Tuesday, 10 July 2018

டயர்களை மாற்றியே ஆக வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கான சில வழிகள்

கார் 35,000 கிமீ தூரம் ஓடிய பிறகு நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் காரின் டயர்கள். இது சற்று அதிக செலவு வைக்கும் விஷயம் என்பதால், பலர் அக்கறை காட்ட தவறுகின்றனர். இது அவர்களின் உயிருக்கும், குடும்பத்தாரின் உயிருக்கும் உலை வைத்துவிடும் விஷயமாகிவிடுகிறது.
ஓட்டுபவர் பிரேக் பிடிக்கும் முறை மற்றும் சாலை நிலையை பொறுத்து 35,000 கிமீ முதல் 40,000 கிமீ தூரத்திற்குள் காரின் டயர்களை மாற்றுவதற்கான அவசியம் ஏற்படும்.
பொதுவாக, பார்த்தவுடனே சிலர் காரின் டயர் தேய்மானத்தை கண்டறிந்து விட முடியும். ஆனால், புதிய கார்களில் சிலவேளை, பட்டன்கள் அதிகம் தேய்ந்து போயிருக்காது. ஆனால், கைகளை வைத்து தேய்க்கும்போது தோசைக்கல் போல வழுவழுப்பாக இருக்கும். 
இதுபோன்ற டயர்களை வைத்து ஓட்டும்போது விபத்து அபாயம் அதிகம் ஏற்படும் என்பது தெரிந்த ஒன்றுதான். பிரேக் பிடிக்கும்போது டயர்களுக்கும் சாலைக்கும் சரியான பிடிப்பு இல்லாமல் வழுக்கிக் கொண்டு சென்று விபத்தில் சிக்கிவிடும்.
வேகமாக செல்லும்போது பிரேக் பிடிக்கும்போது கார் நிற்கும் தூரமானது 20 மீட்டர் வரை அதிகமாகும். இதனால், வேகத்தில் செல்லும்போது நிச்சயம் விபத்தில் சிக்கும் வாய்ப்பை கொடுத்துவிடும்.
அதுமட்டுமல்ல, காரின் பட்டன்கள் அதிக தரைப்பிடிப்பை வழங்குவதோடு, டயர் இடுக்கில் காற்றோட்டதையும் வழங்குகிறது. இதனால், டயர்கள் வெப்பமடைவது குறைக்கப்படும். ஆனால், தோசைக்கல் டயர்களில் பட்டன்கள் இடைவெளி இல்லாமல் காற்றோட்டம் இல்லாமல் சீக்கிரமாக சூடாகி வெடிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தும்.
பொதுவாக, டயர்களில் பட்டன்கள் 1.5 மிமீ இருக்கும்போதே டயர் மாற்றிவிடுவது பாதுகாப்பான பயணத்தை அளிக்கும். மழை காலம் துவங்கி இருக்கும் இவ்வேளையில், 1.5 மிமீ அளவுக்கு குறைவான பட்டன்கள் கொண்ட டயர்கள் போதிய பிடிப்பை அளிக்காது.

No comments:

Post a Comment

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...