
இன்றைய கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டத்தை அடுத்து இலவச நாட்டுக்கோழி மக்களுக்கு விரைவில் வழங்கப்படும்.
சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், தஞ்சை மற்றும் வேலூர் மாவட்டங்களில் புதிதாக பால் பண்ணை அமைக்கப்படும் . சென்னை மாதவரத்தில் உள்ள ரூபாய் 100 கோடி செலவில் பால் பண்ணை விரிவாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
நாட்டுக்கோழி பயன்பாடு தமிழகத்தில் அதிகரித்துள்ளதாகவும் முதல்வர் சுட்டிக் காட்டியுள்ளார்.
From One India
No comments:
Post a Comment