Thursday, 16 August 2018

தவிக்கும் கேரளா: நூற்றாண்டில் இல்லாத மழை; ஒரே நாளில் 25 பேர் பலி- மின் இணைப்பு துண்டிப்பு

கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டித்தீர்த்து வரும் கனமழை, நிலச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 25 பேர் பலியாகியுள்ளனர். பல பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெரும் துயரத்துக்கு கேரள மாநிலம் ஆளாகியுள்ளது.
கேரளாவில் நூற்றாண்டில் இல்லாத அளவு மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 25 பேர் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடு, உடைமைகளை இழந்து அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடர்மழையால், மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பித் திறக்கப்பட்டுள்ளன. அனைத்து ஆறுகளிலும் வெள்ள நீர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி பாய்ந்து செல்கிறது.

மாநிலத்தில் மீட்புப்பணியில் ராணுவத்தினர், பேரிடர் மீட்புக்குழுவினர், போலீஸார், தீயணைப்பு படையினர் எனப்பலரும் ஈடுபட்டு வருகின்றனர். பலத்த மழை காரணமாக கொச்சி விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. அங்கு வர வேண்டிய விமானங்கள் அனைத்தும் திருவனந்தபுரத்துக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் - திருவனந்தபுரம் மார்க்கம் உட்பட பல பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதுபோலவே மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. சுமார் 4 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இடுக்கி உட்பட 35 அணைகளும் நிரம்பி வழிவதால் அவை திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. எர்ணாகுளம் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே ஆழப்புழா மாவட்டம் குட்டநாடு பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், கேரளாவில் அடுத்த 24 மணிநேரத்துக்கு மிக மிகக் கனமழை இருக்கும் என்றும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...