கூகுள் நிறுவனமானது, தகவல் பரிமாற்றம் செய்ய புதிய செயற்கை நுண்ணறிவு கொண்ட தகவல் பரிமாற்ற வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, செயற்கை நுண்ணறிவைக் கொண்டு பயனர்களின் குறுஞ்செய்திகளுக்கு எளிதில் பதில் கூறும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளது.
கூகுள் அலோ(Allo) என அழைக்கப்படும் இந்தப் புதிய தொழில்நுட்பமானது பயனர்களின் வழக்கமான அதிகம் உபயோகிக்கும் வார்த்தைகளைப் பதிவிட்டுக்கொள்கிறது. குறுஞ்செய்தி வரும்பொழுது அதனை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் பயனரின் பதிலை, அவர் டைப்() செய்வதற்கு முன்னரே எடுத்துக் கொடுக்கிறது. இந்த வசதியைப் பயனர்கள் உபயோகிக்கும்பொழுது, பெரும்பாலும் டைப் செய்ய வேண்டிய தேவை ஏற்படாது. அதற்குத் தகுந்த வார்த்தைகளை அலோ(Allo) தொழில்நுட்பம் காண்பிக்கும். அதில் ஒன்றினைத் தேர்வு செய்தால் போதுமானது.
இந்த வசதியானது, விரைவில் வெளியிடப்படும் என பயனர்களால் எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment