Tuesday, 12 June 2018

தமிழகத்தில் உடல்உறுப்பு மாற்று சிகிச்சையில் பெரும் மோசடி: சுகாதார அமைச்சகம் குற்றச்சாட்டு

             டில்லி: தமிழகத்தில் உடல்உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பெரும் மோசடி நடைபெறுவதாக இந்திய சுகாதார அமைச்சகம் பகிர் தகவல்களை தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது, முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையம் உருவாக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது. இதில் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


   உடல்உறுப்பு அறுவை சிகிச்சையில் நமது நாட்டினரை புறந்தள்ளிவிட்டு, வெளிநாட்டினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

    உடல்உறுப்பு தானம் மற்றும் உடல்உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கென நெறிமுறைகள் உள்ளன. ஆனால், பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் அந்த நெறிமுறைகளை மீறி முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.

          உடல்உறுப்பு தானம் வேண்டுவோர் அதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்து காத்திருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான மருத்துவமனைகள் இந்தியர்கள் பதிவு செய்துள்ள நீண்ட பட்டியலைத் தவிர்த்து, சர்வதேச நோயாளிகளுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். இந்த முறைகேடுகளை இந்திய சுசுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.

     தமிழ்நாட்டில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறைகள் உள்ளன. மூளைச்சாவு அடைந்த நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட இருதயங்கள் காத்திருக்கும் பட்டியலில் இந்திய நோயாளிகளை தவிர்த்து வெளிநாட்டு மக்களுக்கு பொருத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி உள்ளனர்

      தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு, வெளிநாட்டை சேர்ந்த 25% பேருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாகவும், 33% பேருக்கு நுரையீரல் மாற்று சிகிச்சைகளை செயயப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர். சென்னையில் சமீபத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து 3 இருதயம் எடுக்கப்பட்டு சர்வதேச நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இது சந்தேகத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சுகாதார சேவைகள் இயக்குநரகம் ஜெனரல் சமீபத்தில் டில்லியில் அவசரக் கூட்டத்தை கூட்டி விவாதித்தார். அப்போது, வெளிநாட்டினருக்கு உறுப்புகளை ஒதுக்கீடு செய்வதற்கான வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் எச்சரித்தார். மேலும், விவாதத்தின்போது, "இந்திய இதயங்கள் எங்கள் சொந்த இந்திய நோயாளிகளுடன் பொருந்த வில்லை, ஆனால் வெளிநாட்டினருடன் பொருந்திப்போகிறது. இது எப்படி சாத்தியம் .. . என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இந்திய பணம் வெளிநாட்டினரின் பணத்துடன் பொருந்தவில்லை என்று தெரிகிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து தேசிய அளவில் அமைக்கப்பட்டுள்ள நோட்டோ ((NOTTO) எனப்படும் தேசிய திசு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் இயக்குனர் விமல் பண்டாரி, அதற்காக உபயோகப்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ்அப் குழுவில், ஏழை இந்திய நோயாளிகளுக்கு உதவுவதில் நாங்கள் மிகவும் கஞ்சத்தனமாக இருக்கிறோம் என்று எழுதுவதற்கு உண்மையில் வருந்துகிறோம் எனது கருத்தை பதிவிட்டிருந்தார்.

     மேலும், மூளைச்சாவு அடைந்த நோயாளிகளிடமிருந்து அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்ட இதயங்களும் நுரையீரல்களும் பெருநிறுவன மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டன என்பதை அறிந்தோம் என்றும், சென்னையில் உள்ள மருத்துவமனையில், வெளிநாட்டினருக்கு இதயங்களை ஒதுக்கீடு செய்ததன் மூலம் அவர்கள் மீதான சந்தேகம் உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் குறித்த நெறிமுறைப்படி, உடல்உறுப்பு தானம் முதலில் இந்தியருக்குத் தான் வழங்கப்பட வேண்டும். எந்தவொரு இந்தியருக்கும் தேவைப்படவில்லை என்றால் மட்டுமே என்ஆர்ஐக்கு வழங்கப்படுவது பரிசீலிக்க வேண்டும். ஆனால், இங்கு சந்தேகத்திற்குரிய வகையில் வெளிநாட்டினர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

        நோட்டோ (NOTTO), மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அமைப்பு. இந்த அமைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் உறுப்புகள் / திசுக்கள் மற்றும் மாற்றுதல் ஆகியவற்றிற்கான ஒருங்கிணைப்பு மற்றும் நெட்வொர்க்குக்கான அனைத்து செயல்களையும் கவனிக்கும் இந்திய உச்ச அமைப்பு ஆகும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் முக்கிய தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் (உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உரிமம் பெற்றவர்கள்). இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருந்து வருகிறார்கள். 

          இறந்தவர்களின் உடல் உறுப்புகளை கொண்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மிக சிறப்பாக செயல்படுத்துவதில், நாட்டிலேயே முதன்மை மாநிலத்திற்கான தேசிய விருதினை 3 முறை தமிழகம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு வரை, 6,097 உடல் உறுப்புகள் 1,082 கொடையாளர்களிடம் இருந்து தானமாக பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உடல்உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகத்தில் மோசடி நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Credit: The Hindu

No comments:

Post a Comment

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...