Tuesday, 31 July 2018

கொட்டாவி குறித்து மன நல வல்லுநர்கள் சொல்லும் ஆச்சர்யத் தகவல்கள்

தூக்கம் வருவதைக் குறிப்பதற்குக் கொட்டாவி வருகின்றது எனப் பலர் கூறுவர். ஆனால் கொட்டாவி ஏற்படுவதற்கு வேறுசில காரணங்கள் உள் ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். சமூக, மனரீதியா ன காரணங்களை அவர்கள் குறிப்பிடுகின்றனர். காய்ச்சல், அசதி, மனவுளைச்சல், மருந்துகள் போன்ற வற்றையும் மன நல வல்லுநர்கள் சுட்டுகின்றனர்.
கொட்டாவி குறித்து அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்..!! (கொட்டாவியினால் பயன்கள்)
கொட்டாவி ( #Yawn or #Chasma ) விடுவதால் விழிப்புணர்வு அதிகரிக்கும். தசைகள் அசைவதால் தூக்கம் கலையக்கூட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கொட்டாவியினால் ஏற்படும் கண் அசைவு பார்வைத் திறனை அதிகரிக்கும். மூளையின் சூட்டைத் தணிக்கவும் கொட்டாவி விடுதல் உதவும்.
மூளையில் இறுக்கமான பகுதிகளைத் தளர்த்தவும் கை கொடுக்கும் என்று  மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன. நீண்ட பயணங்களின்போது ஏற்படும் கொட்டாவிகள் உடல் உளைச்சலைக் குறிக்கலாம்.
ஒருவர் கொட்டாவி விடுவதைப் பார்த்தால் பெரும்பாலும் இன்னொருவருக்கும் கொட்டாவி வரும். இதைப் படித்துப்பார்க்கும்போதே உங்களுக்குக் கொட்டாவி ஏற்பட்டிருக்கலாம்! 
=> கொடுங்கையூர் ரோகிணி

No comments:

Post a Comment

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...