்தியாக அனுப்பிய பிறகு சில நேரத்தில் உங்கள் பழைய சிம் கார்டு செயலிழந்துவிடும். பிறகு உங்கள் கையில் கொடுக்கப்பட்ட புதிய சிம்கார்டை மொபைலில் போட்டுப் பயன்படுத்தலாம். அது 4ஜி வசதிக்கு மாற்றப்பட்டிருக்கும்.
அவ்வாறு ஒரு சிம்கார்டை வாங்கிக் கொள்ளும் இந்த நூதனத் திருடர்கள், ரேண்டமாக ஏதோ ஓர் எண்ணை, (உங்கள் எண் என வைத்துக் கொள்வோம்) அழைத்து இலவச இன்டெர்நெட் இருப்பதாக ஆசை காட்டுகின்றனர். உங்களை அதற்கான குறுஞ்செய்தி அனுப்ப வைப்பதன் மூலம் உங்கள் எண் அவர்கள் கைக்கு மாறிவிடுகிறது. அந்த மொபைல் எண்ணில் நீங்கள் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகளுக்கான செயலிகள் (Apps) மீண்டும் வேறு மொபைலில் பதிவிறக்கப்படும்போது உங்கள் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டு (OTP) கூட அவர்களுக்கே செல்வதால் உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தைச் சுலபமாகத் திருடிவிட முடியும்.
கொஞ்ச நேரம் ரீசார்ஜ் கடையில் நின்றால் போதும். ஒவ்வொரு நெட்வொர்க்குக்கும் குறைந்தது 5 எண்கள் நம் காதில் விழுந்துவிடும். அதைக் குறிப்பெடுத்துக்கொள்கிறார்கள். அந்த எண் ஏர்டெல்லா, வோடோஃபோனா என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்கிறார்கள். புது சிம் ஆக்டிவேட் ஆனதும் பேடிஎம் போன்ற பணப்பரிமாற்ற ஆப்களை அவர்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். ஓ.டி.பி மூலம் அதுவும் ஆக்டிவேட் ஆகிவிடும். அதன்பின் நம் பணமும் களவுபோகும். அதோடு பாதிக்கப்பட்டவரின் மொபைல் நம்பரை வைத்துப் பல குற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளன. 
இந்த மாதிரியான ஒரு குற்றவாளியிடம் சிக்கிய மும்பையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தன் வங்கிக் கணக்கில் இருந்த 24,000 ரூபாயை இழந்துள்ளார். மேலும் இந்த ஆண்டில் இதுவரை 20,300 க்கும் மேற்பட்ட சிம்-ஸ்வாப் வழக்குகள் இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிலையில், ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு தகவல்களைக் கேட்டோம். அதற்குப் பதிலளித்த அவர்கள், ``எப்போதும் எங்கள் மையத்திலிருந்து எக்காரணம் கொண்டும் தங்களுக்கு இவ்வாறு 16 இலக்கு எண்களைக் கொடுத்து அனுப்பச் சொல்ல மாட்டோம். மேலும் தங்களுக்கு வரும் OTP எண்கள் எதையும் அனுப்புமாறும் நாங்கள் கேட்க மாட்டோம். எனவே, அவ்வாறு குறுஞ்செய்தியோ அல்லது அழைப்போ வந்தால் அதற்குப் பதில் அளிக்காமல் எங்களிடம் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்றனர்.
இதே போன்ற தொழில்நுட்பக் குற்றங்கள் பல நிகழ்ந்து வருவதால், தங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் இலவச இன்டர்நெட் பேக், புதிய பிரத்யேக ஆஃபர் என்ற செய்திகளையும் அழைப்புகளையும் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துத் தொடர்ந்தால் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்கலாம்.

ஆதாரம் விகடன்

மக்கள் போராட்டத்திற்கு வெற்றி: ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. மக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். சென்ற செவ்வாய் கிழமை போராட்டம் செய்த அப்பாவி மக்கள் மீது போலீஸ் மூர்க்கமாக துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியது. இந்த மோசமான தாக்குதல் காரணமாக 13 பேர் மரணம் அடைந்துள்ளனர்.




பலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் திடீர் திருப்பமாக தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. இந்த அரசாணை வெளியிட்ட காரணத்தால் இன்றுடன் ஸ்டெர்லைட் மொத்தமாக மூடப்படுகிறது. இது மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. போராட்டகாரர்கள் தமிழக மக்கள் எல்லோரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

அரசாணையை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்க கலெக்டர் முடிவெடுத்துள்ளார். தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆலையை நோக்கி சீல் வைக்க சென்று கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கவிதைகள் தினகரன்பொன்கதிர்__3

கன்னி மலர்கள்
பார்வை அழைக்கும்!
காளையர்களை
காதல் வலைக்கும்!

#தினகரன்பொன்கதிர்

கவிதைகள் தினகரன்பொன்கதிர்__2

பணிவு என்பது அவமானமல்ல!
அது வயது சார்ந்தோ!
அது தகுதி சார்ந்தோ!
இருக்க வேண்டியதில்லை!
பணியாத எதுவும் வளர்ந்ததில்லை!
பணிவு கொள் கற்றுக்கொள்ள!

#தினகரன்பொன்கதிர்

கவிதைகள் தினகரன்பொன்கதிர்__1

உன்னப் போல யாருமில்ல!
முன்னப் போல நீயில்லை!
இப்படித் தான்
தொடங்கி முடிகிறது!
எல்லா உறவுகளுமே!

#எந்தமனிதனுக்கும்
#தினகரன்பொன்கதிர்


புதிய நவீன வசதிகளுடன் கூடிய உலக தரத்தில் ஒரு மேம்பாலம்

புதிய நவீன வசதிகளுடன் கூடிய மேம்பாலம் மேலும் தகவலுக்கு....

கோடையில் நாவில் தோன்றும் கொப்பளங்களை குணமாக்கும் மணத்தக்காளி கீரை

சுக்குட்டிக் கீரை என்றும் அழைக்கப்படும் இந்தக் கீரை, அதிக மருத்துவக்குணம் வாய்ந்தது. குரல் வளத்துக்கு ஏற்றது. அடிக்கடி தொண்டை கட்டிக்கொள்ளும் பிரச்னை இருப்பவர்கள் இதை அதிகமாகச் சாப்பிடலாம். இதன் இலை, காய், பழம் என மூன்றையுமே சமையலில் பயன்படுத்தலாம்



வெப்ப காலத்தில் உடல் வெப்பத்தைத் தணிக்க பெரும்பாலும் சமையல் செய்து உண்பார்கள். கோடைச் சூட்டிற்கு நாவில் தோன்றும் கொப்பளங்களைப் போக்க இதன் இலையை சிறிது தண்ணீர் விட்டு அவித்துக் குடிப்பது மிகுந்த பலனைத் தரும். சம்பல் செய்து சாப்பிடுவதும் சிறந்தது. குடல் புண்ணுக்கும் சுகம் தரும்.

மூல நோய்க்கும் சிறந்தது. கண் பார்வைக்கும் பல் உறுதிக்கும் வேண்டிய வைட்டமின் ஏ, பீ, இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன.

சத்துக்கள்: வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், மாவுச்சத்து, புரதம், பாஸ்பரஸ் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் உள்ளன. கொழுப்புச் சத்து மிகுந்த அளவில் உள்ளது.

பலன்கள்: வாய்ப்புண், வயிற்றுப்புண்ணைக் குணமாக்கும். அல்சருக்கு அற்புத மருந்தாகச் செயல்படுகிறது. களைப்பு, சோர்வு நீங்கும். தூக்கம் இன்றி தவிப்பவர்களுக்கு அருமருந்து. கல்லீரலுக்கு மிகவும் நல்லது. மலச்சிக்கல் நீங்கும். தொண்டைக் கரகரப்பு சரியாகும். உடல் வெப்பம் தணியும்.

இதில் ஆன்டிஆக்சிடன்ட் அதிகமாக உள்ளது. கருப்பை குறைபாட்டை நீக்கும். டிப்ஸ்: கீரைச் சாறுடன் 10 மி.லி முட்டைகோஸ் சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட வாய்ப்புண் இடம் தெரியாமல் மறையும். வாரம் ஒருமுறை மணத்தக்காளி வத்தல் குழம்பு செய்து சாப்பிடலாம். வயிற்றிலிருக்கும் பூச்சிகளை அகற்றும்.

குழந்தைக்கு சளி பிரச்சனை இருந்தால் என்ன செய்வது

மழை மற்றும் குளிர் காலங்களில்  வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும். இதனால் சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சு விட முடியாமல் குழந்தைகள் திணறுவார்கள். இரவு முழுவதும் தூக்கமின்றி தவிப்பார்கள் சாப்பிட சிரமப்படுவார்கள். அப்படி சாப்பிட்டாலும் உடனே வாந்தி எடுத்து விடுவார்கள். சில சமயங்களில் சாய்ச்சல் கூட வரும். மலம் வெளியேற சிரமப்படுவார்கள். அதனால் சிறு குழந்தைகள் சொல்ல தெரியாமல் அழுவார்கள்.



பொதுவாக குழந்தைகளை இந்த காலகட்டத்தில் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு சளி கட்டி அவதிப்பட்டால் வீட்டில் இருக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை நறுக்குமூலம், இவற்றை சம அளவு எடுத்து இடித்து பொடியாக்கி வைத்துக் கொண்டு 1/2 ஸ்பூன் எடுத்து தேனில் குழைத்து கொடுத்தால் மார்பில் கட்டியிருக்கும் சளி நீங்கிவிடும். இவ்வாறு சளி பிரச்சனையால் அவதிபடுபவர்களுக்கு வயதுக்கு தகுந்தாற்போல மருந்தினை எடுத்துக்கொள்ளலாம்.

தூதுவளை, கண்டங்கத்திரி, ஆடாதோடா, துளசி இவற்றின் இலைகளை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து 1ஸ்பூன் அளவு எடுத்து தேனிலோ அல்லது வெந்நீரீலோ கலந்து கொடுத்து வந்தால் ஆஸ்துமா, நெஞ்சு சளி, கபக்கட்டு போன்றவை குணமாகும். துளசி இலைகளை பறித்து நசுக்கி அப்படியே சாறு எடுத்து மருந்துக்கு கொடுப்பார்கள். இப்படி செய்வது தவறு. ஏனெனில் துளசி இலையில் உள்ள மெல்லிய சுனைகள் குழந்தைகளுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
சளி தொல்லை ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம்
மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் குழந்தைகளை வெளியே அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே அழைத்து செல்ல நேர்ந்தாலும் தகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டும். சிறு குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டால் துணியை உடனே மாற்றிவிட வேண்டும். ஈரப்பதம் மிகுந்த இடத்தில் குழந்தைகளை தூங்கவைக்ககூடாது. குளிர் காலங்களில் ஈரக்காற்று படாதவாறு குழந்தைகளை கம்பளியால் சுற்றி குழந்தைகளின் உடலையும், காதுகளையும் மூடவேண்டும்.

குளிர் காலத்தில் நன்கு கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை குடிக்கவும். எளிதில் சீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குளிரூட்டப்பட்ட மற்றும் பதப்படுத்தபட்ட உணவுகளை குழந்தைகளை தருவதை தவிர்க்க வேண்டும். பாலூட்டும் தாய்மார்கள் முதலில் தங்களுக்கு சளித்தொல்லை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் தாய்க்கு சளி பிரச்சனை இருந்தால் பாலூட்டுவதால் குழந்தைகளுக்கும் சளி பிடித்துவிடும். எனவே தலைகுளித்தால் நன்கு தலையை துவட்டி பிறகே பால் கொடுக்க வேண்டும்.

அதே போல் மலச்சிக்கலுடன் குழந்தைகளுக்கு பால் கொடுத்தால் குழந்தைகளுக்கும் வயிற்று தொந்தரவுகள் உண்டாகும். எனவே பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மழச்சிக்கலைத் தவிர்க்க பழங்கள், காய்கள், கீரைகள், மற்றும் நார்சத்து மிகுந்ந உணவுகளை சாப்பிடவேண்டும். குழந்தைகள் இருக்கும் இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்

Sunday, 27 May 2018

தமிழக வருமான வரித் துறையில் வேலை

Organization Name: Office of the Principal Chief Commissioner of Income-Tax, Tamilnadu
Employment Category: Central Govt Jobs
Total No. of Vacancies: 32 (Sports Persons)
Job Location: Chennai (Tamil Nadu)

Name of the Post & No of Vacancies:
Income Tax Department Tamilnadu Invites Applications for the Following Posts
1. Inspector of Income-tax - 07
2. Tax Assistant - 11
3. Multi-Tasking Staff - 14

Educational Qualification:
1. Inspector of Income-tax - Minimum of a Bachelor’s Degree from a recognized University or its equivalent
2. Tax Assistant - Minimum of a Bachelor’s Degree from a recognized University or its equivalent
3. Multi-Tasking Staff - Minimum of a pass in Matriculation or its equivalent.

Sports Eligibility:
The proficiency will be evaluated on the basis of their participation in recognized tournaments / events in the calendar years 2018, 2017, 2016 & 2015. The tournaments/ events will be evaluated in the following descending order of importance.
i) International Tournaments/Events like Olympics & World Championship.
ii) International Tournaments/Events of regional importance like Asian Games/ Commonwealth Games / Afro Asian Games.
iii) Other International Tournaments / Events like SAF Games.
iv) Domestic Tournaments / Events of National level of seniors like National Games, National Federation Games etc.
v) Domestic Tournaments / Events of National level of Juniors
vi) Inter University Tournaments vii) National School Games
viii) National physical efficiency /drive certificate holders.
The best of three performances in the calendar years 2018, 2017, 2016 and 2015 will be considered for evaluation. These should be properly filled up in the application.
List Of Games/ Sports For Which Recruitment Is Being Made

S. No
Game\Sports
No. of Vacancies
Event\Position
1
Athletics (Men) (Track & Field)
03
100m, 200m, 400m, 400m hurdles, 800m, 1500m, Shot-put, Discus Throw, Triple Jump
2
Athletics (Women) (Track & Field)
03
100m, 200m, 400m, 100m hurdles, 800m, 1500m, Shot-put, Discus Throw, Long Jump
3
Basketball (Men)
03
Center - 1, Power forward / Pivot - 1, Shooting Guard - 1
4
Carrom (Men)
01

5
Cricket (Men)
02
Wicket Keeper-cum-Batsman - 1, All-rounder - 1
6
Football (Men)
04
Goal Keeper - 1, Defender (Wing back) - 1, Mid-fielder - 1, Striker - 1
7
Hockey (Men)
06
Full back - 1, Half Line - 3, Forward - 2
8
Kabaddi (Men)
04
Right Cover - 1, Left Cover - 1, Rider - 2
9
Shuttle Badminton (Men)
01

10
Shuttle Badminton (Women)
01

11
Volleyball
04
Blocker - 2, Attacker - 1, Universal (All rounder) - 1

Age Limit: (As on 01.04.2018)
Minimum 18 years and maximum 25 years as on 01.04.2018 Accordingly, persons must have been born not earlier than 01.04.1993 and not later than 31.03.2000 can apply. The Upper age limit is relaxed up to a maximum of 5 years for OBC candidates & 10 years in the case of SC/ST candidates

Pay Scale:
1. Inspector of Income-tax - Rs. 9300-34800 + Grade pay 4600 (PB-2)       
2. Tax Assistant - Rs. 5200-20200 + Grade pay 2400 (PB-1)  
3. Multi-Tasking Staff - Rs. 5200-20200 + Grade pay 2400 (PB-1)   

Candidates will be selected based on Short Listing, Sports Trail & Interview

Candidates satisfying the above eligibility conditions Use Following Procedure Given Below to Apply Online:
1. Log on to Income Tax Department Tamilnadu Careers Page at official website to www.tnincometax.gov.in
2. Eligible candidates are advised to open Notification
3. Read the Advertisement carefully to be sure about your eligibility
4. Click on the link New Registration
5. Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
6. Ensure the information provided is correct
7. Submit the application &
8. Take a print out of Income Tax Department Tamilnadu Recruitment 2018 online application form.

Important Dates for Income Tax Department Tamilnadu Inspector of Income-tax, Tax Assistant,  MTS Post: 
1. Starting Date for Submission of Application: 19.05.2018
2. Last date for Submission of Application: 11.06.2018

Income Tax Department Tamilnadu Online Application & Official Notification Links:
Income Tax Department Tamilnadu Official Website Career Page: Click Here
Income Tax Department Tamilnadu Official Notification PDF: Click Here to Download
Income Tax Department Tamilnadu Online Application Form: Click Here to Apply

வேலை வாய்ப்பு - ஸ்பின்னிங் மில்ஸ்

 

 

 



எத்தியோபிய பயிர்; சாதிக்கும் மைசூர் விவசாயிகள்: தமிழகத்தில் சாகுபடி செய்ய வாய்ப்பு

இந்தியாவில் சமீபகாலமாக பல வெளிநாட்டு தானியங்கள் பிரபலமடைந்து வருகின்றன. கீன்வா (quinoa) மற்றும் சியா (chia) ஆகிய இந்த தானிய வகை தாவரங்கள், கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் (சிஎஃப்டிஆர்ஐ) முயற்சியால் இந்தியாவில் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வழக்கமான பயிர்களைச் சாகுபடி செய்வதிலிருந்து மாற்று சாகுபடி பயிர்களை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும் என்ற அடிப்படையில் இந்தத் தானியச் சாகுபடிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
     இதன் தொடர்ச்சியாக ஆப்ரிக்க நாடான எத்தியோபியாவை தாயகமாக கொண்ட டெஃப் என்ற புதிய தானியம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளை மத்திய அரசு நிறுவனமான அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்டு வருகிறது.

இதன் சிறப்பு திட்ட இயக்குநராக பணியாற்றி வரும், ராம் ராஜசேகரன், இந்தியாவில் மாற்றுப் பயிர் சாகுபடியை முன்னெடுத்துச் செல்லுகிறார். இந்த புதிய தானியம் குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்ட தகவல்கள்:
இந்தியாவில் ஒருபுறம் தண்ணீர் பற்றக்குறையால் சாகுபடி குறைந்து வருகிறது. இதனால் குறைவான தண்ணீரில் அதிக மகசூல் தரக்கூடிய தானியங்களை பயிர் செய்ய வேண்டிய தேவை உள்ளது. எனவே மாற்றுப்பயிர் சாகுபடி குறித்து தீவிரமாக ஆலோசனை செய்தோம். சிஎஃப்டிஆர்ஐ இயக்குனராக நான் இருந்தபோதே இதன் அடிப்படையில் கீன்வா, சியா என புதிய பயிர்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
கீன்வா, சியா விதைகள் அதிக ஊட்டச்சத்து கொண்ட தானியங்கள். இரு தானியங்களும் ‘சூப்பர் உணவு’ எனக் கருதப்படுகின்றன. இதில் கீன்வா தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டது. அங்கிருந்து, ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியா, அமெரிக்காவுக்குப் பரவியது.
சியா தானியம் மெக்ஸிகோ, தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டது. இதில், நார்ச்சத்து 40 சதவீதத்துக்கும் அதிகம்.
இந்த தானிய விதைகளை இந்திய சூழலுக்கு ஏற்ப மேம்படுத்தி, கர்நாடக மாநில மைசூர் விவசாயிகளுக்கு கொடுத்தோம். அவர்கள் இதனை வெற்றிகரமாக பயிர் செய்து, இன்று முன்மாதிரி விவசாயிகளாக உள்ளனர். அந்த விவசாயிகள் இணைந்து உருவாக்கிய விவசாயிகள் உற்பத்தி நிறுவனம் இந்த தானியங்களை சரியான முறையில் விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டி வருகின்றன.
அதிக சக்தி தரும் தானியம்
இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய சூழலுக்கு ஏற்ற மேலும் ஒரு வெளிநாட்டு தானியத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளோம். டெஃப் (Teff) என்ற இந்த தானியம் எத்தியோபியாவை தாயகமாக கொண்டது. இதுவும் ‘சூப்பர் உணவு’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்ரிக்காவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு அதிக சக்தி தரக்கூடியதாக இந்த தானியம் விளங்குகிறது. நமது ஊரில் பயிரிப்பட்டும் கேழ்வரகு போன்ற இந்த தானியம் தற்போது உலக அளவில் பிரபலமடைந்து வருகிறது.
பொதவாக, நாம் சாப்பிடும் உணவு இரண்டு மணிநேரத்தில் ஜீரணமாகி அது, ரத்தத்தில் சேர்ந்து சக்தியை அளிக்கிறது. ஆனால் இந்த டெஎஃப் தானியம், சிறிது சிறிதாக ஜீரணமாகி, கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் கலந்து சக்தியை தருகிறது. இதனால் இந்த தானியத்தை சாப்பிடுவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அதே சமயம் நீண்ட நேரம் சக்தி கிடைக்கிறது.
எனவே பல கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொள்ளும் ஆப்ரிக்க வீரர்களுக்கு, இந்த தானியத்தை சாப்பிடுவதன் மூலம் நீண்ட நேரத்திற்கு அதிக சக்தி கிடைக்கிறது. டெஎஃப் தானியத்தின் சிறப்பை உணர்ந்து, பல நாடுகளில் விளையாட்டு வீரர்களுக்கு இதனை உணவாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.
வறட்சியை தாங்கும் பயிர்
டெஎஃப் இந்திய சூழலுக்கு மிகவும் ஏற்றப் பயிராகும். ஏனெனில் எத்தியோபியாவை ஒட்டிய காலநிலையே, இந்தியாவில் நிலவுவதால் இங்கு எளிதில் பயிர் செய்ய முடியும். இந்த பயிரை சாகுபடி செய்ய குறைவான தண்ணீர் போதும். கேழ்வரகு சாகுபடி செய்வதற்கு ஆகும் தண்ணீர் செலவை விடவும் குறைவான தண்ணீரில் இதனை சாகுபடி செய்யலாம். தமிழகத்தில் ராமநாதபுரம் போன்ற அதிகவெப்பம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதிகளில் கூட பயிரிட முடியும்.
சாகுபடி முறை
டெஃப் தானியம் மிகவும் சிறிதாக இருக்கும். என்பதால் மணலுடன் சேர்ந்து மண்ணில் தூவி விதைக்கலாம். ஒரு ஏக்கருக்கு 100 கிராம் விதைகள் இருந்தால் போதுமானது.
நெல்லை நாற்றாக பாவி, பின்னர் பிடுங்கி நடுவது போலவும் நடவு செய்யலாம். விதைக்கும்போது மழை இருக்கக்கூடாது; தண்ணீர் அதிகமாக இருந்தால் விதை மிதக்கத் தொடங்கி விடும். எனவே விதைக்கும்போது கவனத்துடன் விதைக்க வேண்டும். தண்ணீர் குறைவாக பாய்ச்சினால் போதுமானது. பெரிய அளவிற்கு பூச்சித் தாக்குதல், நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பில்லை.
இதுவே இந்த தானியத்தின் சிறப்பாகும். அருகில் வேறு தானியம் சாகுபடி செய்யப்பட்டால் அதில் இருந்து பூச்சிகள் வர வாய்ப்புள்ளது. அவ்வாறு பூச்சிகள் தென்பட்டால், வேப்ப எண்ணெய், சோப்பு நீர் கலந்து தெளித்தால் போதும். பூச்சிக் கொல்லி மருந்துகள் எதுவும் தேவைப்படாது.
110 நாட்களில் வளர்ந்து அறுவடைக்கு தயாராகி விடும். அதிக நாட்கள் விட்டுவிட்டால் முற்று விதையாகி விடும். எனவே சரியான பருவத்தில் அறுவை செய்வது மிகவும் அவசியம். ஏக்கருக்கு சராசரியாக 300 கிலோ வரை மகசூல் கிடைக்கும். இதன் பிறகு உணவுக்கு பயன்படுத்தலாம்.
ஆரோக்கியமான உணவு
டெஃப் மிகவும் ஆரோக்கியமான தானியம். அரிசி மற்றும் கோதுமை ஆகிய இரண்டின் அம்சங்களும் இதில் உள்ளன. குளூட்டன் போன்ற பாதிப்பு இல்லாத அதிகமான புரோட்டின் இதில் உள்ளது. அதிக புரோட்டின் இருப்பதே இதன் சிறப்பாகும். இதுமட்டுமின்றி அதிகமான அளவு இந்த தானியத்தை ‘புராசஸ்’ செய்ய வேண்டிய தேவையில்லை. உமி மிகவும் மெலிதானதாக இருப்பதால் அவற்றை அகற்ற வேண்டிய தேவையில்லை. அப்படியே பயன்படுத்த முடியும்.
இந்த பயிரில் இருந்து கிடைக்கும் வைக்கோல், புல் போன்றே இருக்கும். கால்நடைகள் விரும்பி சாப்பிடும். எனவே இதை சிறந்த மாட்டுத்தீவனமாக பயன்படுத்த முடியும்.
டெஃப் தானியத்தை அரைத்து தோசை போன்ற உணவுகளை தயாரித்து சப்பிடலாம். அதுபோலவே பிரட்டும் தயாரிக்கலாம். நீண்ட நேரத்திற்கு சக்தி தரக்கூடிய இந்த தானியம் அனைவருக்கும் ஏற்றது. புரோட்டீன் குறைபாட்டிற்காக தற்போது மக்கள் தனியாக புரோட்டீன் பவுடர்களை வாங்கி சாப்பிலும் நிலையில் உள்ளனர். இயற்கையாக அதிக புரோட்டீன் கொண்ட டெஎஃப் அதற்கு மாற்றாக உள்ளது.
விற்பனை வாய்ப்பு
டெஃப் தானியத்திற்கு உலகம் முழுவதும் அதிக வரவேற்பு உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் கிலோ ரூ. 900 என்ற விலையில் விற்பனை செய்ய முடியும். அதிக தேவை இருப்பதால் விற்பனை செய்வதில் சிக்கல் இல்லை. நாங்கள் முன்பு அறிமுகம் செய்த வெளிநாட்டு தானியங்களான கீன்வா மற்றும் சியா தானியங்களை பயிரிடும் மைசூர் விவசாயிகள் உற்பத்தி நிறுவனம் தொடங்கி ஏற்றுமதி செய்வது போல தமிழகத்திலும் விவசாயிகள் செய்யலாம்.
தமிழக விவசாயிகள்
தமிழகத்திற்கு ஏற்ற பயிர் என்பதால் இதை தமிழக விவசாயிகள் தராளமாக பயிர் செய்யலாம். தங்கள் ஏற்கெனவே பயிரிட்டுள்ள பயிர்களுடன் சேர்ந்து, சோதனை அடிப்படையில் இதையும் குறைந்த அளவு சாகுபடி செய்து பார்க்கலாம். அறுவை செய்த தானியங்களையே பின்னர் விதைகளாக பயன்படுத்தி மீண்டும் பயிர் செய்யலாம். பல விவசாயிகள் ஒன்றிணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டால், அறுவடையின் முடிவில் அவர்களுக்கு கிடைக்கும் தானியங்களை ஒன்றாக விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபம் ஈட்ட முடியும்.
இவ்வாறு அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் சிறப்பு திட்ட இயக்குநர் ராம் ராஜசேகரன் தெரிவித்தார்.
விவசாயிகள் டெஃப் விதைகளை இலவசமாக பெற: 099860 35285 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...