சென்னை: ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. மக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். சென்ற செவ்வாய் கிழமை போராட்டம் செய்த அப்பாவி மக்கள் மீது போலீஸ் மூர்க்கமாக துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியது. இந்த மோசமான தாக்குதல் காரணமாக 13 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
பலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் திடீர் திருப்பமாக தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. இந்த அரசாணை வெளியிட்ட காரணத்தால் இன்றுடன் ஸ்டெர்லைட் மொத்தமாக மூடப்படுகிறது. இது மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. போராட்டகாரர்கள் தமிழக மக்கள் எல்லோரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
அரசாணையை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்க கலெக்டர் முடிவெடுத்துள்ளார். தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆலையை நோக்கி சீல் வைக்க சென்று கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment