கடந்த நான்கரை ஆண்டுகளில் முதன் முறையாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதன்படி, கடனுக்கான அடிப்படை வட்டி விகிதமான ரெபோ அளவு 6 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மற்ற வர்த்தக வங்கிகளும் வீடு, வாகனம் உள்ளிட்ட அனைத்துக் கடனுக்கான வட்டி விகிதங்களை உயர்த்த வாய்ப்புள்ளது.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மற்றும் பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழு ஜூன் 3-ம் தேதி கூடியது. ஆறு உறுப்பினர்கள் அடங்கிய நிதிக்கொள்கை குழுவின் மூன்று நாள் கூட்டம் இன்று முடிவடைந்தது.
ஏழு காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிடிபி வளர்ச்சி உயர்ந்திருப்பது மற்றும் இயல்பான பருவமழை இருக்கும் என்னும் கணிப்பு காரணமாக வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகின.
இதனை முன்கூட்டியே அறிவிக்கும் விதமாக, எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட வங்கிகள் ஜூன் 1-ம் தேதி முதல் கடனுக்கான வட்டியை 0.10 சதவீதம் அளவுக்கு உயர்த்தின. சில வங்கிகள் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை கூட உயர்த்தி இருக்கின்றன.
இந்நிலையில் எதிர்பார்க்கப்பட்டது போலவே கடனுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 25 பைசா என்ற அளவில் உயர்த்தியுள்ளது. தற்போது ரெபோ விகிதம் 6 சதவீதமாக தற்போது, ரெபோ விகிதம் 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த நான்கரை ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை தொடர்ந்து குறைத்து வந்துள்ளது. முதன்முறையாக தற்போது வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற 4 ஆண்டுகளில் இதுவரை வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை. தொடர்ந்து குறைக்கப்பட்டே வந்தது. தற்போது தான் முதன்முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதால் மற்ற வர்த்தக வங்கிகளும் வட்டியை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வீடு, வாகனம் உள்ளிட்ட அனைத்து வகையான கடனுக்கான வட்டி விகிதங்கள் உயரக்கூடும் என தெரிகிறது.
No comments:
Post a Comment