ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களின் தகவல்களை ஆப்பிள், மைக்ரோசாப்ட், சாம்சங் உள்பட 60 நிறுவனங்களுக்கு பகிர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக தெரியவந்துள்ள தகவல்களில், பயனாளிகள், அவர்களது நண்பர்களின் தகவல்களை இந்த நிறுவனங் கள் தெரிந்து கொள்வதற்கான அனுமதியை ஃபேஸ்புக் அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பயனர்களின் தகவல்களை அமெரிக்க தேர்தலுக்கு பயன்படுத்தியது தொடர்பாக உருவான சிக்கல் ஓய்ந்துள்ள நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளது.
தகவல்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக 60 செல்போன் உற்பத்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. குறிப்பாக ஆப்பிள், அமேசான், பிளாக்பெரி, மைக்ரோசாப்ட், சாம்சங் நிறுவனங்களு டன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே தகவல்களை பகிர் ந்து கொண்டுள்ளது.
ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ் புக் செயலி பரவலாக கிடைக்கத் தொடங்குவதற்கு முன்பிருந்தே இந்த தகவல் பரிமாற்றம் நிகழ்ந்து வருவதாக நிறுவனத்தின் முக்கிய அதிகாரி கூறியதாக அந்த தகவல்களில் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்திக்கு ஃபேஸ்புக் மறுப்பு தெரிவித்துள் ளது.-பிடிஐ
From The Hindu
No comments:
Post a Comment