Saturday, 19 May 2018

தாராபுரம்


விராட நகரம் ஒரு சிறப்புப் பதிவு . .
*அது வேறெங்கும் இல்லை நம் தாரை மாநகரே (தாராபுரம்)
*மகாபாரதத்தில் கீசகனை "கொன்ற இடம்" தாராபுரம் அருகிலுள்ள இன்றைய "குண்டடம்" என்பது நம்மில் பலருக்குத் தெரியாது..!!
*கீசகன் ஆண்ட ஊர் தான் .. கீசகனூர் இப்பொழுது மருவி கீரனூர் ஆகிவிட்டது... இந்த ஊர் காங்கயம் பக்கம் இருக்கிறது ...
*உத்திரன் ஆட்சி செய்த இடமே இன்றைய "ருத்ராவதி"
உத்திரன் அமைத்த சிறிய விநாயகர் சன்னதி இன்றும்
அங்குள்ளது . .!!
*அமராவதி ஆறு வடக்கு நோக்கி பாயும் ஆறு.
இவ்வகை ஆறுகளை உத்திரவாகினி என்று வடமொழியில்
கூறுவர்.
*மகாபாரதத்தில் வரும் விராட மன்னனின் மகன் பெயர் உத்திரன்,
மகள் பெயர் உத்திரா, இவள் அபிமன்யுவை மணந்து கொண்டாள்.
*தாரை கோட்டை மேட்டில் உள்ள பெருமாளின் பெயர் உத்திர
வீர ராகவ பெருமாள்.
*தாராபுரம் இதன் பழைய பெயர் விராடபுரம். பின்னர் வஞ்சிபுரி என்று அழைக்கப்பட்டு கொங்கு சோழர் காலத்தில் இராஜராஜபுரம் என்றானது.
தற்பொழுது தாராபுரம் என்று பெயர் கொண்டுள்ளது. இது உத்திர பெருமாள் கோவில் கல்வெட்டு கூறும் வரலாறு.
*பாரதக் கதையில் வரும் மச்ச தேசமும் விராடமும் இன்று இராஜஸ்தானில் உள்ளதாகக் கூறுகின்றனர். அதற்கு எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை. ஆனால் அந்த விராட நகரம் இன்றைய திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நம் தாராபுரம் ஆகும்.

No comments:

Post a Comment

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...