இன்னும் நான் கட்சியே தொடங்கவில்லை. அதற்குள் கூட்டணி குறித்தெல்லாம் பேசமுடியாது என்று ரஜினிகாந்த் மறைமுகமாக பதிலடி கொடுத்தார். நடிக்கும் வரை ரஜினியும் கமலும் நண்பர்களாக இருந்தனர். ஆனால் அரசியல் என்று வரும் போது இருவரும் மாறுபட்ட கருத்துகளுடன் காணப்படுகின்றனர். சிவாஜி கணேசன் மணி மண்டப விழாவில் கமலை ரஜினி வாரியதும், சமீபத்தில் ரஜினி இமயமலை செல்லும்போது காவிரி குறித்த கேள்வி அவர் பதில் அளிக்காததற்கு கமல் விமர்சனம் செய்தார்.
இந்நிலையில் அண்மையில் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கமல் கலந்து கொண்ட போது ரஜினியுடன் கூட்டணி வைப்பீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு கமல்ஹாசன் அவர் ஆன்மீக அரசியல் என்கிறார், சற்று பயமாக இருக்கிறது என்றார். இன்று சென்னை போயஸ் தோட்டத்தில் மகளிர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினியிடம் கமலின் கருத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அதற்குள் கூட்டணி குறித்து பேச முடியாது. வரும் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குள் கட்சியை கட்டமைத்து அனைத்திற்கும் தயாராக இருக்க விரும்புகிறோம். எங்கள் கட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார் ரஜினி.
From One India
No comments:
Post a Comment