Friday, 17 August 2018

5 மாவட்டங்களில் இன்றும் கனமழை நீடிக்கும்

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
கர்நாடகா, கேரளா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் மற்ற பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மிதமான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 31 செமீ, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 17 செமீ, தேனி மாவட்டம் பெரியார், நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் தலா 12 செமீ, கூடலூர் சந்தையில் 11 செமீ, நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் 9 செமீ, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 7 செமீ, நெல்லை மாவட்டம் பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய இடங்களில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...