தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை, அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம், இயற்கைச் சூழலை பாதிப்பதாக புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தொடர்ந்து 100 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த மக்களின் போராட்டத்தை கலைக்கும் வகையில் போலீஸார் தடியடி நடத்தினர். அதன்பிறகு போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் இறந்துள்ளனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் ஆதரவு இல்லாமல் எந்த திட்டத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்த முடியாது. எனவே, மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட இங்குள்ள தமிழக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். மேலும், கலவரத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு அவசர கால அடிப்படையில் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். ஸ்டெர் லைட் ஆலையை இழுத்து மூடுவதே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல தீர்வை ஏற்படுத்தும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை கையாள்வதில் அதிமுக தலைமையிலான அரசு தோல்வியடைந்துள்ளது. எனவே, இந்த ஆட்சி தொடர வேண்டுமா அல்லது கலைக்கப்பட வேண்டுமா என ஆளு நர் முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
ஆதாரம் the Hindu
ஆதாரம் the Hindu
No comments:
Post a Comment