கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த மே மாத இறுதியில் தொடங்கிய தென் மேற்கு பருவமழை ஜூலை வரை நீடித்தது. இதனால், காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய 4 அணைகளும் ஜூலை மாதமே நிரம்பியது. இதை யடுத்து, தமிழகத்துக்கு அதிகள வில் நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை கடந்த மாதம் நிரம்பியது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ததால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல், கேரள மாநிலம் வயநாட்டில் இரவு பகலாக பலத்த மழை பெய்து வருவதால் கபினி ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்திருப்பதால், நிகழாண்டில் 2-ம் முறையாக இரு அணைகளும் நிரம்பின.
நிகழாண்டில், காவிரியில் தமிழகத்துக்கு அதிகப்பட்சமாக விநாடிக்கு 1.75 லட்சம் கன அடி அளவுக்கு நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை இடை விடாமல் பெய்து வருகிறது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 122.43 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரத்து 896 கனஅடி நீர் வந்துக் கொண்டிருப்பதால், அணையில் இருந்து விநாடிக்கு 1 லட்சத்து 37 ஆயிரத்து 579 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
மைசூரு மாவட்டத்தில் கபினி அணையின் நீர்மட்டம் 2279.22 அடியாக உள்ளது. கேரளாவில் தொடரும் கனமழையால் கபினி அணைக்கு விநாடிக்கு 60 ஆயிரத்து 6180 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 62 ஆயிரத்து 542 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இரு அணைகளில் இருந்தும் விநாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் 5 ஆண்டுகளுக்கு பிறகு காவிரியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது. இதனால் நஞ்சன்கூடு, சங்கமம், கனகபுரா உள்ளிட்ட இடங்களில் காவிரி கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் மிதக் கின்றன. மைசூரு - நஞ்சன்கூடு, கனகபுரா - மேக்கேதாட்டு இடையே போக்குவரத்து முடங்கியுள்ளது.
காவிரியில் தமிழகத்தை நோக்கி வெள்ளம் பாய்வதால், ஒகேனேக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே, கரை யோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment