Saturday, 30 June 2018

சிறுதானியம்... பெரும் பலன்கள்!

ஆறுமாதக் குழந்தை முதல் அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு சிறுதானியம். ஒவ்வொரு சிறுதானியத்துக்கும் தனித்துவச் சிறப்புகள் உள்ளன. எந்தெந்த சிறுதானியத்தில் என்னென்ன சிறப்புகள் என்பதைத் தெரிந்துகொண்டால், அவற்றைப் பயன்படுத்தி உடலை வலுப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.
கம்பு - ஆரோக்கியமான சருமத்தைத் தரும். பார்வைத்திறன் மேம்படும். உடல் வெப்பம் தணியும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும். பாலூட்டும் தாய்மார்களுக்கு, பால் சுரக்க உதவும்.

தினை - இதயத்தைப் பலப்படுத்தும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும். மகிழ்ச்சியான மனநிலையைத் தரும்.

சாமை - ரத்தசோகையைக் குணப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. மலச்சிக்கல் தீரும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும். உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.

சோளம் - உணவுக் குழாய் தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படும். ரத்த ஓட்டத்தைச் சீர்செய்யும். செரிமான சக்தி மேம்படும். வாயுத்தொல்லை நீங்கும். உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடியது.
கேழ்வரகு - எலும்புகளை உறுதிசெய்யும். இரும்புச்சத்து நிறைந்துள்ளது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். உடல் வெப்பத்தைக் குறைக்கும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும். சருமத்தில் பளபளப்பு உண்டாகும்.

வரகு - உடல் எடையைக் குறைக்கும். மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். மூட்டுவலி இருப்போர் அவசியம் சாப்பிட வேண்டும். சர்க்கரை, நரம்பு தொடர்பான பிரச்னைகளுக்கு நல்லது.

குதிரைவாலி - சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும். நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், செரிமான மண்டலத்தை சீராக்கும், மலச்சிக்கலைத் தடுக்கும்.

விநாயகர் உருவம் பற்றிய சில தகவல்கள்

விநாயகர் உருவம் சில ஆன்மிக தகவல்களை உணர்த்தும் வகையில் உள்ளது.

விநாயகப் பெருமான் அரவத்தை தனது இடுப்புக் கச்சையாக அணிந்திருப்பதன் தத்துவம் மாயையினைத் தமது விருப்பம்போல இயக்கும் வல்லமை பெற்றவர் என்பதாகும். 
விநாயகரின் பெருச்சாளித் தத்துவத்தின் விளக்கம் பெருச்சாளி இருளை விரும்பும், கீழறுத்துச் சென்று கேடு விளைவிக்கும். அதனால் அது அறியாமை அல்லது ஆணவ மலத்தைக் குறிக்கும். எனவே அப்பெருச்சளியைப் பிள்ளையார் தமது காலின்கீழ் கொண்டிருப்பது அவர் அறியாமையையும், செருக்கையும் அடக்கி ஆட்கொள்பவர் என்பதை உணர்த்துகின்றது.
காகவடிவாக வந்து கமண்டல தண்ணீரை தட்டியூத்திய தத்துவம் உணரத்துவது அகத்தியரின் கமண்டலத்தில் உள்ள காவிரி நதியினை காகவடிவத்தில் வந்த விநாயகப் பெருமான் கவிழ்த்துவிட இந்த நதி பெருகி பலசோலைகளைக் கடந்து இறுதியில் கடலுடன் கலந்தது. கமண்டலம் மனித உடல், அதற்குள் இருந்த காவிரிநீர் ஆன்மசக்தி. 
ஆன்மா அறியாண்மை காரணமாக இவ்வுடலே நிலையானது என்று நினைத்திருக்கின்ற காலத்தில் குரு வந்து நினைப்பது பிழை நீ போகவேண்டிய தூரம் வெகுதொலைவு என்பதைப்போல காக வடிவத்தில் வந்த விநாயகர் கமண்டலத்தை கவிழ்த்துவிட வெறும் உடம்புக்குள் இருந்த ஆன்மா இறுதியில் இறைவனைப்போய் சேருவது போல காவிரி நீரானது இறைவனைப்போய் சேருகின்றது என்ற பரந்த ஆழமான தத்துவத்தை விளக்குகின்றது.விநாயகரின் பெருவயிறானது, பிரபஞ்சம் முழுவதும் இறைவனுக்குள் அடக்கம் என்பதையும் இருபெருங்காதுகள் பலகோடி உயிர்களின் முறையீடுகளைக் களைவதற்காகப் பெரும் இரு காதுகளை கொண்டுள்ளார் என்பதையும் பஞ்சபூத தத்துவத்தின் விளக்கம் பஞ்சபூதங்களை தம்முள் அடக்கி ஆள்பவர் என்பதைக் காட்டுவதற்காகவும் அவர் மடித்து வைத்துள்ள ஒருபாதம் பூமியையும், சரிந்த தொந்தி நீரையும், அவருடைய மார்பு நெருப்பையும், இரண்டு புருவங்களும் சேர்ந்த அரைவட்டம் காற்றையும், அதன் நடுவில் வளைந்திருக்கும் கோடு ஆகாயத்தையும் உணர்த்தி நிற்கின்றன அவர் வைத்திருக்கும் ஆயுதங்கள் ஐந்தொழிலை உணர்த்துகின்றன. அவரது பாசம் படைத்தலையும், அங்குசம் அழித்தலையும், ஒடிந்த தந்தம் காத்தலையும், துதிக்கை மறைத்தலையும், மோதகம் அருளலையும் உணர்த்தி நிற்கின்றன.

ஆட்டு எரு: சத்துமிக்க இயற்கை உரம்



பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள் மனித சமுதாயத்திற்கு பெரும் தீங்கை விளைவிக்கின்றன
திருவெறும்பூர்: பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள் மனித சமுதாயத்திற்கு பெரும் தீங்கை விளைவிக்கின்றன.
அன்றாடம் பயன்படுத்தப்படும் காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்படும் யூரியா போன்ற செயற்கை ரசாயன உரங்கள் உடலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கக் கூடியவை.
அதேநேரத்தில், ரசாயன உரங்களின் விலையும் தற்போது வேகமாக உயர்ந்து வருகிறது. செயற்கை ரசாயன உரங்களால் நமக்கு ஏற்படும் ஆபத்துகளைப் போக்க இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாதம்தான் ஆட்டு எரு. ஆட்டு எருவில், மாட்டு எருவில் உள்ளதைப் போல 2 மடங்கு தழைச் சத்தும், சாம்பல் சத்தும் உள்ளன. ஓர் ஆடு, ஓராண்டுக்கு 500 முதல் 750 கிலோ வரை எருவைக் கொடுக்கிறது.


ஓர் ஏக்கர் நிலத்தை எல்லா சத்துகளையும் கொண்டு வளப்படுத்த 100 ஆடுகளை வளர்த்தால் போதுமானது. ஆட்டு எரு மண் வளத்தைப் பெருக்கி, பசுமைப் புரட்சிக்கு வித்திடுகிறது என்றால் மிகையாகாது.
ஆட்டு எருவை மண்ணில் இட்டால் கரிமப் பொருள்களின் அளவு அதிகரித்து ஈரப் பதத்தை சேமிக்கும் திறன் அதிகமாகிறது. ஆட்டு எருவில் உள்ள சத்துகளின் அளவு, ஆட்டு இனம் மற்றும் அவற்றுக்கு அளிக்கப்படும் தீவனத்தைப் பொருத்தே இருக்கும்.
ஆடுகளுக்கு புரதச்சத்து நிறைந்த தீவனங்களான குதிரை மசால், முயல் மசால், வேலி மசால், சுபா புல், தட்டைப் பயறு போன்ற தீவனங்களை அளித்தால், எருவில் தழைச்சத்தின் அளவு அதிகமாக இருப்பதோடு, நுண்ணூட்டச் சத்துகளும், தாது உப்புகளும் அதிகமாகக் காணப்படும். ஆட்டு எருவில் 60 முதல் 70 சதம் தண்ணீரும், 2 சதம் தழைச் சத்தும், 0.4 சதம் மணிச் சத்தும் 1.7 சதம் சாம்பல் சத்தும் உள்ளன. மேலும், பயிர் வளர்ச்சிக்குத் தேவையான போரான், மெக்னீசியம், கோபால்ட், தாமிரம், துத்தநாகம், மாலிப்டினம் சத்துகளும் அதிகளவில் காணப்படுகின்றன.
நம்முடைய அன்றாட விவசாயத்திற்கு அதிகளவில் ஆட்டு எரு தேவைப்படுமாயின் அவற்றை ஆழ்கூள முறையில் தயார் செய்யலாம்.
அதற்கு முதலில் ஆட்டுக் கொட்டகையின் தரைப் பகுதியில் நிலக்கடலைத் தோல், சிறிய துண்டுகளாக வெட்டிய வைக்கோல், இலைச் சருகுகள், மரத்தூள், தேங்காய் நார்க் கழிவு போன்றவற்றை அரை அடி உயரத்தில் ஓர் ஆட்டிற்கு 7 கிலோ என்ற அளவில் பரப்ப வேண்டும்.
இவ்வாறு பரப்பினால் ஆட்டுப் புழுக்கையானது இந்த ஆழ் கூளத்தில் படிந்துவிடும். சிறுநீர் ஆழ் கூளத்தால் உறிஞ்சப்பட்டு தழைச் சத்து வீணாகாமல் பாதுகாக்கப்படும். ஆழ் கூளத்தில் உள்ள ஈரத் தன்மையைப் பொருத்து 3-லிருந்து 4 மாதங்களுக்கு ஒரு முறை ஆழ் கூள் ஆட்டு எருவை விவசாயத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.
ஆழ் கூள முறையைப் பொருத்தமட்டில் 10 ஆடுகளிலிருந்து ஓராண்டில் இரண்டரை டன் தரமான எரு கிடைக்கும். இதில் 50 கிலோ யூரியாவில் உள்ளதைப்போல, தழைச் சத்தும், 37 கிலோ சூப்பர் பாஸ்பேட்டில் உள்ள மணிச் சத்தும், 40 கிலோ பொட்டாஷில் உள்ள சாம்பல் சத்தும் கிடைக்கும்.
இவ்வாறு ஆழ் கூள முறையில் பெறப்படும் ஆட்டு எருவை வேளாண் பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தினால் களை எடுக்கும் செலவு குறையும். மேலும், நெல், தக்காளி, மிளகாய், கத்தரி மற்றும் அனைத்து விதமான வேளாண்மைப் பயிர்களுக்கும் இந்த எருவைப் பயன்படுத்தினால் அதிக லாபம் அடையலாம்.

Wednesday, 20 June 2018

அல்சரை விரட்ட ஆறு வகையான சாப்பாடு..!

வாழைத்தண்டு
வாழைத் தண்டுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அதை சட்னி போல் அரைத்து சாறு பிழிந்து தினமும் குடித்து வர வேண்டும். இதனால் அல்சர் மற்றும் சிறுநீரகக் கற்கள் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

கொத்தமல்லி
அல்சர் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் தங்களின் உணவில் கொத்தமல்லியை அதிகமாக சேர்த்து சாப்பிட வேண்டும்.
ஏனெனில் இது அல்சர் இருப்பவர்களுக்கு நல்ல டானிக்காக உள்ளது. மேலும் இந்த கொத்தமல்லி பசியை தூண்டி, பித்தத்தைக் குறைத்து. காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளது.

வல்லாரை
அல்சர், மஞ்சள் காமாலை, தொழுநோய், பேதி, நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்தி போன்ற பிரச்சனைகளுக்கு வல்லாரைக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
மேலும் இந்த வல்லாரைக் கீரையை அல்சர் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் 2 வேளைகள் சிறிதளவு இலைகளை பச்சையாக சாப்பிட்டால், மிகவும் நல்லது.

வெங்காயம் மற்றும் பூண்டு
தினமும் நாம் சாப்பிடு உணவில் வெங்காயம் மற்றும் பூண்டை அதிகமாக சேர்த்து சாப்பிட்டு வந்தால், அல்சர், ரத்த அழுத்தம், இருமல், ஆஸ்துமா, காய்ச்சல், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

மணத்தக்காளி கீரை
மணத்தக்காளி கீரையை தினமும் சமைத்து சாப்பிடுவதன் மூலம் வாய் புண், வயிற்று புண் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளது.
மேலும் இந்த மணத்தக்காளி கீரை ஜீரணக் கோளாறுகள், புற்றுநோய், ஈரல் கோளாறுகள், இருமல், அனீமியா, தோல் வியாதிகள் போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த மருந்தாக உள்ளது.

பச்சை வாழைப்பழம்
பச்சை வாழைப்பழம், வயிற்று உபாதையில் ஏற்படும் புண்களை போக்கும் தன்மைக் கொண்டது. எனவே அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு பச்சை வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகிவிடும்.

எட்டு வகையான பட்டாக்கள்

எட்டு வகையான பட்டாக்கள்
****************************************************************************


ஒருவரிடம் நிலம் உரிமையாகி இருக்கின்றது என்றால் இரண்டு ஆவணங்கள் முக்கியமாக இருத்தல் வேண்டும்.
ஒன்று பத்திரம்,
இன்னொன்று பட்டா.
பத்திரம் – பதிவுத்துறை சார்ந்த ஆவணம்,
பட்டா – வருவாய்த்துறை சார்ந்த ஆவணம்.
இதில் பட்டாவை பற்றி இப்பகுதியில் காண்போம்!
பட்டா என்பது நில உரிமை ஆவணம்! அதில் தற்பொழுது யார் பெயரில் இருக்கிறதோ அவரே தற்போதைய உரிமையாளர்.
பட்டா ஆவணத்தில் மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலத்தின் சர்வே எண், என்ன வகையான நிலம், வரிதொகை எவ்வளவு, இடத்தின் விஸ்தீரணம், உரிமையாளர் பெயர் மற்றும் அவரின் தந்தை பெயர் இருக்கும்.
கூடுதலாக ஏதாவது நிலத்தை பற்றி குறிப்பு தேவைப்படின் அந்த குறிப்பு இருக்கும்.

அடுத்ததாக முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டிய பட்டாக்களின் வகைகளை கீழே பார்க்கலாம்!!
1. யு.டி.ஆர் பட்டா:
********************************************

யூ.டிஆர்.பட்டா
மேனுவலாக கண்டபடி இருந்த நில உரிமை ஆவணங்களை முறைபடுத்தி ரீசர்வேக்கள் செய்து அனைத்து கிராமத்து நிலங்களுக்கும் சென்று (நத்தம் நிலங்கள் தவிர) நேரடி கள விசாரனை செய்து (வீட்டில் உள்ள ஆவணங்களை புத்தகங்கள் எல்லாம் தேவையுள்ளது தேவையற்றது என பிரித்து நம்முடையது பிறருடையைது என ஒமுங்குபடுத்தும் வேலையை போல்) மிக பெரிய அளவில் 1979 முதல் 1989 வரை தமிழகம் முழுவதுமாய் யு.டி.ஆர. பட்டா (Updating Data Registry ) தந்து அதனை கம்ப்யூட்டரில் ஏற்றினார்கள்.
அதாவது மேனுவல் ஆவணங்கள் கணினி மயமானது முதல் இப்பொழுது வரை இதனை தான் பட்டா ஆவணமாக பயன்படுத்தி வருகிறோம், தற்பொழுது இவை எல்லாம் ஆன்லைனில் ஏற்றப்பட்டு விட்டது.

மேனுவல் பட்டா
இப்பொழுது நடக்கும் சொத்து பரிவர்த்தனைகளுக்கான பட்டா பெயர் மாற்றங்கள் சர்வே எண் உட்பிரிவுகள் பெரும்பாலும் இந்த பட்டாவில் தான் நடக்கிறது. பட்டாவில் பெயரை சேர்த்தல், பட்டாவில் பெயரை மாற்றுதல், பட்டாவில் சர்வே எண் உட்பிரிவு செய்தல், போன்ற வேலைகளுக்கு இன்னும் பலர் அரசு,எந்திரத்துடன் போராடி வருகின்றனர்.
இன்னும் பலர், பட்டாவில் தந்தை பெயர் பிழை, தன் பெயர் பிழை, சர்வே எண் பிழை, அளவு பிழை என்று அதனை திருத்துவதற்கும் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் நிறைய இளம் தலைமுறையினர் தன் பூட்டன் ,தாத்தா, பங்காளி ,அப்பா பெயரில் இருக்கும் பட்டாவை மாற்றாமல் நிலுவையில் வைத்து இருக்கிறார்கள்.
இவர்கள் பட்டாவை கிராம கணக்கரிடம் கொண்டு சென்றால் தான் பல நிதர்சனங்கள் புரியும்.

2. நத்தம் நிலவரி திட்டம் -தோராய பட்டா & தூய பட்டா:
**********************************************************************

தோராய பட்டா பின்பக்கம்
தோராய பட்டா முன்பக்கம்
யூ.டி.ஆர் பட்டாவில் நத்தம் நிலத்தை தவிர மீதி நிலங்களை பட்டியல் இட்டார்கள், அளந்தார்கள்! நத்தம் என்பது பொதுமக்களுக்கு குடியிருப்பு தேவைக்காக வெள்ளைகாரன் காலத்திலேயே வகை படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டது.
பெரும்பாலும் நத்தம் நிலம் பழைய ஊர்களிலேயே அமைந்து இருக்கும்.அந்த நத்தம் நிலத்திற்குதான் தோராய மற்றும் தூய பட்டா வழங்கினர்.
தோராய பட்டா என்பது நத்தம் நிலத்தில் உள்ள ஏரி, குளம், வீடு, தெரு என பிரித்து வரைபடம் உருவாக்கி, புதிய சர்வே எண்களை கொடுத்து நத்தம் நிலவரித்திட்ட பட்டா அதில் குடியிருந்தவர்களுக்கு வழங்கியது.
நத்தம் நிலவரித்திட்ட தோராய பட்டாவில் ( பிழைகள், தவறுகள் இருக்கலாம் ) அதில் ஏதாவது சிக்கல்கள்,பெயர் பிழைகள் அளவு பிழைகள் இருப்பதை மக்கள் தெரிவித்தால் அதனை திருத்துவதற்க்கு கால அவகாசம் கொடுத்து கொடுக்கும் பட்டா, “தோராய பட்டா” இது ஒரு தற்காலிகமான பட்டா!
முழுமை விவரம் பெற்று தவறு எல்லாம் களைந்து மக்களுக்கு கொடுப்பது நத்தம நிலவரி திட்ட தூயப்பட்டா ஆகும்
அதாவது கல்யாண பெண் மேக்கப்க்கு முன் மேக்கப்புக்கு பின் என்பதில் இருக்கும் வித்தியாசம்தான் தோராய பட்டாவுக்கும் தூயபட்டாவுக்கும் உள்ள வித்தியாசம். பெரும்பாலும் இரண்டு பட்டாவும் மேனுவலாகவே இருக்கும். பட்டா ஆவணத்தின் பின்புறம் நிலத்தின் வரைபடம் அளவுகளுடன் வரையபட்டு இருக்கும்.
ஒரு சிலர் தோராய பட்டா வாங்கியதும் பட்டா வாங்கிவிட்டாடோம் என்ற சந்தாதோஷத்தில் இருந்து விடுவார்கள். அதில் அளவுபிழைகள் இருக்கிறதா என நிலத்தை அளந்து ஒப்புமைபடுத்தி சரி பார்த்துகொள்ள வேண்டும்.
ஏனென்றால் நத்தம் நிலத்தில் இதுவரை இவ்வளவு இடம் நீ அனுபவிக்கிறாய் என ஆவணபடுத்தபடவில்லை, தோராய பட்டா வழங்கும் போது நீங்கள் அனுபவிக்கும் இடம் ஆவண படுத்தப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.

தூய பட்டா:
நத்தம் நிலத்திறகு அரசு பட்டா வழங்குவது பொதுமக்களுக்கு என நினைக்க வேண்டாம். வரி விதிக்காமல் நீங்கள் அனுபவிக்கும் நிலத்தை வரி விதிப்புக்குள் கொண்டு வரவும், சாலை, குளம் ,பாதை இடங்களை ஆவணப்படுத்தி ஆக்கிரமிப்புகள் ஆகா வண்ணம் தடுக்கவும் நத்தம் நிலவரி திட்டத்தினை செயல்படுத்தபடும் போது
பை புராடக்டாக தங்களுக்கு பட்டா வழங்கபடுகிறது.
எனவே நிலவரிதிட்ட தோராய பட்டா வழங்கும் போது நிலத்தின் அளவுகளை கட்டாயம் சரி பார்க்கவும் இன்னும் பலர் தோராய பட்டா வாங்கியதுடன் நின்று விடுவர். தூயபட்டா அடுத்த ஆறுமாதத்துக்குள் கொடுத்து இருப்பர். அதனை அணுகி வாங்காமலேயே தோராய பட்டாவையே நிரந்தரபட்டா என்று நினைத்து கொண்டு இருப்பர்.

3. ஏ.டி கண்டிசன் பட்டா :
*********************************************************************

ஏ.டி.கண்டிசன் பட்டா என்பது வட்ட ஆதிதிராவிடர் நலன் தாசில்தார் அவர்கள் வீட்டுமனைகள் இல்லாத பழங்குடியினர் & ஆதிதிராவிடர் மக்களுக்கு கிராமத்தில் உபரியாக இருக்கும் புறம்போக்கு நிலத்தில் மனைகளாக பிரித்து அம்மக்களுக்கு ஒப்படைப்பர்.
மேலும் மத்திய மாநில அரசு நிதி ஒதுக்கும் பட்சத்தில் தனியார் இடம் உள்ள நிலத்தை கிரைய பேர பேச்சு மூலம் ஆதிதிராவிடர் நலத்துறை கிரயம் வாங்கி , பழங்குடி ஆதிதிராவிடர் மக்களுக்கு மனைகளாக பிரித்து ஒப்படைப்பார்.
அப்படி ஒப்படை செய்யும் போது , கொடுக்கும் பட்டா ஏ.டி.பட்டா ஆகும். அது பெரும்பாலும் மேனுவல் பட்டாவாகவே இருக்கும். பெண்கள் பெயருக்கு தான் வழங்குவது மரபாக இருக்கிறது.
பட்டா ஆவணத்தில் பட்டா பெறுபவரின் புகைப்படம் ஒட்டி தனிவட்டாட்சியர் கையெழுத்து இட்டு இருப்பார். இதில் பல கண்டிசன்கள் இடம் பெற்று இருக்கும்.
முக்கியமாக மேற்படி இடத்தை பெறுபவர் வேறு யாருக்கும் குறிப்பிட்ட காலத்திற்கு விற்க கூடாது. விற்றாலும் பழங்குடியினர் அல்லது ஆதிதிராவிடராக இருத்தல் வேண்டும் என்ற கண்டிசன்கள் முக்கியமானதாக இருக்கும்
இதே தன்மையில் பயிர் செய்ய நிலமில்லாத ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்கு 5௦ சென்டில் இருந்து ஒரு ஏக்கர் வரை விவசாய நிலங்கள் ஒப்படைக்கப்படும்.

4. நில ஒப்படை பட்டா:
*********************************************************************

நில ஒப்படை பட்டா
வீட்டு மனைகள் ! விவசாய நிலங்களை அரசு இலவசமாக ஒப்படைப்பது ஒப்படை பட்டா ஆகும். !
முன்னாள் ராணுவ வீரர்கள் , பிற்படுத்தப்பட்ட ஏழை மக்கள் , நலிவுற்றவர்கள், அரவாணிகள், போன்றோர்களுக்கு அரசு நிலங்களை இலவசமாக கொடுக்கும். அதனை நில ஒப்படை பட்டா என்பர். இவற்றிலும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின் பிறருக்கு விற்க கூடாது என்று கண்டிசன்கள் இருக்கும். இதனை டி.கார்டு கண்டிசன் பட்டா என்றும் சொல்லுவர்.

5. டி.எஸ்.எல்.ஆர் பட்டா:
*********************************************************************

டி.எஸ்.எல்.ஆர் பட்டா
டி.எஸ்.எல்.ஆர் பட்டா என்பது டவுன் சர்வே லேன்ட் ரெகார்ட் ஆவணம் . இது நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நகர் சர்வேயர்களை கொண்டு நிலங்களை மிக துல்லியமாக சர்வே செய்து உருவாக்கபடும் ஆவணகளில் இருந்து பொதுமக்களுக்கு ஒரு EXTRACT எடுத்து கொடுப்பார்கள் . இந்த TSLR EXTRACT என்பது பட்டாவுக்கு இணையான ஆவணம் ஆகும் .
கிராம பகுதிகளில் இருக்கும் பட்டாவிற்கும் நகர பகுதிகளில் இருக்கும் பட்டாவிற்கும், இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், நகர பகுதிகளில் ஒவ்வொரு சதுர அடியும் மதிப்பு மிக்கது , அதனால் ERROR மிக மிக குறைந்தே இருக்கும்.
ஆனால் கிராம பகுதி சர்வேகளில் ஏக்கருக்கு 5 சென்ட் கூடுதல் குறைதல் இருக்கலாம். அதனால் அதிக துல்லியமும் , எச்சரிக்கை உணர்வுடனும் நகர பகுதி சர்வேக்கள் செய்யபடுகிறது.

6. தூசி பட்டா:
****************************************************************

தூசி பட்டா
கிராம கணக்கில் 2 ம் நம்பர் புக்கில் “C” பதிவேட்டில் கொடுக்கும் பட்டா 2C பட்டா ஆகும். ஆனால் பேச்சு வழக்கில் தூசி பட்டா என்று அழைக்கபடுகிறது.
அரசு நிலத்தின் மேல் இருக்கும் (புளியமரங்கள், பனை மரங்கள் , கனி தரும் மரங்கள், ) மரங்களை அனுபவிக்க பராமரித்து கொள்ள , மேற்படி மரங்களுக்கு உரிமையளித்து கொடுக்கப்படும் பட்டா 2C பட்டா இதனை மர பட்டா என்றும் அழைப்பர்.

7. கூட்டு பட்டா:
*************************************************************************

தனிப்பட்டாவுக்கு நேர் எதிர் கூடுப்பட்டா , கூட்டுபட்டாவில் நிலத்தின் அளவு, சர்வே எண் உட்பிரிவு, FMB – சப்டிவிசன் தனி தனியாக யார் யாருக்கு எவ்வளவு என்று குறிப்பிட்டு இருக்காது, உதாரணமாக ஒரு பெரிய கேக்கை (யார் யாருக்கு எத்தனை துண்டு, எந்த பக்கம் என்று சொல்லாமல் ) நான்கு மகன்களிடம் கொடுத்து நீங்களே பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்வது போல் தான்.
நிலத்தில் நான்கு பேரோ, மூன்று பேரோ, இரண்டு பேரோ, அல்லது பல பேரோ ஒவ்வொரு மூலையில் நின்று அனுபவிப்பர். அவர்கள் பெயர்கள் எல்லாம் பட்டாவில் இருக்கும் ஆனால் சர்வே எண் உட்பிரிவு, அளவு பிரிவு, FMB உட்பிரிவு, செய்யப்பட்டு இருக்காது, பட்டாவே இல்லாமல் இருப்பதற்கு கூட்டு பட்டா சிறந்தது, கூட்டு பட்டவை விட தனிப்பட்டா சிறந்தது.
தனி பட்டா மற்றும் கூட்டு பட்டா


8, தனிபட்டா:
***************************************************************
தனிபட்டா என்பது தனி நபர் ஒருவர் பெயரில் இருக்கும் . மேற்படி நிலத்தின் சர்வே எண்ணில் தனியாக சப் டிவிசன் செய்யப்பட்டு இருக்கும். பேச்சு வழக்கில் பட்டா உடைந்து இந்த நபர் பெயருக்கு மாறி இருக்கும் என்று சொல்வோம்.
புல எண் வரைபடத்திலும் இவருடைய நிலத்துக்கு உட்பிரிவு வரைபடம் வரையப்பட்டு இருக்கும். தனிபட்டாவில் பெயர், நில அளவு, புல எண் உட்பிரிவு, FMB சப் டிவிசன் , ஆகியவற்றில் 1௦௦% தெளிவாக இருக்கும்.
யு.டி.ஆர் பட்டா,நத்தம் நிலவரி திட்டம் -தோராய பட்டா & தூய பட்டா ஏ.டி.கண்டிசன் பட்டா , நில ஒப்படை பட்டா , டி.எஸ்.எல்.ஆர் பட்டா, தூசி பட்டா, ஆகிய 6 பட்டாவும் யாருக்கு எத்தன்மையில் வழங்கபடுகிறது என பிரிக்கப்பட்டு இருக்கிறது .

தனிபட்டா கூட்டுபட்டா என்பது பட்டா ஆவணத்தின் தன்மையை பொறுத்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.


From Arul Ramachandran

நோயாளின் இறப்பைத் தீர்மானிக்கும் கூகுள்!


நோயாளி உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை 95% துல்லியமாகக் கூறும் செயற்கை நுண்ணறிவு செயல்முறையை கூகுள் நிறுவனம் உருவாக்கியுள்ளது. 



செய்ற்கை நுண்ணறிவு சார்ந்து தொழில்நுட்ப உலகில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மருத்துவத்துறையில் பயன்படும் வகையில் ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. 

கூகுளின் இந்த செயற்கை நுண்ணறிவு செயல்முறை மருத்துவனையில் ஒரு நோயாளி அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் அவர் உயிர் பிழைப்பரா என்பதை 95% துல்லியமாகக் கணித்துவிடும். 

இதற்கான கருவியை தற்போது கூகுள் சோதித்து வருகிறது. எதிர்காலத்தில் இது மிகச்சரியாக கணிக்கும் வகையில் மேம்படுத்தப்படும் என்றும் கூகுள் நிறுவனம் கூறுகிறது.

Thursday, 14 June 2018

ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போடுபவரா.... கட்டாயம் படியுங்கள்


ஃபேஸ்புக்கில் ஊருக்கு போவதாக ஸ்டேட்ட்ஸ் போட்டவரின் வீட்டில் இருசக்கர வாகனம், ஊர். 5 லட்சம் பணம் உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தின் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரமலதா. இவர் குடும்பத்தினர் மற்றும் உடன்பிறந்த தம்பி உடன் பெங்களூரு ஆர்.டி நகர் பகுதியில் வசித்து வருகிறார். 



சமீபத்தில் வார இறுதிநாளில் கோபிசெட்டிபாளையம் சென்ற பிரமேலதா, பெங்களூரிலிருந்து புறப்படும் போது ஊருக்கு போவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டேட்ஸ் அப்டேட் செய்திருந்தார். 

ஊருக்கு சென்று விட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் பெங்களூருவில் உள்ள தனது வீட்டிற்கு பிரேமலதா வந்த பார்த்த போது பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.



வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது, வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணவில்லை. வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்த போது ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகைகள், ரூ.57,000 ரொக்கம் ஆகியவை காணவில்லை. 

இதனால் அதிரிச்சியடைந்த பிரேமலதா ஆர்.டி. நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தான் ஊருக்கு போன சமயத்தில் வீட்டிலிருந்த பொருட்கள் கொள்ளயப்படிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். 

மேலும், அவர் ஃபேஸ்புக்கில் தனது ஸ்டேட்டஸை பார்த்த பிறகு தான் இந்த கொள்ளைச்சம்பவத்தில் திருடர்கள் ஈடுபட்டுள்ளதாக சந்தேகம் தெரிவித்துள்ளார். பக்கத்து வீடுகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என்பதால், இது திட்டமிட்ட கொள்ளைச்சம்பவம் என பிரமேலதா தனது புகாரில் கூறியுள்ளார். 

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் பகிரப்படும் தனிநபர் பற்றிய தகவல்களை ஆராய்வதற்கு என்றே பலரும் பெரியளவில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நமது நிகழ்நேர அனுபவங்கள் மற்றும் தகவல்கள் பரிமாறப்படும் போது அதை சமூகவிரோதிகள் சிலர் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. 

இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படும் பட்சத்தில், நமது சமூகவலைதள கணக்கு விவரங்களை மூன்றாவது நபர் பார்க்காமல் இருக்கும் வகையில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை வலைதள நிறுவனங்கள் கட்டமைத்துள்ளன. அதை அறிந்து வைத்திருப்பது நமது முக்கிய கடமையாகும். 

திரைப்படங்களில் வடிவேலு செய்த பல திருட்டு காமெடிகள் இதுபோன்ற சம்பவங்களின் பின்னணியில் உருவானவை தான். அது தற்போது நிஜமாகியுள்ளது. பெங்களூரில் நடந்திருந்தாலும், இந்த திருட்டு சம்பவம் பல வலைதள பயன்பாட்டாளர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆதார் எண் இல்லாவிட்டால் என்ன செய்வது?

Highlights


  • வெர்சுவல் ஐடி என்ற புதிய அடையாள எண்ணை மத்திய தொலைத்தொடர்புத்துறை அறிமுகம் செய்ய உள்ளது.
  • ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த வெர்சுவல் ஐடி வசதி ஆதார் ஆணைய இணையதளத்தில் கிடைக்கும்.
  • ஆதார் தகவல்களை மேலும் பாதுகாப்பானதாக ஆக்கும்


.
  ஆதார் எண்ணுக்கு மாற்றாக வெர்சுவல் ஐடியை பயன்படுத்தலாம் என்று மத்திய தொலைத்தொடர்ப்புத் துறை அறிவித்துள்ளது. 

  புதிய சிம் கார்டுகள் வாங்குவது மற்றும் பயன்பாட்டில் உள்ள மொபைல் எண்ணை உறுதிசெய்வது போன்ற தேவைகளுக்கு அடையாளச் சான்றாக ஆதார் எண் கட்டயாமாக உள்ளது. 

 இதற்கு மாற்றாக வெர்சுவல் ஐடி என்ற புதிய அடையாள எண்ணை மத்திய தொலைத்தொடர்புத்துறை அறிமுகம் செய்ய உள்ளது. ஆதார் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் உருவாக்கப்படும் 16 இலக்க எண் வெர்சுவல் ஐடி எனப்படுகிறது. இதனை ஆதார் எண்ணுக்குப் பதிலாக பயன்படுத்தலாம். 

  தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஆதார் எண் தேவைப்படும் இடங்களில் இந்த எண்ணை ஏற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன. வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த வெர்சுவல் ஐடி வசதி ஆதார் ஆணைய இணையதளத்தில் கிடைக்கும்.

 இதனை இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பும் (COAI) வரவேற்றுள்ளது. இந்த வெர்சுவல் ஐடி பயன்பாடு ஆதார் தகவல்களை மேலும் பாதுகாப்பானதாக ஆக்கும் என்று தொலைத்தொடர்புத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

பதிவுசெய்யப்படாத டிக்கெட்களை புக் செய்ய புதிய அப் அறிமுகம்!!

  ரயில்களில் பதிவுசெய்யப்படாத டிக்கெட்களை புக் செய்யவும், ரத்து செய்யவும் அப் ஒன்றை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. 



  ரயில்களில் பதிவுசெய்யப்படாத டிக்கெட்களை புக் செய்தல், அவற்றை ரத்து செய்தல், ஆர்-வாலட்டில் பணம் செலுத்துதல், புதிய பிளாட்பார்ம் டிக்கெட்கள் மற்றும் சீசன் டிக்கெட்களைப் பெறுதல், பிளாட்பார்ம் டிக்கெட்கள் மற்றும் சீசன் டிக்கெட்களைப் புதுப்பித்தல், அக்கவுண்டை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய மொபைல் அப்பை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. 

  ‘UTS On Mobile’ என்ற இந்த மொபைல் அப்பை பயன்படுத்துபவர்கள் புக் செய்த டிக்கெட்டை பிரின்ட் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக, அப்பில் இருக்கும் ‘Show Ticket’ வசதி மூலம் மொபைலில் உள்ள டிக்கெட்டையே காட்டலாம். 

  ‘Centre for Railway Information System’ உருவாக்கியுள்ள இந்த அப் மூலம், முன்கூட்டியே டிக்கெட்களை பதிவு செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அப் கூகுள் பிளே ஸ்டோரிலும், விண்டோஸ் ஸ்டோரிலும் இலவசமாக கிடைக்கிறது.

தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோவில்

பராந்தசுபுரம் என்றும் இராஜபுரம் என்றும் விராடபுரம் என்றும் பெயர்கொண்டு விளங்கும் தாராபுரம் நகர் சரித்திர புகழ் பெற்ற ஸ்தலமாகும். இந்நகரில் அமராவதி நதிக்கரையில் (ஆண் பொருணை நதி) கோவில் கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் ஆவார். முன்பு ஒரு காலத்தில் பார்வதி தேவியார் திருமண நாளில் பிரம்மா, திருமால் முப்பத்தி முக்கோடி தேவர்கள்

முதல் யாவரும் மேரு மலையில் ஒன்று சேர்ந்தார்கள். சுமை ஏறிய மேரு மலையின்; வடதிசை இறங்கியது. இதனால் தென்புலி மேல் எழுந்தது. பூமியை சமநிலை ஆக்க சிவபெருமான் அகஸ்தியரை தென் மலையான பொதிகைக்கு செல்லுமாறு கட்டளையிட்டார். அகஸ்தியரும் பொதிகை மலை செல்லும் வழியில் உள்ள கொங்கு நாடான தாராபுரத்தில் அமராவதி நதிக்கரையில தங்கினார்.
தினசரி ஒவ்வொரு நாளும் ஆர்மாத்த பூஜையை தங்கும் ஊர்களில் நடத்தி வந்தார். அச்சமயத்தில் அமராவதி ஆற்றங்கரையில் தன்னுடைய பூஜைக்கு உரிய சிவலிங்கத்தை காசியில் இருந்து சீடர்கள் கொண்டு வருவதற்கு தாமதம் ஏற்பட்டு விட்டதால் சிவ பூஜையை முடிக்க தன்னுடைய திருக்கரங்களால் அமராவதி புனித நீரின் மணலை பிடித்து வைத்து பூஜித்தார். ஆகவே அதற்கு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் என பெயர் வர காரணமாயிற்று. மேலும் தனது சீடர்கள் காசியில் இருந்து லிங்கத்தை தாமதமாக எடுத்து வந்ததால் இவர் பிடித்து வைத்த லிங்கமே மூலஸ்தானம் ஆகியது. சீடர்கள் கொண்டு வந்த லிங்கம் வலது பக்கம் காசி விஸ்வநாதர் என்ற பெயரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மேலும் மகாபாரத புராண கதையில் அஞ்ஞான வாசம் பாண்டவர்கள் இவ்வ+ரில் தங்கி வழிபட்டனர். இத்திருக்கோயிலானது மூர்த்தி தீர்த்தம் ஸ்தலம் ஒருங்கே அமைந்தது.
இக்கோவிலை புத்தூர் திருமலைசாமி பகவான் போன்றோர் வழிபட்டுள்ளனர். இக்கோவிலின் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மனம் உருகி பிரார்த்தனை செய்தால் திருமண தடை, வேலைவாய்ப்பு, புத்திர தோஷம் மற்றும் சித்த பிரமை தோஷம் நிவர்த்தி ஆகும். சுகல ஷேமங்களும் பெறுவார்கள். புண்ணிய நதியாகிய அமராவதியல் நீராடி தரிசனம் செய்தால் சகல நன்மைகளும் அடைவர்.
நன்றி நவநீதன்

அமராவதி அணையின் இன்றைய நிலவரம்



அமராவதி அணை  :::  14.06.2018  10.34 AM நிலவரப்படி



அணையின் இருப்பு
 [ அடி ]
65.72 Cusecs
அதிகரித்துள்ளது
அணைக்கு நீர் வரத்து
 [ கன அடி ]
958 Cusecs
குறைந்துள்ளது
அணையின் வெளியேற்றம்
 [ கன அடி ]
856 Cusecs
அதிகரித்துள்ளது

உப்பாறு அணை

உப்பாறு என்பது இந்தியாவில் தமிழகத்தின் தாராபுரம் தாலுகாவிலுள்ள குடிமங்கலம் ஒன்றியம் அரசூர் பகுதியில் துவங்குகிறது. ஆமந்தகடவு, பெரியபட்டி, பூளவாடி உட்பட பல்வேறு கிராமங்கள் வழியாக செல்கிறது. இந்த ஆற்றுக்கான உப்பாறு அணை பனமரத்துப்பாளையம் கிராமம், கெத்தல்ரேவ் பகுதியில், 1,100 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இந்த ஆற்றில் 500 கிலோ முதல் 800 கிலோ வரை தினமும் மீன் பிடிக்கப்படுகிறது.
உப்பாறு அணை
தாராபுரத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் - கெத்தல்ரேவ் - பனமரத்துப்பாளையம் கிராமத்தில் உள்ளதுதான் உப்பாறு அணை. முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் உப்பாற்றின் குறுக்கே 1100 ஏக்கரில்,இந்த அணை கட்டப்பட்டது. 1965 -ல் தொடங்கி 1968 -ல் கட்டி முடிக்கப்பட்டது. அணையின் உயரம் 30 அடி. நீளம் 2,300 மீ . நீர்பிடிப்பு பகுதி 350 ச.மைல்கல் ஆகும். அணையின் மூலம் நேரடியாக 6100 ஏக்கர் நிலங்களும், மறைமுகமாக 15,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இரண்டு கால்வாய்கள் உண்டு.
     இந்த அணை நிறைந்து வெளியேறும் நீர் - அமராவதி ஆற்றுடன் இணைந்து, காவரி ஆற்றுடன் வங்கக்கடலில் கலக்கும். P.A.P பாசன திட்ட அணைகளில் இதுவும் ஒன்று ஆகும். P.A.P. தொகுப்பு அணைகள் அனைத்தும் நிரம்பிய பின் வெளியேறும் உபரி நீர், வீணாக அரபிக்கடலில் கலந்து வந்தது. இந்த உபரி நீரை வீணாக்காமல் பயன்படுத்தும் வகையில் உப்பாற்றின் குறுக்கே அணைகட்டி, அந்த உபரி நீர் சேமிக்கப்பட்டு பாசனத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால் தற்காலத்தில் பல்வேறு குளறுபடிகளால் P.A.P முக்கிய தொகுப்பு அணைகளே நிரம்புவதில் இடர்பாடுகள் உண்டு. மேலும் 1994-ல் இந்த பாசனப்பகுதிகள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு விட்டது. அத்தோடு இந்த உப்பாறு அணைக்கு வரும் உபரி நீர் நின்று போனது. அன்றிலிருந்து இந்த அணையை நம்பி இருந்த சுமார் 22,000 ஏக்கர் நிலங்களின் விவசாய நிலை கேள்விக்குறியானது. கடந்த வடகிழக்கு பருவமழையின் போது திருமூர்த்தி அணை நிரம்பி பாலாற்றில் வீணாக நீர் திறக்கவேண்டிய கட்டாயத்துக்கு அணை நிருவாகம் தள்ளப்பட்டபோது. வேறு வழி இன்றி உப்பாறு அணைக்கு சில நாள் நீர் திறக்கப்பட்டது.
      இன்னும் ஒரு முக்கிய செய்தி என்னவென்றால் இந்த அணையில் விளையும் மீன் தனி சுவை கொண்டது. அணையில் நீர் இருந்தால் தினமும் 500 கி.மீன் பிடிக்கப்படும்.

வாட்ஸ்-அப்பிற்கு வருகிறது தடை - மத்திய அரசு ஆலோசனை

வாட்ஸ்-அப்பில் உள்ள ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதியை தடை செய்ய மத்திய அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.



தற்போது அனைவரின் கையிலும் ஸ்மார்ட்போன் வந்துவிட்டது. அதனால், சமூக வலைத்தளங்களான டிவிட்டர், முகநூல், வாட்ஸ்-ஆப் ஆகியவற்றை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வாட்ஸ்-அப் மூலம் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.  மேலும், அதில் உள்ள ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதிகளை பலரும் பயன்படுத்துகின்றனர்.
 
கடந்த 2016ம் ஆண்டு இந்த ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடதினர். அப்போது, தங்களின் ஓவ்வொரு அசைவையும் தங்களின் கூட்டாளிகளுக்கு வாட்ஸ்-அப் மூலமே அவர்கள் பகிர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. ஏனெனில் வாட்ஸ்-அப் கால் மற்றும் வீடியோக்களை சேகரிக்கவும் முடியாது, அதை ஒட்டுக்  கேட்கவும் முடியாது. எனவே, தீவிரவாதிகள் வாட்ஸ்-அப்பை அதிகம் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
 


எனவே, வாட்ஸ் அப் கால் மற்றும் வீடியோ கால் வசதியை தடை செய்ய மத்திய அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. முதல் கட்டமாக இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் தடை கொண்டு வரப்படுகிறது.  முதலில் காஷ்மீரில் இந்த தடை அமுலுக்கு வரும் எனத்தெரிகிறது.

Wednesday, 13 June 2018

காவிரி வரலாறு


பாயும் இடமெல்லாம் பசுஞ்சோலை விரித்துச் செல்வதால் காவிரி என்று அதற்குப் பெயர். நீரிலும் நீரடி மணலிலும் தங்கத் தாது உண்டென்பதால், பொன்னி என்றும் அதற்கு ஒரு பெயர் உண்டு. மண்ணைப் பொன் கொழிக்கச் செய்யும் ஆறு என்றும் பொருள் கொள்ளலாம். கர்நாடகத்தில் உள்ள குடகு மலைதான் காவிரிப் பெண்ணின் பிறந்தகம். மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 1,276 மீட்டர் (4,186 அடி) உயரத்தில் அது புறப்படும் இடத்துக்குத் தலைக்காவிரி என்று பெயர். ஓட்டமும் நடையுமாக கர்நாடகத்தில் 320 கி.மீ., தமிழ்நாட்டில் 416 கி.மீ. பயணிக்கும் காவிரி, பூம்புகாரில் வங்கக் கடலில் கலக்கிறது. இரு மாநில எல்லையில் 64 கி.மீ. என்பதையும் சேர்த்தால், காவிரி ஆற்றின் மொத்த நீளம் கிட்டத்தட்ட 800 கி.மீ.
இயற்கை ஆறுகள் நேர்க்கோட்டில் பாய்வதில்லை. காவிரி பொதுவாக தெற்கு, கிழக்கு திசைகளில் ஓடுகிறது. அது பாயும் நில அமைப்பு முதலில் குடகின் மலைப் பகுதியாகவும் பிறகு, தக்கணப் பீடபூமியின் மேட்டு நிலமாகவும், இறுதியில் தமிழகத்தின் சமவெளியாகவும் அமைகிறது.
கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூரு, மாண்டியா, பெங்களூரு (ஊரகம்), சாம்ராஜ்நகர் மாவட்டங்கள் வழியாகவும், தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகவும் காவிரி பாய்கிறது.
காவிரிக் கரையில் அமைந்திருக்கும் முக்கிய நகரங்கள் கர்நாட கத்தில் குசால்நகர், மைசூரு, ரங்கப்பட்டணம். தமிழ்நாட்டில் மேட்டூர், ஈரோடு, கரூர், முசிறி, குளித்தலை, திருச்சிராப்பள்ளி, திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகார்.
வடிநிலப் பரப்பு
துணையாறுகள், கிளையாறுகள் உட்பட காவிரியின் வடிநிலம் எனப்படும் மொத்த நீரேந்துப் பரப்பு 81,303 சதுர கி.மீ. தமிழ்நாட்டில் 43,856 ச.கி.மீ., கர்நாடகத்தில் 34,273 ச.கி.மீ., கேரளத்தில் 2,866 ச.கி.மீ., புதுவையில் 160 ச.கி.மீ. காவிரியில் பாயும் சராசரி நீரளவு வினாடிக்கு 23,908 கன அடி.
காவிரித் தடம்
குடகு மாவட்டத்தில் உள்ள பிரம்மகிரி மலைப் பகுதியில் தலைக்காவிரி என்ற இடத்தில் காவிரி பிறக்கிறது. குடகு மாவட்டத்தில் ஹாரங்கி ஆறு காவிரியில் கலக்கிறது. பிறகு, காவிரி மைசூரு அருகே மாண்டியா மாவட்டத்தில் கண்ணம்பாடியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்தை அடைகிறது. இங்கு ஹேமாவதி, லட்சுமணதீர்த்தம் ஆகிய இரு ஆறுகளும் காவிரியில் கலக்கின்றன. கிருஷ்ணராஜ சாகரிலிருந்து வெளிப்படும் காவிரி, ரங்கப்பட்டணம் தீவைத் தோற்றுவிக்கிறது. பின்பு கபினி, சொர்ணவதி ஆகிய ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. பின்பு, சிவசமுத்திரம் தீவைத் தோற்றுவிக்கும் காவிரி இரண்டாகப் பிரிந்து, வலப்புறம் ககனசுக்கி அருவியாகவும், இடப்புறம் பாறசுக்கி அருவியாகவும் 100 மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது. ககனசுக்கி அருவியில்தான் 1902-ல் ஆசியாவின் முதல் நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டு, கோலார் தங்க வயலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இதன் பிறகு சிம்சா, அர்க்கவதி ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. இதையடுத்து ஆழமான குறுகிய பாறைகளின் வழியே காவிரி தமிழ்நாட்டை நோக்கிப் பாய்ந்து செல்கிறது. இங்கு அது ஆடு தாண்டும் காவிரி (மேகேதாட்டு) எனப்படுகிறது.
தமிழ்நாட்டில் காவிரி
மாநில எல்லை தாண்டி தமிழகத்தில் நுழையும் காவிரி, பிலிகுண்டு வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது. அருவி நீர் பாறையில் மோதி புகைபோல் எழுவதால், புகைக் கல் என்னும் பொருளில் ஒகேனக்கல் எனப் பெயர் வந்ததாம். ஒகேனக்கலுக்குப் பின் பாலாறு, சென்னாறு, தொப்பாறு ஆகிய சிற்றாறுகள் காவிரியில் கலக்கின்றன. காவிரி, மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் நிறைந்து, அங்கிருந்துதான் தமிழகத்தின் காவிரி நீர்ப்பாசனம் தொடங்குகிறது.
மேட்டூர் அணையின் நீளம் 5,300 அடி (1.62 கி.மீ.), உயரம் 176 அடி (54 மீ). மேட்டூர் அணை தோற்றுவித்த நீர்நிலையான ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் பரப்பு 155 சதுர கிமீ.
அகண்ட காவிரி
மேட்டூரிலிருந்து புறப்பட்டுவரும் காவிரியுடன் பவானி ஆறு சேர்கிறது. அத்துடன் ஆகாய கங்கையும் வந்து கலக்கிறது என்ற ஐதீகத்தின்பேரில், பவானி கூடுதுறைக்குத் திரிவேணி சங்கமம் என்ற பெயரும் உண்டு. பவானியிலிருந்து காவிரி ஈரோட்டை அடைகிறது. பெயர்தந்த அந்த இரு நீரோடைகளில் ஒன்று காவிரி, மற்றது காளிங்கராயன் வாய்க்கால்.
பிறகு, கொடுமுடி அருகேயுள்ள நொய்யலில் நொய்யலாறு காவிரியுடன் கலக்கிறது. கரூர் அருகேயுள்ள கட்டளையில் அமராவதி காவிரியுடன் கலக்கிறது. கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் காவிரி விரிந்து செல்வதால் அகண்ட காவிரி என்று பெயர் பெறுகிறது.
கொள்ளிடம்
முசிறி, குளித்தலை நகரங்களைத் தாண்டி திருச்சிக்கு சற்று முன்னர் உள்ள முக்கொம்பில் மேலணையை அடைகிறது காவிரி. அங்கு இரண்டாகப் பிரிந்து, ஒரு கிளை கொள்ளிடம் ஆகிறது. வெள்ளப் பெருக்கின்போது மிகையாகப் பெருக்கெடுக்கும் நீரைத் திருப்பிவிட்டு அந்நீர் கொள்ளுமிடம் என்பதால் கொள்ளிடம் என்று பெயர்.
காவிரிக்குக் கொள்ளிடம் வடிகால் என்பதுபோல் காவிரிக் கழிமுகத்தில் பாயும் முதன்மையான எல்லா ஆறுகளுக்கும் வடிகால் ஆறுகள் உண்டு. ஒவ்வொரு ஊரிலும் நீர்ப்பாசன வாய்க்கால்போலவே வடிகால் வாய்க்காலும் இருப்பது பழந் தமிழரின் சிறந்த நீர் மேலாண்மைக்கு ஒரு சான்று.
கல்லணை
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டுக்கடங்காத காட்டாறாகப் பாய்ந்துகொண்டிருந்த காவிரியை அடக்கிக் கழனிகளில் பாய்ச்ச கரிகால் சோழன் கல்லணை கட்டினான். மலைக் குன்றுகள் ஏதுமற்ற சமநிலத்தில், இயந்திரங்களின் உதவியின்றி கல்லும் மண்ணும் கொண்டு மனிதன் கட்டிய மிகப் பழமையான அணை என்பது கல்லணையின் சிறப்பு. இது உலகிலேயே பயன்பாட்டிலுள்ள நான்காவது பழைய அணை.
நீர்த்தேக்கம் என்பதைவிடவும், நீரைக் கிளை பிரித்துவிடும் கலுங்கு முறை கொண்ட மதகு அணை என்று கல்லணையைச் சொல்லலாம். பழந் தமிழரின் கட்டுமானப் பொறியியல் அறிவுக்குச் சான்று. கல்லணை கட்டியதோடு அங்கிருந்து பூம்புகார் வரை காவிரிக்குக் கரை கட்டியவன் கரிகாலன்.
நெற்களஞ்சியம்
கல்லணையிலிருந்து காவிரி கவைகவையாகக் கிளைவிட்டு அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டியாறு, புது ஆறு, மன்னியாறு என்று பலவாகப் பிரிந்து, காவிரிக் கழிமுகம் (டெல்டா) படர்ந்து, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தைப் படைக்கிறது. கல்லணையிலிருந்து வெளியேறும் சராசரி நீரளவு: வினாடிக்கு 8,324 கன அடி.
காவிரியின் பயன்கள்
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 30 லட்சம் ஏக்கர் (12,000 ச.கி.மீ.) நிலப்பரப்பு காவிரிப் பாசனம் பெறுகிறது. காவிரிப் பாசனத்தை நம்பியுள்ள உழவர் தொகை பல லட்சங்களைத் தாண்டும். நைல் நதிக்கும் எகிப்திய நாகரிகத்துக்கும் உள்ள அதே உயிர்த் தொடர்பு காவிரி ஆற்றுக்கும் பழந் தமிழர் நாகரிகத்துக்கும் உண்டு.
தமிழ்நாட்டில் விவசாயம் மட்டும் அல்ல; வீராணம் திட்டவழி சென்னையின் குடிநீர்த் தேவையையும் காவிரிதான் பூர்த்திசெய்கிறது. காவிரியால் குடிநீர் பெறும் கிராமங்கள், நகரங்கள் ஏராளம்.
ஒரு காலத்தில் வற்றாத ஜீவநதி என்று சொல்லப்பட்ட காவிரி, இப்போது பிப்ரவரி முதல் மே வரை கிட்டத்தட்ட வற்றிப்போகும் நதி.
உடன்படிக்கைகள்-1892,1924
1892-ல் சென்னை மாகாணத்துக்கும் மைசூரு சமஸ்தானத்துக்கும் இடையில் முதல் காவிரி நீர்ப் பகிர்வு உடன்படிக்கை செய்யப்பட்டது. 1924 அங்கே மைசூரு - கண்ணம்பாடியில் கிருஷ்ணராஜ சாகர் அணையையும், இங்கே மேட்டூர் அணையையும் அடிப்படையாக வைத்து, இந்திய அரசின் மேற்பார்வையில் சென்னை மாகாணத்துக்கும் மைசூரு சமஸ்தானத்துக்கும் 50 ஆண்டு கால உடன்படிக்கை செய்யப்பட்டது. 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் 1924 ஒப்பந்தப்படியே காவிரி நீர்ப் பகிர்வு நடந்துவந்தது.
1956-ல் மொழிவழி மாநில மறுசீரமைப்புக்குப் பின், குடகு கர்நாடகத்தின் பகுதி ஆயிற்று. 1954-ல் புதுச்சேரி ஒன்றிய ஆட்சிப் புலம் (யூனியன் பிரதேசம்) ஆயிற்று. புதுவையின் ஒரு பகுதியான காரைக்கால் காவிரி நீரால் பயனடைந்துவந்தது. கபினியின் பிறப்பிடம் மொழிவழிக் கேரளத்தில் அமைந்திருந்தது. ஆகவே, புதிதாக கேரளமும் புதுவையும் காவிரி நீரில் பங்கு கேட்டன. பேச்சுவார்த்தை 1960-களின் முற்பகுதியில் தொடங்கி, 10 ஆண்டு காலம் நீண்டது.
ஆயக்கட்டு அங்கும் இங்கும்
1970-களில் அமைக்கப்பட்ட காவிரி உண்மை அறியும் குழு கண்டறிந்தபடி, தமிழ்நாட்டின் காவிரி ஆயக்கட்டு (நீர்ப்பாசனப் பரப்பு) 25,80,000 ஏக்கர் என்றும், கர்நாடகத்தின் ஆயக்கட்டு 6,80,000 ஏக்கர் என்றும் தெரியவந்தது. தமிழகம் தன் ஆயக்கட்டைச் சுருங்கவிடக் கூடாது என்றும், கர்நாடகம் தன் ஆயக்கட்டை விரிவாக்க வேண்டும் என்றும் விரும்பியதுதான் உடன்பாடு ஏற்பட முடியாமல் போனதற்குக் காரணம்.
உச்ச நீதிமன்ற வழக்கு
1974-ல் ஒப்பந்தம் முடிந்த பிறகும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் வழக்குத் தொடர்ந்து, பிரதமர் இந்திரா கேட்டுக்கொண்டதால் திரும்பப் பெற்றது.
இந்திய அரசமைப்பில் மாநிலங்களுக்கு இடையிலான ஆற்றுநீர்ப் பகிர்வு தொடர்பான உறுப்பு 262 இந்திய அரசின் பொறுப்பைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான ஆற்றுநீர்ப் பூசல் சட்டம், 1956 என்பது தீராத சிக்கலைத் தீர்க்கத் தீர்ப்பாயம் (நடுவர் மன்றம்) அமைப்பதற்கான வழிவகையைக் கொண்டுள்ளது.
1986-ல் தமிழக அரசு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியது. உச்ச நீதிமன்ற ஆணைப்படி 1990 ஜூன் 2-ம் நாள் பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான இந்திய அரசு, காவிரித் தீர்ப்பாயம் அமைத்தது.
தீர்ப்பாயத்திடம் ஒவ்வொரு மாநிலமும் கேட்ட தண்ணீரின் அளவு (டிஎம்சி): கர்நாடகம்: 465, தமிழகம்: 566, கேரளம்: 99.8, புதுவை: 9.3.
உடனே தண்ணீர் திறக்க ஆணையிடுமாறு தீர்ப்பாயத்திடம் தமிழ்நாடு கோரிக்கை வைத்தது. தீர்ப்பாயம் இதை ஏற்க மறுத்ததால், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. உச்ச நீதிமன்றக் கட்டளைப்படி தீர்ப்பாயம் மறுபரிசீலனை செய்து இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது.
1980-81க்கும் 1989-90க்கும் இடைப்பட்ட 10 ஆண்டு சராசரியைக் கணக்கிட்டு, ஒவ்வொரு நீர்ப்பாசன ஆண்டிலும் கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு 205 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என்பதே இடைக்காலத் தீர்ப்பு. மாத வாரியாகவும், அந்தந்த மாதமும் வாரவாரியாகவும் கர்நாடகம் திறந்து விட வேண்டிய நீரின் அளவு வரையறுக்கப்பட்டது.
கர்நாடகம் அதன் பாசனப் பரப்பை (ஆயக்கட்டு) அப்போதைய 11,20,000 ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக் கூடாது என்றும் தீர்ப்பாயம் ஆணையிட்டது. இந்த இடைக்காலத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. பின்னர், குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டபடி, உச்ச நீதிமன்றம் தலையிட்டு அந்த அவசரச் சட்டத்தை நீக்கியது.
தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு 1991 டிசம்பர் 11 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கு எதிராக கர்நாடகத்தில் கட்டுக்கடங்காத வன்முறை வெடித்தது. தமிழர்களுக்கு எதிராகக் கொலைகளும் கொள்ளையும் தீவைப்பும் நிகழ்ந்தன. ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் அகதிகளாக வெளியேறித் தமிழகம் வந்து சேர்ந்தன. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தமிழ்ப் பிள்ளைகள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் மூடிக் கிடந்தன.
1992, 1993, 1994 ஆண்டுகளில் போதிய மழைப் பொழிவு இருந்ததால், பெரிதாகச் சிக்கல் எழவில்லை. 1995-ல் பருவமழை பொய்த்ததால் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாது என்று கர்நாடகம் மறுத்துவிட்டது.
காவிரி ஆணையம்
உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு வழக்குத் தொடர்ந்தது. நீதிமன்றம் அறிவுறுத்தியபடி தமிழ்நாடு தீர்ப்பாயத்தை அணுகியது. தீர்ப்பாயம் 11 டிஎம்சி தண்ணீர் திறக்க ஆணையிட்டது. கர்நாடகம் இதை ஏற்க மறுத்ததால், தமிழ்நாடு மீண்டும் நீதிமன்றத்தை அணுகியபோது, பிரதமர் நரசிம்ம ராவ் இதில் தலையிட நீதிமன்றம் ஆணையிட்டது. பிரதமர் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் 6 டிஎம்சி தண்ணீர் திறக்க ஆணையிட்டார்.
1997-ல் இந்திய அரசு காவிரி ஆற்று ஆணையம் அமைத்தது. கர்நாடகம் எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்த ஆணையம் அதிகாரமற்றதாக மாற்றப்பட்டது. இது பிரதமரையும் நான்கு மாநில முதல்வர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டது. எல்லா உறுப்பினர்களும் கலந்துகொண்டால்தான் இந்த ஆணையம் கூட முடியும். கூடினாலும் ஒருமனதாக மட்டுமே முடிவெடுக்க முடியும். இந்த ஆணையத்தால் ஒரு பயனும் விளையவில்லை.
இறுதித் தீர்ப்பு
2007 பிப்ரவரி 5 அன்று தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. கொள்ளிடம் கீழணை வரைக்கும் காவிரி வடிநிலத்தில் ஓராண்டு காலத்தில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 740 டிஎம்சி. இதில் இறுதித் தீர்ப்பின்படி சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும் கடலில் கலப்பதற்கும் 14 டிஎம்சி ஒதுக்கியது போக, தமிழகத்துக்கு 419 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி, கேரளத்துக்கு 30 டிஎம்சி, புதுவைக்கு 7 டிஎம்சி ஒதுக்கப்பெற்றது. தமிழகத்துக்கு உரிய பங்கில் தமிழ்நாட்டுக்குள் கிடைப்பதுபோக, கர்நாடகம் திறந்துவிட வேண்டிய அளவு 192 டிஎம்சிதான்.
கர்நாடகம் காவிரியில் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டிய நீரின் அளவு (டிஎம்சி) இடைக்காலத் தீர்ப்பில் 205 ஆக இருந்து, இறுதித் தீர்ப்பில் 192 ஆகக் குறைந்துபோனது. அதுவும்கூடக் கிடைக்க வழியில்லாமல் தவிக்கிறது தமிழகம்.
தமிழகமும் கர்நாடகமும் இத்தீர்ப்பில் குறைகண்டு, மீளாய்வு விண்ணப்பங்கள் தாக்கல் செய்தன.
இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் மாதவாரியாகத் திறந்துவிட வேண்டிய நீரளவு (டிஎம்சி) பின்வருமாறு அட்டவணையிடப்பட்டது: ஜூன்: 10, ஜூலை: 34, ஆகஸ்ட்: 50, செப்டம்பர்: 40, அக்டோபர்: 22, நவம்பர் 15, டிசம்பர்: 8, ஜனவரி: 3, பிப்ரவரி: 2.5, மார்ச்: 2.5, ஏப்ரல்: 2.5, மே: 2.5.
ஒரு மாதத்தில் தண்ணீர் குறைவாகக் கொடுத்தால், அடுத்தடுத்த மாதங்களில் அந்த நிலுவையைக் கொடுத்துக் கணக்கை நேர் செய்ய வேண்டும். பற்றாக்குறைக் காலத்தில் எவ்வளவு குறைவாகக் கிடைத்தாலும் இதே விகிதப்படி பகிர்ந்துகொள்ள வேண்டும். இதை கர்நாடகம் விடாப்பிடியாக எதிர்த்து நிற்கிறது.
மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு
தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை வாரியமும் (Cauvery Management Board) காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட வேண்டும்; உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக உத்தரவிட்டிருக்கிறது. எனினும் எப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, காவிரி ஆற்று ஆணையத் தலைவர் என்ற முறையில் 2012-ல் ஒரு முறை, நாளொன்றுக்கு ஒரு விநாடிக்கு 9,000 கன அடி வீதம் தண்ணீர் தமிழ்நாட்டுக்குத் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்குக் கட்டளையிட்டார். கர்நாடக அரசு இந்தக் கட்டளையை நிறைவேற்ற மறுத்து உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு உள்ளாயிற்று. வேறு வழியின்றி தண்ணீர் திறந்துவிட்ட பின், கர்நாடகத்தில் பரவலான வன்முறைக் கிளர்ச்சி மூண்டது.
தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், இந்திய உச்ச நீதிமன்றம் ஆணையிட்டவாறு 2013 பிப்ரவரி 20 அன்று இந்திய அரசு காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது. அந்த நாள் முதல் இந்தத் தீர்ப்பு நடைமுறைக்கு வருகிறது என்று பொருள். மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை இடைக்கால ஏற்பாடாக காவிரி கண்காணிப்புக் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. 1991, 2001, 2012 ஆண்டுகளில் கர்நாடகத்தில் மழைப் பொழிவு குறைவு என்று தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுத்து வன்முறைக் கிளர்ச்சி நடைபெற்றது. அப்போதும் இப்போது 2016லும் இதே சிக்கல்தான்.
அரசமைப்புச் சட்டப்படியான தீர்வு
இதற்குச் சட்டப்படியான தீர்வு என்பது இனியும் காலந்தாழ்த்தாமல் மேலாண்மை வாரியமும் ஒழுங்காற்றுக் குழுவும் அமைத்துத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உண்மையாகச் செயல்படுத்துவதே. இந்த விவகாரத்தில் இந்திய அரசு காட்டும் அக்கறையும், தமிழக அரசியல் கட்சிகள் கொடுக்கும் அழுத்தமுமே நிரந்தரத் தீர்வுக்கு வழிவகுக்கும்.
இறுதியில் ஒரு நாள் மேலாண்மை வாரியமும் ஒழுங்காற்றுக் குழுவும் ஏற்பட்ட பிறகு, அதையும்கூட கர்நாடகம் ஏற்க மறுக்கக் கூடும். வரலாற்றின் சுவரில் அப்படித்தான் எழுதப்பட்டுள்ளது. மேலாண்மை வாரியத்தை ஏற்க மறுத்து கர்நாடகம் அவசரச் சட்டம் பிறப்பிக்கக் கூடும். அதற்கு எதிராக தமிழகம் உச்ச நீதிமன்றத்தை அணுகினாலும், உடனே முடிவுசெய்யாமல் மீண்டும் ஒரு சுற்று சுற்றிவிடும் ஆபத்து உள்ளது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இப்படித்தான் நடந்தது என்பதை மறக்க வேண்டாம். இந்திய அரசு கர்நாடகத்தின் பிடிவாதத்துக்குத் தரும் மதிப்பை தமிழ்நாட்டின் உரிமைக் குரலுக்குத் தந்து அரசமைப்புச் சட்டத்தின்படி தீர்வு காண வேண்டும்.
- தியாகு,

காவேரி கடந்து வரும் பாதை… வரலாறு…

"எதிர்காலத்தில் ஆட்சிகளை நிர்ணயிக்கும் சக்தியாக தண்ணீர் செயல்படும். உலகப்போர்கள் தண்ணீருக்காக நடந்தேறும்.' ஜான் கிராண்ட் 



  இந்தியா தனது நீர் மற்றும் நில வளத்தால் பண்டைய காலத்திருந்து இன்று வரை வேளாண்குடிகள் அதிகமாக வாழும் நாடாகவே இருந்து வருகிறது. இந்தியாவின் விவசாயத்தை ஆறுகளும், குளங்களும், கன்மாய்களுமே பெருமளவு தீர்த்து வந்தன. இந்தியாவில் 20 க்கும் மேற்பட்ட மூல நதிகளும் கிளை நதிகளும் பாய்ந்தோடுகின்றன. அவற்றில் முக்கியமான நதிகள். 

  ஒரு நதி பிறந்து வளர்ந்து தவழ்ந்து நடந்து ஓடி கடலில் கழிமுகத்தில் சங்கமிக்கிற வரை அவைகளுக்கு நாடுகளோ, மாநிலங்களோ எல்லைகள் கிடையாது. மனிதர்கள் எல்லைகள் வகுத்து பிரித்துக் கொண்டாலும் இயற்கை நதிகளை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. 

காவேரி கடந்து வரும் பாதை…

  கர்நாடக மாநிலம்குடகு மாவட்டத்தில் தலைக் காவிரியில் உருவாகி மைசூர் மாண்டியா மாவட்டத்திலுள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையை அடையும்போது ஹேமாவதி, ஹேரங்கி, ஆகிய 2 கிளை ஆறுகளும் காவிரியுடன் இணைகின்றன. பின்பு ஸ்ரீரங்கப்பட்டணத்தை தாண்டியவுடன் கேரளாவின் வயநாட்டில் உருவாகும் கபினி ஆறு கர்நாடகாவின் திருமுக்கூடல் பகுதியில் காவிரியுடன் கலக்கிறது. அதன் பின் கர்நாடக மாநிலம் சோமநாதபுரம் அருகே சிவசமுத்திரம் என்ற அருவியாக மாறும் காவிரி ககனசுக்கி (Gaganachukki)அருவியாகவும் மறுபுறம் பாறசுக்கி அருவியாகவும் விழுகிறது. பின்பு காவிரியுடன் சிம்சா மற்றும் அர்க்கவதி ஆறுகள் இணைந்து தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வந்து சேருகிறது. (அங்கு மேகதாட்டு (Mekedatu) என்ற இடத்தில் அணைகள் கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கிறது.) 

  அதன் பின் தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் ஓகேனக்கலில் அருவியாக கொட்டி சேலம் மேட்டூரில் அணையாக நிறைந்து ஈரோடு மாவட்டம் பவானி வரும் போது காவிரியுடன் பவானி ஆறு இணைகிறது . நாமக்கல் மாவட்டத்தில் நொய்யல் கிராமத்தில் நொய்யல் ஆறு காவிரியுடன் கலக்கிறது. நாமக்கல்லை அடுத்து கரூருக்கு அருகே அமராவதி ஆறு காவிரியுடன் சேர்ந்து திருச்சியை தாண்டி முக்கொம்பில் காவிரி – கொள்ளிடம் என இரண்டாகப் பிரிந்து 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லணையை அடைந்த பின் சிறு ஆறுகளாக பிரிந்து தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. கர்நாடகம் தமிழகம் இரு மாநிலத்துக்கும் பொதுவான நதி காவிரி என்றாலும் மேலதிகமாக கேரளா மற்றும் புதுச்சேரிக்கும் பங்குள்ளது. கிட்டத்தட்ட 800 கிலோமீட்டர் நீளத்துக்குப் பாயும் காவிரி, 81 ஆயிரத்து 155 சதுர கிலோமீட்டர் ஆற்றுப்படுகையைக் கொண்டது. தமிழகத்தில் 43 ஆயிரத்து 856 சதுர கிலோமீட்டர் ஆற்றுப்படுகையைக் கொண்டிருக்கிறது. கர்நாடகத்தில் 34 ஆயிரத்து 273 சதுர கிலோமீட்டர், கேரளத்தில் 2 ஆயிரத்து 866 சதுர கிலோமீட்டர் புதுச்சேரியில் 160 சதுர கிலோமீட்டர் ஆற்றுப்படுகையைக் காவிரி கொண்டிருக்கிறது.

காவேரி கடந்து வரும் வரலாறு...

  காவிரி ஆற்றின் வழியாக ஆண்டாண்டு காலமாக கர்நாடக – தமிழக மக்கள் பலன் பெற்று வருகின்றனர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கரிகாலன் கல்லனை என்ற தடுப்பணை கட்டினான். வரலாற்றின் அடிப்படையில் கி.பி.1146 – 1163 ஆண்டுகளில் மைசூரை ஆண்ட போசள மன்னன் மைசூரில் அணை கட்டி காவிரியை தடுத்தான். காவிரியை தடுக்காமல் ஓடவிடுமாறு ஓலை அனுப்பினான் இரண்டாம் ராஜராஜன். தண்ணீர் தர மறுத்த போது படையெடுத்துப்போய் போய் அணையை உடைத்தான்.

பின்னர் பதினேழாம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட தேவ மகாராயர் காவிரியின் குறுக்கே அணை எழுப்பி சோழ நாட்டிற்குத் தண்ணீர் வராமல்தடுத்தார். அப்போது இராணிமங்கம்மாள் மைசூர் அணையை உடைக்கப் படையோடு போனார். படை அங்கு போய்ச் சேருவதற்குள் பெரு மழையில் அணை உடைந்து காவிரி தானகாவே வர தாழ்நிலமான தமிழகம் செழித்தது. (நூல்: காவிரி தமிழகத்தின் உயிரோட்டம் - தமிழ்ப்பல்கலைக் கழகம்) 
சுதந்திரத்திற்கு முன்பு காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் அரசுக்கும் 1892 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. "சென்னை அரசின் முன் அனுமதியின்றி மைசூர் அரசு புதிய அணை அல்லது பாசன விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது.” ‘கர்நடாகம் தனது பாசனப் பரப்பை அதிகரிக்கக் கூடாது என்றும் அந்த ஒப்பந்தம் கூறுகிறது.

   1911 செப்டம்பரில் மைசூர் அரசு கவிரியில் ஒரு அணை கட்ட தொடங்கியது. இதனால் இரு அரசுகளுக்கும் இடையே 1913-ல் பிரச்சினை ஏற்பட்டது. பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, 18.2.1924-ல் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டு கர்நாடகத்தில் கிருஷ்ண ராஜ சாகர் அணையும் (44.827 டி.எம்.சி.) தமிழகத்தில் மேட்டூர் அணையும் (93.50 டி.எம்.சி.) கட்டப்பட்டது. 

   1968 – ஆம் ஆண்டு காவிரி ஆற்றின் மேல் ஹேமாவதி அணை கட்ட தமிழகத்தை கேட்காமல் கர்நாடகம் முடிவெடுத்த போது நடுவர்மன்றம் அமைக்க கோரி மத்திய அரசுக்கு உத்தரவிடும்படி 1971-ல் உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் மனு தாக்கல் செய்தது. 

  1974 - இல் 1924 ஒப்பந்தம் முடிவடைந்ததை தொடர்ந்து கர்நாடகம் தன்னிச்சையாக 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதைக் கைவிட்டு காவிரி நீரைத் தடுத்து, தனது அணைகளில் தேக்கிக் கொண்டு, மழைக் காலத்தில் உபரி வெள்ள நீரை மட்டுமே திறந்து விட்டது. 
மீண்டும் தமிழக அரசு நடுவர் மன்றத்தை அமைகக்கக் கோரி 29.05.75-ல் வலியுறுத்தியது. 1989 இல் தமிழக அனைத்துக் கட்சி தீர்மானம்! 1990 ல் மீண்டும் தமிழக சட்டப்பேரவை தீர்மானம்!

  4.5.1990 - இல் நடுவர்மன்றம் அமைப்பது பற்றிய அறிவிப்பை ஒரு மாதத்துக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து 2.6.90-ல் நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது. காவிரி இரு மாநிலங்களுக்கு இடையிலான ஆறு என்பதை ஏற்றுக்கொண்டுதான் காவிரி நடுவர் மன்றமே 1990 ஜூன் 2-ம் தேதி அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணையானது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
நடுவர்மன்றம் தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. நீரைக் கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்கிற இடைக்காலத் தீர்ப்பை 21.3.1991-ல் அளித்தது. தமிழகத்துக்கு முதலில் தண்ணீரைத் திறந்து விட்ட பிறகே கர்நாடகம் தனது அணைகளில் நீரைத் தேக்க வேண்டும் என இடைக்காலத் தீர்ப்பில் வலியுறுத்தப்பட்டதைக் கர்நாடகம் கண்டு கொள்ளவே இல்லை. 

  தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு 1991 டிசம்பர் 11 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கு எதிராக கர்நாடகத்தில் கட்டுக்கடங்காத வன்முறை வெடித்தது. தமிழர்களுக்கு எதிராகக் கொலைகளும் கொள்ளையும் தீவைப்பும் நிகழ்ந்தன. 

  1991ல் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கப்பட்ட காலக்கட்டத்தில் 11.2 லட்சம் ஏக்கர் அளவிற்கு இருந்த கர்நாடக பாசனப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு தற்போது 25 இலட்சம் ஏக்கருக்கு மேலும் நன்செய், புன்செய் பாசனத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறது. 

  ஹேமாவதி(1979), ஹேரங்கி(1970), கபினி (1974) ஆகிய 3 நதிகளின் குறுக்கே கர்நாடகம் கட்டிய அணைகள் விதிமுறைகளின்படி கட்டப்படவில்லை. மத்திய அரசின் தமிழக அரசின் முன் இசைவையோ, கர்நாடகம் பெறவில்லை. ஆனால், தமிழகமோ மேட்டூர் அணைக்குப் பிறகு, பவானி(1956), அமராவதி (1957) போன்ற அணைகளைக் கட்டியபோது மத்திய அரசின் அனுமதியைப் பெற்றது. 

  காவிரி நடுவர் நீதிமன்றத்தி இறுதித்தீர்ப்பு 2007 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வழங்கப்பட்டது தமிழ்நாட்டிற்குரிய பங்கு - 419 டி.எம்.சி. மத்திய அரசு அதன் அதிகாரபூர்வ இதழில் (கெசட்) வெளியிடவே மிகப்பெரிய விவசாயிகள் போராட்டம் நடந்து உச்சநீதிமன்றத்தின் இறுதிக் கெடு விதித்து 6 ஆண்டுகள் கழித்து, பிப்ரவரி 19 ஆம் தேதி 2013 இல் மத்திய அரசு வெளியிட்டது. கெசட்டில் வெளியான நாள் முதல் இந்தத் தீர்ப்பு நடைமுறைக்கு வருகிறது என்று பொருள். இன்று வரை காவிரி மட்டும் வரவில்லை. 
இப்போது 2016 செப்டம்பர் 20 இல் மத்திய அரசு காவிரி மேலாண்மைக் குழுவை 4 வாரங்களுக்குள் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடைசியாக இப்போது தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என்றே கூறுகிறது கர்நாடகம்.

காவிரியின் மூலம் தமிழகம் பெறும் பலன்கள்

  தமிழகத்தில் காவிரி நீரை நம்பி 12 மாவட்டங்களில் 26 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் காய்ந்து கிடக்கின்றன. தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருப்பூர், வேலூர், ராமநாதபுரம், சென்னை மாநகரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் காவிரி நீர் குடிநீராகவும் பயன்படுத்தப்படுகிறது.


இறுதியாக…

  ஆற்றின் நீர் பிடிப்பு பகுதி அம்மாநிலத்தில் இருப்பதாலேயே அங்கு தேங்கும் நீர் அனைத்தும் ஒருவருக்கே சொந்தமாகிவிடாது. அந்த நீர் மொத்தமும் காவிரிப் பாசனப் பரப்பில் இருக்கும் அனைவருக்கும் பொதுவானது. ஆனால் கர்நாடகத்து அணைகளில் தேக்கப்படும் தண்ணீரில் தமிழகத்துக்கும் பங்குண்டு என்பதை இன்று வரை மறுத்து வருகிறது கர்நாடகம். 
1956இல் இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட “ஆற்று வாரியம்” (River Board) சட்டத்தின் படியும், 1965 சர்வதேச நதிநீர் பங்கீடு சட்டத்தின்படியும் தண்ணீர் தர மறுப்பது குற்றம் என்பது யாருக்கும் உரைக்கவுமில்லை. 
இவ்வளவு தூரம் கர்நாடகம் கடுமையாக தண்ணீர் தர முடியாது என்று மறுத்துப் பேசுவதற்கு ஒரே காரணம் ஆதாயமளிக்கும் அரசியல். வாக்குகள் பெற்றுத்தரும் ஒரு அட்சய பாத்திரமாக துருப்புச் சீட்டாக அங்கே காவிரி ஆறு இருக்கிறது. மேலும் அங்கு அடுத்தடுத்து ஆட்சிக்கு வரும் தேசிய கட்சிகள் தமிழகத்தில் தங்களுக்கு எந்தப் பயனும் இல்லை அலட்சியப் போக்கு.


  தமிழகத்தை நீரற்ற நிலமாக்கி ஆற்றுமனல்கள் அள்ளவும், மீத்தேன் திட்டம் போன்றவற்றை கொண்டு வருவதற்குமான நீண்டகால சதித் திட்டமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
  ஒப்பந்தத்தை மீறி கர்நாடகத்தில் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் காவிரி ஆற்றுப் படுகையில் அதிகப்படுத்தப்பட்டு விவசாயம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் விவசாயம் செய்வதை செய்யக்கூடாத செயலாக கருதப்பட்டு பலமடங்கு விவசாய நிலங்கள் காணாமல் பறிபோயுள்ளது. வேளான் விளை பொருட்கள் வர்த்தக மஃபியா, கட்டுமானத் தொழில், ரியல் எஸ்டேட் வியாபாரிகள் பலரும் இதற்கு உதவுகின்றனர். ஏனெனில் தமிழகத்தில் அள்ளப்படும் மணல் அண்டை மாநிலங்களுக்கு பெரும் அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழகத்தில் போடப்படும் லட்சம் கோடி முதலீடுகள் அனைத்தும் பெருநிறுவங்களுக்கே ஒதுக்கப்படுகின்றன. அதற்கு விவசாய நிலங்கள் பறிக்கப்படுகின்றன. விவசாயிகள் நரகம் எனும் நகரம் நோக்கி தள்ளப்படுகிறார்கள். 

  மத்திய அரசால் 1972 ஜூன் மாதம் அமைக்கப்பட்ட காவிரி உண்மை அறியும் குழு ‘1934 முதல் 1970 வரை கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு ஓர் ஆண்டுக்குச் சராசரியாக வந்த நீர் 378.4 டி.எம்.சி.’ என்று அறிவித்தது. இன்று வற்றாத ஜீவநதி என்று சொல்லப்பட்ட காவிரி, இப்போது பிப்ரவரி முதல் மே வரை கிட்டத்தட்ட வற்றிப்போகும் நதி. 
காவேரி கடந்த சில பத்தாண்டுகளாக வேளாண்மைக்கு பெரிதாக உதவவில்லை. ஆழ் துளைக் கிணறுகள் லட்சக்கணக்கில் காவேரிக் கரையெங்கும் வந்தது. மின்சார விநியோகத்தை நம்பித் தான் வேளாண்மை நடைபெறுகிறது. இதனால் மூன்று முதல் நான்கு மாதம்வரும் காவேரி நீரை தரை வழிக் கிணறுகள் பெற்று மீண்டும் மோட்டார்களின் வழியே நிலத்தடி நீரை எடுக்கும் பாசான முறையே இன்றுள்ளது. வாய்க்காலில் இருந்து நீர் பாய்ச்சும் முறையே காவேரிக் கரைகளில் குறைந்துவிட்டது. நிலத்தடி நீர் இப்போது அதளபாதாளத்துக்குச் சென்று பூமி வறண்டு கிடக்கிறது. 

  தமிழகத்து வயிறுகளை நிரப்பி வந்த டெல்டா பகுதி அரிசிகளின் இடத்தை கர்நாடகா பொன்னி, ஆந்திராவின் பாபட்லா பொன்னி அரிசியும், பஞ்சாப் அரியானா பாசுமதி அரிசியும் நிரப்பி வருகிறது. ஒரு கட்டத்தில் அரிசியையும் தர மாட்டோம் என்று அவர்கள் கைவிரித்தால் இருக்கிறது சீனாவின் பிளாஸ்டிக் அரிசி. அதுவும் கிடைக்காவிட்டால்???

  கர்நாடகத்திடம் கையேந்தும் நமது அரசும் நாமும் நமது நீர் நிலைகள் மீது எவ்வளவு அக்கறை வைத்திருக்கிறோம்?  

 இந்தியாவின் மேம்பாடு என்பது அதன் ஆறுகளை முறையாக பயன்படுத்திக் கொள்வதில்தான் இருக்கிறது. விவசாய உற்பத்தியை அதிகப்படுத்தாமல் பிற துறைகளில் வளர்ச்சி காண்பது பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்திவிடும். இந்தியாவின் நீர்நிலைகள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு, தேவைக்கு ஏற்ப பகிர்ந்து கொள்ளப்பட்டால் உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுவிடும் என்றார் சர் தாமஸ் ஆர்தர் காட்டன்

நாசாவால் முடியாததை சாதித்த இந்தியா; விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்.!

ஒரு நம்பமுடியாத சாதனை, அகமதாபாத் பிஸிக்கல் ரிசர்ச் லேபரேட்டரி (Physical Research Laboratory - PRL) விஞ்ஞானிகள், பூமியில் இருந்து சுமார் 600 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தை (K2-236b) கண்டுபிடித்திருக்கிறார்கள். சுவாரசியம் என்னவெனில் அந்த கிரகம் சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருகின்றது.
'சப்-சாட்டர்ன்' அல்லது 'சூப்பர்-நெப்டியூன்' என்று கருதப்படும் இந்த கிரகத்தின் எடையானது, பூமியை விட 27 மடங்கு அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மற்றும் அதன் ஆரம் பூமியை விட ஆறு மடங்கு பெரியதாகவும் உள்ளது. இந்த அசாத்தியமான கண்டுபிடிப்பால், நட்சத்திரங்களைச் சுற்றி வரும் சில கிரகங்களை கண்டுபிடித்த சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
கிரகங்கள் எவ்வாறு கண்டுபிடிக்கப்படுகின்றன.? முதலில், ஒரு விண்வெளி பொருளானது எப்படி கிரகம் என்கிற அந்தஸ்த்தை பெறுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். யாதொன்றும் கம்பசூத்திரம் அல்ல, இகவும் எளிமையானது தான். ஒரு குறிப்பிட்ட விண்வெளி பொருளானது ஒரு நட்சத்திரத்தைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கும் பட்சத்தில் அது ஒரு கிரகம் என்கிற அந்தஸ்த்தை அடைகிறது.

நாசாவின் கெப்ளர் -2 கண்களில் ஏன் சிக்கவில்லை.? இப்படியான சுழற்சியில் குறிப்பிட்ட கிரகமானது ஒவ்வொரு முறையும் நட்சத்திரத்தை கடந்து செல்லும் போது தன்னை தானே மறைத்துக்கொள்ளும். அம்மாதிரியான ஒரு சூழலில் தான், அண்டத்தில் இருக்கும் இதர கிரங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தினை கொண்ட நாசாவின் கெப்ளர் -2 கண்களில் EPIC 211945201/K2-236 ட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட ஒளி காரணமான கிரகத்தின் சரியான அளவை கணக்கிட முடியவில்லை.

அகமதாபாத் பிஸிக்கல் ரிசர்ச் லேபரேட்டரி எப்படி, எங்கு நுழைந்தது.? புதிய கிரகத்தின் துல்லியமான விவரங்களை சேகரிக்க முடியாத தருணத்தில் நாசாவிற்கு இன்னும் சில உறுதிப்படுத்தல் தேவைப்பட்டது. இந்த இடத்தில் தான் இந்தியாவின் அகமதாபாத் பிஸிக்கல் ரிசர்ச் லேபரேட்டரி உள்நுழைகிறது. சரியாக ஒன்றரை வருடங்களாக, பிஸிக்கல் ரிசர்ச் லேபரேட்டரியின் விஞ்ஞானிகள், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட பாரஸ் ஸ்பெக்ட்ரோகிராப் (PARAS spectrograph) வழியாக குறிப்பட்ட கிரகத்தை வடிவத்தை அளவிட்டுள்ளார்.

பனி, சிலிக்கேட் மற்றும் இரும்பு.! குறிப்பிட்டுள்ள பாரஸ் ஸ்பெக்ட்ரோகிராப்பை, மௌண்ட் அபுவில் உள்ள பிஸிக்கல் ரிசர்ச் லேபரேட்டரியின் குரூஷிகார் அப்ஸ்வரேட்டரியின் 1.2மீ தொலைநோக்கியுடன் இணைத்தின் விளைவாக K2-236b கிரதத்தின் தோராயமான எடை அளவிடப்பட்டுள்ளது. அளவை மட்டுமின்றி அந்த கிரகத்தின் எடையில், பனி, சிலிக்கேட் மற்றும் இரும்பு போன்ற கனரக கூறுகள் தான் 60% -70% வரை காணப்படும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மற்ற முக்கிய கண்டுபிடிப்புகள் மேலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள K2-236b ஆனது அதன் அருகாமை நட்சத்திரமான, EPIC 211945201 / K2-236 உடன் - பூமி மற்றும் சூரியனை ஒப்பிடும் போது - ஏழு மடங்கு நெருக்கமாக உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது ஒரு முழுமையான சூரிய சுழற்சிக்கு, பூமியானது 365 நாட்கள் எடுத்துக்கொள்வது போல, அது வெறும் 19.5 நாட்கள் மட்டுமே எடுத்துக்கொள்கிறது.
இந்த கண்டுபிடிப்பின் உண்மையான அர்த்தம் என்ன.? K2-236b கிரகத்தின் மேற்பரப்பு வெப்பநிலையானது சுமார் 600 டிகிரி செல்சியஸ் இருப்பதாக கண்டறியப்பட்டது. ஆக இதில் ஜீவராசிகள் வசிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால் இத்தகைய சூப்பர் நெப்டியூன் அல்லது துணை சனி கிரகங்கள் எப்படி உருவாக்கம் பெறுகின்றன என்பதை கண்டுபிடிக்க முடியும். அது முக்கியமான ஆராய்ச்சி என்கின்றன விஞ்ஞானிகள்.

நாசாவினால் அல்ல, இந்தியாவினால்.! இந்த கண்டிபிடிப்பானது ஏற்கனவே இதேபோன்று அறியப்பட்ட 22 ஒத்த முறைமைகளை - அதாவது 10-70 புவிசார் எடை மற்றும் 4-8 புவி ஆரம் - கொண்டுள்ள கிரகங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பின் பிரதான சிறப்பம்சம் என்னவெனில், இந்த கிரகம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவினால் அல்ல, இந்தியாவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...