Tuesday, 7 October 2014

Burn a CD/DVD on Windows 7 or Vista or Windows XP without using software

Burn a CD/DVD on Windows 7 or Vista or  Windows XP without using software
  • You can use this built-in feature to create a data CD/DVD or an audio CD. The steps below will guide you through the procedures. Although the steps below are based on Windows 7, they are very much similar to Windows Vista.
  • If you're using a Re-Writable CD (CD-RW) or DVD (DVD-RW, DVD+RW), make sure the disc is blank (or "formatted"). You might need to erase (or "format") it before using. 

  • Insert a blank recordable/rewritable CD (CD-R) or DVD (DVD-R/RW, DVD+R/RW) disc into the CD burner drive.
  • With a new blank disc, Windows might pop up a prompt asking you which format you want to use (as shown on the image below).
    As explained on the popup, the option "Like a USB Flash Drive" is more convenient if you want to use the disc as an external storage, which you can add or delete (rewritable disc) files on the fly; however, once the disc is formatted with this option, it can only be read on computers with Windows XP or later. On the other hand, the option "With a CD/DVD Player" is the traditional format of CD/DVD disc and is compatible with a wider range of Windows versions as well as other devices, but requires to burn the disc (or erase the entire disc) all at once.

  • To keep it simple, we will follow the steps to create traditional CD/DVD, so select "With a CD/DVD Player". Don't forget to change the "Disc title" to something descriptive for your disc, then click "Next".
  • Navigate to the folders or files which you want to burn to the disc, then select (highlight) the folders/files and click "Burn" (located above the file browsing panels)

  • A new window is now created similar to the following image, showing the selected files and folders added to the queue to burn to disc. Click "Burn to disc".

  • On the next popup "Burn to Disc", verify the disc title and select the maximum burning speed, then click "Next".

  • If you have selected audio files (i.e. MP3), you will be asked to burn the disc as data or audio as shown in the following image

  • The burning wizard will start writing data to the disc and will close and eject the CD/DVD when finish.
------------------------------------------------------------------------------------------------------------------------

Burn a CD on Windows XP without using software

Windows XP comes with a builtin CD-copy feature that not many people are aware of. Although almost everyone has his/her favorite CD-copy software to stick with, it is still good to know about this CDR feature from Windows XP. You will find it very useful when you come to another PC that doesn't have a CD-copy software, and you can't just install your favorite software to it. With this feature, you can write some data or MP3 files to a CD/DVD, or erase a re-writable CD/DVD.
If you're using a Re-Writable CD (CD-RW), make sure the disc is blank. You might need to erase (or "format") it before use.

Requirements: You need to enable the CD-R feature on Windows XP. 
  1. Insert a Formated-ReWritable CD or a Recordable (CD-R) disc into the CD drive.
  2. From Desktop, double-click on "My Computer".
  3. Navigate to the files/folders you want to copy to CD. Select them and press "Ctrl-c" to copy.
  4. Browse back to the CD-ROM, and press "Ctrl-V" to paste. The files/folders will show up as temporary files/folders at this time.

  5. On the left panel, select "Write these files to CD".

  6. The window "CD Writing Wizard" appears with the default CD name. Change the CD name if you wish, then click "Next".

  7. The "CD Writing Wizard" starts to write files/folders to the CD:

  8. Once the writing process is complete, the wizard will disappear and the CD-Rom will be ejected.

Internet Download Manager Crack

How to Crack any IDM Version ?
  1. Install the latest version of IDM / Or update via quick update (yes its possible now)
  2. Download and Run IDM Universal Web Crack.exe
  3. Update IDM Universal Web Crack (if it asks)
  4. Select IDM Installation path
  5. Click Crack button and wait till it say IDM activated successfully !
  6. Now open IDM and enjoy lifetime full version license
Download Links.

Thursday, 18 September 2014

பென்டிரைவில் நீண்டநேரம் File transfer செய்வதை தடுக்கும் வழிகள்

பென்டிரைவ் என்பது கணினி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு REMOVABLE DEVICE
ஆகும். இத்தகைய பென்டிரைவ்கள் (pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும். அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி? உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
* உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள். (win+E) கொடுத்து MY COMPUTER செல்லவும்.
* அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக் செய்துறி properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
* தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும் டேபை கிளிக் செய்யவும். பிறகு Name என்னும் தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத் தேர்ந்தெடுக்கவும்.
* பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும்.
* அடுத்து தோன்றும் விண்டோவில் change settings என்பதை கிளிக் செய்யவும்.
* அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக் செய்து அதன் கீழிருக்கும் Better Performance என்பதைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்கவும்.
இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும் வேகமாக இயங்கும். இதை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள். மறக்காமல் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது Safely remove hardware என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை கணினியிலிருந்து நீக்கவும். இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்.

Wednesday, 17 September 2014

பென் டிரைவில் மென்பொருளின்றி வைரஸை நீக்க

சுலபமாக தகவல்களை கையாள நமக்கு துணைபுரிவது பென்டிரைவாகும். இதனை பல கணினிகளில் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் சுலபமாக வந்துவிடுகிறது. இது போன்று வைரஸ் உள்ள பென் டிரைவினை திற்கவோ அல்லது தகவல்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ முடியாது. 

பென் டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை என்றால் அதனை 'பார்மட்' செய்து வைரஸினை நீக்கிவிடலாம். ஒருவேலை அதில் முக்கியமான தகவல் இருப்பின் என்ன செய்ய வேண்டும்? 

பென் டிரைவினை கணினியில் இணைத்தப்பின் செய்ய வேண்டியது:

1. START > RUN சென்று அதில் CMD என டைப் செய்து ENTER கீயினை அழுத்தவும். 

2. இப்பொழுது Command Prompt திறக்கும். அடுத்து பென் டிரைவ் கணினியில் எந்த டிரைவில் உள்ளது என அறிந்துகொண்டு Command Prompt TM இந்த டிரைவிற்கு செல்லவேண்டும். (உ.ம்.) பி டிரைவ் எனில் H:\> என மாற்றிக்கொள்ள வேண்டும்.

3. பின்பு H:\>attrib s h /s/d *.* என டைப் செய்ய வேண்டும். சரியான இடைவெளியுடன் டைப் செய்தது உறுதிசெய்தவுடன் ENTER கீயினை அழுத்த வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து பென் டிரைவினை திறந்து பார்த்தால் அனைத்து தகவலும் நமக்கு கிடைக்கும். 

அழிக்க முடியாத பைல்களை அழிக்க:

சில நேரங்களில் ஹார்ட் டிஸ்கில் இடப்பற்றாக்குறை ஏற்படும் போது தேவையில்லாத பைல்களை அழிப்போம். அதுபோன்று நீக்கும் போது சில பைல்கள் நேரிடையாக அழிக்க முடியாமல் போகலாம் Cannot Delete File  என தோன்றும். இது போன்ற பைல்களை அழிக்க கீழ்வரும் செயல்களை பின்பற்றினால் அழிக்க -முடியும். 

1. அழிக்க நினைக்கும் பைல் எந்த டிரைவில் எந்த போல்டரில் உள்ளதென அறிந்து கொள்ள வேண்டும். 

2. எடுத்துக்காட்டாக சி டிரைவில் mydoc என்ற போல்டரில் உள்ளதெனில் அதன் சரியான path தினை அறிந்துகொள்ள வேண்டும். C:\Documents and Settings\mydoc.txt

3. பாதுகாப்பாக இதனை செய்ய கணினியை ரீஸ்டார்ட் செய்து கணினி பூட் ஆகும் போது F8 அழுத்த வேண்டும். இப்பொழுது திரையில் Advance Boot Options Menu தெரியும். அதில் Safemode With Command Prompt என்பதில் கிளிக் செய்து டாஸ் ப்ரம்ப்டில் நுழைய வேண்டும். 

4. இனி Command Prompt ல் உள்ள புள்ளியில் cd C:\Documents and Settings என டைப் செய்ய வேண்டும். இதில் cd என்பது Change Directory என்பதை குறிக்கின்றன. 

5. மேலே கூறியதாறு டைப்செய்து என்டர் அழுத்திய உடன் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இப்பொழுது அதில் del mydoc.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நாம் Delete செய்ய நினைத்த பைல் இப்பொழுது காணாமல் போயிருக்கும். 

Saturday, 30 August 2014

Do want Tamil Andriod Application ?

இந்த லிங்கை கிளிக் செய்து அது என்ன என்று கூறுங்கள்..

https://docs.google.com/forms/d/1eRPic7cTzfVR4vx3NOD1DDMj8DiFxBqb7yGJqfP6xns/viewform 

நீங்கள் விரும்பும் அப்ளிகேஷன் சாத்தியம் என்றால் உங்களுக்கு விரைவில் கிடைக்கலாம்..

அதிகம் விரும்பப்படும் தமிழ் ஆன்ராய்டு அப்ளிகேஷன் வெளியிட இது உதவும்..

Format Factory - Videos Converter

வீடியோ.ஆடியோ,படங்களை நீங்கள் விரும்பிய பார்மேட்டுக்கு மாற்றவேண்டுமா? பழுதடைந்த வீடியோ,ஆடியோ பைல்களை சரிசெய்யவேண்டுமா? மீடியா பைல்களின் அளவினை குறைக்க வேண்டுமா? ஐ-போன்,ஐ-பாட் பார்மேட் பைல்களை உருவாக்க வேண்டுமா?

இதற்கெல்லாம் பதில்தான் இலவச பார்மேட் பேக்டரி சாப்ட்வேர் தொகுப்பு,

1.  அனைத்து வீடியோவை(video)  MP4/3GP/MPG/AVI/WMV/FLV/SWF பார்மேட்டுக்கு (format)மாற்றலாம்..
2.  அனைத்து  ஆடியோவை(audio)  MP3/WMA/AMR/OGG/AAC/WAV பார்மேட்டுக்கு மாற்றலாம்..
3. அனைத்து  படத்தையும்(Pictures) JPG/BMP/PNG/TIF/ICO/GIF/TGA பார்மேட்டுக்கு மாற்றலாம்..


Dowload Link... http://www.formatoz.com/download.html

You Tube Downloader

இது ஒரு இலவச டூல்( freeware tool ).. தளத்தில் இருந்து அதிக கொள்ளளவு  கொண்ட் வீடியோவை எளிதில் தரவிரக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தரவிரக்கம் செய்யத வீடியோவை AVI பார்மேட்டுக்கோ(format) அல்லது MP4 பார்மேட்டுக்கோ(format) மாற்றிக்கொள்ளலாம்

Download Link......
http://www.filesonic.com/file/oQlgFSD

Thursday, 28 August 2014

Employment – ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது
அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய
தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.
இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th (or) 12th மதிப்பெண் அட்டை கண்டிப்பாக
கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதள முகவரி [to_like]www.tnvelaivaaippu.gov.in [/to_like]என்ற இணையதளத்திற்கு சென்று
click here for new user ID registration என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி அடுத்து வரும்
பக்கத்தில்
பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை
எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும்
பக்கத்தில்
உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number
Create ஆகிவிடும்.
குறிப்பு 1 : Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save
கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும்.
குறிப்பு 2 : மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து
கொள்ளலாம்.
குறிப்பு 3 : ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contact இருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம்.
குறிப்பு 4 : Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.
Renewal செய்வதற்கான குறிப்பு :
உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.
Register Number : RPD2013M00007502
வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: ARD – என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம், RAMANATHAPURAM )
பதிவு செய்த ஆண்டு : 2013
ஆண் / பெண் : M
பதிவு எண் : 7502
பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.
User ID : RPD2013M00007502
Password : dd / mm / yyyy
கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.
உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்..
அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். பதிவில் ஏதேனும் தவறுகள் இருப்பின்
சுட்டிக்காட்டுங்கள் திருத்தம் செய்து கொள்கிறேன்.

Wednesday, 27 August 2014

Online PDF Converter

      To use the converter is really easy! To begin click the Browse button and select the file or files you want to work with. Then choose what you want to do to the file. It is set to file conversion by default, but you can select Compression, View, Image to PDF, Protection, and Header to Footer options. 

Also if you notice at the right of the page there are three more options: a padlock, for password options; rotating files, for file rotations; and scissors, for editing the pages. I was here for the last option. I need to merge two files and edit the page order.

Once you’ve made your selections, just click the red Convert button. It will upload the file or files, make the changes you want, and then automatically download your new file. If it doesn’t automatically download the file, you can click the Manual Download link to download the file.

This site makes it easy to convert and edit documents for free. Go check it out today!  

Monday, 25 August 2014

லேப்டாப் மற்றும் கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை வேறு ஒரு டிவைஸ்க்கு(Mobile Phone Or Tablet Or Any Wifi Device) WIFI- மூலம் எப்படி பகிர்வது !!!

உங்களுடைய லேப்டாப் மற்றும் கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை வேறு ஒரு டிவைஸ்க்கு(Mobile Phone Or Tablet Or Any Wifi Device) WIFI- மூலம் எப்படி பகிர்வது !!!
HOW TO SHARE YOU LAPTOP OR PC INTERNET TO WIFI DEVICE (Mobile Phone Or Tablet Or Any Wifi Device) !!
1. முதலில் START பட்டனை கிளிக் செய்து Search செல்லவும் பின்பு cmd என்று டைப் செய்து Left கிளிக் செய்து Run As Administrator அழுத்தவும் ....
2. அதன் பிறகு Command பாக்ஸ்சில் உங்களுடைய கணினி அல்லது லேப்டாப்பில் Wifi டிரைவர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள ... கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும் ...
netsh wlan show drivers
இதை டைப் செய்து செய்தவுடன் உங்கள் Wifi டிரைவர் பற்றிய தகவல்கள் வரும் ..அதில் Hosted Network Supported : Yes என்று இருந்தால் மட்டுமே Internet Sharing சாத்தியம் /
3. பிறகு WIFI Profile க்ரியேட் செய்வது எப்படி என்று பார்ப்போம் ....
கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும் ...
netsh wlan set hostednetwork mode=allow ssid=kavinspot key=passwordasd
இந்த Command டைப் செய்து Enter கொடுத்து விட்டால் WIFI Profile க்ரியேட் ஆகி விடும் . (இதில் ssid என்பது உங்கள் பெயர் ... key என்பது உங்கள் Wifi பாஸ் வோர்ட் ...ssid பெயர் மற்றும் key பாஸ் வோர்ட் உங்கள் விருப்பத்துக்கு மாற்றி டைப் செய்து கொள்ளலாம் .... )
4. உருவாக்கிய WIFI Profile Activate செய்வது எப்படி ??
கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும் ...
உடனடியாக Wifi Activate ஆகிவிடும் ....
netsh wlan start hostednetwork
அவ்வளவு தான் Wifi Activate ஆகிவிட்டது....
5.Activate செய்த Wifi De-Activate எப்படி ???
கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும் ...
உடனடியாக Wifi De-Activate ஆகிவிடும் ....
netsh wlan stop hostednetwork
அவ்வளவு தான் Wifi De-Activate ஆகிவிட்டது..
கண்டிப்பாக இந்த முறையில் Internet Sharing செய்ய முடியும் !!! அப்படி சரியாக வேலை செய்யவில்லை என்றால் Firewall ஆப் செய்துவிட்டு முயற்சிக்கவும் !!!

Saturday, 23 August 2014

All Excel Keyboard Shortcuts

F1 Displays the Office Assistant or (Help > Microsoft Excel Help)

F2 Edits the active cell, putting the cursor at the end
F3 Displays the (Insert > Name > Paste) dialog box
F4 Repeats the last worksheet action (Edit > Repeat)
F5 Displays the (Edit > GoTo) dialog box
F6 Moves to the next pane in a workbook (if the window is split)
F7 Displays the (Tools > Spelling) dialog box
F8 Toggles whether to extend a selection with the arrow keys
F9 Calculates All the worksheets in All the open workbooks
F10 Toggles the activation of the Menu Bar
F11 Displays the (Insert > Chart) dialog box that creates a chart (on a chart sheet) using the highlighted range
F12 Displays the (File > Save As) dialog box
Shift + F2 Inserts or edits a cell comment (Insert > Comment)
Shift + F3 Displays the (Insert > Function) dialog box
Shift + F4 Repeats the last Find, the same as (Edit > Find Next)
Shift + F5 Displays the (Edit > Find) dialog box
Shift + F6 Moves to the previous pane in a workbook (if the window is split)
Shift + F8 Toggles between switching Add Mode on or off*
Shift + F9 Calculates just the active worksheet
Shift + F10 Displays the (Shortcut) menu for the selected item
Shift + F11 Inserts a new worksheet (before the active sheet) into the active workbook (Insert > Worksheet)
Shift + F12 Saves, Displays the (File > Save As) dialog box if a new workbook
Ctrl + F1 Closes and reopens the current task pane (ribbon in 2007)
Ctrl + F2 Print Preview
Ctrl + F3 Displays the (Insert > Name > Define) dialog box
Ctrl + F4 Closes the selected workbook window
Ctrl + F5 Restores the size of the active workbook or window
Ctrl + F6 Moves to the next open workbook or window
Ctrl + F7 Activates the Move window command
Ctrl + F8 Activates the Resize window command
Ctrl + F9 Minimises the size of the active workbook or window
Ctrl + F10 Maximises the size of the active workbook or window
Ctrl + F12 Displays the (File > Open) dialog box
Alt + F1 Creates a chart (on a chart sheet) using the highlighted range
Alt + F2 Displays the (File > Save As) dialog box
Alt + F4 Closes all the workbooks (saving first) and exits Excel (File > Exit)
Alt + F8 Displays the (Tools > Macro > Macros) dialog box
Alt + F11 Toggles between the Visual Basic Editor window and and the Excel window
Alt + Ctrl + F9 Calculates All cells on All worksheets in All workbooks
Alt + Shift + F1 Inserts a new worksheet (before the active sheet) into the active workbook (Insert > Worksheet)
Alt + Shift + F2 Displays the (File > Save As) dialog box
Alt + Shift + F4 Closes all the workbooks (saving first) and exits Excel (File > Exit)
Alt + Shift + F10 Displays the drop-down menu for the corresponding smart tag
Alt + Shift + F11 Activates the Microsoft Script Editor window
Ctrl + Shift + F3 Displays the (Insert > Name > Create) dialog box
Ctrl + Shift + F6 Moves to the previous open workbook or window
Ctrl + Shift + F10 Activates the Menu Bar or Shortcut Characters in 2007
Ctrl + Shift + F12 Displays the (File > Print) dialog box
Ctrl + 0 Hides the columns in the current selection
Ctrl + 1 Displays the formatting dialog box
Ctrl + 2 Toggles bold on the current selection
Ctrl + 3 Toggles italics on the current selection
Ctrl + 4 Toggles underlining on the current selection
Ctrl + 5 Toggles the strikethrough of text on the current selection
Ctrl + 6 Toggles between hiding, displaying
Ctrl + 8 Toggles the display of Outline symbols on the active worksheet
Ctrl + 9 Hides the rows in the current selection (Format > Row > Hide)
Ctrl + Shift + 0 Unhides the columns in the current selection
Ctrl + Shift + 2 Enters the value from the cell directly above into the active cell
Ctrl + Shift + 8 Selects the current region (surrounded by blank rows and columns)
Ctrl + Shift + 9 Unhides the rows in the current selection
Ctrl + A Displays formula palette given a function name or selects the whole worksheet or current date
Ctrl + B Toggles bold on the current selection
Ctrl + C Copies the current selection to the clipboard
Ctrl + D Copies the first cell in the selection downwards
Ctrl + F Displays the Find dialog box
Ctrl + G Displays the GoTo dialog box
Ctrl + H Displays the Replace dialog box
Ctrl + I Toggles italics on the current selection
Ctrl + K Displays the Insert Hyperlink dialog box
Ctrl + L Displays the Create Table dialog box
Ctrl + N Creates a new workbook
Ctrl + O Displays the Open dialog box
Ctrl + P Displays the Print dialog box
Ctrl + R Copies the leftmost cell in the selection to the right
Ctrl + S Saves, Displays the Save As dialog box if a new workbook
Ctrl + U Toggles underlining on the current selection
Ctrl + V Pastes the entry from the clipboard
Ctrl + W Closes the active workbook or window
Ctrl + X Cuts the current selection to the clipboard
Ctrl + Y Repeats the last workbook action Ctrl + Z Undo the last workbook action
Ctrl + Shift + F Activates the Font Tab of the format cells
Ctrl + Shift + O Selects all the cells with comments
Ctrl + Shift + P Activates the Font Size tab of the format cells
Enter Enters the contents of the active cell and moves to the cell below (by default)
Shift + Enter Enters the contents of the active cell and moves to the cell above (by default)
Tab Enters the contents of the active cell and moves one cell to the right
Shift + Tab Enters the contents of the active cell and moves one cell to the left
Alt + = Enters the SUM() function (AutoSum) to sum the adjacent block of cells
Alt + 0128 Enters the euro symbol (€) (using Number keypad)
Alt + 0162 Enters the cent symbol (¢) (using Number keypad)
Alt + 0163 Enters the pound sign symbol (£) (using Number keypad)
Alt + Enter Enters a new line (or carriage return) into a cell
Ctrl + ' Enters the contents from the cell directly above into the active cell
Ctrl + Shift + 2 Enters the value from the cell directly above into the active cell
Ctrl + ; Enters the current date into the active cell
Ctrl + Shift + ; Enters the current time into the active cell
Ctrl + Shift + Enter Enters the formula as an Array Formula
Shift + Insert Enters the data from the clipboard
Alt + Down Arrow Displays the Pick From List drop-down list Esc Cancels the cell entry and restores the original contents
Delete Deletes the selection or one character to the right
Backspace Deletes the selection or one character to the left Shift + Delete Cuts the selection to the clipboard
Ctrl + Delete Deletes text to the end of the line Ctrl + - Displays the Delete dialog box
Ctrl + Shift + = Displays the Cells dialog box
Ctrl + \ Selects the cells in a selected row that do not match the value in the active cell
Ctrl + Shift + \ Selects the cells in a selected column that do not match the value in the active cell
Ctrl + / Selects the array containing the active cell ??
Alt + ; Selects the visible cells in the current selection
Ctrl + Shift + (8 or *) Selects the current region (surrounded by blank rows and columns)
Ctrl + * Selects the current region (using the * on the number keyboard)
Ctrl + [ Selects all the cells that are directly referred to by the formula in the active cell (precedents)
Ctrl + Shift + [ Selects all the cells that are directly (or indirectly) referred to by the formula in the active cell
Ctrl + ] Selects all the cells that directly refer to the active cell (dependents)
Ctrl + Shift + ] Selects all the cells that directly (or indirectly) refer to the active cell
Ctrl + Shift + Page Down Selects the active worksheet and the one after it
Ctrl + Shift + Page Up Selects the active worksheet and the one before it
Ctrl + Shift + Spacebar Selects all the objects on the worksheet when an object is selected or selects the whole worksheet
Ctrl + Spacebar Selects the current column
Shift + Arrow keys Selects the active cell and the cell in the given direction
Shift + Backspace Selects the active cell when multiple cells are selected
Shift + Spacebar Selects the current row
Ctrl + Shift + Arrow Key Extends the selection to the next cell adjacent to a blank cell in that direction
Ctrl + Shift + End Extends the selection to the last used cell on the worksheet
Ctrl + Shift + Home Extends the selection to the beginning of the worksheet
Shift + Arrow Keys Extends the selection by one cell in that direction
Shift + Home Extends the selection to the first column
Shift + Page Down Extends the selection down one screen
Shift + Page Up Extends the selection up one screen
End + Shift + Arrow Keys Extends the selection to the next non-blank cell in that direction
End + Shift + End Extends the selection to the last cell in the current row*
End + Shift + Home Extends the selection to last used cell on the worksheet
Alt + ' Displays the Style dialog box
Ctrl + Shift + ( ' or ) Applies the Time format "hh:mm" to the selection
Ctrl + Shift + (1 or !) Applies the Comma separated format "#,##0.00" to the selection
Ctrl + Shift + (4 or $) Applies the Currency format "£#,##0.00" to the selection
Ctrl + Shift + (5 or %) Applies the Percentage format "0%" to the selection
Ctrl + Shift + (6 or ^) Applies the Exponential format "#,##E+02" to the selection
Ctrl + Shift + (# or ~) Applies the General format to the selection
Ctrl + (# or ~) Applies the Custom Date format "dd-mmm-yy" to the selection
Ctrl + Shift + (7 or &) Applies the outline border to the selection
Ctrl + Shift + (- or _ ) Removes all the borders from the selection
Arrow Keys Moves to the next cell in that direction
Ctrl + Tab Moves to the next open workbook or window
Alt + Tab Moves to the next application open on your computer
Alt + Shift + Tab Moves to the previous application open on your computer
Enter Moves to the cell directly below
Tab Moves to the next cell on the right (or unprotected cell)
Home Moves to the first column in the current row
End + Arrow Keys Moves to the next non empty cell in that direction
End + Enter Moves to the last cell in the current row that is not blank
End + Home Moves to the last used cell on the active worksheet*
End + Home Moves to the last used cell on the active worksheet*
Page Down Moves to the next screen of rows down
Page Up Moves to the previous screen of rows up
Shift + Enter Moves to the cell directly above (opposite direction to Enter)
Shift + Tab Moves to the cell directly to the left (opposite direction to Tab)
Alt + Page Down Moves you one screen of columns to the right
Alt + Page Up Moves you one screen of columns to the left
Ctrl + Home Moves to cell "A1" on the active sheet
Ctrl + End Moves to the last used cell on the active worksheet*
Ctrl + Up Arrow Moves to the first row in the current region
Ctrl + Down Arrow Moves to the last row in the current region
Ctrl + Left Arrow Moves to the first column in the current region
Ctrl + Right Arrow Moves to the last column in the current region
Ctrl + Page Up Moves to the previous worksheet in the workbook
Ctrl + Page Down Moves to the next worksheet in the workbook
Ctrl + Shift + Tab Moves to the previous open workbook or window
Scroll Lock + Arrow Keys Moves the workbook or window one cell the corresponding direction
Scroll Lock + End Moves to the last cell in the current window
Scroll Lock + Home Moves to the first cell in the current window
Scroll Lock + Page Down Moves you down one screen (current selection unchanged
Scroll Lock + Page Up Moves you up one screen (current selection unchanged)
Enter Moves from top to bottom within a selection
Tab Moves from left to right within a selection
Ctrl + . Moves clockwise to the next corner within a selection
Shift + Tab Moves from right to left within a selection (opposite direction to Tab)
Alt + Ctrl + Left Arrow Moves to the left between non adjacent cells in a selection
Alt + Ctrl + Right Arrow Moves to the right between non adjacent cells in a selection
= Starts a Formula
Ctrl + ` Toggles between the value layer and the formula layer
Ctrl + Insert Copies the current selection to the clipboard
Ctrl + Shift + ( Unhides any hidden rows within the selection
Ctrl + Shift + ) Unhides any hidden columns within the selection
Ctrl + Shift + \ Select unequal cells
Alt Toggles the activation of the old Menu Bar
Alt + Shift + Left Arrow Displays the (Data > Group and Outline > UnGroup) dialog box
Alt + Shift + Right Arrow Displays the (Data > Group and Outline > Group) dialog box
Alt + Spacebar Activates the Control Box in the top left hand corner
End Toggles between switching End Mode on or off
Scroll Lock Toggles between switching Scroll Lock on or off
Shift + Insert Pastes the entry from the clipboard

சான்றிதழ் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால்.....

ஒருவருடைய பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் சான்றிதழ் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால் அல்லது தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும். அதற்கான நடைமுறை வழிகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

படிக்க..... 

Friday, 15 August 2014

ஐடிஐ தகுதிக்கு வங்கித்தாள் அச்சகத்தில் வேலை

செக்யூரிடி பிரின்டிங் அண்டு மிண்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ஒரு அங்கமான. வங்கித்தாள் அச்சகத்தில் காலியாக உள்ள 78 ஜூனியர் டெக்னீசியன், சூபர்வைசர், இந்தி மொழிபெயர்ப்பாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள் விவரம்:
ஜூனியர் டெக்னீசியன் – 50
எலக்ட்ரிக்கல் – 06,
ஏ.சி – 01, ஐ.எப். – 17
சூப்பர்வைசர் – 03
ஜூனியர் இந்தி மொழிப்பெயர்ப்பாளர் – 01
வயது வரம்பு: 25 – 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஜூனியர் டெக்னீசியன் வகையைச் சார்ந்த கன்ட்ரோல், பிரின்டிங் அண்டு பிளேட் மேகிங் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பிரிண்டிங், பிளேட் மேகிங், ஆப்செட், லெட்டர் பிரஸ், கெமிக்கல், எலக்ட்ரோபிளேட்டிங் போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும். ஐ.எப் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் மெக்கானிகல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். முழுமையான கல்வித் தகுதிகளை அறிய இணையதளத்தை பார்க்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை General Manager, Bank Note Press, Dewas என்ற பெயரில் State Bank of India, BNP Branch, Dewas (M.P) கிளையில் மாற்றத்தக்கதாக வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: General Manager, Bank Note Press, Dewas (M.P) -455001
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.08.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  Click here -->
          jobs 

தமிழக சுகாதாரத்துறையில் புள்ளிவிவர தொகுப்பு உதவியாளர்

சென்னையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையில் காலியாக உள்ள புள்ளி விவர தொகுப்பு உதவியாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: புள்ளி விவர தொகுப்பு உதவியாளர்
காலியிடங்கள்: 34
பணியிடம்: ஒவ்வொரு மாவட்ட தலைமை இடத்திலும் ஒரு இடம் மற்றும் மாநில தலைமை இடத்தில் இருடங்கள்.
சம்பளம்: மாதம் ரூ.15,000
வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 20-30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பி.எஸ்சி (கணினி அறிவியல்) பிசிஏ அல்லது கணினி பயன்பாடு குறித்த முதுகலை பட்டயம் அல்லது கணினி பயன்பாடு, தொழில்நுட்ப அறிவியல் குறித்த ஒரு வருட காலத்திற்கு குறையாத படிப்புச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் தட்டச்சு செய்வதில் திறமையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நல்ல புலமையும் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: புள்ளி விவரங்கள சேகரித்தல், தொகுத்தல் மற்றும் கணினியில் பதிவு செய்வதில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு(தேவைப்படும் பட்சத்தில்), சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும்முறை: www.tnhealth.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்ப கவரின் மேல் “Data Processing Assistant-CRS-SBHI” என்று எழுதி அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Joint Director (SBHI), O/o. The Director of Public Health and Preventive Medicine, No.359, Anna Salai, DMS Compound, Teynampet, Chennai-6
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnhealth.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

கேரள கிராம வங்கியில் வேலைவாய்ப்பு

கேரள கிராம வங்கியில் (KGB) நிரப்பப்பட உள்ள 683 Officer Junior Management Scale-I (Assistant Manager) & Office Assistant (Multipurpose) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: கேரள கிராம வங்கி
காலியிடங்களின் எண்ணிக்கை: 683
பணி: Officer Junior Management Scale-I (Assistant Manager) & Office Assistant (Multipurpose)
காலியிடங்கள் விவரம்:
முதலாம் அதிகாரி ஜூனியர் மேலாண்மை அளவு – நான் (உதவி முகாமையாளர்):
I. Officer Junior Management Scale – I (Assistant Manager):
1. SC – 37
2. ST – 18
3. OBC – 68
4. General – 130
II. Office Assistant (Multipurpose):
1. SC – 43
2. ST – 04
3. OBC – 116
4. General – 267
கல்வித்தகுதி:  ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் உள்ளூர் மொழி மற்றும் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 – 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: செப்டம்பர், அக்டோபர் 2013 IBPS நடத்திய RRBs- CWE-II தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.keralabank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.08.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.keralagbank.com/public_downloads/job_openings/eng/uploads_original/2014-07-21/kgbRecruitment.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

‘மல்லி...‘ சொல்லி அடிக்கும் ‘கில்லி!‘

மல்லி....‘சொல்லி அடிக்கும் ‘கில்லி !‘
நிச்சய லாபம் தரும் சாகுபடி
10 நாட்களில் நீங்களும் பணக்காரர் ஆகலாம்!', ‘30 நாட்களில் 3 லட்சம் சம்பாதிக்கலாம் வாங்க!', '40 நாளில் 4 லட்சம் ஈட்டுவது எப்படி?'
இப்படி உங்களை லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும், மாற்றும் வண்ணம் தன்னம்பிக்கையைத் தட்டி எழுப்பும் புத்தகங்களை இந்த உடன்பிறப்புக்கள் வாசித்ததில்லை. இருந்தாலும் '45 நாட்களில் நல்ல வருமானம் பார்க்க முடியும்' என்பதை விவசாயத்தில் நிரூபித்துக் கொண்டுள்ளனர். அவர்கள் கையில் எடுத்திருப்பது லாபம் தரும் கொத்துமல்லித்தழைச் சாகுபடி. இதில் சொல்லி வைத்து கில்லி அடிக்கும் அந்த உடன்பிறப்புக்களை, ‘மல்லி பிரதர்ஸ்’ என்றே இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். கே.வி. மணி மற்றும் பாலசுப்ரமணி என்கிற அந்தச் சகோதரர்களை கோவை மாவட்டம், பொங்கலூர் அருகில் உள்ள கருடமுத்தூர் கிராமத்தில் இருக்கும் அவர்களின் வயல்காட்டில் சந்தித்தோம்.
பெண்கள் பலரும் பாத்திகளில் இருந்து மல்லித்தழைகளை பறித்து கட்டுகளாக்கிக் கொண்டிருக்க... ''ம்... ஆகட்டும். மார்க்கெட்டுக்கு நேரமாச்சு’’ என்று உசுப்பிவிட்டபடி நின்ற கே.வி.மணி, அப்படியே நம் பக்கம் திரும்பி,
''ஆரம்பத்துல பருத்தி, வெங்காயம், வாழை, மஞ்சள்னு எல்லாரையும் போல பயிர் செய்துகிட்டிருந்தோம். உரம், பூச்சி மருந்து, ஆள் கூலி எல்லாம் ரொம்ப அதிகமாகிக்கிட்டே போகுது. மூணு ஏக்கர் வெச்சுக்கிட்டு விவசாயம் பார்க்கற சிறு விவசாயியான எங்களால தாக்குப்பிடிக்க முடியல. குறைஞ்ச நாள்ல பலன் தர்றது காய்கறிகள்தான்னு முடிவெடுத்து, கால் ஏக்கர் அளவுக்கு கொத்துமல்லித்தழையைப் போட்டோம். நாங்களே அறுவடை பண்ணி, திருப்பூர் காய்கறி மார்க்கெட்டுல இருக்கற கமிஷன் கடைகள்ல கொடுக்க ஆரம்பிச்சோம். வேன் வாடகை, கமிஷன் இதெல்லாம் போக... ஓரளவு வருமானம் கிடைச்சுது. பெரிசா சொல்லிக்கிற மாதிரியில்ல. திருப்பூர் பகுதியை ஒட்டி விவசாயிங்க நிறைய பேர் மல்லித்தழை சாகுபடி செய்றாங்க. அதெல்லாம் திருப்பூர் மார்க்கெட்டுக்குதான் வரும். அதேபோல, வெளியூர் வியாபாரிகள் வரத்தும் அங்கே குறைவு. அதனாலதான் எதிர்பார்த்த அளவுக்கு விலை கிடைக்கலை.
இதைப்பத்தி யோசிச்சிக்கிட்டிருந்தப்ப 'மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு கேரளா வியாபாரிங்க நிறையப் பேர் வர்றாங்க. மேட்டுப்பாளையம் பகுதியில மல்லித்தழை சாகுபடி குறைவுங்கறதால அந்த மார்க்கெட்டுல நல்ல லாபம் கிடைக்கும்'னு ஒருத்தர் சொன்னார்.
அடுத்தநாளே மல்லித்தழைக் கட்டுகளை பஸ்ஸுல ஏத்தி, 100 கி.மீ. தொலைவுல இருக்கற மேட்டுப் பாளையம் மார்க்கெட்டுக்குக் கொண்டு போனேன். அது, ரொம்பப் பெரிய மார்க்கெட். ஊட்டி, மதுரை, திருச்சினு வெளியூர்கள்ல இருந்தும் கேரளா, கர்நாடகானு வெளிமாநிலங்கள்ல இருந்தும் நிறைய வியாபாரிங்க வந்துபோறதால என்னோட மல்லிக்கு நல்ல விலை கிடைச்சுது. தேவை அதிகமா இருக்குங்கிறதையும் புரிஞ்சு கிட்டேன். அப்ப... ஆரம்பிச்சதுதான் மல்லித்தழை சாகுபடி... இன்னிக்கு அது ஒண்ணுதான் முழுக்க முழுக்க என் தோட்டத்து சாகுபடியா இருக்கு. மூணு ஏக்கர் முழுக்க அதைத்தான் போடுறோம். சொந்தமா வேன் வெச்சு மேட்டுப் பாளையம் மார்க்கெட்டுக்குக் கொண்டு போயிடறோம். விஷயம் வெற்றிகரமா போய்கிட்டு இருக்கு.
இதுல இருந்து மத்தவங்க தெரிஞ்சுக்கவேண்டியது... ஒரே விளை பொருளை ஒரே இடத்துல கொண்டு போய் விற்கக்கூடாது. தேவை எங்க இருக்குனு தேடிப்பிடிச்சி கொண்டுபோய் விற்பனை செய்தா லாபம் பார்க்கலாம். இதுக்குக் கொஞ்சம் சிரமம் எடுக்கணும்... அவ்வளவுதான். உள்ளூர் மார்க்கெட்டுலதான் விற்பேன்னு அடம்பிடிச்சிக்கிட்டிருந்தா, விலை சம்பலாகிப் போகும். கேட்ட விலைக்கு கொடுத்துப் புட்டு... மிக்சரும், டீயும் வாங்கிக் குடிச்சுப்புட்டு வெறும் கோணிப்பையோடதான் வீடு வந்து சேரமுடியும்...'' என்று கே.வி.மணி சொல்லிக் கொண்டிருக்கும்போதே தோட்டத்து மல்லித்தழைகள் கட்டுகட்டுகளாக வேனில் ஏறியிருந்தது. வேனை நகர்த்திக்கொண்டு அவர் மேட்டுப்பாளையம் நோக்கி நகர, அவருடைய அண்ணன் பாலசுப்ரமணி நம்மிடம் பேச ஆரம்பித்தார்.
''மல்லித்தழைய விளைவிக் கறதுதான் என்னோட வேலை. அதைக் கொண்டுபோய் வித்துப்புட்டு வர்றது மணியோட வேலை. நாங்க தோட்டத்துல போட்டிருக்கிறது வீரியரக மல்லி. 45 நாள்ல பலன் தரக்கூடிய குறுகிய காலப்பயிர். ஆரம்பத்துல.. நாட்டு மல்லிதான் போட்டுப் பார்த்தோம். அதுல ரசம் வெச்சா... சும்மா 'கமகம'னு மணக்கும். அந்த ஒண்ணுக்காகவே எல்லாரும் விரும்பி வாங்கு வாங்கனு மார்க்கெட்டுல கொண்டு போய் கூவிக்கூவிப் பார்த்தோம். விலை கேட்கறதுக்கு நாதியில்ல. அதுக்குப் பிறகுதான் வீரியரக மல்லிக்கு மாறிட்டோம். இப்ப எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாம இருக்கு'' என்று சொன்னவர், சாகுபடி குறிப்புகளை எடுத்துப் போட்டார்.
மொத்தமாக 45 நாட்கள்தான் இந்த சாகுபடி. மண் 'பொல பொல'வென்று ஆகும் அளவுக்கு டிராக்டரை கொண்டு இரண்டு உழவு ஓட்டவேண்டும். அடுத்து, அடியுரமாக 3 லோடு கோழி எரு கொட்டவேண்டும். பிறகு, ஒரே சீராக பாத்தி அமைத்து, வீரிய ரக விதைகளை (9 கிலோ) பாத்தி முழுவதும் ஏகமாக தூவி விடவேண்டும். பின்னர் கொத்துமுனை அல்லது குச்சி மூலம் கீறி விடவேண்டும். அதன் பிறகு பாத்தி நிறையும் அளவில் தண்ணீர் பாய்ச்சுவது அவசியம். 5 முதல் 7 நாட்களில் துளிர் விட்டு முளைக்க ஆரம்பிக்கும். அப்போது 10 ஆட்களை விட்டு, களை எடுக்கவேண்டும். விதைத்த 3-ம் நாளுக்குள்ளாகவே சிலர் களைக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். அதைவிட கையால் களை எடுப்பதுதான் நல்லது.
தொடர்ந்து 5 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாசனம் தேவை. 15-ம் நாள் ஒன்றரை மூட்டை காம்ப்ளக்ஸ் உரத்தைப் பாசன தண்ணீரில் கரைத்து கொடுக்கவேண்டும். 20-ம் நாளில் களை எடுக்க வேண்டும். இதற்கும் 10 ஆட்கள் தேவைப்படுவார்கள். 25-ம் நாளில் 1 மூட்டை யூரியாவை பாசன நீரில் கரைத்துவிடலாம். இதையெல்லாம் செய்தால் மல்லித்தழை ‘குப்’பென்று வளரும். அதற்குப் பிறகு, தண்ணீர் மட்டும் அடிக்கடி பாய்ச்சினால் போதும். வேறு எதுவும் கொடுக்கத் தேவையில்லை. 45-ம் நாள் தளதளவென தழைத்து நிற்கும் மல்லித் தழைகளை ஜம்மென்று அறுவடை செய்யலாம்.
தொடர்ந்த பாலசுப்ரமணி, ''இதுக்கு... முட்டு வளி செலவுனு பார்த்தா ரொம்ப குறைச்சல்தான். இதையும் கூட நாங்க கம்மி பண்ணிக்கிட்டே இருக்கோம். இப்பவே... அடி உரமா கோழி எரு போடறதால, டி.ஏ.பி. தேவையில்லாம போயிடுச்சு. அதுபோலத் தான், மண்புழு உரம், தொழு உரம்னு மாத்திமாத்தி இயற்கை உரங்களை பயன்படுத்தப் போறோம். இதனால முட்டுவளி செலவுங்கறது ரொம்பவே குறைஞ்சி, லாபத்தை தானாவே அதிகரிக்கச் செய்யும்ங்கறதுல சந்தேகம் இல்லை.
வருஷம் முழுக்க மல்லித்தழை சாகுபடி செய்யலாம். எங்க ஏரியாவுல கிட்டத்தட்ட 2000 ஏக்கர்ல மல்லித்தழை சாகுபடி நடக்குது. களர், உவர் மண்ணைத் தவிர.. எல்லாவித நிலத்துலயும் இது நல்லா வளரும். செம்மண் நிலத்துல ரொம்ப சிறப்பாச் செய்யலாம். 
தை, மாசி, பங்குனி, சித்திரைனு 4 மாசமும் வெயில் கொளுத்தும். இது மல்லித்தழைக்கு அவ்வளவா ஆகாது. தென்னந்தோப்பு வெச்சிருக்கறவங்க, அதோட நிழல்ல சாகுபடி செய்யலாம். அப்படி வசதி இல்லாதவங்க, கொஞ்சம் கூடுதலா தண்ணி கொடுத்துப் பராமரிப்பு செய்யணும். இடுபொருள் விஷயத்துலயும் அதேபோல கவனம் செலுத்தினா போதும்... கணிசமா மகசூல் பாக்கலாம். கோடை காலத்துல ஏக்கருக்கு 1,000 கிலோ வரை மகசூல் குறைவாத்தான் கிடைக்கும். ஆனா, அந்த சீசன்ல சிரமப்பட்டு வளர்த்து கொண்டு வந்துட்டா, நல்ல விலைக்கு விக்கலாம். இந்த வருஷ கோடையில கிலோ 65 ரூபாய் வரைக்கும் அதிகபட்சமா விலை போயிருக்கு. சராசரியா ஏக்கருக்கு 8,000 கிலோ வரை அறுவடை செய்யலாம். இன்னிக்கு தேதியில மேட்டுப்பாளையம் மார்க்கெட் நிலவரப்படி கிலோ ஒண்ணுக்கு 8 ரூபாய் விலை கிடைக்குது. இதுவரைக்கும் கிலோ 5 ரூபாய்க்கும் குறைவான விலைக்கு ஒரு நாளும் நாங்க மல்லித்தழையை வித்ததில்லை. எங்களோட 3 ஏக்கர் நிலத்துல சுழற்சி முறையில சாகுபடி செய்றதால எப்பவுமே எங்க தோட்டத்துல மல்லித்தழை வாசனைதான்.
சொந்தமா வேன் வாங்கியிருந்தாலும் அதைச் சும்மா நிறுத்தி வைக்கறதில்ல. எங்களுக்கு வேலை இல்லாத மத்த நாட்கள்ல அக்கம் பக்கத்துல உள்ள விவசாயிகளோட மல்லிதழைகளை விலைபேசி மார்க்கெட்டுக்கு கொண்டு போறோம். அதுல ஒரு சின்ன லாபமும், வேன் வாடகையும் கிடைக்குது.
மொத்தத்துல ஒரு முறை போட்டுப்பார்த்தா... உங்க உள்ளத்தை கவர்ந்துடும் சொல்லி வெச்சி லாபம் அடிக்கற இந்த கொத்து மல்லி'' என்று கில்லியாக சொல்லி முடித்தார் பாலசுப்ரமணி.
தொடர்புக்கு: கே.வி.மணி, கருடமுத்தூர், திருப்பூர் வட்டம். அலைபேசி: 94862-42574.

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...