1. இது ஒரு சிறந்த மழைநீர் சேகரிப்பு ஆகும் மழை பெய்கின்ற காலத்தில் அதனை சேமித்து நமது நிலத்தடி நீரை செறிவு ஊட்டலாம்.
2. மீன் வளர்ப்பின் மூலம் மூன்று மாதத்தில் பெரிய அளவில் செலவில்லாமல் வருமானம் ஈட்டலாம்.
3. ஆடு மாடு போன்ற பண்ணை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிக்கு நல்ல பயன்தரும்
4. மழைநீரால் மண் அரிமானம் அதிகமுள்ள இடத்தில் பண்ணை குட்டை அமைப்பதன் மூலம் ஓடுகின்ற நீரானது வேகம் குறைந்து நின்று செல்வதால் மண் அரிமானம் குறைந்து மண் அரிமானத்தை தடுக்கிறது .
5. மானாவாரி விவசாயிகளுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படும் பொழுது உயிர்நீர் ஆக பயன்படுகிறது .
வேளாண்மை பொறியியல் துறை மூலம் 100 சதவீத மானியத்தில் பண்ணை குட்டை அமைத்து தரப்படுகிறது வேளாண்மை பொறியியல் துறை மூலம் அமைத்து தரப்படும் பண்ணை குட்டையில் நீரானது 6 மீட்டர் நீளத்தில் ஒரு அடி விட்டம் கொண்ட சிமெண்ட் இன் ஆல் செய்யபட்ட குழாயின் மூலமாகவே நீரானது உட்செல்லும் ஆகவே மண் படிமானம் ஆனது பெரிய அளவில் குறைக்கப்படுகிறது அதேபோல் நீரானது நிரம்பி வெளியேறவும் 6 மீட்டர் நீளத்தில் சிமெண்ட் பைப் ஆனது வைக்கப்படுகிறது தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை பொறியில் துறையை அணுகவும்
No comments:
Post a Comment